மதுரை : மாவட்டம் புதூர் அருகே தனியார் மருத்துவமனையில் 3-வது மாடியில் இன்று காலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தீ விபத்து ஏற்பட்ட உடன் அக்கம் பக்கத்தினர் மற்றும் மருத்துவமனை தரப்பில் இருந்தும் தீயணைப்பு துறையினருக்கு தகவலை கொடுத்தனர். உடனடியாக விரைந்து வந்த தீயணைப்பு தீயணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த தீ விபத்து சம்பவத்தில் மருத்துவமனையில் இருந்தவர்கள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை எனவும், தீ விபத்து ஏற்பட்ட அந்த மாடியில் மருத்துவமனை இயங்கவில்லை எனவும் முதற்கட்டமாக […]
மெல்போர்ன் : இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி வருகிறது. இதுவரை நடந்த 3 டெஸ்ட் போட்டிகளில் 1-1 என சமநிலையில் இரு அணிகளும் உள்ளன . ஒரு போட்டி டிரா ஆனது. 4வது டெஸ்ட் போட்டி பாக்சிங் டே டெஸ்ட் போட்டியாக மெல்போர்ன் மைதானத்தில் டிசம்பர் 26ஆம் தேதி துவங்கியது. இன்று 4ஆம் நாள் ஆட்டம் நடைபெறுகிறது. முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா அணி 474 ரன்கள் குவித்தது. அதனை […]
வதோதரா : இந்திய மகளிர் கிரிக்கெட் அணி மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி0 போட்டிகள், 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடிய நிலையில், இரண்டு தொடரிலும் அசத்தலான வெற்றிபெற்று நாடு திரும்புகிறது. ஏற்கனவே, டி20 தொடரில் 2-1 என்ற கணக்கில் இந்திய கிரிக்கெட் அணி வெற்றி பெற்று 5 ஆண்டுகளுக்குப் பிறகு சொந்த மண்ணில் தொடரை கைப்பற்றி அசத்தியது. டி20 தொடரில் வெற்றிபெற்றதை தொடர்ந்து, இந்திய அணி அடுத்ததாக 3 போட்டிகள் […]
மெல்போர்ன்: இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி வருகிறது. நேற்று, 4வது டெஸ்ட் போட்டி (பாக்சிங் டே டெஸ்ட்) மெல்போர்ன் மைதானத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. நான்காவது டெஸ்டின் இரண்டாம் நாள் முடிவில் இந்தியா அணி, 5 விக்கெட் இழப்புக்கு 164 ரன்கள் எடுத்துள்ளது, ஆஸ்திரேலியாவை விட 310 ரன்கள் பின்தங்கி விளையாடுவதில் தடுமாறி வருகிறது. அதன்படி, ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இக்கட்டான சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது இந்திய […]
ஜெய்சால்மர் : இன்று ஜிஎஸ்டி கவுன்சின் 55வது ஆலோசனை கூட்டம் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மரில் நடைபெற்றது. ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தலைவரும், மத்திய நிதியமைச்சருமான நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெற்றது. இதில் மாநில நிதி அமைச்சக பிரதிநிதிகளும் கலந்து கொண்டு தங்கள் ஜிஎஸ்டி வரி பரிந்துரைகளை வழங்கினர். அதில் சில முக்கிய ஜிஎஸ்டி பரிந்துரைகள் பற்றிய விவரங்கள் தற்போது வெளியாகியுள்ளது. ஆயுள் காப்பீடு மற்றும் மருத்துவ காப்பீடுகளுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி வரி குறைப்பு பற்றிய ஆலோசனை நடைபெறும் என […]
பிரிஸ்பேன் : ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி வருகிறது. 2 போட்டிகள் நிறைவுற்ற நிலையில் 1-1 என இரு அணிகளும் சமநிலையில் உள்ள நிலையில் தற்போது நடைபெற்று வரும் 3வது டெஸ்ட் போட்டியானது டிராவை நோக்கி செல்கிறது. இந்த டெஸ்ட் போட்டி ஆரம்பிக்கும் முன்னரே பிரிஸ்பேன் மைதானத்தில் 5 நாட்கள் மழைக்கு வாய்ப்புள்ள வானிலை நிலவுகிறது என அந்நாட்டு […]
தூத்துக்குடி : தென்காசி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் கனமழை விட்டு விட்டு பெய்து வருவதால் மாவட்டங்களின் பல பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இந்த சூழலில், நெல்லை பாபநாசம், மணிமுத்தாறு அணை ஆகிய அணைகள் கனமழை காரணமாக நிரம்பியது எனவும். இதனால் தண்ணீர் திறந்துவிடப்படுவதாக முன்னதாக தகவல்கள் வெளியாகியிருந்தது. இந்த தகவலை பார்த்த மக்கள் சற்று அதிர்ச்சியுடன் உண்மையா அல்லது இது வதந்தியா? என குழப்பத்தில் இருந்தனர். இதனையடுத்து, இது வதந்தி செய்தி மக்கள் யாரும் கவலைப்படவேண்டாம் என […]
சென்னை: கடந்த சில தினங்களாக ஏற்றத்திலிருந்த தங்கம் விலை, நேற்று எந்த மற்றமும் இல்லாமல் விற்பனையான நிலையில், இன்று திடீர் சரிவைக் கண்டுள்ளது. அதன்படி, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை, இன்று கிராமுக்கு ரூ.55 குறைந்து ரூ.7,230க்கும், சவரனுக்கு ரூ.440 குறைந்து ரூ.57,840-க்கும் விற்பனையாகிறது. அதேபோல் வெள்ளி விலையும் கிராமுக்கு ரூ.3 குறைந்து, ரூ.101க்கும், கிலோ வெள்ளி ரூ.101,000-க்கும் விற்பனையாகிறது. மேலும், 24 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூ.7,887-க்கு விற்பனை ஆகிறது. இதனால் ஒரு சவரன் […]
தூத்துக்குடி : மாவட்டத்தில் வேளாண்மைப் பொறியியல் துறை மூலமாக 2024-25ம் நிதியாண்டில் “கைபேசியால் இயங்கும் தானியங்கி பம்புசெட்டு கட்டுப்படுத்தும் கருவிகள் மானியத்தில் வழங்குதல்” திட்டத்தின் கீழ் செயல்படுத்த மொத்தம் 105 எண்களுக்கு ரூ.7,000/- வீதம் ரூ.7.35 இலட்சம் மானியம் நிதி ஒதுக்கீடு வரப்பெற்றுள்ளது. விவசாயிகள் இரவு நேரங்கள் மற்றும் மழைக்காலங்களில் வயல்வெளிகளில் உள்ள பம்புசெட்டுகளை இயக்கச் செல்லும் போது பாம்புக்கடி, விஷப்பூச்சிக்கடி உள்ளிட்ட பிரச்சினைகளில் சிக்க நேரிடுகிறது. இதைத் தவிர்க்கும் வகையில், தங்களது பம்பு செட்டுகளை வீடுகளில் […]
தூத்துக்குடி : வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக, தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் விடிய விடிய கனமழை பெய்து வருகிறது. அந்த வகையில், தூத்துக்குடி மாவட்டத்திலும் மழை பெய்து வருகிறது. இதனால், இன்று (டிசம்பர் 12) பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. இன்றும் கனமழை பெய்துள்ள நிலையில், நாளை விடுமுறை அறிவிப்பு. அதன்படி, தூத்துக்குடி கனமழை காரணமாக நாளை 13.12.2024 அன்று பல்கலைக்கழக தேர்வு எழுதும் மாணவர்கள் தவிர […]
திருநெல்வேலி : மாவட்டத்தின் பல பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இதன் காரணமாக, பல இடங்களில் நீர் குளம் போல் தேங்கி மக்களின் இயல்பு வாழ்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, திருநெல்வேலி,தென்காசி , தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் அதி கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்த நிலையில், அதன்படி தற்போது மழை பெய்து வருகிறது. இந்த சூழலில், திருநெல்வேலி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் தொடர்ந்து பெய்து வரும் மழை மற்றும் வானிலை மைய எச்சரிக்கையை […]
பஞ்சாப் : அகாலிதளம் கட்சியின் மூத்த தலைவரும், பஞ்சாப் மாநில முன்னாள் முதலமைச்சருமான சுக்பீர் சிங் பாதல் தங்கள் சீக்கிய மத அடிப்படையில் மத ரீதியிலான தண்டனை தொடர்பாக பஞ்சாப் அமிர்தரசிலில் உள்ள பொற்கோவிலில் தூய்மை பணியில் ஈடுபட்டும், பாதுகாவலராகவும் பணியாற்றி வருகிறார். இன்று காலையில் பொற்கோவில் அமர்ந்திருந்த சுக்பீர் சிங் பாதலை நோக்கி ஒரு முதியவர், தான் மறைத்து வைத்து கொண்டு வந்திருந்த துப்பாக்கியால் சுட முயற்சித்தார். நல்வாய்ப்பாக இதனை கவனித்த அருகில் இருந்த நபர் […]
திருவண்ணாமலை : ஃபெஞ்சல் புயலின் தாக்கம் காரணமாக திருவண்ணாமலை மாவட்டத்தில் பல பகுதிகளில் கனமழை பெய்த காரணத்தால் வெள்ளம் ஏற்பட்டது. இதன் காரணமாக, வ.உ.சி. நகர் 11-வது தெருவில் வசித்து வந்த திரு.ராஜ்குமார் என்பவரது வீட்டின் மீது டிசம்பர் 1-ஆம் தேதி மரம் விழுந்ததை அறிந்து அவர் வீட்டின் கதவினை திறக்க முற்பட்டபோது மலையிலிருந்து பெரிய பாறை உருண்டு வந்து வீட்டின் மேல் விழுந்தது. இதன் காரணமாக, அவரது வீடு மண் மற்றும் பாறையால் மூடப்பட்டு இடிந்துள்ளது. […]
கடலூர் : ஃபெஞ்சல் புயல் ஏற்படுத்திய தாக்கம் பெரிய அளவில் மக்களின் இயல்பு வாழ்க்கையை பாதித்துள்ளது என்றே கூறலாம். ஏனென்றால், இந்த புயலின் காரணமாக புதுச்சேரி, விழுப்புரம், தர்மபுரி, கடலூர், கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களின் பல பகுதிகளில் கனமழை பெய்து சில பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. குறிப்பாக, கிருஷ்ணகிரி மாவட்டத்தின் ஊத்தங்கரை பகுதியில் இதுவரை இல்லாத அளவுக்கு 50.3 செ.மீ. மழை பெய்த காரணத்தால் அங்கு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அதைப்போல, புயல் மழையின் கோரத் தாண்டவத்தால் விழுப்புரம் மற்றும் […]
கடலூர் : தென்மேற்கு வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது ஃபெஞ்சல் புயலாக உருவாகி உள்ளது. இது நவம்பர் 30-ம் தேதி பிற்பகலில் மணிக்கு 70-80 கி.மீ வேகத்தில் மணிக்கு 90 கி.மீ வேகத்தில் சூறாவளி புயலாக, மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து வட தமிழ்நாடு-புதுச்சேரி கடற்கரையை காரைக்கால் மற்றும் மகாபலிபுரம் இடையே புதுச்சேரிக்கு அருகில் கடக்க வாய்ப்புள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவலை தெரிவித்து இருந்தது. புயல் கரையை கடப்பதன் காரணமாக […]
சென்னை : தென்மேற்கு வங்கக்கடலில் கடந்த 2 நாட்களாகமையம் கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது ஃபெஞ்சல் புயலாக உருவாகி இருக்கிறது. இன்று பிற்பகல் 2.30 மணி அளவில் புயலாக உருவானதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. நாளை புயல் கரையை கடக்கும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், புயலின் காரணமாக நாளை சென்னை மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதால் அங்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. எனவே, கனமழையை எதிர்கொள்ள அரசு முன்னெச்சரிக்கையை எடுத்து வரும் […]
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகத்தின் பல மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. அதில் குறிப்பாக சொல்லவேண்டும் என்றால் சென்னை மாவட்டத்தின் பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், நாளையும் சென்னையில் கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதால் ஆரஞ்சு அலர்ட் கொடுக்கப்பட்டுள்ள நிலையில், எந்தெந்த பகுதியில் மின்தடை ஏற்படும் என்பது பற்றிய தகவலையும், தமிழக மின்சார வாரியம் வெளியிட்டுள்ளது. அதன்படி,… மின்தடை […]
விழுப்புரம் : தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து வடதமிழக புதுவை கடலோரப்பகுதிகளில், காரைக்காலிற்கும் மகாபலிபுரத்திற்கும் இடையே 30-ஆம் தேதி காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக கரையை கடக்கக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்நிலையில், இதன் காரணமாக விழுப்புரம் மாவட்டத்தில் சில இடங்களில் மழை பெய்து வருகிறது. அது மட்டுமின்றி, நாளை (29.11.2024) விழுப்புரம் மாவட்டத்தில் ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழையும், […]
சென்னை: கடந்த வாரம் முழுக்க ஏறுமுகமாக இருந்த தங்கத்தின் விலை, இந்த வாரம் தொடர்ந்து இரண்டு நாளாக இறக்கம் கண்டது. இந்நிலையில், விலை இன்று திடீரென மீண்டும் உயரத் தொடங்கியிருப்பதால் முதலீட்டாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். அதன்படி, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.960 குறைந்து ரூ.56,640க்கு விற்பனை, கிராமுக்கு ரூ.120 குறைந்து ரூ.7,080க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், வெள்ளி விலை இன்று மாற்றம் இல்லாமல், ஒரு கிராம் வெள்ளி ரூ.98க்கும் கிலோவுக்கு ரூ.98.000க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும், […]
சென்னை : நாளை ( நவம்பர் 27.11.2024) எந்தெந்த இடங்களில் மின்தடை ஏற்படும் என்கிற விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. சென்னையில் கனமழை பெய்து வருவதால் எந்தெந்த இடங்களில் மின்தடை ஏற்படும் என்பதற்கான விவரத்தை கீழே பார்த்து குறித்துவைத்து கொள்ளுங்கள்… சென்னை வானிலை இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு புயலாக வலுபெறவுள்ள காரணத்தால் சென்னையில் 26-ஆம் தேதி முதல் 28-ஆம் தேதி வரை மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், 29-ஆம் தேதி கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு […]