நெய் தீபம் ஏற்றுவதால் கிடைக்கும் பலன்கள் மற்றும் எத்தனை விளக்கு ஏற்றலாம் என்பதை காணலாம். சென்னை :நாம் இறைவனை வழிபடும் முறைகளில் தீப வழிபாடும் ஒன்று. அதுமட்டுமல்லாமல் தீப ஒளியில் கலைமகளான சரஸ்வதி தேவியும் ,தீபத்தின் சுடரில் லட்சுமி தேவியும், தீப வெப்பத்தில் பார்வதி தேவியும் இருப்பதாக ஐதீகம். ஆகவே தீபத்தில் முப்பெரும் தேவியரும் எழுந்தருளி கடாட்சம் செய்வதாக நம்பப்படுகிறது. விளக்குகளின் எண்ணிக்கையும் அதன் பலன்களும்; 5 நெய் விளக்குகள் ஏற்றி இறைவனை வழிபட்டு வந்தால் சிறந்த […]
பொங்கல் பண்டிகை கொண்டாடுவதற்கான காரணங்களும், அதன் சிறப்புகளும், பொங்கல் வைக்க சரியான நேரம் எது என்பதை பற்றி இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை ;உழவு தொழிலையே அடிப்படையாகக் கொண்ட நம் முன்னோர்கள் உழவுக்கு உதவி செய்த ஆதித்த பகவானுக்கும், மாடுகளுக்கும் ,விவசாயத்திற்கும் நன்றி செலுத்தும் விதமாக பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்த தை மாதத்தை மகர மாதம் எனவும் கூறுவார்கள். இந்த தை மாதத்தின் முதல் நாளில் சூரியனை வழிபடுவது சிறப்பாகும். பொங்கல் பண்டிகை ஆனது […]
இந்தியாவில் நடைபெறும் மகா கும்பமேளாவின் முக்கியத்துவம் பற்றியும் அதன் வரலாற்றைப் பற்றியும் இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே நடைபெறும் மகா கும்பமேளா ஜனவரி 13 அன்று வட இந்தியாவில் அமைந்துள்ள பிரியாக்ராஜ் பகுதியில் நடைபெற உள்ளது. இந்த ஆன்மீக கொண்டாட்டத்தை காண உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பக்தர்களும், புனிதர்களும் ,யோகிகளும் கலந்து கொள்வார்கள் .கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற கும்பமேளாவில் சுமார் 24 கோடி மக்கள் கலந்து கொண்டதாக […]
வைகுண்ட ஏகாதசியின் முக்கிய நிகழ்வான பரமபத வாசல் எனும் சொர்க்கவாசல் திறப்பு அனைத்து வைணவ ஆலயங்களிலும் கோலாகலமாக திறக்கப்பட்டது. சென்னை :தமிழ்நாடு முழுவதும் அனைத்து வைணவ ஆலயங்களில் வைகுண்ட ஏகாதசியான இன்று சொர்க்கவாசல் திறக்கப்பட்டது .குறிப்பாக பூலோக வைகுண்டம் என போற்றப்படும் 108 வைணவ தலங்களில் ஒன்றான திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதன் கோவிலில் அதிகாலை 4:15க்கு பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு காலை 5:15 மணிக்கு பரமபதம் என அழைக்கப்படும் சொர்க்கவாசலில் எழுந்தருளினார். பெருமாள் ரத்தின அங்கி […]
மரகத கல்லின் சிறப்புகள் மற்றும் மரகத லிங்கம் அமைந்துள்ள இடங்களை பற்றி இந்த செய்தி குறிப்பில் காணலாம் . சென்னை :அண்டத்தில் உள்ளதெல்லாம் பிண்டத்தில் உள்ளது என்பது சித்தர்களின் வாக்கு. இந்த ஒரு வாக்கியத்திலேயே பல சாஸ்திர ரகசியங்களை ஒழித்து வைத்திருக்கிறார்கள் .ஆகாயத்தில் இருப்பவைகள் பூமியில் இருப்பவைகளோடு தொடர்பு படுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில் நவகிரகங்களை நவரத்தின கற்களோடு தொடர்பு படுத்தி இருக்கிறார்கள் நம் முன்னோர்கள். அதாவது ஒவ்வொரு கிரகங்களின் நிறங்களுக்கு ஏற்ப ரத்தினங்களின் நிறங்களை நிர்ணயித்துள்ளனர் . […]
கோலம் போடுவதில் மறைத்திருக்கும் ரகசியங்களை இந்த செய்தி குறிப்பில் காணலாம் . சென்னை :நம்முடைய தமிழர்களின் பண்பாடு ஏதேனும் ஒரு வாழ்க்கை முறை தத்துவத்தை ஒளித்து வைத்துள்ளது என்றே கூறலாம். கோலம் போடுவதில் பல நன்மைகளும் ஆச்சரியங்களும் அடங்கியுள்ளது. கோலம் போடும் முறை மற்றும் பயன்கள் : அதிகாலையில் சூரியன் வருவதற்கு முன்பே சாணம் அல்லது தண்ணீரில் மஞ்சள் கலந்து தெளித்து பிறகு பச்சரிசி மாவால் கோலம் போடுவது தான் சால சிறந்தது. கோலம் போடுவதற்கு முக்கிய […]
கடன் தீர்க்கும் மைத்ரேய முகூர்த்தம் ஜனவரி 2025-ல் வரும் தேதிகள் பற்றி இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம். சென்னை :மைத்ரேய முகூர்த்தம் ஒவ்வொரு மாதமும் இரண்டு அல்லது மூன்று முறை வரக்கூடியது. மைத்ரேய முகூர்த்தம் என்பது மேஷ லக்னமும் அஸ்வினி நட்சத்திரமும் இணையக்கூடிய நாளிலும் ,விருச்சிக லக்னம் அனுஷ நட்சத்திரமும் ஒன்றாக வரும் நாட்களிலும் வரக்கூடியது.இது மைத்ரா அல்லது மைத்ரேய முகூர்த்தம் என அழைக்க படுகிறது . ஜோதிட ரீதியாகவும், சாஸ்திர அடிப்படையிலும் மைத்ரேய முகூர்த்தம் கடன் […]
வாஸ்து சாஸ்திரம் என்றால் என்ன, இந்த ஆண்டில் வரும் தேதி ,நேரம் பற்றி இந்த ஆன்மீக செய்தி குறிப்பில் காணலாம் . சென்னை: நம் கட்டும் கட்டிடம் பஞ்சபூதங்களுக்கு உட்பட்டு கட்டுவதால் இயற்கை பல நன்மைகளை கொண்டு வந்து சேர்ப்பதாக நம்பப்படுகிறது. வாஸ்து சாஸ்திரம் பல காலங்களாக பின்பற்றப்பட்டு நடைமுறையில் உள்ள முறையாகும். குறிப்பாக அரண்மனைகள், மிராசுதாரர்களின் வீடுகள், கோவில் வீடுகள், வாஸ்து சாஸ்திர விதிகளுக்கு உட்பட்டு கட்டப்பட்டதாகும். வாஸ்து என்றால் என்ன ? வாஸ்து சாஸ்திரம் […]
திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதன் சுவாமி திருக்கோவிலில் வைகுண்ட ஏகாதசி திருவிழாவின் பகல் பத்து உற்சவம் இன்று துவங்கியுள்ளது. திருச்சி :ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் ஆண்டுதோறும் பல்வேறு விழாக்கள் நடைபெற்றாலும் வைகுண்ட ஏகாதசி மிகவும் பிரசித்தி பெற்ற திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. அதில் பகல் பத்து இரா பத்து என 21 நாட்கள் இந்த விழா சிறப்பாக நடைபெறுகின்றது. அந்த வகையில் இந்த ஆண்டு பகல் பத்தின் முதல் நாள் இன்று துவங்கியுள்ளது. உற்சவத்தின் முதல் நாளான இன்று மூலஸ்தானத்திலிருந்து […]
40 வருடங்கள் காத்திருந்து அத்திவரதரை தரிசிக்க காரணம் என்ன மூலவரின் மறைக்கப்பட்ட ரகசியங்களை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அனைத்து கோவில்களிலும் மூலவர் சிலை கருவறைக்குள் இருக்கும் ஆனால் அத்திவரதர் மூலவர் சிலையானது தெப்பக்குளத்திற்குள் இருக்கும். மேலும் திருப்பதி வெங்கடாசலபதியை தரிசிக்க பல மணி நேரம் காத்திருக்க வேண்டும் என்றால் அத்தி வரதரை தரிசிக்க 40 வருடங்கள் காத்திருக்க வேண்டும். ஸ்ரீரங்க ரங்கநாதர் மற்றும் திருப்பதி வெங்கடாசலபதி கோவில்களுக்கு முன்பு தோன்றியது காஞ்சிபுரம் வரதராஜன் கோவிலாகும் […]
சென்னை :எறும்பீஸ்வரர் ஆலயம் அமைந்துள்ள இடம் மற்றும் அதன் சிறப்புகளைப் பற்றி இந்த செய்தி குறிப்பில் காணலாம். திருத்தலம் அமைந்துள்ள இடம்; திருச்சியில் இருந்து 13 கிலோமீட்டர் தொலைவில் திருவெறும்பூர் எறும்பீஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. இங்கு காலை 6மணியிலிருந்து 12 மணி வரையிலும் மாலை 4 மணியிலிருந்து 8:30 மணி வரையிலும் நடை திறக்கப்பட்டிருக்கும். மிகச்சிறிய உயிரினங்களான எறும்புகள் வணங்குவதற்காக மண்புற்று வடிவில் தன்னை சிவபெருமான் மாற்றிக்கொண்ட சிறப்புமிக்க ஸ்தலமாக விளங்குகின்றது . முற்றிலும் கற்களால் ஆன […]
கிறிஸ்மஸ் தாத்தா உருவான வரலாறு, கிறிஸ்மஸ் ட்ரீ வைக்க காரணம் மற்றும் வீட்டில் ஸ்டார் வைப்பது எதற்காக என்றும் இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை: ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 25 தேதி கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படுகிறது .இதனை வரவேற்கும் விதமாக டிசம்பர் 1ம் தேதியே கிறிஸ்துமஸ் கொண்டாடும் வீடுகளில் ஸ்டார் வைப்பது மற்றும் கிறிஸ்துமஸ் ட்ரீ வைப்பது வழக்கமாக கொண்டிருக்கின்றனர் . மாட்டுத் தொழுவத்தில் தான் இயேசு கிறிஸ்து பிறந்தார் என வரலாறு கூறுகின்றது […]
தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க உகந்த நாளாக கூறப்படுகிறது . நம்முடன் வாழ்ந்து மறைந்த நம் முன்னோர்களுக்கு இந்த நாட்களில் தர்ப்பணம் ,சிராத்தம், திதி கொடுப்பது சிறப்பு என சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது. குறிப்பாக வருடத்தில் மூன்று அமாவாசை மிகவும் சிறப்பான நாள் ஆகும் .ஆடி அமாவாசை, புரட்டாசி அமாவாசை ,தை அமாவாசை இந்த அமாவாசை நாட்களில் ஆவது […]
உலகம் முழுவதும் கொண்டாடப்படும் தைப்பூசத் திருவிழா இந்த ஆண்டு கொண்டாடப்படும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை காணலாம். சென்னை :முருகா.. என்ற திருமந்திரம் சகல வினைகளையும் போக்கும்.. ஈசனின் ஞானக்கண்ணில் இருந்து வெளிப்பட்ட சுடற்பொறியில் இருந்து தோன்றியவர்தான் முருகப்பெருமான். முருகன் தோன்றிய நாள் வைகாசி விசாகம் என்றாலும் அன்னையிடம் வேல் வாங்கிய நாள் தைப்பூசம் ஆகும். இது மிகவும் பிரசித்தி பெற்ற விழாவாக உள்ளது .தைப்பூசத்தன்று செய்யப்படும் ஒவ்வொரு செயலும் வெற்றியடையும் எனவும் நம்பப்படுகிறது. தைப்பூச திருவிழா […]
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன அதன் பலன்கள் மற்றும் சிறப்புகளை இந்த செய்து குறிப்பில் காணலாம் . சென்னை :சிவபெருமானுக்கு நடத்தப்படும் மிக உயர்வான ஆறு வகை அபிஷேகங்களில் ஒன்றுதான் இந்த ஆருத்ரா தரிசனம். ஆருத்ரா என்பது சமஸ்கிருத சொல்லாகும் .இதற்கு தமிழில் திருவாதிரை என்று பொருள் .மார்கழி மாததில் வரும் திருவாதிரை நட்சத்திரமும் பௌர்ணமியும் இணைந்து வரும் நாளில் ஆருத்ரா தரிசனம் சிவ ஆலயங்களில் கொண்டாடப்படுகிறது. குறிப்பாக சிவபெருமானின் பஞ்ச சபைகளான திருவாலங்காடு ரத்தின சபை, […]
வைகுண்ட ஏகாதசி விரதத்தின் சிறப்புகள் மற்றும் இந்த ஆண்டு வைகுண்ட ஏகாதசி எப்பொழுது வருகிறது என்பதை பற்றி பார்க்கலாம். சென்னை;’ காயத்ரிக்கு மிஞ்சிய மந்திரம் இல்லை’ ‘தாய்க்கு சமமான தெய்வமும் இல்லை ”காசிக்கு நிகரான தீர்த்தமும் இல்லை ”ஏகாதசிக்கு சமமான விரதமும் இல்லை’ என்பது பெரியோர்களின் வாக்கு . ஏகாதசி விரதம் மற்ற விரதங்களை காட்டிலும் மிகச் சிறந்த விரதம் ஆகும். உண்ணா நோன்பிற்கு முக்கியத்துவம் கொடுத்து அனுஷ்டிக்கப்படும் விரதமாக கூர்ம புராணம் குறிப்பிடுகின்றது. ஏகாதசி அன்று […]
முருகப்பெருமானுக்கு மாலை அணிந்து விரதம் இருக்கும் சரியான முறையை இந்த ஆன்மீக செய்தி குறிப்பில் காணலாம். சென்னை ;முருகப்பெருமானின் அருளை பெற எத்தனையோ வழிமுறைகள் உள்ளது .சுவாமி ஐயப்பனை போல் முருகனுக்கும் மாலை அணிந்து விரதம் மேற்கொள்ளும் வழக்கம் உள்ளது. தைப்பூசம், பங்குனி உத்திரம் ,மகாகந்த சஷ்டி என பல தினங்களிலும் மாலை அணிந்து விரதம் மேற்கொள்கின்றனர் . அதிலும் குறிப்பாக வருகின்ற பிப்ரவரி 11, 2025 அன்று தைப்பூசதத்தையொட்டி முருக பக்தர்கள் பலரும் மாலை அணிந்து […]
மார்கழி மாதத்தின் சிறப்புகள் மற்றும் வழிபாட்டு முறைகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை ;மார்கழி மாதத்தை தனுர் மாதம் என்றும் கூறுவார்கள் .சூரிய பகவான் வியாழ பகவான் வீட்டில் சஞ்சரிக்கும் மாதம் ஆகும் .மார்கழி மாதம் தேவர்களுக்கு பிரம்ம முகூர்த்த காலமாக சொல்லப்படுகிறது. கிருஷ்ண பரமார்த்தா அர்ஜுனனை பார்த்து மாதங்களில் நான் மார்கழியாக உள்ளேன் எனக் கூறியுள்ளார். இந்த மாதத்தில் அதிகாலையில் எழுந்து இறை வழிபாட்டை மேற்கொண்டால் ஒரு வருடம் இறைவழிபாடு செய்ததற்கு சமமாக சொல்லப்படுகிறது. […]
திருவண்ணாமலை : தமிழகத்தின் தென் கைலாயம் எனப் போற்றப்படும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை தீபத் திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. இதற்காக கடந்த டிசம்பர் நான்காம் தேதி துர்க்கை அம்மன் உற்சவத்துடன் கொடி ஏற்றப்பட்டு தீபத் திருவிழா துவங்கியது. அதனைத் தொடர்ந்து, தினமும் அண்ணாமலையார் கோயிலில் பல்வேறு பூஜைகள் நடைபெற்று வந்தன. நேற்று (டிசம்பர் 12) மகாதீபம் ஏற்ற, கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் 2668 அடி உயரம் கொண்ட தீப மலை மீது […]
கார்த்திகை தீபத்தின் சிறப்பே திருவண்ணாமலை மலை மீது கொப்பரையில் ஏற்றப்படும் மகா தீபம் தான் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். திருவண்ணாமலை ;மனித பிறப்பெடுத்த ஒவ்வொருவரும் தான் வாழ்நாளில் ஒருமுறையாவது கார்த்திகை மகா தீபத்தை பார்த்தால் மோட்சம் கிடைக்கும் என்றும் மற்றொரு பிறவி இருக்காது என்றும் நம்பப்படுகிறது. திருவண்ணாமலையின் சிறப்பு என்னவென்றால் மலையை சுற்றி வரும்போது ஒவ்வொரு இடங்களிலும் ஒவ்வொரு கோணங்களிலும் ஏகன் முதல் அனேகன் வரை ஐந்து விதமான தரிசனங்கள் கிடைக்கும். ஏகன் […]