திருவனந்தபுரம் : மகரஜோதி தரிசனத்திற்காக சபரிமலை ஐயப்பன் கோயில் கடந்த டிசம்பர் 30ஆம் தேதி திறக்கப்பட்டு தினந்தோறும் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு வருகிறது. நாளை (ஜனவரி 14) மாலை 6 மணி முதல் 7 மணிக்குள் பொன்னம்பலமேட்டில் மகரஜோதி தெரியும். பொன்னம்பல மேட்டில் மகரஜோதி வடிவில் சுவாமி ஐயப்பன் பக்தர்களுக்கு காட்சி தருவதாக கூறப்படுவது ஐதீகம். இத்னை காண லட்சக்கணக்கான பக்தர்கள் சபரிமலைக்கு மகரஜோதி தரிசன சமயத்தில் சபரிமலை வருவதுண்டு. இதனால் மற்ற நாட்களை விட இந்த […]
டெல்லி : அரசு வேலை வாங்கி தருவதாக 100க்கும் மேற்பட்டோரிடம் கோடிக்கணக்கில் பண மோசடி, அதிமுவின் இரட்டை இலை சின்னத்தை பெற்று தருவதாக கூறி அரசியல் பிரமுகரிடம் ரூ.50 கோடி வரை ஏமாற்ற முயற்சித்த வழக்கு இதுபோல பல்வேறு மோசடி வழக்குகளின் கீழ் கைது செய்யப்பட்டு டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுளளார் சுகேஷ் சந்திரா. இவர், அண்மையில் தனது வழக்கறிஞர் மூலமாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாரமனுக்கு கடிதம் எழுதியுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. அதில், தன்மீதான […]
டெல்லி: கடந்த 2023 ஆம் ஆண்டு நடைபெற்ற ஒருநாள் உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்குப் பிறகு, இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி இந்தியா அணியில் இடம்பெறவில்லை. அதன்பிறகு, உள்ளூர் போட்டிகளில் விளையாடிய போதிலும், இந்த நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் இந்தியாவுக்காக இன்னும் விளையாடவில்லை. ஆனால் சமீபத்திய தகவல்களின்படி, அடுத்து வரவுள்ள சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் விளையாட முகமது ஷமி மீண்டும் இந்திய அணிக்கு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவருக்கு 2023 ஆம் ஆண்டு ஒருநாள் […]
டெல்லி: இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) PSLV-C60 பயணத்தில், விண்வெளியில் விதையை முதலில் முளைக்க வைத்து, இலைகளை துளிர் விட செய்து இஸ்ரோ சாதனை படைத்துள்ளது. விண்வெளியில் தாவரங்கள் வளர்ப்பது குறித்து இஸ்ரோ ஆய்வு ஒன்றை இஸ்ரோ நடத்திருக்கிறது. அட ஆமாங்க… பி.எஸ்.எல்.வி., சி 60 ராக்கெட் மூலம் இஸ்ரோ விண்வெளிக்கு அனுப்பிய ஆராய்ச்சிக்கருவியில், பயிர் வளர்ப்பு சோதனை வெற்றியடைந்துள்ளது.கடந்த ஆண்டு டிசம்பர் 30-ஆம் தேதி ஆந்திர பிரதேசம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இஸ்ரோ ராக்கெட் ஏவுதளத்தில் […]
சத்தீஸ்கர்: சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்சலைட் தீவிரவாதிகள் நிகழ்த்திய தாக்குதலில் 9 வீரர்கள் பலியாகினர். பிஜப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் கூட்டு ரோந்து முடிந்து திரும்பும்போது நக்சலைட்டுகள், பாதுகாப்புப் படையினர் சென்ற வாகனத்தை குறிவைத்து ஐஈடி வெடிகுண்டுகளை வீசி வெடிக்கச் செய்துள்ளனர். இதில் வாகனத்தில் சென்ற 9 வீரர்கள் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் பலர் இந்த குண்டுவெடிப்பில் காயம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது. அண்மையில், சத்தீஸ்கர் மாநிலம் பஸ்தர் மாவட்டத்தில், பாதுகாப்புப் படையினருக்கும் நக்சல்களுக்கும் இடையே நடந்த என்கவுன்டரில் 5 […]
சென்னை : இந்தியாவில் டிஜிட்டல் பேமெண்ட் பயன்பாடு என்பது நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், டிஜிட்டல் பேமெண்ட் வசதிகளை இன்னுமே மக்கள் அதிகமாக பயன்படுத்தவேண்டும் என்பதற்காக வாட்சப் நிறுவனம் அதிரடியான முடிவு ஒன்றை எடுத்துள்ளது. அது என்னவென்றால், எண்ணிக்கை இல்லாமல் எவ்வளவு பேர் வேண்டுமானாலும் வாட்சப் பேமெண்ட் வசதியை பயன்படுத்தி கொள்ளும் வசதிக்கு அனுமதி கேட்டு தேசிய கார்ப்பரேஷனுக்கு நோட்டிஸ் அனுப்பி இருந்தது. இதற்கு முன்னதாக, இந்தியா முழுவதும் 10 கோடி பயனர்களுக்கு மட்டுமே பயன்பாடு […]
வதோதரா : இந்திய மகளிர் கிரிக்கெட் அணி மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி0 போட்டிகள், 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடிய நிலையில், இரண்டு தொடரிலும் அசத்தலான வெற்றிபெற்று நாடு திரும்புகிறது. ஏற்கனவே, டி20 தொடரில் 2-1 என்ற கணக்கில் இந்திய கிரிக்கெட் அணி வெற்றி பெற்று 5 ஆண்டுகளுக்குப் பிறகு சொந்த மண்ணில் தொடரை கைப்பற்றி அசத்தியது. டி20 தொடரில் வெற்றிபெற்றதை தொடர்ந்து, இந்திய அணி அடுத்ததாக 3 போட்டிகள் […]
மெல்போர்ன்: இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி வருகிறது. நேற்று, 4வது டெஸ்ட் போட்டி (பாக்சிங் டே டெஸ்ட்) மெல்போர்ன் மைதானத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. நான்காவது டெஸ்டின் இரண்டாம் நாள் முடிவில் இந்தியா அணி, 5 விக்கெட் இழப்புக்கு 164 ரன்கள் எடுத்துள்ளது, ஆஸ்திரேலியாவை விட 310 ரன்கள் பின்தங்கி விளையாடுவதில் தடுமாறி வருகிறது. அதன்படி, ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இக்கட்டான சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது இந்திய […]
சென்னை : இன்றயை காலகட்டத்தில் நாம் அதிகமாக பயன்படுத்தும் சமூக வலைத்தளங்களில் ஒன்றாக யூடியூப் உள்ளது. இதில் பொழுதுபோக்குக்காகவும், சில முக்கிய தகவல்களை தெரிந்துகொள்ளவும் பலரும் பயன்படுத்தி வருகிறார்கள். இதில், இருக்கும் பெரிய தலைவலியான விஷயமே நாம் ஆர்வமாக எதாவது பார்த்துக்கொண்டிருந்தோம் என்றால் இடையில் திடீரென எதாவது விளம்பரம் வரும். அதனை பார்க்கும்போது அய்யோ நடுவில் இது வேற வருகிறதே என நமக்கு அந்த வீடியோ பார்க்கும் ஆர்வமும் கூட போய்விடும். விளம்பர பிரச்சனை இல்லாமல் வீடியோக்களை பார்க்கவேண்டும் […]
டெல்லி : சில ஆண்டுகளுக்கு முன்பு, அதாவது ஜியோ தொலைத்தொடர்பு நிறுவனம் இந்திய தொலைத்தொடர்பு சந்தைக்கு வரும் முன்னர் வரையில், இந்திய தொலைதொடர்பு நிறுவனங்களான ஏர்டெல், வோடபோன் ஆகிய நிறுவனங்கள் வாய்ஸ் காலுக்கு தனி ரீசார்ஜ், இன்டர்நெட்டிற்கு தனி ரீசார்ஜ், SMSகளுக்கு தனி ரீசார்ஜ் ஆகியவை இருந்தன. ஆனால், அதன் பிறகு சமீப ஆண்டுகளாகவே, அனைத்திற்கும் ஒரே ரீசார்ஜ் போல மாறிவிட்டது. டேட்டா, வாய்ஸ் கால் , SMS ஆகியவை சேர்த்து தான் ரீசார்ஜ் செய்யும் நிலை […]
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இந்த வார தொடக்க நாளான நேற்று எந்தவித மாற்றமும் இல்லாமல் விற்பனையான நிலையில், இன்று சவரனுக்கு ரூ.80 குறைந்துள்ளது. நேற்றைய தினம் ரூ.57,120க்கு விற்கப்பட்ட ஒரு சவரன் தங்கம், இன்று ரூ.57,200க்கு விற்கப்படுகிறது. மேலும், நேற்று ரூ.7,140ஆக இருந்த ஒரு கிராம் தங்கத்தின் விலை இன்று ரூ.10 உயர்ந்து ரூ.7,150ஆக உள்ளது. அதேபோல், 24 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூ.7,735-க்கு விற்பனை ஆகிறது. இதனால் ஒரு சவரன் தங்கம் […]
தெலங்கானா: புஷ்பா 2 சிறப்புக் காட்சி பார்க்க வந்தபோது நெரிசலில் சிக்கி பெண் உயிரிழந்த சம்பவத்தையடுத்து, நடிகர் அல்லு அர்ஜுன் கைது, முதல்வர் ரேவந்த் ரெட்டியின் காட்டமான பேச்சு, இப்போது அல்லு அர்ஜுனின் வீடு தாக்குதல் என விவகாரம் நீண்டு கொண்டே செல்கிறது. இந்த நிலையில், நடிகர் அல்லு அர்ஜுனின் வீட்டின் மீது, நடத்தப்பட்ட தாக்குதலில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட 6 பேருக்கு ஜாமீன் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. BREAKING: Bail GRANTED to Allu Arjun house???? […]
சென்னை: நடிகர் அல்லு அர்ஜூன் வீட்டின் மீது நடத்தப்பட்ட தாக்குதலால் அப்பகுதியில் பரபரப்பான சூழ்நிலை நிலவுகிறது. சமீபத்தில் திரையரங்கில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி ஒரு பெண் பலியான சம்பவம் தொடர்பாக, நடிகர் அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்ட நிலையில், தெலுங்கனா சட்டப்பேரவையில், “புஷ்பா 2 படம் முதல் ஷோவிற்கு அல்லு அர்ஜுன் தியேட்டருக்கு வரக் கூடாது என காவல்துறை அறிவுறுத்தி இருந்தது. அதையும் மீறி அவர் முதல் ஷோவிற்கு சென்றார், மக்கள் கூட்டம் […]
தெலங்கானா : ‘புஷ்பா 2’ படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க வந்த பெண் உயிரிழந்த விவகாரம் குறித்து, தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி சட்டப்பேரவையில் காட்டமாக பேசியிருக்கிறார். ‘திரையரங்கிற்கு வரவேண்டாம் என காவல்துறையினர் கூறியதை மதிக்காமல் அல்லு அர்ஜூன் சென்றதே கூட்ட நெரிசல் ஏற்பட காரணம்’ என குற்றம் சாட்டியுள்ளார். மேலும், பெண் உயிரிழந்தது தெரிந்தும் படத்தை முழுவதுமாக பார்த்த பிறகே அல்லு அர்ஜூன் வெளியே வந்ததாக கூறியுள்ளார். புஷ்பா 2 வெளியீட்டின்போது படம் பார்க்க வந்த […]
டெல்லி : போனை தயாரிக்கும் வளர்ச்சியில் இந்தியா தற்போது அசுரத்தனமான வளர்ச்சியை கண்டுள்ளதாக கூறப்படுகிறது. ஏனென்றால். இந்தியாவில் தயாரிக்கப்படும் மொபைல் போன்களை தான் 99.2% பேர் இந்தியாவில் பயன்படுத்தி வருகிறார்கள் என சர்வேவில் தெரியவந்ததாக மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை இணையமைச்சர் ஜிதின் பிரசாத் தெரிவித்துள்ளார். இது குறித்து நாடாளுமன்றத்தில் பேசிய ஜிதின் பிரசாத் ” இந்தியாவில் கடந்த 10-ஆண்டுகளில் எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தி மதிப்பு அதிகம் வளர்ச்சியை கண்டுள்ளது மகிழ்ச்சியாக இருக்கிறது. கடந்த 2014, 2015 ஆகிய நிதியாண்டில் […]
சென்னை: கடந்த சில தினங்களாக ஏற்றத்திலிருந்த தங்கம் விலை, நேற்று எந்த மற்றமும் இல்லாமல் விற்பனையான நிலையில், இன்று திடீர் சரிவைக் கண்டுள்ளது. அதன்படி, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை, இன்று கிராமுக்கு ரூ.55 குறைந்து ரூ.7,230க்கும், சவரனுக்கு ரூ.440 குறைந்து ரூ.57,840-க்கும் விற்பனையாகிறது. அதேபோல் வெள்ளி விலையும் கிராமுக்கு ரூ.3 குறைந்து, ரூ.101க்கும், கிலோ வெள்ளி ரூ.101,000-க்கும் விற்பனையாகிறது. மேலும், 24 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூ.7,887-க்கு விற்பனை ஆகிறது. இதனால் ஒரு சவரன் […]
மும்பை : பலரும் உபயோகம் செய்து வரும் இன்ஸ்டாவில் அடிக்கடி நல்ல அப்டேட்டுகளை மெட்டா நிறுவனம் கொண்டு வருகிறது. அந்த வகையில் தற்போது, மெசேஜை Schedule செய்து வைத்துக்கொள்ளலாம் அப்டேட்டை கொண்டு வந்துள்ளது. இந்த அப்டேட்டின் மூலம் காதல் செய்பவர்கள் மகிழ்ச்சியாக இருப்பார்கள் என கூறப்படுகிறது. ஏனென்றால், நமக்கு பிடித்த நபரின் பிறந்த நாள் அன்று சரியாக 12 மணிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் சொல்லவேண்டும் என்றால் சில சமயங்களில் துக்கம் வந்து உறங்கிவிடுவோம். இதனால் நம்மளுடைய பிறந்த […]
டெல்லி : இந்தியாவில் Oppo Find X8 போனை வாங்குவதற்காக நீங்கள் ஆர்வமான ஒருவராக இருந்தீர்கள் என்றால் உங்களுக்காகவே அசத்தலான குட் நியூஸ் வந்திருக்கிறது. அது என்னவென்றால், Oppo ஆன்லைன் ஸ்டோர், ப்ளிப்கார்ட் மற்றும் பிற சில்லறை விற்பனை நிலையங்கள் மற்றும் பல்வேறு விற்பனை நிலையங்களில் Oppo Find X8 விற்பனைக்கு வந்துள்ளது என்பது தான். விலை எவ்வளவு? இந்த போன்களுடைய விலையை பற்றி பார்க்கையில் Oppo Find X8 Pro 16ஜிபி + 512ஜிபி மாறுபாட்டின் விலை […]
டெல்லி : iQOO நிறுவனமானது ஒரு வழியாக iQOO 13 ஐ இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த போன் எப்போது வெளியாகும் என பலரும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்த நிலையில், தற்போது அறிமுகமாகியுள்ளதால் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். இந்த அளவுக்கு இந்த போனின் மீது எதிர்பார்ப்பு எழுவதற்கு முக்கியமான காரணமே iQOO 13 போனானது ஸ்னாப்டிராகன் 8 செயல்திறன் கொண்ட காரணம் தான். இதற்கு முன்னதாகவே, ஸ்னாப்டிராகன் 8 செயல்திறன் கொண்ட Realme GT 7 Pro போனை […]
சென்னை : இன்ஸ்டாகிராம் அடுத்த காலகட்டத்திற்குள் பல வசதிகளை கொண்டு வந்து இப்போது இருப்பதை விட பெரிய அளவில் வளர்ந்து விடும் என்கிற அளவுக்கு மெட்டா நிறுவனமானது அடிக்கடி பல அப்டேட்டுகளை தொடர்ச்சியாக கொண்டு வந்து பயனர்களை கவர்ந்து வருகிறது. இப்படியான அப்டேட்டுகளை கொண்டுவருவதன் மூலம் இன்ஸ்டாகிராம் மீது மக்களுக்கு இருக்கும் ஆர்வமும் நாளுக்கு நாள் எகிறி கொண்டே செல்கிறது. அந்த வகையில், இன்னுமே மக்களுடைய எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி இன்ஸ்டாகிராம் உபயோகம் செய்யாதவர்களையும் ஆப்பிற்குள் கொண்டு வர […]