டெல்லி: அமித் ஷா பேசியதற்கு நாடாளுமன்றத்தில் எதிர்ப்பு எழுந்த நிலையில், அம்பேத்கரை மத்திய அரசு முழுமையாக மதிக்கிறது என்று கூறி, பிரதமர் மோடி விளக்கம் அளித்துள்ளார். நேற்றைய தினம் நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சர் அமித்ஷா, அம்பேத்கர் பெயர் இப்போது ஒரு பேஷன் ஆகிவிட்டது. அவர் பெயருக்கு பதில் கடவுளின் பெயரை சொல்லி இருந்தால் ஏழு ஜென்மம் சொர்க்கம் கிடைத்திருக்கும் என்று பேசியது, சர்ச்சையை கிளப்பியது. இப்படி இருக்கையில், ‘காங்கிரஸ் கட்சி தான் பி.ஆர். அம்பேத்கரை அவமதித்ததாக’ பிரதமர் […]
டெல்லி: அம்பேத்கர் பெயர் இப்போது ஒரு பேஷன் ஆகிவிட்டது. அவர் பெயருக்கு பதில் கடவுளின் பெயரை சொல்லி இருந்தால் ஏழு ஜென்மம் சொர்க்கம் கிடைத்திருக்கும் என்று மத்திய அமைச்சர் அமித் ஷாவின் இந்த பேச்சு எதிர்க்கட்சியினரை கொந்தளிக்கச் செய்துள்ளது. நேற்றைய தினம் நாடாளுமன்றத்தில் இவ்வாறு அமித் ஷா விமர்சித்த நிலையில், அதனைக் கண்டித்து இன்று எதிர்க்கட்சி எம்.பி.க்கள் ஜெய் பீம்.. ஜெய் பீம்.. முழக்கங்களோடு நாடாளுமன்ற வளாகத்தில் அமித் ஷாவுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், ஒன்றிய […]
ஞானவேல் ராஜா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் OTT-யில் வெளியுண்ண திரைப்படம் “ஜெய்பீம்”. இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதுடன், இந்த திரைப்படத்திற்கு பல விருதுகளும் கிடைத்துள்ளது. இந்த படத்தை சூர்யா மற்றும் ஜோதிகா ஆகியோர் இணைந்து தயாரித்திருந்தனர். இந்நிலையில், இந்த திரைப்படத்தில் குறிப்பிட்ட சமுதாயத்தை இழிவுப்படுத்தும் வகையில், காட்சிகள் இடம்பெற்றதாக கூறி, நடிகர் சூர்யா, ஜோதிகா, இயக்குநர் ஞானவேல் ராஜா ஆகியோர் மீது வழக்கு தொடரப்பட்டது. இதனையடுத்து, இந்த வழக்கு தொடர்பான விசாரணை […]
இயக்குனர் ஞானவேல் ராஜா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் ஓடிடியில் வெளியான “ஜெய் பீம்” திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்றது. எந்த அளவிற்கு படத்துக்கு நல்ல விமர்சனங்கள் வந்ததோ அதே அளவிற்கு கண்டனங்களும் எழுந்தது. குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்த மக்களை படத்தில் இழிவுபடுத்தும் வகையில் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளதாக இயக்குனர் ஞானவேல் தயாரிப்பாளர்கள் சூர்யா, ஜோதிகா, உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி வேளச்சேரி போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இந்நிலையில், ஜெய் பீம் படக்குழுவினர் மற்றும் […]
ஜெய் பீம் திரைப்பட சர்ச்சைகள் இன்னும் ஓய்ந்த பாடில்லை என்பதால், சில நாட்கள் வெளிநாடு சென்று ஓய்வு எடுத்துவிட்டு மீண்டும் இந்தியா திரும்ப சூர்யா முடிவு எடுத்ததாக தெரிகிறது. சூர்யா நடிப்பில் அமேசான் OTT தளத்தில் வெளியான திரைப்படம் ஜெய் பீம். இந்த படம் எந்தளவுக்கு ஆதரவை சம்பாரித்ததோ அந்த அளவுக்கு சர்ச்சைகளையும் சந்தித்தது, சந்தித்தும் வருகிறது. பாமக மற்றும் வன்னியர் சங்கத்திடம் இருந்து எதிர்ப்பு குரல்கள் வந்த வண்ணம் இருக்கிறது. இதற்கு இரு தரப்பில் இருந்தும் […]
பொள்ளாச்சி சம்பவத்தை மையமாக கொண்டு தான் எதற்கும் துணிந்தவன் கதைக்களம் உருவாக்கப்பட்டு உள்ளதாக தகவல்கள் கசிந்தவண்ணம் இருக்கிறது. சூர்யா நடிப்பில் வெளியான ஜெய் பீம் படத்தின் மீதான சர்ச்சை தற்போது வரையில் குறையவில்லை. அதன் மீதான வாதங்கள் இன்னும் தமிழகத்தில் நடந்தவண்ணம் தான் இருக்கிறது. நேற்று தான் படத்தின் இயக்குனர் கூட அறிக்கை வெளியிட்டு இருந்தார். உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்டு புனையப்பட்ட இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது அடுத்ததாக சூர்யா பாண்டிராஜ் […]
ஜெய் பீம் படத்தை எந்த விருதுக்கும் சிபாரிசு செய்ய கூடாது என வன்னியர் சங்கம் சார்பில் மத்திய மாநில அரசுகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. சூர்யா நடித்த ஜெய் பீம் திரைப்படம் அமேசான் OTT தளத்தில் நவம்பர் 2ஆம் தேதி வெளியானது. தற்போது வரை அதன் அனல் கொழுந்துவிட்டு எறிகிறது. தா.சே.ஞானவேல் இயக்கிய இப்படத்தில் ஒரு காட்சியில் குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்த ஒரு அடையாளம் இருந்ததாக கூறி பாமக தரப்பும், வன்னியர் சங்க தரப்பில் இருந்தும் […]
பார்வதியம்மாளுக்கு வழங்கிய 15 லட்சத்தை முதலில் முதலமைச்சர் முன்னிலையில் கொடுக்க சூர்யா திட்டமிட்டாராம், ஆனால், தற்போது அவரால் வர முடியாது என்பதால், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முன்னிலையில் இந்த நிதியுதவி விழா நடைபெற்றதாம். ஜெய் பீம் படத்தின் வெற்றியை தொடர்ந்து அதன் தயாரிப்பாளரும் நடிகருமான சூர்யா, ஜெய் பீம் படத்தின் உண்மையான நாயகியான பார்வதி அம்மாளுக்கு ( திரைப்படத்தில் செங்கனி) 15 லட்சம் நிதியுதவி அளித்தார். இந்த நிகழ்ச்சி கம்யூனிஸ்ட் அலுவலகத்தில், கம்யூனிஸ்ட் தலைவர் […]
பாமக மற்றும் வன்னியர் சங்கத்தில் இருந்து எதிர்ப்பு குரல்களை அடுத்து நடிகர் சூர்யா வீட்டின் முன்பு துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பிற்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர். சூர்யா நடிப்பில் வெளியான ஜெய் பீம் திரைப்படம் தான் தற்போதைய தமிழகத்தின் ஹாட் டாப்பிக். அவரை எதிர்த்து பாமகவினர், வன்னியர் சங்கத்தினர் பலர் குரல் எழுப்பி வரும் நிலையில், அரசியல் கட்சியினர், திரைத்துறையினர், ரசிகர்கள் என பலரும் தங்கள் ஆதரவை சூர்யாவிற்கு தெரிவித்து வருகின்றனர். பாமக மாவட்ட செயலாளர் பழனிச்சாமி என்பவர், […]
ஜெய் பீம் படத்திற்கு ஆதரவு தெரிவித்து, மாநிலங்களைவை உறுப்பினர் அன்புமணி ராமதாசுக்கு கடிதம் எழுதியுள்ளார் இயக்குனர் இமையம் பாரதிராஜா. சூர்யா நடித்து, ஞானவேல் இயக்கத்தில் அமேசான் OTT தளத்தில் வெளியான திரைப்படம் ஜெய் பீம். இந்த படத்தில் இருளர் பழங்குடி இன மக்களின் பிரச்சனைகளும் 1990களில் நடைபெற்ற ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு படம் எடுக்கப்பட்டிருந்தது. அதில் சில காட்சியில் மற்றும் ஒரு கதாபாத்திரத்தின் பெயரும் ஒரு குறிப்பிட்ட சமூகத்தை குறிப்பதாக கூறப்பட்டதாக கூறி, பாமக […]
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் முன்வைத்த கோரிக்கை அடுத்து ராஜாகண்ணு அவர்களின் துணைவியார் பார்வதி அம்மாள் பெயரில் “பத்து இலட்சம் ரூபாய் தொகையை டெபாசிட் செய்ய உள்ளதாக நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார். உண்மைச்சம்பவம் திரைப்படமாக வெளியாகும் போது விமர்சனங்கள் முன்வைக்கப்படுவது இயல்பானதே.ஆனாலும் அத்தகைய விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிரான அதிகார வர்க்கத்தின் அடக்குமுறையை எதிர்த்து நடைபெற்ற நெடிய போராட்டம் ஒரு வெற்றிப்படமாக அங்கீகரிக்கப்பட்டிருப்பது எதிர்காலத்தில் இத்தகைய ஒடுக்குமுறைகளுக்கு எதிராக விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை மணியாகும். […]
மக்களவை உறுப்பினர் அன்புமணி ராமதாஸ் ஜெய் பீம் படம் குறித்து சூர்யாவிற்கு கேள்வி எழுப்பி இருந்தார். அந்த கேள்விகளுக்கு சூர்யா பதில் அறிக்கை வெளியிட்டுள்ளார். சூர்யா நடிப்பில் அண்மையில் அமேசான் OTT தளத்தில் ஜெய் பீம் திரைப்படம் வெளியானது. அதில், இருளர் பழங்குடி இன மக்களின் வாழ்வியலையும். அதிகாரத்தில் உள்ளவர்களால் அவர்கள் எவ்வாறு துன்புறுத்தப்படுகிறார்கள் என்பதையும் உண்மைக்கதையை மையப்படுத்தி படமாக்கப்பட்டிருந்தது. அதில், வரும் ஒரு காவல்துறை அதிகாரி பெயர் மற்றும் அவர் வரும் ஒரு காட்சியின் பின் […]
நிஜத்தில் இன்னும் வாழ்ந்துகொண்டு இருக்கும் ராஜாக்கண்ணுவின் மனைவி பார்வதிக்கு சொந்த வீடு கட்டித்தர முன்வந்துள்ளார் நடிகர் லாரன்ஸ். சூர்யா நடிப்பில் நவம்பர் 2ஆம் தேதி அமேசான் ப்ரைம் OTT தளத்தில் வெளியான திரைப்படம் ஜெய் பீம். சூர்யா முதன் முதலாக வக்கீலாக இந்த திரைப்படத்தில் நடித்திருந்தார். உண்மையான சம்பவங்களை மையமாக கொண்டு இந்த திரைப்படத்தை T.J.ஞானவேல் இயக்கி இருந்தார். ஜோதிகா மற்றும் சூர்யா இணைந்து இந்த திரைப்படத்தை தயாரித்து இருந்தனர். ராசாகண்ணுவாக மணிகண்டனும், செங்கொடியாக லிஜிமோல் ஜோஸ்-ம் […]
விழுப்புரம் மாவட்டத்திலிலுள்ள 67 பழங்குடி இருளர் குடும்பங்களுக்கு நேரில் சென்று ஆய்வு நடத்தி பட்டா வழங்கியுள்ளார் ஆட்சியர் மோகன். சூர்யா நடிப்பில் நவம்பர் 2ஆம் தேதி அமேசான் ப்ரைம் OTT தளத்தில் வெளியான திரைப்படம் ஜெய் பீம். சூர்யா முதன் முதலாக வக்கீலாக இந்த திரைப்படத்தில் நடித்திருந்தார். உண்மையான சம்பவங்களை மையமாக கொண்டு இந்த திரைப்படத்தை T.J.ஞானவேல் இயக்கி இருந்தார். ஜோதிகா மற்றும் சூர்யா இணைந்து இந்த திரைப்படத்தை தயாரித்து இருந்தனர். சூர்யா உடன், மணிகண்டன், லிஜோமோல் […]