சென்னை : அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கழகத் தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் முன்னிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சார்ந்த 3,000 மாற்றுக்கட்சியினர் தங்களை கழகத்தில் இணைத்துக் கொண்டனர். மாற்றுக் கட்சியினர் திமுகவில் இணையும் நிகழ்வில் பேசிய முதல்வர், ”வெற்றிகரமாக 4 ஆண்டுகளை நிறைவு செய்து 5-ம் ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கிறோம். ஏற்கனவே நிறைவேற்றியுள்ள திட்டங்கள் எல்லாம் மக்களிடையே நன்றாக சென்று சேர்ந்திருக்கிறது. இன்னும் ஓராண்டில் என்ன திட்டங்களை நிறைவேற்றப்போகிறோம் என்பதை கடந்த நிதிநிலை அறிக்கையில் தெரிவித்திருக்கிறோம். […]
சென்னை : தமிழ்நாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி அமைத்து நாளையோடு (மே 7) 4 ஆண்டுகள் நிறைவுற்று 5வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. இதனை குறிப்பிடும் வகையில் திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் திமுக தொண்டர்களுக்கு நீண்ட கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், தமிழ்நாட்டு மக்களுக்கு நல்லாட்சியை வழங்கி வருகிறோம். இந்தியாவின் கொள்கை ரீதியாக நமக்கு எதிரானவர்கள் ஆள்கின்ற மாநிலங்களில் கூட திராவிட மாடல் அரசின் திட்டங்களை பின்பற்றும் வகையில் முதன்மையான அரசாக தமிழ்நாட்டை […]
சென்னை : தமிழகத்தில் சட்டத்துக்குப் புறம்பாக தங்கியுள்ள பாகிஸ்தான் பங்களாதேஷை சேர்ந்தவர்களை வெளியேற்ற தமிழக அரசை வலியுறுத்தியும் பயங்கரவாத தாக்குதலை கண்டித்தும், பாகிஸ்தானை கண்டித்தும், தமிழகம் முழுவதும் பாஜக தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக சென்னையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு பேசிய தமிழிசை சௌந்தரராஜன், ”முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய அரசு எது கூறினாலும் கேட்க மாட்டார். தமிழகத்தில் இருந்து பாகிஸ்தானியர்களை வெளியேற்றவில்லை என்றால் முதலமைச்சர் பின்விளைவுகளை சந்திக்க நேரிடும்’ என்றார். தொடர்ந்து […]
மயிலாடுதுறை : நேற்று (மே 4) மயிலாடுதுறையில் திமுக சார்பில் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக எம்.பி ஆ.ராசா கலந்து கொண்டார். அப்போது நிகழ்வில் ஆ. ராசா பேசிக்கொண்டிருந்தார். ஆ.ராசா பேசிகொண்டு இருக்கையில், அப்பகுதியில் பலத்த காற்று வீசியுள்ளது அவர் பேசும் மேடை முன்பு வைக்கப்பட்டு இருந்த மின் விளக்குகள் காற்றின் வேகம் காரணமாக அப்படியே சரிந்து ஆ.ராசா பேசிக் கொண்டிருந்த மேடை மீது விழுந்தது. சரிந்து விழப்போவதை முன்கூட்டியே கவனித்த ஆ.ராசா சட்டென […]
சென்னை : சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்று முடிந்தது. இதில், பங்கேற்க வந்த ஸ்டாலினை, மூத்த அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். பொறுப்பு அமைச்சர்களை நியமிப்பது, கட்சி வளர்ச்சி, செந்தில் பாலாஜிக்கு பொறுப்பு கொடுப்பது, இளைஞர்களை ஊக்குவிக்க முக்கிய பதவி வழங்குவது, தேர்தல் வியூகம், பொதுக்குழுவை நடத்துவது உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டது. ஆலோசனை முடிந்த பின் இந்த கூட்டத்தில், மதுரையில் ஜூன் 1-ம் தேதி திமுக பொதுக்குழு கூட்டம் […]
சென்னை : இன்று திராவிட முன்னேற்ற கழகம் கட்சி சார்பில் அக்கட்சியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்திற்கு திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கினார். 2026 தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலுக்கு எவ்வாறு தயாராகுவது உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் விவாதிக்கப்பட்டன. தீர்மானங்கள் : இதில், ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் உயிரிழந்த மக்களுக்கும், மறைந்த போப் பிரான்சிஸுக்கும் இரங்கல் தீர்மானமானது திமுக மாவட்ட […]
சென்னை : தி.மு.க தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில், சென்னை அண்ணா அறிவாலயம், கலைஞர் அரங்கில் இன்று (மே 3) மாவட்ட கழகச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்தில் பல அதிரடி முடிவுகள் எடுக்கப்படும் என தெரிகிறது. குறிப்பாக, தேர்தலுக்கு சில மாதங்களே உள்ள நிலையில், தேர்தல் பணிகள் குறித்து ஆலோசனை நடக்கவுள்ளது. மேலும், பாகிஸ்தான் இராணுவம் மற்றும் ISI இணைந்து நீண்ட நாட்களாக திட்டம் போட்டு பகல்ஹாம் தாக்குதலை உள்ளூர் OGW உதவியுடன் நடத்தி […]
சென்னை : 2026 சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, தமிழ்நாடு அரசியல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. இந்த நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று (மே 03) அண்ணா அறிவாலயத்தில் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது. இந்தக் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் காலை 10:30 மணியளவில் தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன், இந்தக் கூட்டம் குறித்து முன்னதாக அறிவிப்பு வெளியிட்டிருந்தார். இந்த கூட்டத்தில், அனைத்து திமுக […]
சென்னை : ஈரோடு மாவட்டம் சிவகிரி விலாங்காட்டு வலசை பகுதியை சேர்ந்த ராமசாமி – பாக்கியம் தம்பதி அவர்களின் பண்ணை வீட்டில் வசித்து வந்த அவர்கள் மர்மமான முறையில் உயிரிழந்து இருப்பதாக இன்று காலை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது பணம், நகைக்காக தனியாக இருந்த தம்பதி கொலை செய்யப்பட்டு இருக்கலாம் எனபோலீசார் தங்கள் விசாரணையை தொடர்ந்துள்ளனர். ஏற்கனவே திருப்பூர் பல்லடம் அருகே இதே பண்ணை வீட்டில் 3 பேர் கொலை செய்யபட்டதை அடுத்து அதே போன்ற இரட்டை […]
சென்னை : இன்று பிரதமர் மோடி தலைமையில் மதியாய் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அதில் அரசியல் சார்ந்து பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதில் முக்கிய முடிவாக சாதிவாரி கணக்கெடுப்பு எப்போது நடத்தப்படும் என மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார். இந்த நிலையில், இதற்கு பாராட்டுக்கள் தெரிவித்து அரசியல் தலைவர்கள் தங்களுடைய சமூக வலைத்தள பக்கங்களில் பதிவுகளை வெளியீட்டு வருகிறார்கள். அந்த வகையில், பாமக நிறுவனர் ராமதாஸ் தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் பதிவு […]
தூத்துக்குடி : தமிழ்நாடு அரசின் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ், இதுவரை பயன்பெறாத தகுதியான பெண்கள் ஜூன் 4, 2025 முதல் விண்ணப்பிக்கலாம் என சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் அறிவித்துள்ளார். மகளிர் உரிமைத்தொகை திட்டம் மூலம், தற்போது 1.14 கோடி பெண்களுக்கு மாதம் ரூ.1,000 வழங்கப்பட்டு வருகிறது. இருப்பினும், சில பெண்கள் அப்ளே செய்தும் அவர்களுக்கு ரிஜெக்ட் ஆனது. மேலும், சில பெண்கள் இன்னும் இந்த திட்டத்திற்கு அப்ளே செய்யாமல் […]
சென்னை : சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக எம்எல்ஏ மயிலை வேலுவின் இல்லத் திருமண விழா நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட முதல்வர் மு.க.ஸ்டாலின் மணமக்களுக்கு வேண்டுகோள் வைத்து பேசினார். இது குறித்து பேசிய அவர் ” இந்த நேரத்தில் நான் மணமக்களுக்கு வேண்டுகோள் ஒன்றை வைத்து கொள்கிறேன். மணமக்கள் மட்டுமில்லை வீடுகளுக்கும் சேர்த்து வைக்கிறேன். அது என்னவென்றால், மயிலை த. வேலு அவர்கள் தன்னுடைய மகளுக்கு அனுஷா என்கிற பெயரை வைத்துள்ளார். இது தமிழ் பெயர் இல்லை. […]
சென்னை : சென்னை தென்மேற்கு மாவட்டக்கழக செயலாளர் – சட்டமன்ற உறுப்பினர் மையிலாபூர் எம்.எல்.ஏ த.வேலுவின் மகள் அனுஷா – தருண் தன்ராஜ் ஆகியோரின் திருமணத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு வாழ்த்தினார். இதையடுத்து மேடையில் பேசிய அவர், குழந்தைகளுக்கு அழகான தமிழ் பெயரை சூட்டுங்கள். அதுதான் எனது வேண்டுகோள் என கோரிக்கை வைத்தார். தொடர்ந்து பேசிய அவர், ”200 அல்ல.. 220 அல்ல.. 234 தொகுதிகளிலும் வெல்வோம். அதில் ஆச்சரியமில்லை. எதிர்க்கட்சியினர் எத்தகைய கூட்டணி வைத்து […]
நீலகிரி : மாஞ்சோலை தேயிலைத் தோட்ட தொழிலாளர்களுக்கு விலையின்றி வீடு வழங்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. முதற்கட்டமாக 20 அடுக்குமாடி குடியிருப்புகளை விலையின்றி வழங்க ரூ.59.55 லட்சம் ஒதுக்கீடு செய்து அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவின் அடிப்படையில், இதுவரை மொத்தம் 20 அடுக்குமாடி வீடுகள் மாஞ்சோலை தேயிலைத் தோட்டத்தின் முன்னாள் தொழிலாளர்களுக்கு எந்த செலவும் இல்லாமல் ஒதுக்கப்பட்டுள்ளதாக அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “திருநெல்வேலி மாவட்டத்தில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தால் கட்டப்பட்ட […]
சென்னை : இன்று பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த போது திமுக குறித்து விமர்சனம் செய்து பேசியிருந்தார். இது குறித்து பேசிய அவர் ” 2026 சட்டப்பேரவைத் தேர்தலில், தமிழகத்தில் அதிமுக – பாஜக கூட்டணி ஆட்சிக்கு வரும். தமிழக மக்களுக்கான வளர்ச்சியை, தமிழக முதல்வரும், அமைச்சர்களும் தடுத்து வருகின்றனர். மத்திய அரசு தமிழ்நாட்டு மக்களை சூறையாடவில்லை. திமுக அமைச்சர்கள் தான் மக்கள் வரிப்பணத்தை சூறையாடுகின்றனர். தி.மு.க அமைச்சர்கள் 9 பேர் மீது […]
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் காவல்துறை, தீயணைப்புத்துறை மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திமுக 7வது முறையும் ஆட்சியை கைப்பற்றும். இதுவரை திராவிட மாடல் ஆட்சியை கண்ட தமிழ்நாடு, 2026 தேர்தலில் வெற்றி பெற்று திராவிட மாடல் 2.O-வை காணும்.” என பேசியிருந்தார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பேச்சை விமர்சிக்கும் வகையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தனது எக்ஸ் தள பக்கத்தில் ஒரு பதிவில் கள்ளச்சாராய […]
சென்னை : கடந்த ஏப்ரல் 26 (திங்கள்) அன்று தமிழக சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கட்டாய கடன் வசூலை தடுக்கும் பொருட்டு புதிய சட்டமசோதாவை தாக்கல் செய்தார். அதில், கட்டாய கடன் வசூலில் ஈடுபட்டால் 3 ஆண்டுகள் சிறை தண்டனை, கட்டாய கடன் வசூலால் ஒருவர் தற்கொலை செய்துகொண்டால் அந்த நிறுவனம் மீது தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப்பதிவு உள்ளிட்ட சட்டதிருத்தங்கள் குறிப்பிடப்பட்டு இருந்தன. அந்த சட்ட மசோதாவில், பொருளாதாரத்தில் பின்தங்கிய மற்றும் நலிவடைந்த மக்கள், […]
சென்னை : கடந்த மார்ச் 14ம் தேதி தொடங்கிய தமிழ்நாடு சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவு பெறுகிறது. மார்ச் 14இல் நிதிநிலை அறிக்கை, அடுத்த நாளில் வேளாண் நிதி நிலை அறிக்கை பேரவையில் தாக்கலானது. இறுதிநாளான இன்று காவல் மற்றும் தீயணைப்பு துறைகளுக்கான மானியகோரிக்கையில் சட்டப்பேரவை உறுப்பினர்களின் கேள்விக்கு பதில் அளித்து புதிய அறிவிப்புகளை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். அப்போது, 3வது குழந்தை பெற்றுக்கொள்ளும் தம்பதிகளுக்கு சலுகைகள் வழங்க வேண்டும் என திமுக எம்எல்ஏ மதியழகன் கோரிக்கை […]
சென்னை : தமிழக சட்டப்பேரவையில் பல்வேறு துறைகள் சார்பாக மானிய கோரிக்கைள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. அதில் இன்று காவல்துறை மற்றும் தீயணைப்பு துறை சார்பான மானிய கோரிக்கைகள் மீது அத்துறை அமைச்சர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது, இதுவரை நடைபெற்ற மானிய கோரிக்கைகள் அதற்கான பதில்கள் மீதான பதிலுரையை பேரவையில் கூறினார். அப்போது திமுக ஆட்சியில் செய்யப்பட்ட சாதனைகள் என நீண்ட பட்டியலை அவர் வாசித்தார். அதில், திமுக ஆட்சிக்கு 6வது முறையாக வந்துள்ளது. […]
சென்னை : நேற்று முன் தினம் தமிழ்நாடு அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, மனோ தங்கராஜ் மீண்டும் அமைச்சர் பொறுப்பு ஒதுக்கப்பட்டது. மனோ தங்கராஜ், கன்னியாகுமரி மாவட்டத்தின் பத்மனாபபுரம் சட்டமன்றத் தொகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சட்டமன்ற உறுப்பினராக உள்ளார். இந்த நிலையில், சென்னையில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில், மனோ தங்கராஜுக்கு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பதவிப் பிரமாணமும், ரகசியக் காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். அப்பொழுது, இவருக்கு பால்வளத்துறை மீண்டும் ஒதுக்கப்பட்டுள்ளது, இது இவர் […]