டெல்லி: அமித் ஷா பேசியதற்கு நாடாளுமன்றத்தில் எதிர்ப்பு எழுந்த நிலையில், அம்பேத்கரை மத்திய அரசு முழுமையாக மதிக்கிறது என்று கூறி, பிரதமர் மோடி விளக்கம் அளித்துள்ளார். நேற்றைய தினம் நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சர் அமித்ஷா, அம்பேத்கர் பெயர் இப்போது ஒரு பேஷன் ஆகிவிட்டது. அவர் பெயருக்கு பதில் கடவுளின் பெயரை சொல்லி இருந்தால் ஏழு ஜென்மம் சொர்க்கம் கிடைத்திருக்கும் என்று பேசியது, சர்ச்சையை கிளப்பியது. இப்படி இருக்கையில், ‘காங்கிரஸ் கட்சி தான் பி.ஆர். அம்பேத்கரை அவமதித்ததாக’ பிரதமர் […]
சென்னை : ஃபெஞ்சல் புயலின் தாக்கத்தால், திருவண்ணாமலை தீப மலை அடிவார பகுதிகளில் நேற்று முன் தினம் ஏற்பட்ட நிலச்சரிவில், கவுதம், இனியா, மகா, வினோதினி, ரம்யா என 4 குழந்தைகள் மற்றும் ராஜ்குமார்-மீனா தம்பதி என மொத்தம் 7 பேர் உயிரிழந்தனர். தற்பொழுது, மண்சரிவில் சிக்கிய ஒவ்வொருவரின் உடல்களாக மீட்கப்பட்டு வரும் நிலையில் இதுவரை 5 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மீதமுள்ள இருவரின் உடல்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றனர். ஃபெஞ்சல் புயல் […]
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த மாதம் 31-ஆம் தேதி குடியரசு தலைவர் உரையுடன் தொடங்கிய நிலையில் இன்றுடன் நிறைவு பெறுகிறது. மத்திய பட்ஜெட் கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவடையும் நிலையில், அயோத்தி ராமர் கோவில் பற்றிய விவாதத்தை மத்திய அரசு நடத்த முடிவு செய்தது. அதன்படி, நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் கடைசி நாளான இன்று பல்வேறு விவாதங்கள், வெளிநடப்புகள் என அரங்கேறியது. இந்த நிலையில், ராமர் கோவில் திறப்பு தொடர்பான தீர்மானத்தின் மீது பிரதமர் நரேந்திர மோடி மக்களவையில் […]
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 31ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. குடியரசு தலைவர் திரெளபதி முர்மு உரையுடன் அன்று கூட்டத்தொடர் தொடங்கியது. இதன்பின் மறுநாள் மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இதனைத்தொடர்ந்து மக்களவை, மாநிலங்களவை என இரு அவைகள் நடைபெற்று வருகிறது. அதில் பல்வேறு மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில், இன்று மக்களவையில் குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது பிரதமர் மோடி […]
பொதுத்தேர்வுகளில் முறைகேட்டில் ஈடுபடுபவர்களுக்கு சிறை தண்டனை, அபராதம் விதிக்கும் சட்ட மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. பொதுத் தேர்வுகள் முறைகேட்டை தடுப்பதற்காக சட்ட மசோதா 2024ஐ பணியாளர் மற்றும் பயிற்சித் துறை இணையமைச்சர் ஜிதேந்திர சிங்கால் மக்களவையில் தாக்கல் செய்தார். இந்த மசோதாவில் முறைகேடுகளுக்கு எதிராக கடுமையான விதிகள் உள்ளன. அதன்படி, தேர்வில் மோசடி செய்வபர்களுக்கு 10 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.1 கோடி வரை அபராதம் விதிக்க சட்டம் வழிவகுக்கிறது. மசோதாவை தாக்கல் செய்தபின் […]
நாடாளுமன்ற மக்களவையில் குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவித்து பிரதமர் மோடி உரையாற்ற உள்ளார். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த மாதம் 31-ம் தேதி குடியரசு தலைவர் திரௌபதி முர்மு உரையுடன் தொடங்கியது. இதையடுத்து மத்திய அரசின் பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். நாடாளுமன்ற மக்களவை தேர்தல் விரைவில் நடைபெற உள்ளதால், இது முழுமையான பட்ஜெட்டாக இல்லாமல் இடைக்கால பட்ஜெட்டாக தாக்கல் செய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து, பட்ஜெட் கூட்டத்தொடர் மக்களவை மற்றும் மாநிலங்களவையில் நடைபெற்று வருகிறது. […]
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் மக்களவையை தொடர்ந்து மாநிலங்களவையும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு. கடந்த 7ம் தேதி தொடங்கிய நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் டிச.29ம் தேதி வரை நடைபெற இருந்த நிலையில், மக்களவையை தொடர்ந்து மாநிலங்களவை கூட்டத்தொடரும் முன்கூட்டியே தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. ராஜ்யசபா கால அட்டவணைக்கு ஏழு நாட்களுக்கு முன்னதாக ஒத்திவைக்கப்பட்டது. புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர், மாநிலங்களவைத் தலைவராகப் பதவியேற்ற முதல் முழு அமர்வு இதுவாகும். ஜக்தீப் தன்கர் கூறுகையில், கிறிஸ்மஸ், பொங்கல், […]
குருவிக்காரர் சமுதாயத்துக்கு பழங்குடி அந்தஸ்து அளிக்கும் மசோதா மக்களவையில் நிறைவேறியது. குருவிக்காரர் சமுதாயத்துக்கு பழங்குடி அந்தஸ்து வழங்கும் மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. அரசியல் வித்தியாசங்களை கடந்து பல்வேறு கட்சிகளின் உறுப்பினர்கள் இந்த மசோதாவுக்கு ஆதரவு அளித்துள்ளனர். மக்களவை ஒப்புதலை தொடர்ந்து மாநிலங்களவை பரிசீலனைக்கு அனுப்பப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலங்களவையிலும் மசோதா ஒப்புதல் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன்பிறகு குடியரசு தலைவர் ஒப்புதல் பெற்று 2023ம் ஆண்டு இந்த மசோதா சட்டமாகி அமலுக்கு வந்து, தமிழகத்தில் குருவிக்காரர் சமுதாயத்துக்கு […]
இந்தியாவில் 5G சேவைகள் தொடங்கப்பட்ட 50 நகரங்களின் பட்டியலை பகிர்ந்த மத்திய அரசாங்கம். அதன்படி, இந்தியாவில் 14 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில் உள்ள 50 நகரங்களில் 5ஜி சேவைகள் தொடங்கப்பட்டுள்ளதாக இன்று மக்களவையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. 5ஜி சேவை தொடங்கப்பட்டுள்ள 50 நகரங்களில் 33 நகரங்கள் குஜராத்தில் உள்ளன. இந்த பட்டியலில் மகாராஷ்டிராவில் இருந்து 3 நகரங்களும், மேற்கு வங்கம் மற்றும் உத்தரபிரதேசத்தில் இருந்து தலா 2 நகரங்களும் அடங்கும். மேலும், டெல்லி, தமிழ்நாட்டில் சென்னை, கர்நாடகா, […]
தமிழ்நாடு ஆளுநர் ஆர்என் ரவியின் செயல்பாடுகள் குறித்து விவாதிக்க கோரி மக்களவையில் நோட்டீஸ். தமிழ்நாட்டுக்கு ஆளுநராக உள்ள ஆர்.என்.ரவி செயல்பாடுகள் குறித்து மக்களவையில் விவாதிக்க காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் ஒத்திவைப்பு தீர்மானம் நோட்டீஸ் கொடுத்துள்ளார். தமிழ்நாடு அரசு நிறைவேற்றி அனுப்பிய 22க்கும் மேற்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் தராமல் தமிழக ஆளுநர் நிலுவையில் வைத்திருப்பதாக குற்றசாட்டியுள்ளார். அதன்படி, நீட் விலக்கு, ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் உள்ளிட்ட 22 மசோதாக்களுக்கு ஒப்புதல் தரவில்லை என தனது நோட்டீஸில் […]
நாடாளுமன்ற மக்களவையில் மறைந்த சமாஜ்வாதி கட்சி தலைவர் முலாயம்சிங் யாதவ்-க்கு மவுன அஞ்சலி. டெல்லியில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. குளிர்கால கூட்டத்தொடர் டிச.29ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த நிலையில், முதல் நாளான இன்று தொடங்கிய நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மாஜ்வாதி தலைவர் முலாயம்சிங் யாதவ் உள்ளிட்ட மறைந்த உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவித்து மக்களவை 12 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இன்று தொடங்கிய நாடாளுமன்ற மக்களவையில் மறைந்த சமாஜ்வாதி கட்சி தலைவர் முலாயம்சிங் […]
தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களின் கடும் எதிர்ப்பையும் மீறி மின்சார சட்டத்திருத்த மசோதா தாக்கல். மின்சார சட்டத்திருத்த மசோதா நாடாளுமன்றம் மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு இடையே மின்சார சட்டத்திருத்த மசோதாவை மக்களவையில் மின்துறை அமைச்சர் ஆர்.கே.சிங் தாக்கல் செய்தார். மின் கட்டணங்களை ஒழுங்குமுறை ஆணையங்களே மாற்றியமைக்க புதிய சட்டத்தில் கூடுதல் அதிகாரம் என கூறப்படுகிறது. மின் விநியோகத்தை தனியாருக்கு விடுவது, மின்சார ஒழுங்குமுறை ஆணையங்களுக்கு கூடுதல் அதிகாரம் வழங்க சட்ட திருத்த மசோதா தாக்கல் […]
அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர் என மக்களவையில் கனிமொழி எம்பி பேச்சு. நாட்டில் பல்வேறு பிரச்னைகள் தொடர்பாக விவாதம் நடத்தக்கோரி எதிர்க்கட்சிகள் அவையை முடக்கி வரும் நிலையில், விலைவாசி உயர்வு குறித்து இன்று மக்களவையில் விவாதம் நடைபெற்று வருகிறது. அப்போது, விலைவாசி உயர்வு குறித்த விவாதத்தில் பேசிய கனிமொழி எம்பி, உணவுப்பொருட்களின் கடுமையான விலை உயர்வால் குடும்ப பட்ஜெட் பாதிக்கப்பட்டுள்ளது. பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலைகள் கடுமையாக உயர்ந்துள்ளன. பாஜக ஆட்சியில் […]
எதிர்க்கட்சிகளின் அமளி காரணமாக மக்களவை, மாநிலங்களவை ஒத்திவைப்பு. எதிர்க்கட்சிகளின் அமளியால் மக்களவை மற்றும் மதியம் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டன. நாடாளுமன்ற மக்களவையில் விலைவாசி உயர்வு குறித்து விவாதம் நடைபெற இருக்கும் நிலையில், எதிர்க்கட்சிகளின் அமளி காரணமாக மக்களவையும், மாநிலங்களவையும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இரு தினங்கள் விடுமுறை என்பதால் இன்று காலை 11 மணிக்கு நாடாளுமன்ற இரு அவைகளும் கூடியது. இந்த சமயத்தில் எதிர்க்கட்சிகள் தங்களின் எதிர்ப்புகளை வெளிப்படுத்தினர். மாநிலங்களவையில் முழக்கங்களை எழுப்பி அமளியில் ஈடுபட்டனர். அவை தலைவர் […]
மாநிலங்களவையில் அமளியில் ஈடுபட்ட 19 எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்படுவது இதுவே முதல்முறை. டெல்லி: நாடாளுமன்ற மாநிலங்களவையில் விலைவாசி உயர்வு குறித்து விவாதம் நடத்தக்கோரி அமளியில் ஈடுபட்ட 19 எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனர். நேற்று மக்களவையிலிருந்து மாணிக்கம் தாகூர், ஜோதிமணி உள்பட 4 காங்கிரஸ் எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்து சபாநாயகர் ஓம் பிரகாஷ் பிர்லா அறிவித்த நிலையில், இன்று மாநிலங்களவையில் 19 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். பணவீக்கம் தொடர்பாக அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், […]
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ரவீந்திரநாத் அதிமுக எம்பியாகவே தொடர்கிறார் என தகவல். ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் அதிமுக எம்பி இல்லை என்று மக்களவை சபாநாயகருக்கு அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சமீபத்தில் கடிதம் எழுதியிருந்தார். அதில், ரவீந்திரநாத் அதிமுக எம்பி இல்லை, கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதால் ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத்தை அதிமுக எம்பியாக கருதக்கூடாது என்று மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு கடிதம் அனுப்பியிருந்தார். அதிமுகவில் இருந்து தன்னை நீக்கியது செல்லாது என ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத்தும் […]
அதிமுகவுக்கு ஒரே ஒரு எம்பி உள்ள நிலையில், மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு எடப்பாடி பழனிசாமி கடிதம். ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் அதிமுக எம்பி இல்லை என்று மக்களவை சபாநாயகருக்கு அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், ரவீந்திரநாத் அதிமுக எம்பி இல்லை, கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதால் ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத்தை அதிமுக எம்பியாக கருதக்கூடாது என அதிமுகவுக்கு ஒரே ஒரு எம்பி உள்ள நிலையில், மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு எடப்பாடி […]
தமிழகத்தில் உள்ள வங்கிக் கிளைகளில் தமிழிலேயே பணப் பரிவர்த்தனை செய்ய ஏற்பாடு என நிதியமைச்சர் விளக்கம். தமிழகத்தில் செயல்படும் அனைத்து வங்கி கிளைகளிலும் தமிழில் பரிவர்த்தனைகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். மக்களவையில் திமுக உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்து பேசிய நிதியமைச்சர், தமிழகத்தில் உள்ள வங்கிக் கிளைகள், ஏடிஎம்களில் தமிழிலேயே பணப்பரிவர்த்தனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மொபைல் பேங்கிங், இன்டர்நெட் பேங்கிங் ஆகியவற்றிலும் தமிழிலேயே பணப்பரிவர்த்தனை செய்ய […]
நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைப்பு. டெல்லி நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு நாளைக்கு பதில் முன்கூட்டியே இன்றே முடித்துக்கொள்ளப்பட்டது. பட்ஜெட் கூட்டத்தொடரின் அனைத்து அலுவலகங்களும் ஏற்கனவே முடிந்ததால் இன்றுடன் முடிவு பெற்றது. மேலும், மக்களவை மற்றும் மாநிலங்களவை மறு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுவதாக மக்களவை சபாநாயகர் ஓம்பிர்லா அறிவித்தார். இதனிடையே, பட்ஜெட் கூட்டத்தொடா் கடந்த ஜனவரி 31ம் தொடங்கி, பிப்.1ம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பின்னா் கூட்டத்தொடரின் முதல் […]
உக்ரைனில் மருத்துவ படிப்பை பாதியில் விட்டு திரும்பிய மாணவர்கள் பற்றி மக்களவையில் அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கம். உக்ரைனில் இருந்து நாடு திரும்பிய மருத்துவ மாணவர்கள் வெளிநாடுகளில் படிப்பை நிறைவு செய்ய பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். இன்று நாடாளுமன்ற மக்களவையில் பேசிய வெளியுறவுத்துறை அமைச்சர், இந்தியா திரும்பிய மருத்துவ மாணவர்களுக்கு உக்ரைன் அரசு சிறப்பு சலுகை அளித்துள்ளது. மருத்துவக் கல்வியை முடிக்க ஓராண்டு தளர்வு வழங்கியது உக்ரைன் அரசு. உக்ரைனில் இருந்து […]