சென்னை : திட்டமிட்ட பொய்யுரைகளாகவும் ஆதாரமற்ற அவதூறுகளாகவுமே அள்ளி இறைக்கப்படுகின்றன என்று விசிக தலைவர் திருமாவளவன் தனது சமூக வலைதளப்பக்கத்தில் இரண்டு பக்க அறிக்கையை வெளிட்டுள்ளார். இது தொடர்பான அறிக்கையில், “கடந்த முப்பத்தைந்து ஆண்டுகளாகவே நமது களப்பணிகள் மற்றும் வளர்ச்சி நிலைகளுக்கேற்ப, நமக்கு எதிரானவர்கள் விமர்சனங்கள் என்னும் பெயரால் மிகவும் அப்பட்டமான அவதூறுகளைத் தொடர்ந்து பரப்பி வருகின்றனர். நம்மை வீழ்த்துவதற்கு கையாண்டுவரும் உத்திகளில் முதன்மையானது அவதூறு பரப்புவது ஆக்கப்பூர்வமான விமர்சனங்களில் தேவையான மாற்றங்களை ஏற்று கொள்கிறோம். நம்மை விமர்சிப்பவர்களில் […]
டெல்லி : அமெரிக்காவில் கவுதம் அதானி உள்ளிட்ட அதானி குடும்பத்தினருக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து, ‘அமெரிக்காவில் திரட்டிய நிதியை பயன்படுத்த மாட்டோம்’ என்று அதானி கிரீன் எனர்ஜி விளக்கம் அளித்துள்ளது. இந்தியாவில் சூரிய மின்சார விநியோகம் தொடர்பான ஒப்பந்தம் பெறுவதற்கு சுமார் 2,110 ஆயிரம் கோடி ரூபாய் லஞ்சம் தர கவுதம் அதானி முன்வந்ததாகக் கூறி அமெரிக்க நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது. இந்த விவகாரத்தில் கவுதம் அதானி, அவரது உறவினர் சாகர் அதானி உட்பட 7 பேர் […]
சென்னை : வருகின்ற டிசம்பர் 6-ஆம் தேதி அண்ணல் அம்பேத்கர் நினைவு நாளை முன்னிட்டு அன்றைய தினம் அம்பேத்கர் பெயரில் ஒரு புத்தகம் ஒன்றை வெளியிட விகடன் பதிப்பகம் மற்றும் ஆதவ் அர்ஜுனாவின் (விசிக துணை பொதுச்செயலாளர்) நிறுவனமும் இணைந்து நிகழ்ச்சி ஒன்றை நடத்துகிறது. இந்த நிகழ்ச்சியில், தவெக தலைவர் விஜய் வருகை தந்து விசிக தலைவர் திருமாவளவன் கையால் அம்பேத்கர் புத்தகத்தை பெற்றுக்கொள்ளவுள்ளதாகவும் கூறப்பட்டது. ஒரே மேடையில் இருவரும் பங்கேற்கும் தகவல் அரசியல் வட்டாரத்தில் பெரும் அளவில் […]
சென்னை : தமிழகத்தில் வளிமண்டல சுழற்சி காரணமாக பல மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கி வரும் நிலையில், அடுத்த 3 மணி நேரம் அதாவது 1 மணி வரை 10 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதன்படி, நாகப்பட்டினம், திருவாரூர், ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், சிவகங்கை, விருதுநகர், கன்னியாகுமரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் […]
ராமநாதபுரம் : வளிமண்டல சுழற்சி காரணமாக ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள சுற்றுப்பகுதிகளில் நேற்று முன்தினத்தில் இருந்தே கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. நேற்று மலையில் ராமேஸ்வாரத்தில் மிகவும் கனமழை பெய்த நிலையில், தற்போது சில பகுதிகளில் கனமழை விட்டு விட்டு வெளுத்து வாங்கி வருகிறது. இதன் காரணமாக ராமேஸ்வாரத்தில் பல இடங்களில் தண்ணீர் குளம் போல தேங்கியுள்ளது. அதைப்போல, ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் பகுதியில் கடல் சீற்றம் மற்றும் கனமழை காரணமாக தெற்குவாடி பகுதியில் கடல் அரிப்பு […]
சென்னை : தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இன்று ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகக்கூடும். இதன் காரணமாக, நாளை மறுநாள் (23-ஆம் தேதி) வாக்கில் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது. இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, அதற்கடுத்த இரு தினங்களில் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, தென் மாவட்டங்களில் மழை வெளுத்து […]
சென்னை : தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. தென்தமிழகத்தில் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள ராமநாதபுரம் மற்றும் நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால், இன்று பள்ளிகள் விடுமுறை அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ராமநாதபுரத்தில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு இன்று (நவ.21) விடுமுறை அளிப்பது குறித்து, அந்தந்த பள்ளியின் தலைமை ஆசிரியர்களே முடிவெடுத்துக் கொள்ளலாம் என மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அறிவித்துள்ளார். மேலும், மாவட்ட அளவில் பரவலாக கனமழை […]
டெல்லி : இந்தியாவின் பெரும் தொழிலதிபர்களில் ஒருவரான கவுதம் அதானி மீது அமெரிக்காவில் கடுமையான குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இதன் காரணமாக, கௌதம் அதானி மற்றும் அவரது மருமகன் சாகர் அதானி ஆகியோருக்கு அமெரிக்க பெடரல் நீதிமன்றம் கைது வாரண்ட் பிறப்பித்துள்ளது. அதாவது, சூரிய சக்தி மின்சார ஒப்பந்தம் பெற இந்திய அரசு அதிகாரிகளுக்கு 250 மில்லியன் டாலர்களுக்கு மேல் (சுமார் ரூ. 2110 கோடி) லஞ்சம் கொடுக்க கொடுக்கப்பட்டதாக தொழிலதிபர் கவுதம் அதானி மீது நியூயார்க் நீதிமன்றத்தில் […]
சென்னை : குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்திற்கு பல்வேறு பகுதிகளில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனிடையே, தென் தமிழகத்திற்கு அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் (10 மணிக்குள்) 8 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, […]
சென்னை : குமரிக்கடல் மற்றும் வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மிதமானது முதல் கனமழை வரை பெய்து வருகிறது. குறிப்பாக தென் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது . ஏற்கனவே, தென் தமிழகத்தில் அதிகனமழை முதல் மிக கனமழை வரை பெய்யும் என ரெட் அலர்ட் எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டது. திருவாரூர், நாகப்பட்டினம், நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி , தென்காசி ஆகிய மாவட்டங்களில் நாளை […]
டெல்லி : இன்று (நவம்பர் 20) மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள 288 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் வாக்குப்பதிவு மற்றும், ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள 38 சட்டமன்ற தொகுதிகளுக்கும் 2ஆம் கட்ட தேர்தல் என வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணிக்கு நிறைவு பெற்றுள்ளது. மாலை 5 மணி நிலவரப்படி, மகாராஷ்டிரா மாநிலத்தில் 58.22% வாக்கு சதவீதமும், ஜார்கண்ட் மாநில 2ஆம் கட்ட தேர்தலில் 67.59% வாக்கு சதவீதமும் பதிவாகியுள்ளன. […]
கோவை : சூலக்கல், தாமரைக்குளம், ஓ.கே.மண்டபத்தின் ஒரு பகுதி, மந்திரம்பாளையம், கொண்டம்பட்டி, சிட்கோ, சுந்தராபுரம் பகுதி, போத்தனூர் பகுதி, எல்ஐசி காலனி, காமராஜ் நகர் சென்னை : சிட்கோ நகர் 1 முதல் 10 பிளாக், அம்மன்குட்டி, நேரு நகர், தெற்கு மற்றும் வடக்கு ஜெகநாதன் நகர், எம்.டி.எச் சாலை, சிட்கோ தொழிற்பேட்டை, திரு நகர், அகத்தியர் நகர், பொன்விழா நகர், தெற்கு உயர்நீதிமன்ற காலனி, பாரதி, கடவூர், அரசூர், அயநல்லூர், ஆண்டவொயல்.விடத்தண்டலம், கொள்ளுமேடு தருமபுரி: மொரப்பூர், […]
லக்னோ : இன்று மகாராஷ்டிரா மாநில சட்டமன்ற தேர்தலும், ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் 2ஆம் கட்ட வாக்குப்பதிவும் இன்று காலை 7 மணி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. அதே போல பல்வேறு மாநிலங்களில் இடைத்தேர்தல்களும் நடைபெற்று வருகிறது. உத்திர பிரதேச மாநிலத்தில், காஜியாபாத், கதேஹாரி, கெய்ர், குந்தர்கி, கர்ஹால், மஜவான், மீராபூர், புல்பூர் மற்றும் சிசாமாவ் ஆகிய 9 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் காலை 7 மணி முதல் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. […]
திருவனந்தபுரம் : சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதம் இருக்க தொடங்கி விட்டனர். மேலும், சபரிமலை செல்லும் பக்தர்கள் கூட்டமும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டுள்ளது. சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு வரும் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருப்பதால் , அவர்களுக்கு அடிப்படை வசதிகளை ஏற்படுத்திதர பல்வேறு நடவடிக்கைகளை தேவசம்போர்டு மற்றும் மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. ஏற்கனவே, சன்னிதானம் முதல் நிலக்கல் […]
குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று தமிழகத்தில் பல மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், சில மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவலை தெரிவித்துள்ளது. அதன்படி, மயிலாடுதுறை, தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம். தூத்துக்குடி, விருதுநகர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது. திருவாரூர், நாகப்பட்டினம், திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் கன […]
சென்னை : குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளிமேல் ஒரு வளிமண்டல ழேடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தென் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வட தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இந்த நிலையில், தமிழ்நாட்டில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு (4 மணி வரை) மழை பெய்யவிருக்கும் மாவட்டங்களின் பட்டியலை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, மயிலாடுதுறை, […]
தஞ்சாவூர் : மல்லிப்பட்டினத்தில் உள்ள அரசு பள்ளியில் பாடம் நடத்திக் கொண்டிருந்த ஆசிரியை ரமணி என்பவரை மதன் எனும் நபர் கத்தியால் குத்திக் கொலை செய்துள்ளார். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ஆசிரியை ரமணியை பெண் கேட்டு சென்ற போது, விருப்பம் இல்லை என கூறியதால் ஆத்திரம் தாங்காத மதன் கொலை செய்ததாக முதற்கட்ட தகவலின்படி கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக, அமைச்சர் அன்பில் மகேஷ் தனது எக்ஸ் தள பக்கத்தில் கடும் […]
தஞ்சாவூர் : மல்லிப்பட்டினத்தில் உள்ள அரசு பள்ளியில் பாடம் நடத்திக் கொண்டிருந்த ஆசிரியை ரமணி என்பவரை மதன் எனும் கத்தியால் குத்திக் கொலை செய்துள்ளார். இதனைத் தொடர்ந்து அந்த நபரை அதிரடியாக கைது செய்துள்ளனர். தஞ்சாவூர் சின்னமணி பகுதியை சேர்ந்த முத்து என்பவரின் மகளான 26 வயது நிரம்பிய ரமணி அதே பகுதியில் அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்துள்ளார். கடந்த 4 மாதங்களுக்கு முன்பு அப்பள்ளியில் ஆசிரியராக சேர்ந்த அவர் தொடர்ந்து பணியாற்றி வந்துள்ளார். இந்த […]
கள்ளக்குறிச்சி : கடந்த ஜூன் மாதம் கருணாபுரம் பகுதியைச் சேர்ந்த சுமார் 60 பேர் விஷச்சாராய அருந்தி உயிரிழந்தனர். கடந்த ஜூன்-19ம் தேதி மெத்தனால் கலந்த கள்ளச்சாராயம் அருந்தி 229 பேர் உடல் நலம் பாதிக்கப்பட்டனர். இது தொடர்பாக சிபிசிஐடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர். இதனைத் தொடர்ந்து இந்த வழக்கை அதிமுக, பாஜக, பாமக கட்சிகள் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் இந்த வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என தாக்கல் செய்தனர். இந்த […]