டெல்லி : அமெரிக்க வழக்கறிஞர்கள், இந்திய தொழிலதிபர் கெளதம் அதானி மீது இன்று ஒரு பரபரப்பு குற்றசாட்டை முன்வைத்துள்ளனர். அவர் இந்திய அரசு அதிகாரிகளுக்கு சுமார் ரூ.2000 கோடி அளவுக்கு லஞ்சம் கொடுத்து முறைகேட்டில் ஈடுபட்டுள்ளார். அதன் மூலம், சர்வதேச முதலீடுகளை பெற அவர் முயற்சிப்பதாக நியூயார்க் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அமெரிக்காவில் அதானி மீது வழக்கு தொடரபட்டுள்ளதால், இந்திய பங்குச்சந்தையில் அதானி பங்குகள் மற்றும் அதானி குழுமத்தின் மீது முதலீடு செய்துள்ள மற்ற நிறுவனங்களின் பங்குகள் […]
டெல்லி : மறைந்த முன்னாள் இந்திய பிரதமர் இந்திரா காந்தி பிறந்த தினமான இன்று (நவம்பர் 19) டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்திற்கு காங்கிரஸ் தலைவர்கள் மரியாதை செலுத்தி வருகின்றனர். தனது பாட்டி இந்திரா காந்தி பற்றி காங்கிரஸ் எம்பியும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் குறிப்பிடுகையில், “அன்பு மற்றும் தைரியம் என இரண்டுக்கும் உதாரணமாக எனது பாட்டி (இந்திரா காந்தி) திகழ்கிறார். தேச நலன்களுக்கான பாதையில் அச்சமின்றி […]
ஜார்க்கண்ட் : காங்கிரஸ் எம்பியும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தியின் ஹெலிகாப்டர் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டின் (ஏடிசி) அனுமதி கிடைக்காததால் ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள கோடாவில் சுமார் 1 மணி நேரம் காத்திருந்துள்ளார். ஜார்கண்ட் மாநிலத்தின் சட்டமன்றத் தேர்தலின் இறுதிக்கட்டப் பிரசாரத்துக்கு வருகை தந்தபோது இந்த சம்பவம் நடந்துள்ளது. ஜார்க்கண்ட் மாநிலத்தில் 2-ம் கட்ட சட்டசபை தேர்தல் நவம்பர் 20-ம் தேதி நடைபெறுகிறது. எனவே, இதனைமுன்னிட்டு பிரதமர் மோடியும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியும் […]
கேரளா : ஏப்ரல் மாதம் வயநாடு தொகுதியில் நடைபெற்ற தேர்தலில் வென்ற ராகுல் காந்தி, வயாநாடு எம்பி பதவியை ராஜினாமா செய்ததால் தற்போது அந்த தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில், காங்கிரஸ் சார்பில் பிரியங்கா காந்தி போட்டியிட்டார், அதைப்போல, கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சத்யன் முகேரி, பாஜக சார்பில் நவ்யா ஹரிதாஸ் என மொத்தமாக 17 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். 14.71 லட்சம் வாக்காளர்களைக் கொண்ட வயநாடு தொகுதியில் இன்று ( நவம்பர் 13) காலையில் வாக்குப்பதிவு […]
வயநாடு : இன்று (நவம்பர் 13) ஜார்கண்ட் மாநில சட்டப்பேரவை முதற்கட்ட தேர்தலோடு, வயநாடு மக்களவை தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவும் நடைபெற்று வருகிறது. இந்த தொகுதியில் முன்னதாக நடைபெற்ற தேர்தலில் வென்ற ராகுல் காந்தி, வயாநாடு எம்பி பதவியை ராஜினாமா செய்ததால் தற்போது இடைத்தேர்தல் நடைபெற்று வருகிறது. அவர் தற்போது உ.பி மாநிலம் ரேபரேலி தொகுதி எம்பியாக இருக்கிறார். வயநாடு இடைத்தேர்தல் மூலம் முதன் முறையாக தேர்தல் வாக்கு அரசியலில் ராகுல் காந்தியின் சகோதரி பிரியங்கா காந்தி, […]
கேரளா : வயநாடு தொகுதியில் நவம்பர் 13ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தலில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சகோதரி பிரியங்கா காந்தி போட்டியிடுகிறார். எனவே, பிரச்சாரம் மும்மரமாக நடைபெற்று வருகிறது. பிரச்சாரத்தின் கடைசி நாள் இன்று என்பதால் வயநாட்டில் அவரது சகோதரி பிரியங்கா காந்திக்காக ராகுல் காந்தியும் வருகை தந்து பிரச்சாரம் செய்தார். “I LOVE Wayanad” என்று அச்சிடப்பட்டிருந்த வெள்ளை நிற டிசர்ட் அணிந்துகொண்டு பிரச்சாரத்திற்கு வருகை தந்தபோது அவரை பார்த்த ஆதரவாளர்கள் கரகோஷமிட்டனர். […]
சென்னை : வரும் டிசம்பர் 6ஆம் தேதி அண்ணல் அம்பேத்கர் நினைவு நாளை முன்னிட்டு அன்றைய தினம் அம்பேத்கர் பெயரில் ஒரு புத்தகம் ஒன்றை வெளியிட விகடன் பதிப்பகம் மற்றும் ஆதவ் அர்ஜுனாவின் (விசிக துணை பொதுச்செயலாளர்) நிறுவனமும் இணைந்து நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து வருகிறது. இந்த நிகழ்வு குறித்த பேச்சு தான் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறி வருகிறது. இந்த நிகழ்வில் முதலில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு புத்தகத்தை வெளியிட இருந்தார். அப்போது விழா […]
வயநாடு : கேரளா மாநிலம் வயநாடு மக்களவை தொகுதியில் வரும் நவம்பர் 13ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக பிரியங்கா காந்தி போட்டியிடுகிறார். இதற்கான பிரச்சாரத்தில் பிரியங்கா காந்தி மற்றும் ராகுல் காந்தி என இருவரும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். வயநாடு தொகுதியில் நேற்று பிரச்சாரத்தில் ஈடுபட்ட ராகுல் காந்தி, தனது சகோதரி பிரியங்கா காந்தி, தனது தந்தை ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி இருந்த நளினியை சந்தித்து பேசியது […]
வயநாடு : நடந்து முடிந்த 2024 நாடாளுமன்ற தேர்தலில் வயநாடு மக்களவை தொகுதியில் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி வெற்றிபெற்றார். அதே போல உ.பி ரேபரேலி தொகுதியிலும் வெற்றி பெற்றதால் வயநாடு தொகுதி மக்களவை உறுப்பினர் பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்தார். இதனை அடுத்து, ஜார்கண்ட், மகாராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தலோடு வயநாடு தொகுதி இடைத்தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. வயநாடு மக்களவை தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு வரும் நவம்பர் 13ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த […]
கேரளா : 2024 நாடாளுமன்ற தேர்தலில் கேரளா மாநிலம் வயநாடு தொகுதியிலும், உத்திர பிரதேசம் ரேபரேலி மக்களவை தொகுதியிலும் காங்கிரஸ் வேட்பாளர் ராகுல் காந்தி போட்டியிட்டு வெற்றிபெற்றார். இதனை தொடர்ந்து வயநாடு தொகுதி மக்களவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி. காலியாக இருந்த வயநாடு மக்களவை தொகுதிக்கு அண்மையில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. ஜார்கண்ட் மற்றும் மகாராஷ்டிரா மாநில சட்டமன்ற தேர்தலுடன் வயநாடு மக்களவை தொகுதி இடைத்தேர்தலும் அறிவிக்கப்பட்டது. வரும் நவம்பர் […]
சென்னை : திருவள்ளூர் ரயில் விபத்தில் பாக்மதி ரயில் லூப் லைனில் சென்றதே விபத்துக்கு காரணம் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. இந்த நிலையில், ரயில் விபத்து தொடர்பாக மத்திய அரசுக்கு ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் தனது பதிவில், “திருவள்ளூரில் நிகழ்ந்த மைசூரு – தர்பங்கா ரயில் விபத்து, ஒடிசாவின் பாலசோர் ரயில் விபத்தை பிரதிபலிக்கிறது என கூறியுள்ளார். ஒடிஷா ரயில் விபத்து போலவே கவரைப்பேட்டை ரயில் விபத்து நடந்துள்ளது. பல விபத்துகளில், பல […]
டெல்லி : ஜம்மு காஷ்மீர் மற்றும் ஹரியானா சட்டமன்ற தேர்தல் முடிவுகள் இன்று அறிவிக்கப்பட்டு வருகின்றன. இதில், ஹரியானாவில் மொத்தமுள்ள 90 தொகுதிகளில் பாஜக 49, காங்கிரஸ் 36 இடங்களை கைப்பற்றியுள்ளது. இதன்படி, ஹரியானாவில் தொடர்ந்து 3வது முறையாக ஆட்சி அமைக்கிறது பாஜக கட்சி. இந்நிலையில், ஹரியானாவில் தேர்தல் முடிவுகள் எதிர்பாராதவை. அது எங்களால் ஏற்றுக் கொள்ள முடியாது. இந்த முடிவுகள் ஹரியானா மக்களின் விருப்பத்திற்கு எதிரான ஒன்றாகும். ஹரியானாவில் வாக்கு எண்ணும் செயல்முறை, மின்னணு வாக்குப்பதிவு […]
ஹரியானா : ஜம்மு காஷ்மீர் மற்றும் ஹரியானா மாநில சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன. காலை 8 மணிக்கு தொடங்கிய வாக்கு எண்ணிக்கையில் முதற்கட்டமாக தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. ஹரியானா மற்றும் ஜம்மு காஷ்மீரில் வாக்கு எண்ணிக்கை தொடக்கத்திலேயே பாஜகவை பின்னுக்குத்தள்ளி காங்கிரஸ் முன்னிலை பெற்று வந்தது. இதில், ஹரியானா மாநிலத்தில் பாஜக – காங்கிரஸ் கூட்டணி இடையே கடும் போட்டி நிலவுகிறது. பெரும்பான்மைக்கு தேவையான 46 இடங்களை கைப்பற்ற இருகட்சிகளுக்கும் இடையே […]
டெல்லி : மகாத்மா காந்தியின் 155-வது பிறந்த நாள் (அக்.2,) இன்று நாடு முழுவதும் காந்தி ஜெயந்தி விழாவாக கொண்டாடப்படுகிறது. ஆங்கிலேயர் அடக்குமுறையில் இருந்த இந்தியர்களை அகிம்சை மூலம் போராட வைத்து சுதந்திரம் பெற்று தந்தவர் மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி (மகாத்மா காந்தி). அன்பு, அகிம்சை, அமைதி, எளிமையின் அடையாளமான காந்தியின் பிறந்த தினம் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், அரசியல் தலைவர்கள் பலர் தங்களது சமூக வலைத்தளங்கள் மூலம், வாழ்த்து செய்தியை பகிர்ந்து […]
டெல்லி : இலங்கையில் புதிய ஆட்சி அமைந்த பின் இலங்கை கடற்படையினரின் ரோந்து அதிகரித்திருப்பதாக தமிழக மீனவர்கள் புகார்கள் அதிகரித்துள்ளது. இந்த நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன் மீனவர்களை வானத்தை நோக்கி சுட்டு விரட்டியடித்துள்ளனர். இலங்கையில் ஆட்சி மாறினாலும் காட்சிகள் மாறவில்லை என மீனவர்கள் குற்றச்சாட்டியுள்ளனர். சமீபத்தில், இலங்கை கடற்படை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக நாகை, மயிலாடுதுறையைச் சேர்ந்த 37 பேரை, 3 படகுகளுடன் சிறைபிடித்தது. மேலும், கைது செய்யப்பட்ட அந்த 37 மீனவர்களும் காங்கேசந்துறை […]
காஷ்மீர் : 10 ஆண்டுகளுக்கு பிறகு ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் தற்போது சட்டமன்ற தேர்தல் நடைபெற்று வருகிறது. நாளை மறுநாள் (செப்டம்பர் 25) இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் பிரச்சாரத்தில் அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இன்று பூஞ்ச் நகரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் எம்.பியும், எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி, பிரதமர் நரேந்திர மோடி குறித்தும் ஆளும் பாஜகவை பற்றியும் கடுமையாக விமர்சனம் செய்து […]
புதாபெஸ்ட் : ஹங்கேரியில் நடைபெற்று வந்த இந்த ஆண்டிற்க்கான மற்றும் 45-வது செஸ் ஒலிம்பியாட் தொடரின், ஓபன் பிரிவில் இந்திய அணி தங்கம் வென்று அசத்தியுள்ளது. இந்த தொடரில் ஆடவர் மற்றும் மகளீர் என இரண்டு பிரிவுகளிலும் இந்திய அணி தங்கம் வென்று சாதனைப் படைத்துள்ளது. இந்திய செஸ் வரலாற்றில் இரண்டு பிரிவிலும் முதல் முறையாக தங்கம் வெல்வது இதுவே முதல் முறையாகும். இதன் மூலம் இந்திய அணி வரலாற்று சாதனைப் பதிவு செய்துள்ளது. ஆடவர் அணி […]
சென்னை : இந்திரா காந்தி போலவே ராகுல் காந்தியும் கொல்லப்படுவார் என்று பா.ஜ.க.வினர் மிரட்டல் விடுத்ததை தொடர்ந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், ஜனநாயக நாட்டில் மிரட்டல், வன்முறைக்கு இடமில்லை என்பதை மீண்டும் உறுதி செய்ய வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியும் இருக்கிறார். சமீபத்தில், எதிர்க்கட்சி தலைவரான ராகுல் காந்தியை குறித்து, பாஜக தலைவர் ஒருவர்,” அவரது பாட்டிக்கு நேர்ந்த கதி தான் அவருக்கும் நேரும் எனவும் அவரது நாக்கை வெட்டுபவர்களுக்கு 11 லட்சம் ரூபாய் […]
அமெரிக்கா : காங்கிரஸ் எம்.பியும், மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தி தற்போது அமெரிக்க பயணம் மேற்கொண்டு பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்று வருகிறார். இவர் வாஷிங்டன்னில் உள்ள தேசிய பத்திரிகையாளர் மன்றத்தில் நேற்று (செவ்வாய்) பேட்டியளித்து இருந்தார். அப்போது இந்திய அரசியல் விவகாரங்கள் குறித்து பல்வேறு கருத்துக்களை கூறினார். இந்தியா – சீனா விவகாரம் : அப்போது இந்தியா – சீனா எல்லை பிரச்சனை குறித்து பேசிய ராகுல் காந்தி , இந்திய எல்லைக்கு உட்பட்ட லடாக்கில் […]
அமெரிக்கா : காங்கிரஸ் எம்.பியும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி தற்போது அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்திற்கு பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கு அமெரிக்க வாழ் இந்தியர்கள் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றினார். பின்னர், வாஷிங்டன் டிசியில் உள்ள ஜார்ஜ்டவுன் பல்கலைக்கழகத்தில் நடந்த நேர்காணலில் பங்கேற்ற ராகுல் காந்தி, இந்திய அரசியல் பற்றி பல்வேறு கருத்துக்களை கூறினார். அப்போது, பிரதமர் நரேந்திர மோடி பற்றி கூறுகையில் , “பிரதமர் மோடியை நான் வெறுக்கவில்லை. ஆனால் அவர் கொண்டுள்ள கருத்தியலை நான் […]