டெல்லி: அமித் ஷா பேசியதற்கு நாடாளுமன்றத்தில் எதிர்ப்பு எழுந்த நிலையில், அம்பேத்கரை மத்திய அரசு முழுமையாக மதிக்கிறது என்று கூறி, பிரதமர் மோடி விளக்கம் அளித்துள்ளார். நேற்றைய தினம் நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சர் அமித்ஷா, அம்பேத்கர் பெயர் இப்போது ஒரு பேஷன் ஆகிவிட்டது. அவர் பெயருக்கு பதில் கடவுளின் பெயரை சொல்லி இருந்தால் ஏழு ஜென்மம் சொர்க்கம் கிடைத்திருக்கும் என்று பேசியது, சர்ச்சையை கிளப்பியது. இப்படி இருக்கையில், ‘காங்கிரஸ் கட்சி தான் பி.ஆர். அம்பேத்கரை அவமதித்ததாக’ பிரதமர் […]
டெல்லி : மக்களவையில் அரசியல் சாசனம் மீதான விவாதத்தில் உரையாற்றிய பிரதமர் மோடி காங்கிரஸை விமர்சித்து சில விஷயங்களை பேசியுள்ளார். இது குறித்து பேசிய அவர் ” அரசமைப்பின் 75 ஆண்டை கொண்டாடும் வேளையில், எமர்ஜென்சி காலத்தைப் பற்றி பேச வேண்டியது அவசியம். அரசமைப்பின் 25-வது ஆண்டை கொண்டாடும்போது எமர்ஜென்சி கொண்டுவரப்பட்டது. ஜனநாயகத்தை நெறித்த கறைகளை காங்கிரஸ் கட்சியால் சுத்தம் செய்ய முடியாது. எமர்ஜென்சி காலத்தில் மக்களின் அதிகாரம் பறிக்கப்பட்டதோடு ஆயிரக்கணக்கானோர் சிறையில் அடைக்கப்பட்டனர். தன்னுடைய பதவியை காப்பாற்றவே […]
டெல்லி : மக்களவையில் அரசியலமைப்புச் சட்ட விவாதத்தின் இரண்டாவது மற்றும் கடைசி நாளுக்காக இன்று விவாதம் நடைபெற்ற நிலையில், அதில் பேசிய பிரதமர் மோடி நெகிழ்ச்சியுடன் இந்தியாவை பற்றி பேசியுள்ளார். இது குறித்து பேசிய அவர் ” உலகெங்கிலும் உள்ள அனைத்து ஜனநாயகத்தை நேசிக்கும் குடிமக்களுக்கும் இது மிகவும் பெருமையான தருணம். இந்த 75 ஆண்டுகால சாதனை சாதாரணமானது அல்ல, நம்மளுடைய நாடு சுதந்திரம் அடைந்த நேரத்தில் இந்தியாவிற்கு வெளிப்படுத்தப்பட்ட சாத்தியக்கூறுகளை முறியடித்து. இந்திய அரசியலமைப்பு தான் நம்மை […]
டெல்லி : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த வாரம் திங்களன்று தொடங்கி இன்று வரை எதிர்க்கட்சிகளின் அமளியால் தொடர்ந்து ஒத்திவைக்கப்படும் நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன. இன்று காலை 11 மணிக்கு தொடங்கியது முதலே எதிர்க்கட்சிகள் அமளி காரணமாக அவை ஒத்திவைக்கப்பட்டுவிட்டது. அதானி குறித்து அமெரிக்க வழக்கறிஞர்கள் முன்வைத்துள்ள குற்றசாட்டு குறித்து நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்தவேண்டும் எனவும், மணிப்பூர் விவகாரம் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்தும் விவாதம் நடத்த வேண்டும் எனக் கூறி நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பல்வேறு […]
டெல்லி : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இந்த வார தொடக்கத்தில் கடந்த நவம்பர் 25ஆம் தேதி துவங்கபட்டது. கூட்டத்தொடர் துவங்குவதற்கு முன்பே நாட்டில் பரபரப்பை ஏற்படுத்திய அதானி விவகாரம், மணிப்பூர் விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் பேச வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இதனை குறிப்பிட்டு, நாடாளுமன்றத்தின் இரு அவைகளான மக்களவை மற்றும் மாநிலங்களவை என இரு அவைகளிலும் எதிர்க்கட்சி உறுப்பினர் கோரிக்கை வைத்தனர். ஆனால் விவாதம் நடத்த இரு அவை சபாநாயகர்களும் அனுமதி தரவில்லை என கூறி […]
டெல்லி : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தற்போது தொடங்கியுள்ளது. இன்று (நவம்பர் 25) தொடங்கிய இந்த கூட்டத்தொடர் வரும் டிசம்பர் 20ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தொடரில் அதானி விவகாரம், வக்பு வாரிய சட்டமசோதா , மணிப்பூர் விவகாரம், உத்திர பிரதேச மசூதி விவகாரம் உள்ளிட்டவை பேசு பொருளாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கூட்டத்தொடரில், மத்திய அரசு, வக்பு வாரிய திருத்த சட்டம், ரயில்வே துறை திருத்த சட்டம், வங்கி புதிய சட்டதிட்டங்கள் […]
புது டெல்லி : மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு, பரபரப்பான அரசியல் சூழலுக்கு மத்தியில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கி டிசம்பர் 20 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இன்று காலை 10 மணி அளவில் நாடாளுமன்றக் கூட்டத்தொடர் தொடங்குகிறது. டிசம்பர் 20-ம் தேதி வரை நடைபெறும் இந்தக் கூட்டத் தொடரில் மொத்தம் 19 அமர்வுகள் நடைபெற இருக்கிறது. இன்று நடைபெறவிருக்கும் இந்த கூட்டத் தொடரில் வக்ஃபு வாரிய திருத்த மசோதா, ரயில்வே திருத்த மசோதா, வங்கி சட்டங்கள் […]
டெல்லி : 18வது மக்களவை முதல் கூட்டத்தொடரில் நேற்றும் இன்றும் புதிய எம்பிக்கள் பதவி ஏற்கும் நிகழ்வு நடைபெற்று வருகிறது. இன்றைய நாள் நிகழ்வில் தமிழகம் மற்றும் புதுச்சேரி எம்பிக்கள் 40 பேரும் தற்போது அடுத்தடுத்து பதவி ஏற்றுக்கொள்கின்றனர். அவர்கள் அனைவரும் தமிழில் பதவியேற்றுக்கொண்டு வருகின்றனர். மத்திய சென்னை திமுக எம்பி தயாநிதி மாறன் தமிழில் உறுதிமொழி ஏற்று பதவி ஏற்றுக்கொண்ட பிறகு நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என முழக்கமிட்டார். அடுத்து தமிழச்சி தங்கபாண்டியன், […]
புதுடெல்லி : 18ஆவது மக்களவை கூட்டத்தொடர் ஜூன் 24ஆம் தேதி தொடங்கி ஜூலை 3ஆம் தேதி முடிவடையும் என்று நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு அறிவித்துள்ளார். 2024 மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு, முதல் நாடாளுமன்றக் கூட்டத்தொடர் இதுவாகும். குடியரசுத் தலைவர், சபாநாயகர் உரையுடன் நாடாளுமன்ற கூட்டத்தொடரின் முதல் அமர்வு நடைபெறும். அன்று உறுப்பினர்களுக்கு தற்காலிக சபாநாயகர் பதவிப்பிரமாணம் செய்து வைப்பார். பின்னர், ஜூன் 26ம் தேதி மக்களவை சபாநாயகர் தேர்தல் நடைபெறும். அதன்படி, சபாநாயகர் தேர்ந்தெடுக்கப்பட்டு, […]
Manmohan Singh: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் 33 ஆண்டுகள் பதவி வகித்து ராஜ்யசபாவில் இருந்து ஓய்வு பெறுகிறார். முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் 54 பேர் ஓய்வு பெறுகின்றனர். இதில், 49 மாநிலங்களவை எம்பிக்களின் பதவிக் காலம் நேற்றுடன் நிறைவு பெற்ற நிலையில், 5 எம்பிக்களின் பதவிக் காலம் இன்றுடன் நிறைவு பெறுகிறது. அதிலும் குறிப்பாக 33 ஆண்டுகளாக மாநிலங்களவை உறுப்பினராக பதவி வகித்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் இன்றுடன் ஓய்வு […]
ஆளும் பாஜக அரசின் கடைசி நாடாளுமன்ற கூட்டத்தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தொடர் கடந்த ஜனவரி 31ஆம் தேதி குடியரசு தலைவர் உரையுடன் ஆரம்பிக்கப்பட்டது. அடுத்த நாள் பிப்ரவரி 1ஆம் தேதியன்று 2024ஆம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். அதனை தொடர்ந்து, பட்ஜெட் மீதான விவாதம், வழக்கமான கேள்விநேரம், விவாதம் என இன்று (பிப்ரவரி 9) வரையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்! […]
நாடாளுமன்ற வளாகத்தில் இன்று மத்திய அரசை கண்டித்து கருப்பு சட்டை அணிந்து ஆர்ப்பாட்டம் நடைபெறும் என திமுக சமீபத்தில் அறிவித்திருந்தது. அதன்படி, நாடாளுமன்ற வளாகத்தில் இன்று மத்திய அரசை கண்டித்து தமிழ்நாட்டைச் சேர்ந்த திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகளை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் கருப்பு சட்டை அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாட்டுக்கு நிதி ஒதுக்காதது மற்றும் வெள்ள நிவாரணம் வழங்காததை கண்டித்து, நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பு திமுக எம்.பி.க்கள் மற்றும் […]
நாடளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர கடந்த ஜனவரி 31ஆம் தேதி குடியரசு தலைவர் உரையுடன் தொடங்கி இன்று 7வது நாளாக நடைபெற்று வருகிறது. ஏற்கனனவே மக்களவையில் பிரதமர் மோடி பேசியதை தொடர்ந்து நேற்று மாநிலங்களவையில் குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் பதிலுரையை பிரதமர் மோடி நிகழ்த்தினார் அதனை தொடர்ந்து இன்று 7வது நாள் கூட்டத்தொடர் மக்களவை, மாநிலங்களவை என இரு அவைகளிலும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கருப்பு சட்டை அணிந்து நாடாளுமன்ற வளாகத்தில் போராடியதை […]
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 31ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. குடியரசு தலைவர் திரெளபதி முர்மு உரையுடன் அன்று கூட்டத்தொடர் தொடங்கியது. இதன்பின் மறுநாள் மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இதனைத்தொடர்ந்து மக்களவை, மாநிலங்களவை என இரு அவைகள் நடைபெற்று வருகிறது. அதில் பல்வேறு மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில், இன்று மக்களவையில் குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது பிரதமர் மோடி […]
நாடாளுமன்ற மக்களவையில் குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவித்து பிரதமர் மோடி உரையாற்ற உள்ளார். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த மாதம் 31-ம் தேதி குடியரசு தலைவர் திரௌபதி முர்மு உரையுடன் தொடங்கியது. இதையடுத்து மத்திய அரசின் பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். நாடாளுமன்ற மக்களவை தேர்தல் விரைவில் நடைபெற உள்ளதால், இது முழுமையான பட்ஜெட்டாக இல்லாமல் இடைக்கால பட்ஜெட்டாக தாக்கல் செய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து, பட்ஜெட் கூட்டத்தொடர் மக்களவை மற்றும் மாநிலங்களவையில் நடைபெற்று வருகிறது. […]
வரும் 8-ஆம் தேதி திமுக எம்பிக்கள் கருப்பு சட்டை ஆர்ப்பாட்டம் நடைபெறும் என டி.ஆர். பாலு அறிவித்துள்ளார். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 31ம் தேதி குடியரசு தலைவர் திரௌபதி முர்மு உரையுடன் தொடங்கியது. இதன்பின், பிப்.1ம் தேதி நாடாளுமன்ற மக்களவையில் மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். மக்களவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இந்த சூழலில் நாடாளுமன்ற கூட்டத்தொடர் வரும் 9ம் தேதி […]
இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசிய சீதாராமன், வீடுகளில் சூரிய ஒளி மின்சாரம் திட்டம் மூலம் மாதத்திற்கு 300 யூனிட் வரை இலவச மின்சாரம் பெற முடியும் என்றார். நாடாளுமன்ற கூட்டத்தொடரின் மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்தார். மக்களவை தேர்தல் நடைபெற இருப்பதால், தற்போது இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதில், வீடுகளில் மின் உற்பத்தி செய்யும் முயற்சியில், மேற்கூரை சோலாரைசேஷன் மற்றும் இலவச மின்சாரத்தை பிரபலப்படுத்துவதில் மத்திய […]
நாடாளுமன்ற கூட்டத்தொடரின் மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்தார். மக்களவை தேர்தல் நடைபெற இருப்பதால், தற்போது இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அதன்படி, பெரும் எதிர்பார்ப்பு மத்தியில் இன்று தாக்கலான மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட்டில், பல்வேறு அறிவிப்புகள், புதிய திட்டங்கள் மற்றும் சலுகைகள் இடம்பெற்றிருந்தது. பட்ஜெட் உரையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதாவது, விவசாயிகள், ஏழைகள், பெண்கள், இளைஞர்கள் என 4 பிரிவினருக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. ஊழல் […]
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று குடியரசுத் தலைவர் உரையுடன் தொடங்கிய நிலையில், இன்று மத்திய அரசின் 2024-25ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்ட தாக்கல் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, நாடாளுமன்றம் வருவதற்கு முன்பு குடியரசு தலைவர் திரௌபதி முர்முவை சந்தித்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வாழ்த்து பெற்றார். இதன்பின் டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் இடைக்கால பட்ஜெட்டுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்த நிலையில், பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய மத்திய அரசின் 2024-25ம் […]
நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நெருங்கும் நிலையில், பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் மத்திய அரசின் கடைசி பட்ஜெட்டான இடைக்கால பட்ஜெட்டை, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்னும் சற்று நேரத்தில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யவுள்ளார். நாடாளுமன்றம் வருவதற்கு முன்பு குடியரசு தலைவர் திரௌபதி முர்முவை சந்தித்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வாழ்த்து பெற்றார். இன்று பட்ஜெட் தாக்கல் செய்கிறார் நிர்மலா சீதாராமன்.! எகிறும் எதிர்பார்ப்புகள்… இந்த நிலையில், டெல்லியில் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை கூட்டம் […]