கிறிஸ்மஸ் தாத்தா உருவான வரலாறு, கிறிஸ்மஸ் ட்ரீ வைக்க காரணம் மற்றும் வீட்டில் ஸ்டார் வைப்பது எதற்காக என்றும் இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை: ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 25 தேதி கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படுகிறது .இதனை வரவேற்கும் விதமாக டிசம்பர் 1ம் தேதியே கிறிஸ்துமஸ் கொண்டாடும் வீடுகளில் ஸ்டார் வைப்பது மற்றும் கிறிஸ்துமஸ் ட்ரீ வைப்பது வழக்கமாக கொண்டிருக்கின்றனர் . மாட்டுத் தொழுவத்தில் தான் இயேசு கிறிஸ்து பிறந்தார் என வரலாறு கூறுகின்றது […]
உலகம் முழுவதும் கொண்டாடப்படும் தைப்பூசத் திருவிழா இந்த ஆண்டு கொண்டாடப்படும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை காணலாம். சென்னை :முருகா.. என்ற திருமந்திரம் சகல வினைகளையும் போக்கும்.. ஈசனின் ஞானக்கண்ணில் இருந்து வெளிப்பட்ட சுடற்பொறியில் இருந்து தோன்றியவர்தான் முருகப்பெருமான். முருகன் தோன்றிய நாள் வைகாசி விசாகம் என்றாலும் அன்னையிடம் வேல் வாங்கிய நாள் தைப்பூசம் ஆகும். இது மிகவும் பிரசித்தி பெற்ற விழாவாக உள்ளது .தைப்பூசத்தன்று செய்யப்படும் ஒவ்வொரு செயலும் வெற்றியடையும் எனவும் நம்பப்படுகிறது. தைப்பூச திருவிழா […]
வைகுண்ட ஏகாதசி விரதத்தின் சிறப்புகள் மற்றும் இந்த ஆண்டு வைகுண்ட ஏகாதசி எப்பொழுது வருகிறது என்பதை பற்றி பார்க்கலாம். சென்னை;’ காயத்ரிக்கு மிஞ்சிய மந்திரம் இல்லை’ ‘தாய்க்கு சமமான தெய்வமும் இல்லை ”காசிக்கு நிகரான தீர்த்தமும் இல்லை ”ஏகாதசிக்கு சமமான விரதமும் இல்லை’ என்பது பெரியோர்களின் வாக்கு . ஏகாதசி விரதம் மற்ற விரதங்களை காட்டிலும் மிகச் சிறந்த விரதம் ஆகும். உண்ணா நோன்பிற்கு முக்கியத்துவம் கொடுத்து அனுஷ்டிக்கப்படும் விரதமாக கூர்ம புராணம் குறிப்பிடுகின்றது. ஏகாதசி அன்று […]
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் கார்த்திகை தீப திருவிழா நேற்று [டிசம்பர் 4] கொடியேற்றத்துடன் துவங்கியுள்ளது. திருவண்ணாமலை :திருக்கார்த்திகை தீபம் வரும் டிசம்பர் 13ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில் நேற்று திருவண்ணாமலையில் அண்ணாமலையார் கோவிலில் கொடியேற்றம் கோலாகலமாக துவங்கியுள்ளது. இந்நிலையில் சமீபத்தில் தீப மலையில் மண் சரிவு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. திருவண்ணாமலை தீபமாலையானது 2268 அடி உயரம் கொண்டது .கார்த்திகை தீபத் திருவிழாவின் போது மலை உச்சியில் கொப்பரை கொண்டு சென்று அதில் மகா தீபம் ஏற்றப்படுவது வழக்கம். […]
திருவண்ணாமலை –தமிழ் மாதங்களில் எட்டாவது மாதமாக வரக்கூடியது தான் கார்த்திகை மாதம் .இந்த கார்த்திகை மாதத்தில் அனைவரும் வீடுகளில் விளக்கேற்றி வழிபடுவது திருக்கார்த்திகை தினமாக கொண்டாடப்படுகிறது . இந்த கார்த்திகை தீபம் மூன்று நாட்கள் விசேஷமாக கொண்டாடப்படுகிறது.இந்த வருடம் கார்த்திகை மாதம் 28ஆம் தேதி டிசம்பர் 13 2024 அன்று வெள்ளிக்கிழமை திருக்கார்த்திகை கொண்டாட படுகிறது .அதிலும் குறிப்பாக திருவண்ணாமலையில் அண்ணாமலையார் கோவிலில் வெகு விமர்சையாக திருக்கார்த்திகை திருவிழா ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்படுகிறது. அந்தவகையில் திருவண்ணாமலை அண்ணாமலையார் […]
தூத்துக்குடி -கந்த சஷ்டி விழாவானது கடந்த நவம்பர் இரண்டாம் தேதி யாகசாலை பூஜையுடன் துவங்கிய நிலையில் ஆறாம் நாளாளின் முக்கிய நிகழ்வான இன்று மாலை சூரசம்காரம் அனைத்து முருகன் கோவில்களிலும் சிறப்பாக நடைபெற்றது. குறிப்பாக, முருகப்பெருமானின் இரண்டாம் படை வீடான திருச்செந்தூரில் கந்த சஷ்டி திருவிழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்காரம் இன்று மாலை கடற்கரையில் பக்தர்கள் வெள்ளத்தில் நடைபெற்றது. இந்த சூரசம்கார நிகழ்வை ஒட்டி திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி திருக்கோயிலில் அதிகாலை 1 மணிக்கே நடை திறக்கப்பட்டு […]
தமிழகத்தில் அறுபடை வீடுகளில் முருகப்பெருமான் குடியிருந்தாலும் திருச்செந்தூர் சிறப்பு வாய்ந்த ஸ்தலமாக உள்ளது. தூத்துக்குடி –கந்த சஷ்டி திருவிழாவின் முக்கிய நிகழ்வான இன்று சூரனை சம்ஹாரம் செய்யும் நிகழ்வு மாலை 4;30 மணி அளவில் நடைபெற உள்ளது. இந்த நிகழ்வு அனைத்து முருகன் கோவில்களிலும் நடைபெறும். குறிப்பாக திருச்செந்தூரில் லட்சக்கணக்கான பக்தர்கள் இந்த நிகழ்வை காண குவிந்துள்ளனர். ஏனென்றால் முருகப்பெருமான் சூரனை வதம் செய்த இடமாக கூறப்படுகிறது. அதன் அடிப்படையில் சூரசம்கார நிகழ்வு அருள்மிகு சுப்ரமணிய சுவாமி […]
சூரசம்ஹாரம் தோன்றிய வரலாறு மற்றும் திருசெந்தூரில் சூரசம்ஹாரம் நடைபெறும் நேரம் என்ன என்பதை பற்றி இந்த செய்தி குறிப்பில் காணலாம் . தூத்துக்குடி -முருகப்பெருமானுக்கு முக்கியமான விரதங்களில் ஒன்று இந்த கந்த சஷ்டி விரதம். மாதம் தோறும் இரண்டு சஷ்டிகள் வந்தாலும் இந்த ஐப்பசி மாதம் வரும் மகா கந்த சஷ்டி மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த வருடம் நவம்பர் 2 ம் தேதி சனிக்கிழமை கந்த சஷ்டி விழா தொடங்கியது .அதன் ஆறாவது நாளான நவம்பர் […]
உலகப் புகழ்பெற்ற திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்த சஷ்டி திருவிழா வெகு விமர்சையாக துவங்கி உள்ளது. தூத்துக்குடி –கந்த சஷ்டி விழாவின் முதல் நாளான இன்று அனைத்து முருகன் கோவில்களிலும் கந்த சஷ்டி விழா துவங்கி உள்ளது . குறிப்பாக முருகப்பெருமானின் இரண்டாம் படை வீடான திருச்செந்தூரில் மிகவும் பிரசித்தி பெற்ற விழாவாக கொண்டாடப்படுகிறது .அந்த வகையில் இந்த ஆண்டு இன்று யாகசாலை பூஜையுடன் கந்த சஷ்டி பெருவிழா துவங்கியுள்ளது. இதைக் காண பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் […]
சென்னை –கந்த சஷ்டி விரதம் மேற்கொள்ள கடைபிடிக்கப்படும் விரதங்கள் பற்றியும் வீட்டிலேயே கடைபிடிப்பது எப்படி என்பதைப் பற்றி இந்த செய்தி குறிப்பில் காணலாம். கந்த சஷ்டி விரதம் ; “எந்த வினையானாலும் கந்தனருள் இருந்தால் வந்த வினை ஓடும்” என்பது ஆன்றோர்களின் வாக்கு.. முருகப்பெருமானுக்கு எத்தனையோ விரதங்கள் இருந்தாலும் மிகவும் சக்தி வாய்ந்ததாக கூறப்படுவது ஐப்பசி மாதம் வரும் கந்த சஷ்டி விரதம் தான். வாழ்க்கையில் எப்பேர்ப்பட்ட பிரச்சனை இருந்தாலும் அதிலிருந்து விடுபட நினைப்பவர்கள் இந்த விரதத்தை […]
கந்த சஷ்டி விழாவையொட்டி திருசெந்தூர் முருகன் கோவிலின் நடை திறக்கும் நேரம் மற்றும் கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்காரம் நடை பெறும் நாள் , நேரம் பற்றி இந்த செய்தி குறிப்பில் காணலாம் . தூத்துக்குடி –திருச்செந்தூர் முருகன் கோவிலில் கொண்டாடப்படும் முக்கிய திருவிழாவாக கந்த சஷ்டி விழா உள்ளது . ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதம் அமாவாசை திதி முடிந்து கந்த சஷ்டி துவங்குகிறது .அதன்படி இந்த ஆண்டு நவம்பர் இரண்டாம் தேதி […]
சென்னை : தீபாவளி பண்டிகையை ஏன் அனைத்து மக்களும் கொண்டாடுகிறார்கள் ..அதற்கென கூறப்படும் பல வரலாற்று காரணங்கள் பற்றி இந்த செய்தி குறிப்பில் காணலாம் . ராமாயணமும் தீபாவளியும் ; தீபாவளி பண்டிகை கொண்டாடுவதற்கு பல புராணக் கதைகள் கூறப்படுகிறது. தீபாவளி இந்தியாவின் மிகவும் பிரசித்தி பெற்ற பண்டிகையாக உள்ளது. அந்த வகையில் வடநாட்டு மக்கள் தீபாவளி கொண்டாட பல வரலாற்று கதைகள் உள்ளது. ராமாயணத்தில் ராமர் ராவணனை அழித்து தனது வனவாசத்தை முடித்து சீதா மற்றும் […]
சென்னை –தீபாவளி அன்று எண்ணெய் தேய்த்து குளிக்கும் நேரம் மற்றும் தீபாவளியின் சிறப்புகளை பற்றி இந்த செய்தித் தொகுப்பில் தெரிந்து கொள்வோம் . தீபாவளி 2024; ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதம் வரும் அமாவாசை திதியில் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்த வருடம் [ஐப்பசி மாதம் 14]அக்டோபர் 31ம் தேதி வியாழக்கிழமை கொண்டாடப்படுகிறது. சில சமயங்களில் தீபாவளி பண்டிகை அமாவாசை அன்றும் சில சமயங்களில் அமாவாசைக்கு முதல் நாளும் வரும். அந்த வகையில் இந்த ஆண்டு அம்மாவாசை […]
அம்பிகை மகிஷா சூரனை அழிக்க எடுத்துக்கொண்ட காலத்தை தான் நாம் நவராத்திரி பண்டிகையாக கொண்டாடுகிறோம். சென்னை –நவராத்திரி விழாவின் ஒன்பது நாட்கள் கொலு வைத்து பலரது வீடுகளிலும் விழா கோலமாக காட்சியளிக்கும் .ஆனால் கொலு வைத்தவர்கள் மற்றும் கொலு வைக்காதவர்கள் என அனைவரும் கொண்டாடுவது சரஸ்வதி பூஜை மற்றும் விஜயதசமியை தான். விஜயதசமி அக்டோபர் மாதம் 12ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. விஜயதசமி உணர்த்தும் தத்துவங்கள்; கர்நாடக மாநிலத்தின் இரண்டாவது பெரிய நகரமாக திகழ்வது மைசூர் தான். […]
சென்னை –மகா கந்த சஷ்டி விரதம் எப்போது துவங்குகிறது என்றும் கந்த சஷ்டி விரதத்தின் சிறப்புகளையும் இந்த செய்தி குறிப்பில் காணலாம். மாதம் தோறும் இரண்டு சஷ்டிகள் வந்தாலும் ஐப்பசி மாதத்தில் வரும் சஷ்டி விரதம் மிக சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. இது ஏழு நாட்கள் கடைபிடிக்கப்படும் விரதமாகும். கந்த சஷ்டி 2024; இந்த ஆண்டு நவம்பர் மாதம் இரண்டாம் தேதி சனிக்கிழமை கந்த சஷ்டி விரதம் துவங்கி நவம்பர் 7ஆம் தேதி சூரசம்காரமும் ,நவம்பர் எட்டாம் […]
சென்னை-நவராத்திரி ஆறாம் நாளில் அம்பிகையின் ஸ்ரூபம், வழிபாட்டிற்கு உரிய மலர் மற்றும் நெய்வேத்தியங்களை பற்றி இந்த ஆன்மீக குறிப்பின் மூலம் தெரிந்து கொள்ளலாம் . நவராத்திரி ஆறாம் நாள் வழிபாடு ; நவராத்திரியின் ஆறாம் நாள் என்பது மகாலட்சுமி வழிபாட்டின் நிறைவான நாளாகும்.நவராத்திரி ஆறாம் நாளில் மகாலட்சுமியை இந்திராணி ஆகவும் ,சண்டிகா தேவியாகவும் வணங்குகின்றோம். நவ துர்க்கையில் காத்யாயினி ரூபத்தில் காட்சியளிக்கிறார். சண்டிகா என்றால் உக்கிரமான ரூபமும் போர்குணமும் கொண்ட அம்பாளாக திகழ்கிறார். இந்த நவராத்திரி காலம் […]
சென்னை-நவராத்திரியின் நான்காவது நாள் பூஜை முறை ,நேரம் ,கடன் தீர மஹாலட்சுமியை வழிபடும் முறை பற்றி இந்த ஆன்மீக செய்தி குறிப்பில் காணலாம் . நவராத்திரி நான்காம் நாள் வழிபாடு ; நவராத்திரியின் ஒவ்வொரு நாளும் அம்பிகையை ஒவ்வொரு ரூபத்தை வழிபாடு செய்கின்றோம். அந்த வகையில் நான்காவது நாள் அம்பிகையை மகாலட்சுமியின் ரூபமாக வழிபாடு செய்யப்படுகிறது . நவ துர்க்கையில் கூஷ்மாண்டா துர்க்கையை வணங்கும் நாளாகவும் கருதப்படுகிறது .கூஸ்மாண்டா என்றால் இந்த அகிலத்தை படைத்தவள் என்று பொருளாகும். […]
சென்னை- ஒன்பது நாட்கள் அம்பிகையை வழிபடக்கூடிய உன்னதமான திருவிழா தான் நவராத்திரி. புதிதாக கொலு வைப்பது எப்படி என இந்த செய்தி குறிப்பின் மூலம் தெரிந்து கொள்ளலாம். நவம் என்றால் ஒன்பது மற்றும் புதுமை என்று பொருள். ஒன்பது ராத்திரிகள் அம்பிகைக்காக கொலு வைத்து கொண்டாடப்படுகிறது. அம்பிகை மகிஷா சூரனை வதம் செய்த காலம் தான் இந்த நவராத்திரி ஆகும். அதை நினைவு கூறும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் நவராத்திரி பண்டிகை சிறப்பாக கொண்டாடப்படுகிறது. கொலு வைக்கும் […]
சென்னை –நவராத்திரி இந்த ஆண்டு வரும் தேதி மற்றும் நவராத்திரி உருவான வரலாறு பற்றி இந்த ஆன்மீக குறிப்பின் மூலம் அறிந்து கொள்ளலாம். நவராத்திரி என்றால் என்ன ? சிவனுக்கு சிவராத்திரி என்றால் அம்பிகைக்கு நவராத்திரி சிறப்பானது. இந்தியாவில் பிரம்மாண்டமான பண்டிகை தான் நவராத்திரி .வருடத்தில் நான்கு நவராத்திரிகள் வருகின்றது. ஆனி மாதத்தில் கொண்டாடப்படுவது ஆஷாட நவராத்திரி என்றும் ,புரட்டாசி மாதத்தில் வரும் நவராத்திரி சாரதா நவராத்திரி என்றும், தை மாதம் வரும் நவராத்திரி மகா நவராத்திரி […]
சென்னை –அனைவருக்கும் இஷ்ட தெய்வம் ஆகவும், முதல் கடவுளாகவும் விளங்குபவர் விநாயகர்.. மாதத்தில் இரண்டு சதுர்த்தி தினங்கள் வருகின்றது.. அதில் வளர்பிறை சதுர்த்தி சதுர்த்தி விரதம் என்றும் தேய்பிறை சதுர்த்தி சங்கடஹர சதுர்த்தி என்றும் வழிபடப்படுகிறது. அதிலும் குறிப்பாக ஆவணி மாதத்தில் வரக்கூடிய தேய்பிறை சதுர்த்தி மகா சங்கடஹர சதுர்த்தி எனவும் வளர்பிறையில் வரும் சதுர்த்தி விநாயகர் சதுர்த்தி எனவும் கொண்டாடப்படுகிறது. விநாயகர் சதுர்த்தி 2024 -ல் எப்போது ? விநாயகரின் அவதார தினமாக ஆண்டுதோறும் ஆவணி […]