அந்த பணத்துக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை – நயினார் நாகேந்திரன்

Nayanar Nagendran

Nainar Nagendran: தாம்பரம் ரயில் நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்ட பணத்துக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை என நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார். மக்களவை தேர்தல் காரணமாக கடந்த 6ம் தேதி இந்த தாம்பரம் ரயில் நிலையத்தில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை நடத்தினர். அப்போது சதிஷ், நவீன், பெருமாள் ஆகிய மூன்று நபர்களிடம் இருந்து சுமார் ரூ.4 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டு, அவர்களும் கைது செய்யப்பட்டனர். இதன்பின் கைதானவர்களிடம் விசாரணை மேற்கொண்டதில் பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனின் … Read more

காங்கிரஸ் கோட்டையில் களமிறங்குவாரா ராகுல் காந்தி.? மௌனம் காக்கும் தலைமை…

Rahul Gandhi - Mallikarjun Kharge

Congress : உத்திர பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியின் கோட்டையாக உள்ள அமேதி மற்றும் ரேபரேலி தொகுதிகளில் இன்னும் வேட்பாளர்கள் அறிவிக்கப்படவில்லை. நாடாளுமன்ற தேர்தல் கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி துவங்கி நடைபெற்று வருகிறது.  வரும் ஏப்ரல் 26ஆம் தேதி இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெற உள்ளது. இப்படியாக ஜூன் 1 வரையில் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. இந்த 7 கட்ட தேர்தலிலும் உத்திர பிரதேச மாநிலத்தில் உள்ள 80 தொகுதிகளுக்குமான தேர்தல் நடைபெறுகிறது. தொகுதி பங்கீடு … Read more

22 பேரிடம் இருந்து 16 லட்சம் கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்படும்.! இது ராகுலின் கியாரண்டி.!

Congress MP Rahul Gandhi - PM Modi

Rahul Gandhi : மோடிக்கு நெருக்கமான 22 பேரிடம் இருந்து 16 லட்சம் கோடி ரூபாய் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும் வசூல் செய்யப்படும் என ராகுல் காந்தி கூறியுள்ளார். நாடு முழுவதும் மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வரும் நிலையில், கடந்த வார வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 19) முதற்கட்ட தேர்தல் நடைபெற்று முடிந்தது. இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு இந்த வார வெள்ளிக்கிழமை ஏப்ரல் 26இல் நடைபெற உள்ளது. அடுத்தடுத்த வாரங்களில் தேர்தல் நடைபெற உள்ளதால், தேசிய … Read more

கடும் வெயில் தாக்கம்… மேடையில் மயங்கி விழுந்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரி.!  

Union minister Nitin Gadkari Fell down in Election Campaign

Nitin Gadkari : தேர்தல் பிரசாத்தின் போது மத்திய அமைச்சர் நிதின் கட்கரி மயங்கி விழுந்தார். மகாராஷ்டிரா மாநிலத்தில், நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தீவிரமாக ஈடுப்பட்டு வந்தார். புசாத் நகரில் நடந்த பேரணியின் கலந்து கொண்டு பிரச்சாரம் செய்து வந்த போது கடும் வெயிலின் தாக்கம் காரணமாக, மேடையில் மயங்கி விழுந்தார். மயங்கி விழுந்த நிதின் கட்கரிக்கு உடனடியாக மருத்துவ முதலுதவி அளித்த பின்னர், பின்னர் நலமுடன் தனது பிரச்சார பணிகளை … Read more

ரூ.16 லட்சம் கோடியில் என்னல்லாம் செய்திருக்க முடியும்.? ராகுலின் மெகா லிஸ்ட்… 

Rahul Gandhi - PM Modi

Rahul Gandhi : பாஜக அரசு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு தள்ளுபடி செய்த கடன் பற்றி ராகுல் காந்தி தனது டிவிட்டர் பக்கத்தில் விமர்சனம் செய்துள்ளார். கடந்த 2014ஆம் ஆண்டு முதல் 2024 வரையில் பாஜக ஆட்சியில் இதுவரை கார்ப்பரேட் நிறுவனங்களின் சுமார் 16 லட்சம் கோடி ரூபாய் கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாகவும், ஆனால் இதுவரை விவசாய கடன்களை பாஜக அரசு தள்ளுபடி செய்யப்படவில்லை என்றும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பாஜக மீது தொடர்ந்து கடும் விமர்சனங்களை முன்வைத்து … Read more

கொத்துக் கொத்தாக வாக்காளர்கள் பெயர் நீக்கம்… தமிழிசை சௌந்தரராஜன் வருத்தம்!

Tamilisai Soundararajan

Election2024: பல லட்சம் வாக்காளர்களின் வாக்குரிமை மறுக்கப்பட்டிருப்பது வருத்தம் அளிக்கிறது என்று தமிழிசை சௌந்தரராஜன் கூறியுள்ளார். நாடாளுமன்ற மக்களவை தேர்தலின் முதல் கட்டம் கடந்த 19ம் தேதி முடிவடைந்த நிலையில், இரண்டாம் கட்ட தேர்தல் நாளை மறுநாள் நடைபெற உள்ளது. இந்த சூழலில் வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாததால் வாக்களிக்க முடியவில்லை என பலர் வேதனை தெரிவித்து வருகின்றனர். பலவேறு இடங்களில் வாக்காளர் அடையாள அட்டை இருந்தும், பட்டியலில் பெயர் இல்லை என புகார் எழுந்தது. இதனால் … Read more

நாட்டுக்காக தாலியை பறிகொடுத்தவர் தனது தாய்..பிரதமருக்கு பிரியங்கா காந்தி காட்டமான பதில்.!

priyanka gandhi modi

Priyanka Gandhi: காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் உங்கள் தாலியை திருடிவிடும் என மோடி விமர்சித்த நிலையில், காங்கிரஸ் கட்சி பொது செயலாளர் பிரியங்கா காந்தி காட்டமாக பதில் கூறியுள்ளது. கேரளா, கர்நாடகா, உத்தர பிரதேசம் உள்ளிட்ட 13 மாநிலங்களில் 89 தொகுதிகளுக்கு நாளை மறுநாள் (ஏப்ரல் 26ஆம் தேதி) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் இன்று மாலையுடன் முடிவடைகிறது. இதனிடையே வேட்பாளர்கள் புயலாய் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் சமீபத்திய பிரச்சாரத்தில் … Read more

பிரதமர் மோடி மீது டெல்லி காவல் நிலையத்தில் புகார்!

pm modi

PM Modi : பிரச்சாரத்தின் போது வெறுப்பூட்டும் வகையில் பிரதமர் மோடி பேசியதாக கூறி அவர்  மீது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் பிருந்தா காரத் புகார் அளித்துள்ளார். கடந்த ஏப்ரல் மாதம் 19-ஆம் தேதி ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள 25 மக்களவை தொகுதிகளில் 13 தொகுதிகளுக்கு முதற்கட்ட தேர்தல் வாக்குப்பதிவு நடந்து முடிந்தது. அதனை தொடர்ந்து மீதமுள்ள 12 தொகுதிகளுக்கும் வரும் ஏப்ரல் 26-ம் தேதி தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறவிருக்கிறது. இதன் காரணமாக பாஜக … Read more

யார் கட்டுப்பாட்டில் உள்ளது இந்திய எல்லைகள்.? அமித்ஷா பேச்சால் குழப்பம்.!

Union minister Amit shah

West Bengal : மேற்கு வங்கத்தில் உள்ள நாட்டின் எல்லை வழியாக பலர் ஊடுருவுவதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா குற்றம்சாட்டியுள்ளர். மக்களவை தேர்தலின் 7 கட்டங்களிலும் மேற்கு வங்கத்தில் தேர்தல் நடைபெறுகிறது. மேற்கு வங்கத்தில் உள்ள 42 மக்களவை தொகுதிகளுக்கும் 7 கட்டங்களாக அடுத்தடுத்த வாரங்களில் தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் மாநிலம் முழுவதும் தேர்தல் பிரச்சார வேலைகளில் அரசியல் தலைவர்கள் வெகு தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்த தேர்தலில் மாநிலத்தில் ஆளும், I.N.D.I.A கூட்டணியில் … Read more

உண்மையை சொன்னேன்… பயத்தில் மூழ்கிய I.N.D.I.A கூட்டணி.! – பிரதமர் மோடி.

PM Modi in Rajasthan Election Campaign

PM Modi : உண்மையை சொன்னதால், I.N.D.I.A கூட்டணி பயத்தில் மூழ்கியுள்ளது என பிரதமர் மோடி ராஜஸ்தான் பிரச்சார கூட்டத்தில் பேசியுள்ளார். ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள 25 மக்களவை தொகுதிகளில் 13 தொகுதிகளுக்கு கடந்த ஏப்ரல் 19 முதற்கட்ட தேர்தல் வாக்குப்பதிவு அன்று தேர்தல் முடிந்தது. அதனை தொடர்ந்து மீதமுள்ள 12 தொகுதிகளுக்கும் வரும் ஏப்ரல் 26ஆம் தேதி தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. பாஜக – காங்கிரஸ் நேரடியாக களமிறங்கும் ராஜஸ்தானில் தேர்தல் பிரச்சாரங்கள் வெகு … Read more