டெல்லி : கடந்த ஆகஸ்ட் மாதம் வங்கதேசத்தில் ஏற்பட்ட உள்நாட்டு கலவரத்தில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர். இந்த உள்நாட்டு கிளர்ச்சி உச்சத்தில் இருந்த போது அப்போது வங்கதேச பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா இந்தியாவுக்கு தப்பி வந்து, ஆகஸ்ட் 5ஆம் தேதிமுதல் தற்போது வரை தஞ்சம் அடைந்து உள்ளார். நூற்றுக்கணக்கான பொதுமக்கள் உயிரிழந்ததை அடுத்து, அவர் மீது குற்றவியல் வழக்கு பதிவு செய்யப்பட்டு, வங்கதேச தலைநகர் டாக்காவில் உள்ள அந்நாட்டு நீதிமன்றம், அவர் மீதும், அவரது அமைச்சரவை, அப்போது […]
ஆந்திரா : இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) பிஎஸ்எல்வி சி-60 (PSLV-C60/SPADEX ) ராக்கெட் எப்போது எந்த தேதியில் எந்த பகுதியில் வைத்து செலுத்தப்படும் என்கிற விவரம் பற்றிய தகவலை எக்ஸ் வலைத்தள பக்கத்தில் தெரிவித்துள்ளது. அதன்படி, ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து டிசம்பர் 30 ஆம் தேதி 21:58 IST (இந்திய நேரப்படி இரவு 09.58 மணிக்கு விண்ணில் ஏவ திட்டமிடப்பட்டுள்ளது. இரண்டு சிறிய விண்கலங்களை குறைந்த பூமி வட்ட […]
டெல்லி : மாணவர்கள் கல்வி இடைநிற்றலை தடுக்கும் நோக்கில் மத்திய அரசு கல்வி உரிமை சட்டம் (RTE) 2019-ஐ அமல்படுத்தி இருந்தது. அதன்படி 1 முதல் 8ஆம் வகுப்பு வரையில் மாணவர்கள் கட்டாய தேர்ச்சி என்ற முறை அமலில் உள்ளது. தமிழகம் உட்பட 16 மாநிலங்களில் இந்த முறை நடைமுறையில் உள்ளது. இந்நிலையில், தற்போது மத்திய கல்வி அமைச்சகம், கல்வி உரிமை சட்டத்தில் திருத்தம் கொண்டுவந்துள்ளது. அதன்படி, 1 முதல் 8ஆம் வகுப்பு வரை கட்டாய தேர்ச்சி […]
தெலங்கானா: புஷ்பா 2 சிறப்புக் காட்சி பார்க்க வந்தபோது நெரிசலில் சிக்கி பெண் உயிரிழந்த சம்பவத்தையடுத்து, நடிகர் அல்லு அர்ஜுன் கைது, முதல்வர் ரேவந்த் ரெட்டியின் காட்டமான பேச்சு, இப்போது அல்லு அர்ஜுனின் வீடு தாக்குதல் என விவகாரம் நீண்டு கொண்டே செல்கிறது. இந்த நிலையில், நடிகர் அல்லு அர்ஜுனின் வீட்டின் மீது, நடத்தப்பட்ட தாக்குதலில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட 6 பேருக்கு ஜாமீன் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. BREAKING: Bail GRANTED to Allu Arjun house🏡 […]
டெல்லி : நாடு முழுவதும் உள்ள மருத்துவ கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையானது நீட் (NEET) எனும் பொது நுழைவு தேர்வு மூலமாக நடைபெற்று வருகிறது. இந்த நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு ஆண்டுதோறும் கலந்தாய்வானது ஆகஸ்ட் , செம்படம்பர் மாதங்களில் நடைபெறும். இந்த முதற்கட்ட நீட் கலந்தாய்வு நிறைவடைந்த பிறகும் காலியாக உள்ள மருத்துவ படிப்புகளுக்கான சேர்க்கை குறித்தும், அதற்கு சிறப்பு கலந்தாய்வு நடத்த வேண்டும் என்ற கோரிக்கை முன்னிறுத்தியும் உத்திர பிரதேச மாநிலம் லக்னோவில் […]
டெல்லி : பிரதமர் நரேந்திர மோடி, நேற்று முன்தினம் குவைத் நாட்டின் அழைப்பை ஏற்று அங்கு 2 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். முதல் நாளில் அந்நாட்டில் உள்ள இந்தியர்களை சந்தித்தார். அங்கு நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்டார். அதன் பிறகு நேற்று குவைத் மன்னர் ஷேக் மெஷால் அல்-அஹ்மத் அல்-ஜாபர் அல் சபாவை சந்தித்து பேசினார். அப்போது இந்தியா – குவைத் இடையே 4 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியது. இருநாட்டு பாதுகாப்பு, கூட்டுறவு துறை, கலாச்சாரம், இந்தியாவின் […]
சென்னை: நடிகர் அல்லு அர்ஜூன் வீட்டின் மீது நடத்தப்பட்ட தாக்குதலால் அப்பகுதியில் பரபரப்பான சூழ்நிலை நிலவுகிறது. சமீபத்தில் திரையரங்கில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி ஒரு பெண் பலியான சம்பவம் தொடர்பாக, நடிகர் அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்ட நிலையில், தெலுங்கனா சட்டப்பேரவையில், “புஷ்பா 2 படம் முதல் ஷோவிற்கு அல்லு அர்ஜுன் தியேட்டருக்கு வரக் கூடாது என காவல்துறை அறிவுறுத்தி இருந்தது. அதையும் மீறி அவர் முதல் ஷோவிற்கு சென்றார், மக்கள் கூட்டம் […]
ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில், ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தலைவரும், மாநில நிதி அமைச்சக பிரதிநிதிகளும் கலந்து கொண்டு தங்கள் ஜிஎஸ்டி வரி பரிந்துரைகளை வழங்கினர். இதில், குறிப்பாக பாப்கார்னுக்கு 12 சதவிகித ஜி.எஸ்.டி வரி விதிக்க பரிந்துரை செய்தது அதிர்ச்சியை கிளப்பியது. அதாவது, பாப்கார்னின் பல்வேறு பண்புகள் மற்றும் தயாரிப்பு முறைகளில் இருந்து வரி வேறுபாடுகிறது என்று கவுன்சில் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. […]
தெலங்கானா : ‘புஷ்பா 2’ படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க வந்த பெண் உயிரிழந்த விவகாரம் குறித்து, தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி சட்டப்பேரவையில் காட்டமாக பேசியிருக்கிறார். ‘திரையரங்கிற்கு வரவேண்டாம் என காவல்துறையினர் கூறியதை மதிக்காமல் அல்லு அர்ஜூன் சென்றதே கூட்ட நெரிசல் ஏற்பட காரணம்’ என குற்றம் சாட்டியுள்ளார். மேலும், பெண் உயிரிழந்தது தெரிந்தும் படத்தை முழுவதுமாக பார்த்த பிறகே அல்லு அர்ஜூன் வெளியே வந்ததாக கூறியுள்ளார். புஷ்பா 2 வெளியீட்டின்போது படம் பார்க்க வந்த […]
ஜெய்சால்மர் : இன்று ஜிஎஸ்டி கவுன்சின் 55வது ஆலோசனை கூட்டம் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மரில் நடைபெற்றது. ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தலைவரும், மத்திய நிதியமைச்சருமான நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெற்றது. இதில் மாநில நிதி அமைச்சக பிரதிநிதிகளும் கலந்து கொண்டு தங்கள் ஜிஎஸ்டி வரி பரிந்துரைகளை வழங்கினர். அதில் சில முக்கிய ஜிஎஸ்டி பரிந்துரைகள் பற்றிய விவரங்கள் தற்போது வெளியாகியுள்ளது. ஆயுள் காப்பீடு மற்றும் மருத்துவ காப்பீடுகளுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி வரி குறைப்பு பற்றிய ஆலோசனை நடைபெறும் என […]
பெங்களூரு: பெங்களூரு அருகே நெலமங்களா பகுதியில் கார் மீது கன்டெய்னர் லாரி கவிழ்ந்த விபத்தில், ஒரே குடும்பத்தை சேர்ந்த 2 குழந்தைகள் உட்பட 6 பேர் உடல் நசுங்கி பலியாகிய சம்பவம் அப்பகுதினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. தும்கூர் – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்ட இந்த விபத்து காரணமாக 3 கி.மீ. தூரத்துக்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. விபத்து நடந்த உடனே, காரில் சிக்கிக்கொண்டவர்களுக்கு உதவ அப்பகுதி மக்களும், பயணிகளும் விரைந்து வந்தனர். SUV யில் இருந்து […]
பெங்களூரு : இந்திய கிரிக்கெட் அணி மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளின் முன்னாள் வீரரான ராபின் உத்தப்பா பெங்களூருவில் Centaurus Lifestyle Brands Private Ltd எனும் டெக்ஸ்டைல்ஸ் தொடர்பான நிறுவனத்தை நடத்தி வருகிறார். இவர் நிறுவனத்தில் வேலை செய்யும் ஊழியர்களுக்கு முறையாக PF பணம் செலுத்தவில்லை என புகார் எழுந்துள்ளது. அதாவது, ஒரு நிறுவனத்தில் வேலை செய்யும் ஊழியர்களுக்கு அந்த நிறுவனம் முறையாக PF பணத்தை EPFOவிடம் வைப்பு நிதியாக செலுத்த வேண்டும். ஆனால், […]
டெல்லி: பிரதமர் மோடி இரண்டு நாள் பயணமாக இன்று குவைத் புறப்பட்டுச் சென்றார். அங்கு, பயான் அரண்மனையில் அவரை தங்கவைத்து மரியாதை அளிக்கப்பட உள்ளது. குவைத்தின் மன்னர் எமிர், ஷேக் மெஷால் அல் அகமது அல் ஜாபர் அல் சபாவின் அழைப்பின் பேரில், பிரதமர் மோடி அங்கு செல்கிறார். குறிப்பாக, இந்த பயணத்தின் போது, இருநாடுகளுக்கும் இடையே பாதுகாப்பு, வர்த்தகம் உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்த பேச்சுவார்த்தை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், அங்குள்ள இந்தியா தொழிலாளர்கள் தங்கி […]
ஆந்திரா: ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டம் யண்டகண்டி என்ற பகுதியில் வசிக்கும் துளசி என்ற பெண்ணின் வீட்டிற்கு வந்த பார்சலில், பாதி வெட்டப்பட்ட அடையாளம் தெரியாத ஒரு ஆணின் சடலம் இருந்ததால் அதிர்ச்சி அடைந்தார், அவரது குடும்பத்தினரும் அச்சமடைந்தனர். அதுமட்டும் இல்லாமல் பார்சலுடன் ஒரு கடிதம் வர, அதில் ‘ரூ.1.30 கோடி கொடுக்க வேண்டுமெனவும், இல்லையேல் பல பிரச்னைகளை சந்திக்க நேரிடும்’ எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. வீடு கட்டும் பணிக்காக மின்விளக்குகள், மின்விசிறிகள், சுவிட்சுகள் போன்றவை […]
டெல்லி : சமாஜ்வாதி கட்சியின் எம்பி ஜியா உர் ரஹ்மான், மின்சார திருட்டு குற்றச்சாட்டின் அடிப்படையில் அவருக்கு உத்தரபிரதேச பவர் கார்ப்பரேஷன் லிமிடெட் (UPPCL) 1.91 கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளது. கடந்த சில நாட்களாவே சம்பல் தொகுதியில் தீவிரமாக ஆய்வு நடந்து வருகிறது. அந்த வகையில், இவரது வீட்டில் நேற்று மின்துறையினர் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் பல முறைகேடுகளை துறை கண்டறிந்தது. பர்க்கின் வீட்டில் உள்ள சுமை அவரது இணைப்பின் வாட்டேஜை விட அதிகம் […]
டெல்லி : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் 25ஆம் தேதி தொடங்கி இன்று (டிசம்பர் 20) நிறைவு பெற்றது. கடந்த காலங்களை போல இந்த கூட்டத்தொடரும் எதிர்க்கட்சிகள் அமளி, நாடாளுமன்ற கூட்டத்தொடர் ஒத்திவைப்பு, முக்கிய சட்டமசோதா நிறைவேற்றம் என்றில்லாமல் இறுதிவாரமான இந்த வாரம், பாஜக எம்பிக்கள் போராட்டம் போன்ற பல்வேறு பரபரப்பான நிகழ்வுகள் அரங்கேறின. கடந்த கூட்டத்தொடர் போலவே, இந்த கூட்டத்தொடரிலும் அதானி குறித்தும், மணிப்பூர் விவகாரம் குறித்தும் நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த வேண்டும் என எதிர்க்கட்சிகள் […]
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் – அஜ்மீர் நெடுஞ்சாலையில் உள்ள பெட்ரோல் பங்கிற்கு அருகே இன்று காலை லாரி மோதியதில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது. இன்று அதிகாலை 5:30 மணியளவில், பெட்ரோல் பம்ப் அருகே நிறுத்தப்பட்டிருந்த சிஎன்ஜி டேங்கர் லாரி மற்ற வாகனங்கள் மீது டிரக் மோதியதில் தீப்பிடித்தது. இந்த தீ விபத்தில் 40 வாகனங்கள் எரிந்து சேதம் அடைந்தது. இதனையடுத்து, சுமார் 20 வாகனங்களில் வந்த தீயணைப்பு […]
ஹரியானா: இந்திய தேசிய லோக் தளம் கட்சித் தலைவரும், ஹரியாணா முன்னாள் முதல்வருமான ஓம் பிரகாஷ் சௌதாலா(89) மாரடைப்பால் காலமானார். ‘இந்திய தேசிய லோக் தள்’ கட்சியின் தலைவரான அவர், 4 முறை ஹரியானா மாநிலத்தின் முதல்வராக இருந்துள்ளார். அது மட்டும் இல்லாமல், ஏழு முறை எம்.எல்.ஏவாகவும் இருந்திருக்கிறார். இவர் முன்னாள் துணை பிரதமர் சவுத்ரி தேவி லாலின் மகன் ஆவார். 1989 அன்று முதல் முறையாக முதல்வராக பதவியேற்ற சவுதாலா, கடைசியாக மாநில முதல்வராக 1999ஆம் […]
டெல்லி: முன்னாள் முப்படைகளில் தலைமைத் தளபதியான பிபின் ராவத் பயணம் செய்த ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி அவர் உயிரிழந்ததற்கு மனித தவறே காரணம் என மக்களவையில் தாக்கலான நாடாளுமன்ற நிலைக்குழுவின் அறிக்கையில் பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. 2021 ம் ஆண்டு 8-ம் தேதி கோவை வந்த முப்படைத் தளபதி பிபின் ராவத், குன்னூரில் உள்ள வெலிங்டன் ராணுவத் தளத்தில் நடைபெறவிருந்த நிகழ்வில் கலந்து கொள்வதற்காக ஹெலிகாப்டரில் பயணம் மேற்கொண்டார். பிற்பகல் 1 மணியளவில் வெலிங்டனில் தரையிறங்க சில […]
ராஜஸ்தான் : ஜெய்ப்பூர் – அஜ்மீர் நெடுஞ்சாலையில் உள்ள பெட்ரோல் நிலையம் முன் இன்று வெள்ளிக்கிழமை காலை டிரக் மற்ற டிரக்குகளுடன் மோதியதில் 5 பேர் இறந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெட்ரோல் பங்க் முன் இந்த சம்பவம் நடந்ததாகவும் காவல்துறையினர் கூறினார்கள். அதிகாலை 5:30 மணியளவில், பெட்ரோல் பம்ப் அருகே நிறுத்தப்பட்டிருந்த சிஎன்ஜி டேங்கர் மற்ற வாகனங்கள் மீது டிரக் மோதியதில் தீப்பிடித்தது. தீப்பிடித்து எரிந்த தீயை அணைக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதுவரை […]