சென்னை : நடிகர் சல்மான் கான் இப்போது இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் சிக்கந்தர் எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். இந்த படத்தில் ராஷ்மிகா நடிக்கிறார் என்கிற தகவல் வந்தவுடன் எழுந்த ஒரே விமர்சனங்கள் என்னவென்றால் சல்மான் கானை விட ராஷ்மிகாவுக்கு 31 வயதுகள் அதிகம் எப்படி ஜோடி செட் ஆகும் என்பது போல விமர்சனங்கள் எழுந்தது. ஆனால், படத்தின் டிரைலர் மற்றும் போஸ்டர்களை பார்க்கும்போது […]
சென்னை : சினிமாத்துறையில் விவாகரத்து செய்திகள் என்பது வழக்கமான ஒரு விஷயமாக மாறிவிட்டது என்று தான் சொல்லவேண்டும். ஏற்கனவே, தனுஷ், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், டி இமான் ஆகியோர் விவாகரத்து செய்திகளை அறிவித்திருந்தார்கள். அவர்களை தொடர்ந்து காதலித்து திருமணம் செய்து கொண்ட இசையமைப்பாளர் மற்றும் பாடகி சைந்தவி கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ முடிவு செய்திருப்பதாக கடந்த ஆண்டு மே மாதம் இருவரும் அறிக்கை வெளியீட்டு அறிவித்திருந்தார்கள். இதனை தொடர்ந்து இருவரும் பேசிக்கொள்ளாமல் இருக்கவில்லை பிரிந்தாலும் நண்பர்களாக […]
சென்னை : விக்ரம் நடித்துள்ள வீரதீரசூரன் திரைப்படம் வரும் மார்ச் 27-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படம் வெளியாக இன்னும் சில நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், படத்தின் ப்ரோமோஷன் பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்றது. அதில் விக்ரம், துஷாரா விஜயன், எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டார்கள். விழாவில் பேசிய விக்ரம் படம் எப்படி பட்ட படமாக இருக்கும் […]
சென்னை : அஜித் நடிப்பில் உருவாகி இருக்கும் குட் பேட் அக்லி திரைப்படம் வரும் ஏப்ரல் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. ஏற்கனவே, படத்தின் முதல் பாடல் வெளியாகி பட்டையை கிளப்பி வருகிறது. இந்த சூழலில், படம் வெளியாக இன்னும் சில நாட்கள் மட்டுமே இருக்கும் சூழலில் படத்தின் ப்ரோமோஷன் பணிகள் இப்போதே தொடங்கிவிட்டது. படத்தின் இயக்குநர் ஆதிக் ரவிசந்திரன் யூடியூப் சேனல்களுக்கு பேட்டி கொடுத்து படம் தொடர்பான விஷயங்களை பகிர்ந்துகொண்டு வருகிறார். அப்படி சமீபத்தில் பிரபல நிறுவனமான […]
சென்னை : தங்கலான் படம் எதிர்பார்த்த அளவுக்கு மக்களுக்கு மத்தியில் பெரிய வரவேற்பை பெறவில்லை என்கிற காரணத்தால் அடுத்ததாக நடிகர் விக்ரம் வீரதீரசூரன் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படத்தினை சித்தா எனும் தரமான படத்தை இயக்கிய இயக்குநர் அருண் குமார் இயக்குகிறார் என்பதாலும், படத்தில் விக்ரம் ஆரம்ப காலத்தை போல கிராமத்தில் வசிக்கும் மனிதர் கதாபாத்திரத்தை தேர்வு செய்து நடித்துள்ள காரணத்தால் படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளது. இந்த திரைப்படம் மிக்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் […]
சென்னை : நடிகர் சிம்பு வெந்து தணிந்தது காடு படத்தை தொடர்ந்து அடுத்ததாக எந்த திரைப்படங்களிலும் நடிக்கவில்லை இருந்தாலும் அவருக்கு இருக்கும் அந்த மாஸான ரசிகர்கள் பட்டாலும் குறையவே குறையாது என்று சொல்லலாம். இன்னும் அவருடைய படங்கள் வெளியாகவில்லை என்றாலும் கூட அவருடைய படங்களுக்கு சிறப்பான ஓபனிங் இருக்கும் எனவும் கூறப்படுகிறது. இதனால் சினிமாவில் இருக்கும் மற்ற நடிகர்கள் கூட இந்த மனுஷன் படம் நடிக்கவில்லை என்றால் கூட இவ்வளவு ரசிகர்கள் இருக்கிறார்களே என ஆச்சரியத்துடன் பார்ப்பதுண்டு. […]
சென்னை : டிராகன் படத்தை இயக்கியதன் மூலம் இயக்குனர் அஸ்வந்த் மாரிமுத்து மார்க்கெட் எங்கேயோ சென்று விட்டது என்று சொல்லலாம்.அந்த அளவுக்கு அந்த படம் வரவேற்பை பெற்று உலகம் முழுவதும் 100 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து இந்த ஆண்டு அதிக வசூல் செய்த படமாக மாறி உள்ளதாகவும் சமீபத்தில் தகவல்கள் வெளியாகியிருந்தது. இந்த சூழலில் இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து அவர் அடுத்ததாக சிம்பு படத்தை இயக்க உள்ளதால் அந்த படத்தின் மீதும் அதிக எதிர்பார்ப்புகள் […]
சென்னை : சமூக வலைத்தளங்களில் மாளவிகா மோகனன் ஒரு போஸ்ட் ஒன்றை போட்டாலே போதும் லைக்குகளும், கமெண்டுகளும் மலைச்சாரல் போல வரிசையாக வரும். அதைப்போல, தான் அவர் அடிக்கடி ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளிப்பதாக அறிவித்தால் பல கேள்விகள் குவிந்துவிடும். அப்படி தான் அவர் நேற்று தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் தன்னிடம் ஏதாவது கேள்வி கேளுங்கள் என பதிவிட்டு இருந்தார். உடனடியாக ரசிகர்கள் பலரும் தங்களுக்கு தோன்றிய அனைத்து கேள்விகளையும் கேட்டனர். குறிப்பாக உங்களுக்கு […]
சென்னை : சினிமாவில் நடிக்கும் இளம் நடிகர்கள் ரஜினியுடன் ஒரு படத்தில் நடிக்கவேண்டும் என்று ஆசைப்படுவது உண்டு. அதைப்போல, இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் ஒரு படத்திலாவது நாம் நடிக்க வேண்டும் என்பது பல நடிகர்களுடைய கனவாக இருந்து வருகிறது. ஒரு சில நடிகர்களுக்கு அப்படியான வாய்ப்பு கிடைக்கும் இருப்பினும் வேறு படங்களில் கமிட்டான காரணத்தினால் நடிக்க முடியாமல் போக பிறகு பேட்டிகளில் கலந்து கொள்ளும்போது இதனை பற்றி பேசி பீல் பண்ணுவது உண்டு. அப்படிதான் தமிழ் சினிமாவில் […]
சென்னை : வெற்றிமாறன் எடுத்த படங்களில் தனுஷ் ரசிகர்கள் மட்டுமின்றி இந்திய சினிமாவில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய படங்களில் வடசென்னை படமும் ஒன்று. படத்தின் முதல் பாகம் வெளியாக்க பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி தமிழ் சினிமாவின் கேங்ஸ்டார் படங்களின் பட்டியலிலும் இணைந்தது. இருப்பினும், முழு படமாக வெளியாகவில்லை என்பது தான் ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றமாக அமைந்தது. ஒரே படமாக இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், இரண்டு பாகங்களாக வெளியாகும் என படம் முடியும் போது தான் […]
லண்டன் : 1000 திரைப்படங்களுக்கு மேல் இசையமைத்து இசைஞானியாக நம்மில் உயர்ந்து நிற்கும் இளையராஜா தற்போது தனது நீண்ட வருட கனவை நிறைவேற்றம் செய்துள்ளார். லண்டன் அரங்கில் தனது முதல் சிம்பொனி இசையை அரங்கேற்றம் செய்ய வேண்டும் எனபதே அவரது நீண்ட வருட கனவு. ஆர்கெஸ்டரா என்பது பல்வேறு இசைக்கருவிகள் கொண்டு இசைகோர்வை அமைக்கும் பணியாகும். அதனை பெரும்பாலான இசையமைப்பாளர்கள் செய்வார்கள். ஆனால் சிம்பொனி இசை என்பது குறிப்பிட்ட 3, 4 இசைக்கருவிகள் கொண்டு 50க்கும் மேற்பட்ட […]
லண்டன் : இசையமைப்பாளர் இளையராஜா 1000க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் என்கிற சாதனையை தமிழ் சினிமாவில் ஏற்கனவே படைத்திருந்தார். இந்த சாதனையை அவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பே படைத்துவிட்டார். அந்த பெரிய சாதனையை தொடர்ந்து ராயல் பில்ஹார்மோனிக் ஆர்கெஸ்ட்ராவுக்காக சிம்பொனி அமைத்த முதல் ஆசிய இசையமைப்பாளர் என்ற சாதனையும் படைத்தது அசத்தி இருக்கிறார். சிம்பொனி பற்றி கடந்த 1993ஆம் ஆண்டு லண்டனில் உள்ள ராயல் ஃபில்ஹார்மோனிக் ஆர்கெஸ்ட்ராவுடன் இணைந்து ஒரு சிம்பொனியை இளையராஜா உருவாக்கினார். இது […]
பெங்களூரு : துபாயில் இருந்து 14 கிலோ தங்கக் கட்டிகளை கடத்தி வந்த கன்னட நடிகை ரன்யா ராவு கடந்த 3ம் தேதி பெங்களூருவில் கைது செய்யபட்டார். சுங்கத்துறை அதிகாரிகளிடம் சிக்காமல் இருக்க தொடையில் தங்கக் கட்டிகளை ஒட்டி வைத்திருந்தது தெரிய வந்துள்ளது. அவரது ஆடைகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த தங்கத்தை பறிமுதல் செய்த பின்னர், வருவாய் புலனாய்வு இயக்குநரகம் (டிஆர்ஐ) அதிகாரிகள் அவரைக் கைது செய்யப்பட்டு, பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இப்போது, விசாரணைக்காக ரன்யா […]
ஹில்ஸ் : பிரபலமான பேவாட்ச் (Baywatch) தொலைக்காட்சி தொடரில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் அமெரிக்கன் நடிகை பாமெலா பாக் (Pamela Bach), 62 வயதான இவர் திடீரென தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஹாலிவுட் சினிமாவிலும் மற்றும் அவரது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவர் நடிகர் டேவிட் ஹசல்ஹோஃப்பின் (David Hasselhoff) முன்னாள் மனைவியாவார். பாமெலா பாக் நடிகர் டேவிட் ஹசல்ஹோஃப்பின்னை காதலித்து கடந்த 1989-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். அதன்பிறகு இருவருக்கும் இடையே […]
ஹைதிராபாத் : தமிழ், தெலுங்கு சினிமா உலகில் பிரபல பின்னணி பாடகியாக இருக்கும் கல்பனா, கடந்த செவ்வாய் கிழமை அதிகமாக தூக்க மாத்திரைகளை உட்கொண்டு தனது சுயநினைவை இழந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ஹைதிராபாத்தில் உள்ள அவரது வீடு 2 நாட்களாக பூட்டியிருந்ததாக கிடைக்கப்பெற்ற தகவலை அடுத்து போலீசார் அவரது வீட்டிற்கு சென்று பூட்டியிருந்த வீட்டில் இருந்து கல்பனாவை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அளவுக்கு அதிகமாக தூக்க மாத்திரை உட்கொண்டதால், பாடகி கல்பனா தற்கொலைக்கு முயன்றுள்ளார் என […]
சென்னை : நடிகை நயன்தாரா பொதுவாகவே தான் நடித்த படங்களுக்கு ப்ரோமோஷன் நிகழ்ச்சி நடைபெற்றால் அந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வது இல்லை. அதே சமயம், அவர் தன்னுடைய தயாரிப்பு நிறுவனம் சார்பில் நடிக்கும் படங்களை ப்ரோமோஷன் செய்ய வருகை தருவார் என்கிற விமர்சனம் அவர் மீது இன்னும் இருந்து வருகிறது. சில தயாரிப்பாளர்கள் இதனை வெளிப்படையாகவே பேசி குற்றம்சாட்டி இருந்தார்கள். இந்த சூழலில், படத்தின் ப்ரோமோஷனுக்கு தான் வரமாட்டேன்…படத்தின் பூஜைக்கு வருவேன் என்பது போல மூக்குத்தி அம்மன் இரண்டாவது […]
சென்னை : இசையமைப்பாளர் இளையராஜா இன்று சென்னை விமான நிலையத்தில் இருந்து லண்டன் புறப்படுகிறார். அங்கு ராயல் பில்ஹார்மோனிக் இசைக்குழு (Royal Philharmonic Orchestra) உடன் இணைந்து இசைக்கோர்ப்பு பணிகளில் ஈடுபட உள்ளார். அதற்கு முன்னர் அவர் செய்தியாளர்களிடம் சந்தித்து பல்வேறு தகவல்களை குறிப்பிட்டார். அப்போது பேசுகையில், எல்லோருக்கும் வணக்கம். உலகின் தலைசிறந்த இசைக்குழுவான ராயல் பில்ஹார்மோனிக் இசைக்குழு லண்டன் அவர்களுடன் சேர்ந்து இசையமைக்க உள்ளேன். அவர்கள் வாசித்து ரசிகர்கள் கேட்டு மகிழ்ந்து பிறகு இந்த இசை […]
சென்னை : பிரதீப் ரங்கநாதன் காட்டில் மழை தான் என்கிற வகையில், அவருடைய படங்கள் தொடர்ச்சியாக ஹிட் ஆகி கொண்டு வருகிறது. உதாரணமாக சொல்லவேண்டும் என்றால் அவருடைய இயக்கத்தில் முதல் படமாக வெளியான கோமாளி படம் பெரிய வெற்றியை பெற்றது. அந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக லவ் டுடே படத்தினை அவரே இயக்கி அதில் நடித்திருந்தார். இந்த திரைப்படமும் வசூல் ரீதியாக மிகப்பெரிய வெற்றியை பெற்றது. விமர்சன ரீதியாகவும் பலத்த வரவேற்பை பெற்று 100 நாட்களுக்கு மேல் […]
சென்னை : சென்னையின் அசோக் நகர் பகுதியில் அமைந்திருந்த புகழ்பெற்ற உதயம் திரையரங்கம் (Udhayam Theatre) தற்போது இடிக்கப்பட்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளாக, புதிய மல்டிபிளக்ஸ் திரையரங்குகளின் வருகையால், உதயம் திரையரங்கின் பார்வையாளர்கள் எண்ணிக்கை குறைந்து, பராமரிப்பு சவால்களை சந்தித்தது. இதன் காரணமாக, 2025 பிப்ரவரி மாதம், 40 ஆண்டுகால சேவைக்கு பின், இந்த திரையரங்கம் இடிக்கப்பட்டது. இப்போது பல திரையரங்குகள் வந்தாலும் ஆரம்ப காலத்தில் மிகவும் பிரபலமாக இருந்த திரையரங்குகளில் அதுவும் ஒன்று. எனவே, அப்படி பட்ட […]
சென்னை : தமிழ், ஹிந்தி, தெலுங்கு என அணைத்து மொழிகளிலும் பல ஹிட் பாடல்களை பாடியுள்ள பாடகி ஸ்ரேயா கோஷல் மிகவும் மனம் வருந்தும் அளவுக்கு சம்பவம் ஒன்று நடந்துள்ளது. அது என்னவென்றால், கடந்த சில நாட்களாகவே ஸ்ரேயா கோஷல் எக்ஸ் வலைத்தள பக்கம் ஹேக் செய்யப்பட்டதாகவும் இது குறித்து எக்ஸ் குழுவை தொடர்பு கொண்டும் முடியவில்லை எனவும் அறிவித்து ரசிகர்கள் கவனமாக இருக்க வேண்டுகோள் ஒன்றையும் கொடுத்துள்ளார். இது குறித்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறியதாவது […]