ஃபுளோரிடா: இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ GSAT N2 என்ற செயற்கைகோளை வடிவமைத்துள்ளது. இந்த செயற்கைக்கோள் பூமியில் தகவல் தொடர்புகளை வலுப்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த செயற்கைக்கோள் அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள கேப் கனாவரல் ஏவுதளத்தில் இருந்து இன்று அதிகாலை ஸ்பேஸ் எக்ஸ் ஃபால்கான் 9 (Falcon 9) ராக்கெட் மூலம் ஏவப்பட்டது. GSAT N2 வடிவமைப்பு : இஸ்ரோ வடிவமைத்த இந்த GSAT N2 செயற்கைக்கோள் 4700 கிலோ எடை கொண்டது. GSAT N2 […]
நாசா: இன்று அசுர வேகத்தில் ஒரு சிறுகோள் ஒன்று பூமிக்கு மிக அருகாமையில், அதாவது 32,70,000 மைல் தொலைவில் கடந்து செல்ல இருப்பதாக அமெரிக்கா விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா தெரிவித்துள்ளது. இந்த சிறுகோளின் அளவு 77 அடி என்றும். மணிக்கு 10094 கீ/மீ என்ற அசுரர் வேகத்திற்கு பயணிக்கிறது என்றும் தெரிவித்துள்ளனர். இந்த சிறுகோளுக்கு Asteroid 2024 KJ என பெயர் வைத்துள்ளனர். அதாவது ஒரு விமானத்தின் அளவிற்கு இந்த சிறுகோள் அளவு இருக்கலாம் என்று […]
நாசா கண்டுபிடிப்பு: அபாயகரமான அச்சுறுத்தலுக்கு மத்தியில் பூமியின் திறனைப் புரிந்துகொள்வதற்காக நாசா ஒரு கற்பனையான பயிற்சியை மேற்கொண்டது. அதில், வரும் 2038 ஆண்டு 12 ஜூலை அன்று 14.25 நேரத்தில் பூமி மீது சக்திவாய்ந்த குறுங்கோள் மோத 72% வாய்ப்பு இருப்பதாக நாசா மேற்கொண்ட ஆய்வில் தகவல் வெளியாகியுள்ளது. இது மிகப்பெரிய இயற்கை பேரிடராக இருக்கும் எனவும் இதை தடுக்கும் அளவுக்கு நாம் இன்னும் தயாராகவில்லை எனவும் நாசா தெரிவித்துள்ளது. அதாவது, நாசா ஐந்து அல்லது இரண்டு […]
ஸ்பேஸ்எக்ஸ் 2022 ஆம் ஆண்டில் தனது 60-வது மிஷனில் 54 ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தியுள்ளது. ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனமானது, புளோரிடாவின் கேப் கனாவரல் விண்வெளி நிலையத்தில் இருந்து 54 ஸ்டார்லிங்க் இணைய செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தியுள்ளது. இது 2022 ஆம் ஆண்டில் ஸ்பேஸ்எக்ஸ்-இன் 60-வது மிஷனாகும். இது விண்ணில் செலுத்தப்பட்டுள்ள ஸ்டார்லிங்கின் முதல் மேம்படுத்தப்பட்ட நெட்வொர்க் செயற்கைகோள். ஸ்பேஸ்எக்ஸ், பூமியின் குறைந்த சுற்றுப்பாதைகளுக்கு செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தியுள்ளதாக தனது ட்விட்டரில் பகிர்ந்துள்ளது. இப்போது நாம், செயற்கைக்கோள்களை புதிய சுற்றுப்பாதைகளுக்கு […]
6 மாதங்களுக்கு முன் விண்வெளிக்கு சென்ற சீன வீரர்கள் மூன்று பேர் பத்திரமாக பூமிக்கு திரும்பினர். சீனா, டியான்காங் என்ற தனி விண்வெளி நிலையம் அமைக்கும் பணியில் ஈடுபட்டு வந்த நிலையில் கடந்த அக்டோபர் மாதம் 16 ஆம் தேதி சென்சு-13 என்ற விண்கலம் மூலம் 3 சீன வீரர்களை விண்வெளி நிலைய கட்டுமான பணிகளை மேற்கொள்ள அனுப்பியது. இந்த நிலையில், விண்வெளி நிலைய கட்டமைப்பு பணிகளை மேற்கொள்ள சென்று 6 மாதங்கள் முடிந்த நிலையில் அவர்கள் […]
பூமியை நோக்கி வந்த மர்மமான ஒளியானது ப்ளாக்ஹோலின் தீவிர வெடிப்பிலிருந்து வந்தது என விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். விண்வெளில் உருவாகியுள்ள ப்ளாக்ஹோல் தனக்கு அருகில் வரும் நட்சத்திரங்களை உட்கொள்ளும்பொழுது ஏற்பட்ட தீவிர வெடிப்பால் இந்த ஒளியானது ஏற்பட்டது எனவும் இது நேரடியாக பூமியை நோக்கி வந்தது என்றும் வானியல் ஆராச்சியாளர்கள் கூறியுள்ளனர். நட்சத்திரங்களானது ப்ளாக்ஹோலால் சிறு துண்டுகளாக உடைக்கப்படும் நிகழ்வானது TDE அல்லது டைடெல் சீர்குலைவு என்று அழைக்கப்படும். மேலும் இதுபோன்று நடக்கும் சில நிகழ்வுகளில் 1 சதவீத […]
உலகின் மிக சக்திவாய்ந்த தொலைநோக்கி, ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கி மற்றும் ஹவாயில் உள்ள WM கெக் ஆய்வகம் ஆகியவை சனியின் மிகப்பெரிய நிலவான டைட்டனில் மிதக்கும் மேகங்களை வெளிப்படுத்தும் படங்களை எடுத்துள்ளன. பூமியைத் தவிர தற்போது ஆறுகள், ஏரிகள் மற்றும் கடல்களைக் கொண்ட ஒரே கிரகம் டைட்டன். இருப்பினும், பூமியைப் போலல்லாமல், டைட்டனின் மேற்பரப்பில் உள்ள திரவமானது மீத்தேன் மற்றும் ஈத்தேன் உள்ளிட்ட ஹைட்ரோகார்பன்களால் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது.
15-டன் விண்கல்லில் இருந்து புதியதாக இரண்டு கனிமங்கள் விஞ்ஞானிகளால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது..!! 2020 ஆம் ஆண்டு சோமாலியா நாட்டில் இருந்து ஒரு பெரிய விண்கல், கண்டுபிடிக்கப்பட்டது. 15 டன் எடை கொண்ட அந்த விண்கல்லின் மாதிரியில் இருந்து, கனடா நாட்டின் விஞ்ஞானிகள் குழு, இதுவரை கண்டுபிடிக்கப்படாத இரண்டு புதிய கனிமங்களை கண்டுபிடித்துள்ளனர். மேலும் 3ஆவது கனிமம் கண்டுபிடிக்கும் சோதனை நடந்து வருவதாகவும் தெரிவித்தனர். இரண்டு வருடங்களுக்கு முன்பு கண்டுபிடிக்கப்பட்ட இந்த விண்கல்லானது கிழக்கு ஆப்பிரிக்காவின் சோமாலிய நாட்டின், கிராமப்புற […]
நாசாவின் ஓரியன் ராக்கெட் தனது முதல் விண்வெளிப்பயணத்தின் போது நிலவின் மிக அருகில் எடுக்கப்பட்ட படத்தை அனுப்பியுள்ளது. நவம்பர் 16 அன்று நாசாவிலிருந்து ஓரியன் ஸ்பேஸ் லான்ச் சிஸ்டம் (SLS) ராக்கெட் சந்திரனின் சுற்றுவட்டப்பாதையில் நோக்கி விண்ணில் செலுத்தப்பட்டது. ஆர்ட்டெமிஸ் I மிஷன் என்று அழைக்கப்படும் இந்த சோதனை ராக்கெட் ஓரியன், சந்திரனின் சுற்றுவட்டப்பாதையில் சென்று, பிறகு பூமியை நோக்கி திரும்பும் போது டிசம்பர் 11 அன்று அட்லாண்டிக் பெருங்கடலில் அது விழுந்துவிடும். இந்த ஓரியன் ராக்கெட் […]
விண்ணில் செலுத்தப்பட்ட இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட்டில் பொருத்தப்பட்ட கேமராவில் பதிவான வீடியோ வெளியாகியுள்ளது. ஐதரபாத்தைச் சேர்ந்த “ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ்” என்ற தனியார் நிறுவனம், ‘விக்ரம் – எஸ்’ என்ற பெயரில் ராக்கெட் தயாரித்து நேற்று (நவம்பர் 18) இஸ்ரோவின் ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்தில் இருந்து ‘விக்ரம் – எஸ்’ ராக்கெட்டை விண்ணில் செலுத்தியது. ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் நிறுவனம் இந்த ராக்கெட்டுடன் கேமரா பொறுத்தியுள்ளது, அந்த கேமராவில் பதிவான வீடியோவை வெளியிட்டுள்ளது. ராக்கெட்டில் பொருத்தப்பட்ட கேமராவால் எடுக்கப்பட்ட வீடியோ, […]