ஹரியானா : ஹரியானா மாநிலத்தில் உள்ள 90 சட்டமன்ற தொகுதிகளுக்கு தேர்தல் ஒரே கட்டமாக அண்மையில் நிறைவடைந்தது. அதனை தொடர்ந்து இன்று (அக்டோபர் 8) இரு மாநிலத்திலும் வாக்கு எண்ணிக்கை காலை 8 மணி முதல் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 11 மணிமணி நிலவரப்படி, ஹரியானாவில் உள்ள 90 தொகுதிகளில் 49 இடங்களில் பாஜக கட்சியும், 35 இடங்களில் காங்கிரஸஸும் முன்னிலை பெற்று வருகின்றன. மற்றவை 6 தொகுதிகளில் முன்னிலை பெற்று வருகின்றன. இதில், […]
சென்னை : இந்திய விமானப்படையின் சாகச நிகழ்ச்சி நேற்று சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்றது . இந்த நிகழ்ச்சியை காண சுமார் 15 லட்சம் பேர் வந்திருந்தனர். குறிப்பிட்ட இடத்தில் ஏராளமானோர் கூடியதால் கூட்ட நெரிசல் காரணமாக 5 பேர் உயிரிழந்தனர். நூற்றுக்கும் அதிகமானோர் மருத்துவமனையில் சிகிச்சை பெரும் நிலைக்கு தள்ளப்பட்டனர். தற்போது வரை 7 பேர் உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வருகின்றனர். விமானப்படை வான்வெளி சாக நிகழ்ச்சியை காண வந்து கூட்ட நெரிசலில் சிக்கி 5 […]
சென்னை : தென் தமிழகத்தில் வறண்ட வானிலை தொடரும், ஆங்காங்கே மிதமான மழை பெய்யும் எனவும், இதன் காரணமாக தென் மாவட்டங்களில் பகல் நேர வெப்பநிலை அக்டோபர் 7-ம் தேதிக்குப் பிறகு தான் குறையும் என இந்திய வானிலை மையம் கூறியுள்ளது. இந்த நிலையில், லட்சதீவு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் இன்று 14 மாவட்டங்களில் கனமழையும் அடுத்த 6 நாட்களுக்கும் இதே நிலைமை […]
கொச்சி: எட்டு ஆண்டுகளுக்கு முன்பு பெண் சினிமாவில் வாய்ப்பு வாங்கி கொடுப்பதாக கூறி கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள மஸ்கட் நட்சத்திர விடுதியில் மலையாள நடிகர் சித்திக் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக பெண் ஒருவர் புகார் அளித்திருந்தார். அந்த புகாரின் அடிப்படையில், திருவனந்தபுரத்தில் உள்ள அருங்காட்சியக போலீஸார், நடிகர் சித்திக் மீது, பாலியல் வழக்குப் பதிவு செய்தனர். அதுமட்டுமின்றி அவர் கைது செய்யப்படுவார் என தகவல் வெளியானது. இதனை தொடர்ந்து, கடந்த வாரம் கைது செய்யப்படவிருந்த […]
சென்னை: தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்றிரவு கனமழை பெய்தது. குறிப்பாக, சென்னை போரூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்து வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுவதால், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். உள் தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் 19 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் (RMC) கணித்துள்ளது. அதன்படி, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், ஈரோடு, நாமக்கல், […]
சென்னை : சென்னையில் நேற்றிரவு கனமழை கொட்டித் தீர்த்த நிலையில், அதிகபட்சமாக அம்பத்தூரில் 14 செ.மீ மழை பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இந்த நிலையில், மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, வடதமிழகத்தில் இன்று ஒருசில இடங்களிலும், தென்தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. 6 மாவட்டங்களில் கனமழை மேலும், […]
சென்னை : அசோக்நகர் அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளியில், மாற்றுத்திறனாளிகளை குறித்து சர்ச்சைக்குரிய பேச்சை மேற்கொண்ட மகா விஷ்ணுவை போலீசார் கைது செய்ததோடு, அவரிடம் தீவிர விசாரணையும் நடத்தி வருகின்றனர். இவரது கருத்துக்கு பெரும்பாலானோர் எதிர்ப்பு தெரிவித்து வந்தாலும், சிலர் ஆதரவும் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், திரைப்பட இயக்குனர் அமீர் இந்த விவகாரம் தொடர்பாக, தமிழக அரசை பாராட்டியும், திரைப்பட இசை வெளியீட்டு விழா மற்றும் அறிமுக விழாக்களை கல்வி நிறுவன வளாகங்களில் நடத்த அரசு தடை […]
ஆந்திர பிரதேசம் : ஆந்திர மாநிலத்தில் உள்ள அம்பேத்கர் கோனசீமா மாவட்டத்தில் இருக்கும் ஒரு சந்தையில் கறிக்கடைக்காரர் ஒருவர் காகத்தை பிடித்து அதன் காலில் கயிறால் கட்டிப்போட்ட சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. மேலும், இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தாடிபாகா பகுதியில் உள்ள சந்தையில், இந்த சம்பவமானது அரங்கேறி இருக்கிறது. அந்த பகுதியில் உள்ள கோழி கறிக்கடை வைத்திருக்கும் நபர் ஒருவர், காகங்கள் விடாமல் கரைந்து கொண்டே இருந்ததால் எரிச்சலடைந்த அவர் கரைந்த […]
TNPSC : தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்தும் 2327 பணியிடங்களுக்கான ஒருங்கிணைந்த சிவில் சர்வீசஸ் தேர்வான குரூப் 2 மற்றும் குரூப் 2 A முதல்நிலைத் தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளையே (ஜூலை 19) கடைசி நாள் ஆகும். குரூப் 2 தேர்வில் 507 பணியிடங்களுக்கும், குரூப் 2 ஏ பிரிவில் 1820 பணியிடங்களுக்கான அறிவிப்பு கடந்த மாதம் 20ம் தேதி வெளியானது. எழுத்துத் தேர்வு செப்டம்பர் 14-ம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில், இதுவரை […]
டெல்லி : 17 வருடங்களுக்கு பிறகு இந்திய அணி 20 ஓவர் உலகக்கோப்பையை வென்று அசத்தியது. இந்நிலையில், நேற்று வெற்றி பெற்ற இந்திய அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்து காலை விருந்து அளித்தார். அங்கு அவருடன் இந்திய வீரர்கள், பயிற்சியாளராக டிராவிட் என அனைவரும் மனம் திறந்த பேசினார்கள். அதில் முக்கிய வீரர்களான ரோஹித் சர்மா, விராட் கோலி , ரிஷப் பண்ட், ஜஸ்பிரிட் பும்ரா, ஹர்திக் பாண்டியா, சூரியகுமார் யாதவ் மற்றும் பயிற்சியாளராக ராகுல் டிராவிட் […]
அசாம் வெள்ளம்: அசாமில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி இதுவரை 38 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் வெள்ளத்தில் மூழ்கி மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். அஸ்ஸாம் மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் (ASDMA) தகவலின்படி, டின்சுகியா மாவட்டத்தில் 2 இறப்புகளும், தேமாஜி மாவட்டத்தில் ஒருவரும் உயிரிழந்தனர். இதனால், மொத்த உயிரிழப்பு எண்ணிக்கையை 38 ஆக உயர்ந்துள்ளது. கடந்த சில நாட்களாக பெய்த கனமழை காரணமாக, வெள்ள நீர் வீடுகளுக்குள் புகுந்ததையடுத்து, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட […]
கேரளா : கேரளாவில் ஒரு சோகமான சம்பவத்தில், ஜூன் 20, வியாழன் அன்று ஒரு யானை மிதித்து பாகன் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தின் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. கேரளாவின் இடுக்கி மாவட்டம் மூணாருக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்காக யானை சவாரி நடத்தப்படுவது என்பது வழக்கம். எனவே, யானை சவாரிக்காக பாலகிருஷ்ணன் என்பவர் யானையை பராமரித்து கொண்டிருந்தார். அப்போது யானையை பாகன் கட்டளையிட்டு கொண்டு பிரம்பால் தாக்கினார். இதனால் […]
ராயன் : நடிகர் தனுஷ் இயக்கி நடித்துள்ள ‘ராயன்’ திரைப்படம் வருகிற ஜூலை 26ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சன்பிக்சர்ஸ் தயாரிப்பில், ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவாகியுள்ள ‘ராயன்’ விரைவில் திரையரங்குகளில் வெளிவரவுள்ளது. இந்த படம் முதலில் ஜூன் 13 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியிட திட்டமிடப்பட்டது. ஆனால், இப்போது தேதி காரணமின்றி ஒத்திவைக்கப்பட்டது. அதன்படி, படத்தின் தயாரிப்பாளர்கள் படம் ஜூலை 26, 2024 அன்று திரையரங்குகளில் வெளியிடப்படும் என்று அறிவித்துள்ளனர். நடிகர் தனுஷின் பிறந்தநாள் ஜூலை […]
டெல்லி: இன்று டெல்லியில் பாஜக தலைமையிலான NDA கூட்டணியின் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்ட NDA கூட்டணி எம்பிக்கள், பிரதமர் மோடி, சந்திரபாபு நாயுடு, நிதிஷ்குமார், அமித்ஷா, ராஜ்நாத் சிங், குமாரசாமி என பலர் கலந்துகொண்டுள்ளனர். இந்த கூட்டத்தில் நாடாளுமன்ற குழுத்தலைவராக பிரதமர் மோடி தேர்வு செய்யப்பட்டார். அதன் பிறகு அவர் பேசுகையில், 2024 தேர்தல் முடிவுகள் NDA கூட்டணிக்கு வெற்றியாகவே நாங்கள் பார்க்கிறோம். இதனை தோல்வி போல சித்தரிக்க எதிர்க்கட்சிகள் முயற்சி […]
கன்னியகுமாரி: தேர்தல் பிரச்சாரம் முடிந்ததை அடுத்து, 3 நாட்கள் தமிழகம் வந்துள்ள பிரதமர் மோடி கன்னியாகுமரி விவேகானந்தர் மண்டபத்தில் தனது தியானத்தை தொடங்கினார். பிரதமர் மோடி போட்டியிடும் வாரணாசி தொகுதி உட்பட , நாடாளுமன்ற இறுதிக்கட்ட தேர்தல் பிரச்சாரங்கள் இன்றுடன் நிறைவுபெற்றுவிட்டன. இதனை அடுத்து, இன்று முதல் ஜூன் 1 வரையில் 3 நாள் பயணமாக பிரதமர் மோடி தமிழகம் வந்துள்ளார். உ.பி வாரணாசியில் இருந்து தனி விமானம் மூலம் கேரளா மாநிலம் திருவனந்தபுரம் வந்திறங்கிய மோடி, […]
கலப்பு திருமணம் : இந்து-முஸ்லிம் திருமணமானது முஸ்லீம் தனிப்பட்ட சட்டத்தின் கீழ், செல்லாது என மத்திய பிரதேச உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்திய கலப்பு திருமண சட்டம் 1954 இன் படி, ஒரு இந்து பெண்ணும், இஸ்லாமிய இளைஞரும், தங்கள் திருமணத்தை பதிவு செய்ய வேண்டும் என்றும், அதற்கு தங்கள் குடும்பத்தில் இருந்து தங்களை பாதுக்காக்க போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் மத்திய பிரதேச உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தனர். இருவருக்குமிடையிலான உறவை பெண்ணின் குடும்பத்தினர் […]
புது டெல்லி: மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தில் பாஜக, மதம் மற்றும் பிரிவினைவாத விவகாரங்களில் மக்களை தவறாக வழிநடத்த முயற்சிக்கிறது என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே குற்றம் சாட்டியுள்ளார். கடந்த 15 நாட்களில், பிரதமர் நரேந்திர மோடி தனது பேச்சுகளில் வேலைவாய்ப்பின்மை மற்றும் விலையுயர்வை பற்றிப் பேசவில்லை, ஆனால் “மோடி” 758 முறை, “காங்கிரஸ்” 232 முறை, “இந்தியா கூட்டணி” 573 முறை குறிப்பிடப்பட்டதாக அவர் கூறினார். இது தொடர்பாக, இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய மல்லிகார்ஜுன் கார்கே, […]
ஜம்மு-காஷ்மீர் : பக்தர்களை ஏற்றிச் சென்ற பேருந்து சாலையில் இருந்து தவறி, பள்ளத்தாக்கில் விழுந்து விபத்துக்குள்ளானதில் 15 பேர் உயிரிழந்தனர். ஜம்மு மாவட்டத்தில் பக்தர்களை ஏற்றிச் சென்ற சாலையில் சென்றுகொண்டிருந்த பேருந்து ஒன்று நிலை தடுமாறி ஒரு 150 பள்ளத்தாக்கில் கவிழ்ந்ததில் குறைந்தது 15 பேர் பலியாகினர் மற்றும் பலர் காயமடைந்தனர். இந்த விபத்து ஜம்மு-பூஞ்ச் நெடுஞ்சாலை டாங்லி மோர் அருகே சோகி சோராவில் நடந்ததுள்ளது. பேருந்து 150 அடிக்கு கீழே பள்ளத்தாக்கில் உருண்டதாக சொல்லப்படுகிறது. தற்போது, […]
மக்களவை தேர்தல் : இறுதி கட்ட வாக்குப்பதிவுக்கான தேர்தல் பிரச்சாரம் நிறைவடைந்தது. ஜூன் 1ம் தேதி 7 கட்ட தேர்தல் நடைபெற உள்ளது. 7 கட்டங்களாக நடைபெற்று வரும் மக்களவைத் தேர்தலில், இதுவரை 6 கட்டங்களாக நடைபெற்று, அதற்கான வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ளது. இதில் கடைசிக் கட்டத் தேர்தல் நாளை மறுநாள் (ஜூன் 1) நடைபெற உள்ள நிலையில், இன்று மாலை 5 மணியுடன் தேர்தல் பிரச்சாரம் ஓய்ந்தது. ஏப்ரல் 19-ம் தேதி தொடங்கிய மக்களவை தேர்தல் ஒவ்வொரு […]
ஒடிசா: தமிழகத்தை பூர்வீகமாக கொண்டவரும், ஒடிசா ஆளும் அரசியல் கட்சியில் தீவிரமாக செயல்பட்டு வருபவருமான வி.கே.பாண்டியனை தனது அரசியல் வாரிசு இல்லை என நவீன் பட்நாயக் ANI செய்தி நிறுவன பேட்டியில் தெரிவித்துள்ளார். ஒடிசா மாநிலத்தில் பிஜு ஜனதா தளம் 2000ஆம் ஆண்டு முதல் ஆட்சி செய்து வருகிறது. அக்கட்சி தலைவர் நவீன் பட்நாயக் 5 முறை தொடர்ந்து முதலைவராக பொறுப்பில் இருக்கிறார். ஒடிசா சட்டமன்ற தேர்தல் மற்றும் மக்களவை தொகுதிககளுக்கான என இரு தேர்தலும் ஒரே […]