காவி நிறத்தில் கலக்க வரும் இருசக்கரங்களின் கதாநாயகன்…!!! சுவாரசியமான தகவல்கள்…!!!

காவி நிறத்தில் கலக்க வரும் இருசக்கரங்களின் கதாநாயகன்…!!! சுவாரசியமான தகவல்கள்…!!!

Default Image
  • இந்திய சந்தையில் சிறந்த இடத்தை பிடித்திருப்பது ராயல் எண்ட்பீல்டு நிறுவனம் ஆகும்.
  • இந்நிறுவனம் இப்போது புதிதாக  பிஎஸ்6 என்ற தரத்திற்க்கு  மாற்றப்பட்டு அடுத்த ஆண்டு புதிதாக அறிமுகமாகவுள்ள தண்டர்பேர்டு 350எக்ஸ் என்ற புதிய மாடலுக்கு காவி  நிறத்தை புதிதாக  வழங்கியுள்ளது.

மேலும் இந்த  மாடலின்  புகைப்படங்களையும்  தகவல்களையும் இந்த செய்தி குறிப்பில் சற்று தெளிவாக  காணலாம். இருசக்கர வாகன விற்பனையில் மாஸ் காட்டும்   ராயல் எண்ட்பீல்டு நிறுவனம் ஏற்க்கனவே வெளிவந்த  தண்டர்பேர்டு 500 எக்ஸ் பைக்கிற்கு கொண்டுவந்துள்ள காவி நிறத்தை அப்படியே  தண்டர்பேர்டு 350எக்ஸ் மாடலுக்கு அளிக்கவுள்ளது.ஏற்கனவே வந்த  தண்டர்பேர்டு 500எக்ஸ் என்ற மாடலின்  தயாரிப்பை இந்நிறுவனம்  அடுத்த ஆண்டு முதல்  உற்பத்தியை நிறுத்த உள்ளது, எனவே  இந்த மாடலின் நிறத்தை  அப்படியே தண்டர்பேர்டு 350எக்ஸ் பிஎஸ்6 என்ற புதிய   மாடலுக்கு கொடுக்கப்பட உள்ளது.

Related image

இந்த புதிய காவி  மாடல் வாகனத்தில்  346சிசி சிங்கிள் சிலிண்டர் ஏர் கூல்டு என்ஜினுடன்   விற்பனையாகி வருகின்ற இந்த  தண்டர்பேர்டு 350எக்ஸ் என்ற இந்த மாடல்  5,250 ஆர்பிஎம்-ல் 19.8 பிஎச்பி பவரை கொண்டுள்ளது. மேலும் இந்த மாடல் வாகனம் 4,000 ஆர்பிஎம்-ல் 28 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்டது.மேலும் இந்தமாடல் வாகனம்  பிஎஸ்6 தரத்திற்கு தற்போது அப்டேட் செய்யப்படவுள்ளதால்  இந்த மாடல் வாகன  என்ஜினுடன் 5-ஸ்பீடு ட்ரான்ஸ்மிஷன் அமைப்பு இணைக்கப்படவுள்ளது. இந்த மாடலில் 350சிசி மற்றும் 500சிசி  வாகனமான இதில் டிஸ்க் ப்ரேக், கண்ணீர்த்துளி வடிவிலான பெட்ரோல் டேங்க் மற்றும் சில காஸ்மெட்டிக் பாகங்களின் ஒரு சில வேறுபாட்டுடன் அறிமுகமாகியது.

Image result for orange colour royal enfield

இத்தகைய வசதிகள் நிறைந்த இந்த வாகனம் ப்ரீமியம் விலையில் விற்பனை செய்யப்படுவதால்  இளைஞர்களிடையே இந்த மாடல்  தற்போது வரை நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மேலும் 500சிசி திறனுடன்  விற்பனையாகி வரும் புல்லட், தண்டர்பேர்டு மற்றும் கிளாசிக் ஆகிய மாடல்களின்  தயாரிப்பு அடுத்த ஆண்டுடன்  நிறுத்தப்படுவதற்கு முக்கிய காரணமாக , இந்தியா முழுவதும் அமலாக உள்ள புதிய மாசு உமிழ்வு விதி தான் என்கின்றனர்.

Join our channel google news Youtube