டெல்லி:அமித் ஷா பேசியதற்கு நாடாளுமன்றத்தில் எதிர்ப்பு எழுந்த நிலையில், அம்பேத்கரை மத்திய அரசு முழுமையாக மதிக்கிறது என்று கூறி, பிரதமர் மோடி விளக்கம் அளித்துள்ளார்.
நேற்றைய தினம் நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சர் அமித்ஷா, அம்பேத்கர் பெயர் இப்போது ஒரு பேஷன் ஆகிவிட்டது. அவர் பெயருக்கு பதில் கடவுளின் பெயரை சொல்லி இருந்தால் ஏழு ஜென்மம் சொர்க்கம் கிடைத்திருக்கும் என்று பேசியது, சர்ச்சையை கிளப்பியது.
இப்படி இருக்கையில், ‘காங்கிரஸ் கட்சி தான் பி.ஆர். அம்பேத்கரை அவமதித்ததாக’ பிரதமர் நரேந்திர மோடி குற்றம் சாட்டி உள்ளார். முன்னதாக, அமித் ஷா அளித்த பேச்சால் சர்ச்சை எழுந்ததை அடுத்து மோடி இந்த பதிவை பகிர்ந்துள்ளார்.
இது குறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில், “அம்பேத்கரால் தான் நாம் இன்று நல்ல நிலைமையில் இருக்கிறோம், டாக்டர் அம்பேத்கரை முழுமையாக மதிக்கிறோம், அவரது கனவுகளை நிறைவேற்ற கடந்த 10 ஆண்டுகளாக பாஜக அரசு செயல்பட்டு வருகிறது, அம்பேத்கருக்கு எதிராக செய்த செயலை காங்கிரஸ் மறைக்க பார்க்கிறது, அம்பேத்கரை 2 முறை தேர்தலில் தோற்கடித்தது காங்கிரஸ், அவருக்கான பாரத் ரத்னா விருதை நிராகரித்தது காங்கிரஸ்” என்று குறிப்பிட்டுள்ளார்.
unknown node