சென்னை: எல்லை தாண்டி மீன்பிடித்ததாக ராமேஸ்வரம் மீனவர்கள் 17 பேரை இரண்டு விசைப்படகுகளுடன் இலங்கை கடற்படை கைது செய்துள்ளனர். நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்களை இலங்கை கடற்படை நள்ளிரவில் கைது செய்தது. சென்னையில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, விமான நிலையம் – விம்கோ நகர் வழித்தடத்தில் 18 நிமிடங்களுக்கு ஒருமுறை மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகிறது. மேலும், வடோல்கேட் – விம்கோ நகர் டிப்போ வரை […]
ராமேஸ்வரம்: தமிழக மீனவர்களுக்கு எதிரான இலங்கையின் தொடர் கைது நடவடிக்கை, மீனவ குடும்பத்தினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மீண்டும், எல்லை தாண்டி மீன்பிடித்ததாக ராமேஸ்வரம் மீனவர்கள் 17 பேர் இரண்டு விசைப்படகுகளுடன் இலங்கை கடற்படை கைது செய்துள்ளனர். நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 17 பேரை இலங்கை கடற்படை நள்ளிரவில் கைது செய்தது. அவர்களது 2 விசைப் படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்துக் கொண்டிருந்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இவ்வாறு தமிழக […]
சென்னை: தொழில்நுட்பக் கோளாறு காரணமாக மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம் அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று இரவு தண்டையார்பேட்டை மெட்ரோ ரயில் சுரங்க பாதையில் கோளாறு ஏற்பட்டது. இந்த நிலையில், சுரங்க பாதையில் ஏற்பட்ட கோளாறு இன்னும் சரி ஆகாததால், தொடர்ந்து மெட்ரோ ரயில் சேவை பாதிப்படைந்துள்ளது. இதனால், ஒரு வழித்தடத்தில் மட்டும் மெட்ரோ ரயில் இயக்கப்படுவதால் தொடர்ந்து ரயில்கள் தாமதமாகி வரும் நிலையில், பயணிகள் பெரிதும் அவதிக்குள்ளாகி உள்ளனர். இதனிடையே, இரவில் இருந்து தொழில்நுட்பக் கோளாறை சரி செய்யும் […]
கோவை : ஆரோக்கியசாமி சாலை, ராமச்சந்திரா சாலை, டி.பி.ரோடு, லாலி சாலை, தடாகம் சாலை, கவுலிபிரவுன் சாலை, டி.வி.சாமி சாலை, சுக்கிரவாரி பெட், காந்தி பார்க், கோபால் லே-அவுட், சாமியார் நியூ செயின்ட், எட்டியார் தெரு, ராஜா தெரு, சின்னத்தடாகம், ஆனகட்டி, நஞ்சுண்டாபுரம், பன்னிமடை சாம் பகுதிகள், பெரியதடாகம், பாப்பநாயக்கன்பாளையம், கட்டப்பட்டி, ஆர்.சி.புரம், ஜே.கிருஷ்ணாபுரம், நெகமம், வடசித்தூர், காஞ்சிபுரம் : களியம்பூண்டி கரூர் : பணிக்கம்பட்டி, வலையபட்டி, எரமநாயக்கன்பட்டி, மேட்டுப்பட்டி, மருதூர், நடுப்பட்டி, குப்புரெட்டிப்பட்டி, வேலங்காட்டுப்பட்டி, செம்மேட்டுப்பட்டி.லாலாப்பேட்டை, […]
சென்னை : தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் 6-முதல் 12-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவ மாணவியர்களின் உயர் கல்விக்கான செலவை தமிழக அரசே ஏற்கும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ள நிலையில், அதற்கு பள்ளி கல்விதுறை அமைச்சர் அன்பில் மகேஸ் நன்றியை தெரிவித்து இந்த முக்கிய செய்தியை தனது எக்ஸ் வலைதள பக்கத்தின் மூலம் அறிவித்திருக்கிறார். இது குறித்து அன்பில் மகேஸ் தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் கூறிருப்பதாவது “முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நமது அரசுப் பள்ளி […]
சென்னை : மத்திய அரசின் தேசிய தேர்வு முகமையால் நடத்தப்படும் யுஜிசி – நெட் தேர்வு 30 பாடங்களுக்கு ஜனவரி 15, 16 தேதிகளில் நடைபெறும் என்று கடந்த சில நாட்களுக்கு முன்பு அறிவித்து இருந்தது. அந்த நாளில் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படவிருப்பதன் காரணமாக அந்த தேதியில் தேர்வு என அறிவிக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இதனையடுத்து, பொங்கல் பண்டிகை நாட்களில் தேர்தல் நடத்துவது சரியானது அல்ல உடனடியாக தேதியை மாற்றவேண்டும் என கோரிக்கைகள் எழுந்துள்ள நிலையில், தமிழகத்தை […]
சென்னை : மெட்ரோ நிர்வாகம் தற்போது, இரண்டாம் கட்ட திட்டத்தில் ஓட்டுநர் இல்லாமல் இயக்கப்படும் மெட்ரோஇரயில்களை தயாரிப்பதற்கான ஒப்பந்தத்தை ரூ.3,657.53 கோடி மதிப்பில் BEML நிறுவனத்திடம் வழங்கியுள்ளது என அதிகாரப்பூர்வமாகவே அறிவித்துள்ளது. இது குறித்து நிர்வாகம் தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் கூறியதாவது ” சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம், இரண்டாம் கட்ட திட்டத்தில் வழித்தடம் 3 மற்றும் 5-ல் ஓட்டுநர் இல்லாமல் இயக்கப்படும் 3 இரயில் பெட்டிகளை கொண்ட 70 மெட்ரோ இரயில்களை தயாரிப்பதற்கான ஒப்பந்தம் BEML […]
கடலூர் : விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச்செயலாளர் வன்னி அரசு தனியார் செய்தி நிறுவனத்திடம் பேட்டியளிக்கையில், 2026 சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் இருந்து 25 தொகுதிகளை கேட்போம் என கூறியிருந்தார். விசிக துணை பொதுச்செயலாளரின் இந்த கருத்து குறித்து இன்று கடலூரில் சேத்தியாளர்களிடம் பேசிய அக்கட்சி தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களிடம் பேசுகையில், வன்னி அரசு பேசியது அவரது தனிப்பட்ட கருத்து. எவ்வளவு இடங்கள் வேண்டும் என்பதை நாங்கள் எங்கள் கட்சி குழுவினருடன் கலந்து ஆலோசித்து […]
சென்னை : தேர்தலின் போது வாக்குச்சாவடிகளில் உள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவாகும் காட்சிகளை இனி பொதுமக்கள் பார்வையிட முடியாதபடி, தேர்தல் விதிகளை மாற்ற அதற்கான நடவடிக்கையை மேற்கொண்டு மத்திய அரசு தேர்தல் விதிகளின் பிரிவு 93 (2) (a)வின் கீழ் தேர்தல் விதிமுறைகளில் திருத்தம் செய்துள்ளது. இந்நிலையில், இதற்கு அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள். குறிப்பாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்டோர் தங்களுடைய கண்டனங்களை தெரிவித்திருந்தார்கள். அவர்களை […]
சென்னை : தமிழக பள்ளிக்கல்வித்துறைக்கு மத்திய அரசு தரவேண்டிய நிதியை தர மறுக்கிறது என்றும், தேசிய மும்மொழி கொள்கையை ஏற்றுக்கொண்டால் தான் நிதி அளிப்போம் என மத்திய அமைச்சர் கூறியதாகவும் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார். அவர் இது குறித்து மேலும் கூறுகையில், ” தமிழக பள்ளிக்கல்வித்துறைக்கு நிலுவை இருக்கிறது. மத்திய அரசிடம் இருந்து வரக்கூடிய ரூ.2,151 கோடி தொகை நிலுவையில் இருக்கிறது. தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை சிறப்பாக செயல்படுகிறது. மத்திய அரசு குறிப்பிடும் […]
வேலூர் : தமிழக வெற்றிக் கழக கட்சித் தலைவர் விஜய், கடந்த அக்டோபர் மாதம் தனது கட்சியின் முதல் மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளார். அதனை அடுத்து, அம்பேத்கர் புத்தக வெளியிட்டு விழாவில் பேசினார். மேற்கண்ட 2 மேடை பேச்சுக்களை தவிர்த்து ஒரு சில நிகழ்வில் மட்டுமே மக்களை நேரடியாக சந்தித்துள்ளார் விஜய். இந்நிலையில் மக்களை நேரடியாக எப்போது சந்திப்பார் என்ற கேள்வி பலரது மத்தியில் எழுந்தது. விஜய் சுற்றுப்பயணம் எதுவும் செல்வாரா? விக்கிரவாண்டி மாநாடு போல, […]
சென்னை: கடலூர் மாவட்டம் கொத்தட்டையில் புதிய சுங்கச்சாவடி திறப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தும், சுங்க கட்டணத்தை குறைக்க வலியுறுத்தியும், தனியார் பேருந்து உரிமையாளர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த மறியல் போராட்டத்தை அடுத்து கடலூர் – சிதம்பரம் இடையே தனியார் பேருந்து சேவை இன்று நிறுத்தப்பட்டுள்ளது. ஆந்திராவை நோக்கி சென்ற காற்றழுத்த தாழ்வு பகுதி மீண்டும் தமிழ்நாட்டை நோக்கி திரும்புகிறது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இது தொடர்பான கூடுதல் விவரம் வெளியாகும் […]
சென்னை: தமிழ்நாடு அரசுப் பேருந்து ஓட்டுனர்கள் பணியின்போது செல்போன் பயன்படுத்தினால், 29 நாட்கள் சஸ்பெண்ட் செய்யப்படுவர் அனைத்து மண்டல அதிகாரிகளுக்கும் போக்குவரத்துத் துறை உத்தரவிட்டுள்ளது. வாகனம் ஓட்டும் பொழுது, செல்போன் பேச கூடாது, மது அருந்த கூடாது என சாலை விதிமுறைகள் நடைமுறையில் உள்ளது. அவ்வாறு செய்வதினால், சில நேரங்களில் விபத்துகளும் நடக்கின்றன. ஆனால், அரசு பேருந்து ஓட்டுனர்கள் செல்போனை பார்த்தபடியும், அதில் தீவிரமாக பேசியபடியும் வாகனத்தை இயக்குவதாக பயணிகள் புகார்கள் அளித்திருந்த நிலையில், போக்குவரத்துத் துறை […]
சென்னை: டெல்லியில் நடைபெறும் குடியரசு தின விழாவில் தமிழ்நாடு அரசின் அலங்கார ஊர்தி நிராகரிக்கப்பட்டதாக பரவும் செய்தி உண்மை இல்லை என்று தமிழ்நாடு அரசின் தகவல் சரிபார்ப்பகம் விளக்கம் அளித்துள்ளது. அதாவது, குடியரசு தின அணிவகுப்பில் அலங்கார ஊர்தி அணிவகுப்புக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட மாநிலங்களின் பட்டியலில் தமிழக அலங்கார ஊர்திக்கு அனுமதி இல்லை என்ற ஒரு செய்தி சமூக வளைத்ததில் பரவி வந்தது. இதனையடுத்து, குடியரசு தின விழா அணிவகுப்பில் இந்த ஆண்டும் தமிழ்நாட்டின் அலங்கார ஊர்தி இடம்பெறாத […]
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏக்கள், தலைமைக்கழக நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் மொத்தம் 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதனை தொடர்ந்து, மேடையில் பேசிய துணை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “2026 இல் நாம் பெறும் வெற்றி தமிழ்நாட்டுக்கான வெற்றி மட்டுமில்லை, இந்தியாவுக்கான வெற்றி. 200 இல்லை, 200க்கும் மேல் தொகுதிகளில் வெற்றி பெறுவோம்” என்றார். […]
சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் பட்டப்பகலில் ஒரு கொடூர கொலை சம்பவம் டிசம்பர் 20 அன்று அரங்கேறியது. ஒரு குற்ற வழக்கில் நீதிமன்றத்திற்கு விசாரணைக்கு ஆஜராகுவதற்கு நேரில் வந்த மாயாண்டி என்பவரை ஒரு கும்பல் சரமாரியாக வெட்டி கொலை செய்துள்ளது. இந்த சம்பவத்தை தொடர்ந்து அனைத்து நீதிமன்றங்களிலும் துப்பாக்கி ஏந்திய காவலர்களை பணியில் அமர்த்த டிஜிபி சங்கர் […]
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக செயற்குழு கூட்டம் தொடங்கியது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏக்கள், தலைமைக்கழக நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள் உட்பட 850க்கும் மேற்பட்ட செயற்குழு உறுப்பினர்கள் பங்கேற்றதாக தகவல் வெளியாகியுள்ளது. திமுக செயற்குழுவில், முதல் தீர்மானமாக அண்ணல் அம்பேத்கரை நாடாளுமன்றத்தில் அவமதித்த உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கடும் கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும், புயல் வெள்ள நிவாரணமாக ரூ.2,000 கோடி நிதி வழங்க மத்திய அரசுக்கு […]
சென்னை: வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானதை தொடர்ந்து, தூத்துக்குடி உட்பட 9 துறைமுகங்களில் நேற்று முன் தினம் 1-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது. மேலும், கடல் பகுதியில் பலத்த காற்று வீச கூடும் என்பதால் துறைமுகத்தில் கப்பல்கள் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கவும் மீன் பிடி துறைமுகத்தில் படகுகளை பாதுகாப்பாக நிறுத்தவும் அறிவுறுத்தப்பட்டது. தற்போது, வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம், வலுவிழந்ததை தொடர்ந்து, பலத்த மழை மற்றும் காற்று இல்லை […]
சென்னை : அண்மையில் புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்த சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பேசுகையில், பல்வேறு குற்ற வழக்குகளில் சிக்கியவர்களை பாஜக தான் தனது கட்சியில் சேர்த்து உள்ளது. இதனை பலமுறை நாங்கள் ஆதாரத்துடன் நிரூபித்துள்ளோம். வேண்டும் என்றால் மீண்டும் பெயர் பட்டியலுடன் வெளியிடுகிறோம். பாஜகவினர் ஆயுதம் வைத்திருந்தால் என்ன ஆயுதம் வைத்திருக்காமல் இருந்தால் என்ன? பாஜகவினர் ஆயுதம் வைத்திருப்பர் என்பது ஊரறிந்த விஷயம்” என விமர்சனம் செய்திருந்தார். இதற்கு பதில் அளித்து பேசிய பாஜக மாநில தலைவர் […]
திருவண்ணாமலை : இன்று (டிசம்பர் 21) பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் திருவண்ணாமலை சந்தைமேடு பகுதியில் ‘உழவர் பேரியக்க மாநாடு’ நடைபெற்றது. இந்த மாநாட்டில் பாஜக நிறுவனர் டாக்டர் ராம்தாஸ், அக்கட்சி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ், ஜி.கே.மணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த மாநாட்டில் பேசிய அன்புமணி ராமதாஸ், திமுக அரசு முதலாளிகளின் பக்கம் இருக்கிறது. விளைநிலங்களை அழித்து அறிவுசார் மையங்கள் அமைக்கிறார்கள். விவசாயிகளின் பிரச்சனைகளை புரிந்து கொண்ட ஒரே கட்சி பாமக தான். […]