சென்னை : தமிழகத்தில், தென் மாவட்டங்களில் கனமழையின் காரணத்தால் நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் விடுமுறை அறிவித்துள்ளனர். மேலும், திருநெல்வேலி, தூத்துக்குடி, நாகப்பட்டினம், தென்காசி, கன்னியாகுமாரி உள்ளிட்ட 13 மாவட்டங்களில் கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மகாராஷ்டிரா சட்டமன்றத்திற்கான தேர்தல் வாக்குப்பதிவும், ஜார்கண்ட் மாநில சட்டமன்றத் தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவும் 7 மணிக்கு தொடங்கி, விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
டெல்லி : இந்திய பொதுத்துறை காப்பீட்டு நிறுவனமானLICயின் இணையதள முகப்பு பக்கமானது இன்று காலை முதல் இந்தி மொழியில் காணப்பட்டது. மேலும், மொழியை தேர்வு செய்யும் பட்டனில் கூட இந்தி மொழி இருந்ததால், இந்தி தெரியாத பயணர்கள் மிகவும் குழப்பம் அடைந்தனர். பொதுத்துறை காப்பீட்டு நிறுவனத்தில் இந்தி திணிக்கப்பட்டது என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியினர் தங்கள் கண்டனங்களை பதிவு செய்தனர். […]
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையின் தீவிரம் காரணமாக ஒரு சில மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக இன்று தென்மாவட்டங்கள் உட்பட 10 மாவட்டங்களில் உள்ள ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பிரேசில், ரியோவில் ஜி20 உச்சி மாநாடு நடைபெற்று வருகிறது. இதில், நேற்று உரையாற்றிய மோடி, ‘பல்வேறு நாடுகளிடையே நீண்ட காலமாக நீடிக்கும் போர்கள் மற்றும் போர் பதற்றத்தால் தெற்கு நாடுகள் மிகக் […]
திருச்சி : நேற்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி காவிரி சரபங்கா உபரிநீர்த் திட்டத்தை அமல்படுத்தியதற்கு விவசாயச் சங்கங்கள் சார்பில் பாராட்டு விழா நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசி போது துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினைத் தாக்கி பேசி இருந்தார். அதில், குறிப்பாக, “அப்பா மகனைப் புகழ்ந்து பேசுகிறார். மகன் அப்பாவைப் புகழ்ந்து பேசுகிறார். இது தான் திமுக ஆட்சியின் வேடிக்கை” எனப் பேசியிருந்தார். இதற்குப் பதிலடி கொடுத்து உதயநிதி ஸ்டாலினும் தனது எக்ஸ் தளத்தில் […]
சென்னை : ஆம் ஆத்மி கட்சியின் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்த கைலாஷ் கேலோட். நேற்று அமைச்சர் பதவியில் இருந்து விலகி, ஒரே நாளில் பாஜகவில் இணைந்துள்ளார். இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக அரசியல் வட்டாரத்தில், அதிமுக தவெகவுடன் கூட்டணி அமைக்கும் என பேசப்பட்டு வந்த நிலையில், ‘திமுகவுடன் கூட்டணி இல்லை எனவும் அதிமுகவுடன் கூட்டணி குறித்த இந்தச் செய்தி, முற்றிலும் தவறானது எனவும்’, அக்கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
சென்னை : கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை பிரிவில் அரசு மருத்துவராக பணியாற்றி வரும் மருத்துவர் பாலாஜியை ஒருவர் கத்தியால் குத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் ஈடுப்பட்ட 2 பேர் உடனடியாக கைது செய்யப்பட்டுள்ளனர். படுகாயமடைந்த மருத்துவருக்கு அதே மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சம்பவம் குறித்து அறிந்ததும் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டார். நோயாளியுடன் வந்த ஒருவர் இச்சம்பவத்தில் […]
சென்னை : தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் தற்போது அரசு முறைப் பயணமாக மாவட்ட வாரியாக சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகிறார். அதில் ஒரு பங்காக சமீபத்தில் 2 நாள் அரசு முறைப் பயணமாக விருதுநகர் சென்று கள ஆய்வும் மேற்கொண்டார். அதனைத் தொடர்ந்து, விருதுநகர் மாவட்டத்தில் மேற்கொண்ட பயணத்தைக் குறித்தும், அந்த பயணத்தில் ஏற்பட்ட அனுபவம் குறித்தும் கடிதம் ஒன்றை எழுத்து அதனை அவரது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அந்த கடிதத்தில், ” ‘மாதம் மும்மாரி பொழிந்ததா?’ […]
சென்னை : தமிழ் சினிமாவின் மூத்த நடிகரான டெல்லி கணேஷ் வயது மூப்பின் காரணமாக நேற்று இரவு காலமானார். அன்னாரது மறைவுக்கு சின்னத்திரைக் கலைஞர்கள், சினிமாத்துறையைச் சார்ந்தவர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மேலும், அவரது இழப்பு தமிழ் சினிமாவுக்கு ஒரு பெரிய இழப்பாகவே பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவரது எக்ஸ் பக்கத்தில், டெல்லி கணேஷ் மறைவுக்கு இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அந்த இரங்கல் செய்தியில், “மூத்த திரைக்கலைஞர் […]
சென்னை : அரசு முறைப் பயணமாக 2 நாள் சுற்றுப் பயணமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விருதுநகரில் கள ஆய்வை நேற்று தொடங்கினார். நேற்று கன்னிச்சேரிபுதூர் பட்டாசு ஆலையில் கள ஆய்வு செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பட்டாசு தொழிலாளர்களுடன் கலந்துரையாடினார். பட்டாசு ஆலைகளின் பாதுகாப்பு மற்றும் தொழிலாளர்களின் கோரிக்கை குறித்து முதலமைச்சர் நேரில் ஆய்வு செய்தார். இதனைத் தொடர்ந்து, இன்று குமாரசாமி ராஜா நகரில் ₹77.12 கோடி மதிப்பீட்டில் 6 தளங்களுடன் கட்டப்பட்டுள்ள புதிய ஆட்சியர் அலுவலக கட்டடத்தை […]
விருதுநகர் : குமாரசாமி ராஜா அலுவலகத்தில் ரூ.77.12 கோடி மதிப்பில் கட்டப்பட்ட புதிய ஆட்சியர் அலுவலகத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்துள்ளார். கடந்த 2022-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல்வர் ஸ்டாலின் இந்த அலுவலகத்திற்கு அடிக்கல் நாட்டினார். அதனைத் தொடர்ந்து, சுமார் 2.06 லட்சம் சதுரடி பரப்பில் 6 தளங்களுடன் புதிய ஆட்சியர் அலுவலகம் கட்டப்பட்டு வந்தது. தற்போது கட்டிட பணிகள் முடிந்து 2 வருடங்களுக்கு பிறகு இந்த அலுவகம் திறக்கப்பட்டுள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலின் அரசு முறை […]
விருதுநகர் : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்றும் நாளையும் விருதுநகர் மாவட்டம் சென்று அங்கு கட்சி நிகழ்வுகள் மற்றும் அரசு நல திட்டங்களை துவங்கி வைக்க உள்ளார். இதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்து, அங்கிருந்து சாலை மார்க்கமாக விருதுநகர் சென்ற முதலமைச்சருக்கு திமுக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அதனை தொடர்ந்து, கன்னிச்சேரிபுதூர் பகுதியில் இயங்கி வரும் பட்டாசு ஆலையில் கள ஆய்வு மேற்கொள்கிறார் முதலவர் மு.க.ஸ்டாலின். பிறகு, பட்டாசு ஆலைகளில் பணிபுரியும் […]
மதுரை : இன்று மதுரை மேற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், அதிமுக முன்னாள் அமைச்சருமான செல்லூர் ராஜு மதுரை மாநகராட்சியில் மேற்கொள்ளப்பட்டு வரும் பாதாள சாக்கடை திட்டத்தை பார்வையிட்டார். அப்போது அரசு அதிகாரிகளிடம் இப்பணிகள் குறித்த விவரங்களை அறிந்து கொண்டார். மதுரை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகள் எப்போது முடியும் என அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். அப்போது மழை பெய்வதால் பணிகள் தாமதமாகி வருகிறது என கூறியதால் , “மழை பெய்யத்தான் செய்யும். அப்புறம், மதுரை முழுக்க […]
சென்னை : தமிழ்நாட்டில் உள்ள பல்கலைகழகங்கள், கல்லூரிகளில் மாணவர்கள் பயன்பெறும் வகையில் ஓர் உதவி மையம் அமைக்கப்படும் என தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். இதன் மூலம் உயர்கல்வி குறித்த பல்வேறு சந்தேகங்கள் பற்றிய விளக்கங்களை மாணவர்கள் அறிந்து கொள்ளலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது. இது தொடர்பான வெளியான அறிக்கையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவுரையின்படி உயர்கல்வி பயிலும் மாண மாணவியர், பெற்றோர், பொதுமக்கள் ஆகியோருக்குத் தேவைப்படும் தகவல்களை வழங்கும் உதவி மையம் அனைத்துக் கல்லி நிறுவனங்களிலும் […]
சென்னை : தமிழ்நாடு முழுவதும் 2,153 போலீசாருக்கு பணியிட மாறுதல் வழங்கி டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிடுள்ளார். முதல் நிலை காவலர்கள் முதல் உதவி ஆய்வாளர்கள் வரை பணியிட மாறுதல் கோரி மனு அளித்தனர். அந்த மனுவின் அடிப்படையில் 2,153 காவலர்களை பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ராயப்பேட்டையில் 5 கிராம் மெத்தபெட்டமைன் போதைப்பொருளுடன் சீரியல் நடிகை எஸ்தர் என்பவரை போலீசார் கைது செய்தனர். கைதான சின்னத்திரை நடிகை எஸ்தர், திரைத்துறையினருக்கு போதைப் பொருள் சப்ளை செய்தாரா என […]
சென்னை : கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியைச் சேர்ந்த கே.செல்வராஜ். காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்எல்ஏ ஆவார். ஆனால், தற்போது அவர் திமுகவில் செய்தி தொடர்பு துணைச் செயலாளராக பொறுப்பேற்று பணியாற்றி வந்துள்ளார். இந்த நிலையில் அவரது 3-வைத்து மகன் வெங்கட்ராம் திருமணம் திருப்பதியில் நேற்று நடைபெற்றது. இதில், பங்கேற்று விட்டு வீடு திரும்பிய நேரத்தில், மலையில் இருந்து இறங்கிய போது மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. அவரை உடனே மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார். இந்த துயரைச் சம்பவம் […]
சென்னை : வங்கக்கடலில் அடுத்த 48 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகிறது. நவ. 12,13ம் தேதிகளில் சென்னையில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகள் நாளை(09-11-2024) செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, தீபாவளிக்கு மறுநாள் விடுமுறை விடப்பட்ட நிலையில் அதனை ஈடுசெய்ய நாளை வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை : தமிழ்நாடு அரசு போதையில்லா மாநிலத்தை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் பல்வேறு போதை தடுப்பு , விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. போதை விழிப்புணர்வு தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விழிப்புணர்வு வீடியோக்களையும் பதிவு செய்து வெளியிட்டு வருகிறார். தற்போது, போதையில்லா தமிழ்நாடு என்ற தமிழக அரசின் நோக்கத்தை செல்போன் வாயிலாக பலருக்கும் கொண்டு சேர்க்கும் வகையில் அதற்கான போட்டியை தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி, “போதையில்லா தமிழ்நாடு” எனும் கூற்றை அடிப்படையாகக் கொண்டு மீம்ஸ், […]
சென்னை : முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூரில் கந்த சஷ்டி திருவிழா கடந்த 2ம் தேதி தொடங்கிது. இத்திருவிழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் நிகழ்வு களைகட்டி வருகிறது. இந்நிகழ்ச்சிக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் கடல் அலைபோல குவிந்துள்ளனர். சூரசம்ஹாரத்தை காண கடற்கரையில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர். இதை தொடர்ந்து 7-ம் நாளான நாளை (நவ.8) திருக்கல்யாணம் நடைபெறும்.
கோவை : இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோவையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைத்து வருகிறார். கோவை அனுப்பர்பாளையத்தில் பல்லகல்வித்துறை சார்பில் ரூ.300 கோடி மதிப்பீட்டில் புதிய தந்தை பெரியார் நூலகம் மற்றும் அறிவியல் மையம் அமைக்க அடிக்கல் நாட்டினார். இந்த திட்டத்தோடு சேர்ந்து பல்வேறு நலத்திட்டங்களை கோவைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். அதில், ஐடி பூங்கா , விமான நிலைய விரிவாக்கம், சர்வதேச கிரிக்கெட் மைதானம் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்கள் இதில் அடங்கும். […]
கோவை : இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோவையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைக்கிறார். அனுப்பர்பாளையத்தில் ரூ.300 கோடி மதிப்பீட்டில் அமைய உள்ள தந்தை பெரியார் நூலகத்திற்கு அவர் அடிக்கல் நாட்டினார். அதன் பிறகு, பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ” கோவையில் அரசு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வந்த அமைச்சர் செந்தில் பாலாஜியின் செயல்பாடுகளை கண்டு பொறுக்க முடியாமல் சிலரது சதியால் அவருக்கு பல்வேறு தடைகள் கொடுக்கப்பட்டன. இது அரசு நிகழ்வு என்பதால் நான் […]