சென்னை : தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, திமுக அரசு நடத்தும் தொகுதி மறுசீரமைப்பு கூட்டத்தை “ஒரு நாடகம்” என்று விமர்சித்து, அதற்கு எதிராக கறுப்புக்கொடி போராட்டத்தை நடத்தினார். தமிழகத்தில் கொலைகள், ஊழலை மறைக்கவே மறுசீரமைப்பு எனும் மெகா நாடகம் என்ற பதாகையை ஏந்தி சென்னை, பனையூரில் உள்ள தனது இல்லத்தின் வெளியே அண்ணாமலை போராட்டம் நடத்தியுள்ளார். மேலும், தமிழிசையும் தனது இல்லத்தின் முன் போராட்டம் நடத்தினார். இந்நிலையில், வீட்டில் இருந்தபடி கருப்புச்சட்டை அணிந்து கருப்புக் கொடி […]
கடலூர் : அரசு நிலங்களை கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுப்பட்ட விவசாயிகள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரை கடலூர் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கடலூர் மாவட்டத்தில், மலையடி குப்பம், பெத்தான் குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அரசு நிலங்களில் விவசாயிகள் முந்திரி காடுகளை பராமரித்து விவசாயம் செய்து வருகின்றனர். இந்த நிலங்கள் அரசுக்கு சொந்தமானவை என்பதால் அங்குள்ள முந்திரி காடுகளை அழித்து நிலம் கையகப்படுத்தும் முயற்சியில் அரசு அதிகாரிகள் ஈடுப்பட்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி […]
சென்னை : டாஸ்மாக் டெண்டர்களில் சுமார் ரூ.1000 கோடி முறைகேடு நடைபெற்றுள்ளதாக கூறப்பட்ட நிலையில் அதற்கு பொறுப்பேற்று அமைச்சர் செந்தில் பாலாஜி பதவி விலக வேண்டும் என கண்டனங்கள் எழுந்து கொண்டு இருக்கிறது. பாஜகவை சேர்ந்தவர்கள் ஆர்ப்பாட்டமும் நடத்தி வருகிறார்கள். இந்த விவகாரம் பேசுபொருளாக மாறியுள்ள நிலையில் இன்று சட்டப்பேரவையில் இது குறித்து வானதி சீனிவாசன் கேள்வி எழுப்பியதற்கு அமைச்சர் செந்தில் பாலாஜி பதில் அளித்தார். இன்று சட்டப்பேரவை கூட்டத்தொடரின் போது தமிழக அரசு வாங்கும் கடன்களை மூலதனங்களில் […]
சென்னை : தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபடுவதற்கு எதிராக தமிழ்நாடு அரசு கடுமையான நிலைப்பாட்டை எடுத்துள்ளது. குறிப்பாக, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்கள் மார்ச் இன்று ஒரு நாள் வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவித்திருந்த நிலையில், இதற்கு பதிலடியாக தமிழ்நாடு அரசு ஒரு அதிரடி எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. இதன்படி, பணிக்கு வராமல் வேலைநிறுத்தத்தில் பங்கேற்கும் ஊழியர்களுக்கு அந்த நாளுக்கான ஊதியம் வழங்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஊதிய உயர்வு உள்ளிட்ட […]
சென்னை : டாஸ்மாக் டெண்டர்களில் சுமார் ரூ.1000 கோடி முறைகேடு நடைபெற்றுள்ளதாக கூறப்பட்ட நிலையில் அதற்கு பொறுப்பேற்று அமைச்சர் செந்தில் பாலாஜி பதவி விலக வேண்டும் என பாஜக கண்டனங்களை தெரிவித்து நேற்று சென்னை டாஸ்மாக் தலைமை அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டம் நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. இருப்பினும், காவல்துறை தரப்பில் டாஸ்மாக் அலுவலகம் முற்றுகை போராட்டம் நடத்த அனுமதியில்லை என்றே கூறப்பட்ட நிலையில், இந்த போராட்டம் தொடங்குவதற்கு முன்பே, அண்ணாமலை உள்ளிட்ட பல முக்கிய பாஜக […]
சென்னை : டாஸ்மாக் டெண்டர்களில் சுமார் ரூ.1000 கோடி முறைகேடு நடைபெற்றுள்ளதாக கூறப்பட்ட நிலையில் அதற்கு பொறுப்பேற்று அமைச்சர் செந்தில் பாலாஜி பதவி விலக வேண்டும் என பாஜக கண்டனங்களை தெரிவித்து இன்று சென்னை டாஸ்மாக் தலைமை அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டம் நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. இருப்பினும், காவல்துறை தரப்பில் டாஸ்மாக் அலுவலகம் முற்றுகை போராட்டம் நடத்த அனுமதியில்லை என்றே கூறப்பட்ட நிலையில், போராட்டம் நடத்திய பலரையும் காவல்துறை காலையிலே அதிரடியாக கைது செய்தது. பாஜக […]
சென்னை : அண்மையில் அமலாக்கத்துறையினர் சென்னை டாஸ்மாக் தலைமை அலுவலகம், மதுபான ஆலைகள் என பல்வேறு இடங்களில் சோதனை நடத்தினர். இதில் டெண்டர் தொடர்பாக சுமார் ரூ.1000 கோடி வரையில் ஊழல் நடந்திருக்காலாம் என கூறப்பட்டது. இதனை குறிப்பிட்டு இன்று பாஜகவினர் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்து இருந்தனர். இதனை தொடர்ந்து டாஸ்மாக் முறைகேட்டை கண்டித்து தமிழ்நாடு பாஜக சார்பில், இன்று சென்னை எழும்பூரில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகத்தை முற்றுகையிட திட்டமிட்டிருந்த நிலையில், இன்று காலை முதலே […]
ராமேஸ்வரம் : கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக்கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்களை எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாக கூறி, 32 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். அத்துடன் 5 விசைப்படகுகள், மீன்கள், வலைகளை பறிமுதல் செய்த கடற்படையினர் அவர்களை தலைமன்னார் கடற்கரை முகாமுக்கு அழைத்துச் சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே இந்த மாதத்தில் 29 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது கவனிக்கத்தக்கது. தொடர்ந்து தமிழ்நாட்டு மீனவர்களிடம் எல்லை மீறும் இலங்கையை ஒன்றிய அரசு கண்டிப்பது இல்லை […]
சென்னை : தமிழ்நாட்டுக்கு தேவையான கல்வி நிதியை விடுவிக்காதது, மும்மொழிக்கொள்கை திணிப்பு ஆகியவற்றை கண்டித்து இந்தியா கூட்டணி கட்சிகள் சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மாலை 4 மணிக்கு நடைபெறும் போராட்டத்தில் பலரும் கலந்துகொள்ளவிருக்கிறார்கள். அதைப்போல, பள்ளி, கல்லூரி மாணவிகள், சிறுமிகளுக்கு எதிராக நடைபெற்று வரும் பாலியல் வன்கொடுமைகளை கண்டித்து இன்று அதிமுக ஆர்ப்பாட்டம் நடத்துகிறது. அதன்படி, அதிமுக மாணவர் அணியின் சார்பில் இன்று காலை 10.30 மணியளவில் சென்னை வள்ளுவர் […]
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி பூரிகுடிசையில் தமிழ்நாடு பனையேறும் தொழிலாளர்கள் பாதுகாப்பு இயக்கம் மற்றும் தமிழ்நாடு கள் இயக்கம் சார்பில், செ.நல்லசாமி தலைமையில், கள் இறக்கி சந்தைப்படுத்தும் உரிமை மீட்பு அறப்போராட்டம் ‘கள் விடுதலை மாநாடு’ நடைபெற்றது. இதில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பங்கேற்று பனையேறும் தொழிலாளர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி சிறப்புரையாற்றினார். மேலும், இந்த மாநாட்டில் கள் இறக்குவதற்கான தடையை நீக்க கோரி போராட்டம் நடைபெற்றது. மேடையில், நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் பனை […]
காஞ்சிபுரம்: வருகின்ற ஜன.20ம்தேதி தவெக தலைவர் விஜய், பரந்தூரில் இருக்கும் மக்களை சந்திக்க காவல்துறை கட்டுப்பாடுகள் விதித்க்கப்பட்டுள்ளதாக ஒரு தகவல் வெளியாகியது. பரந்தூரில் விமான நிலையம் அமையக் கூடாது என்று போராடி வரும் மக்களை சந்திக்க அவர் செல்ல திட்டமிட்டிருந்தார். பரந்தூரில் பசுமை விமான நிலையம் அமைக்க அரசு முனைப்பு காட்டி வருகிறது. இதற்கு அங்கிருக்கும் கிராமத்தினர் தொடர் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால், அந்த போராட்டக்குழுவை சந்தித்து பேசவும், பாதுகாப்பு வழங்க கோரியும், […]
சென்னை: விக்கிரவாண்டியில் தனியார் பள்ளியில் செப்டிக் டேங்கில் விழுந்து, லியா லட்சுமி என்ற 5 வயது குழந்தை உயிரிழந்தது. செப்டிக் டேங்கின் இரும்பு மூடி உடைந்ததில், அதன் மீது நின்று கொண்டிருந்த அக்குழந்தை, அதற்குள் விழுந்து இந்த சோக சம்பவம் நேரிட்டது. இந்நிலையில், விக்கிரவாண்டியில் தனியார் பள்ளி கழிவுநீர் தொட்டிக்குள் தவறி விழுந்து பலியான சிறுமியின் பெற்றோருக்கு ரூ.3 லட்சம் நிவாரணமாக வழங்க முதல்வர்ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், “விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி […]
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் தனியார் பள்ளி கழிவுநீர் தொட்டியில் தவறி விழுந்து 4 வயது சிறுமி பலியான சம்பவம் அப்புகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தனியார் பள்ளியின் உணவு இடைவேளையின் போது வகுப்பறையில் இருந்து வெளியே வந்த குழந்தை லியா லட்சுமி விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது, கழிவுநீர் தொட்டியின் இரும்பு மூடி உடைய, சிறுமி தொட்டிக்குள்ளே விழுந்துள்ளார். இதனைத் தொடர்ந்து, தகவலின்பேரில் சிறுமி உடல் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, பள்ளி நிர்வாகத்தைக் […]
சென்னை: அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கண்டித்து சென்னையில் போராட்டம் நடத்த முயன்ற நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கைது செய்யப்பட்டார். அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட முயன்ற சீமானும், நாம் தமிழர் கட்சியினரும் இன்று காலை கைது செய்யப்பட்டு சென்னை பெரியமேட்டில் உள்ள சமுதாய நலக்கூடத்தில் அடைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது விடுவிக்கப்பட்டார். விடுதலைக்கு பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், “தேவையற்ற ஒடுக்கு முறையாக எனது […]
டெல்லி: அமித் ஷா பேசியதற்கு நாடாளுமன்றத்தில் எதிர்ப்பு எழுந்த நிலையில், அம்பேத்கரை மத்திய அரசு முழுமையாக மதிக்கிறது என்று கூறி, பிரதமர் மோடி விளக்கம் அளித்துள்ளார். நேற்றைய தினம் நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சர் அமித்ஷா, அம்பேத்கர் பெயர் இப்போது ஒரு பேஷன் ஆகிவிட்டது. அவர் பெயருக்கு பதில் கடவுளின் பெயரை சொல்லி இருந்தால் ஏழு ஜென்மம் சொர்க்கம் கிடைத்திருக்கும் என்று பேசியது, சர்ச்சையை கிளப்பியது. இப்படி இருக்கையில், ‘காங்கிரஸ் கட்சி தான் பி.ஆர். அம்பேத்கரை அவமதித்ததாக’ பிரதமர் […]
ராமேஸ்வரம் : தமிழக மீனவர்கள், எல்லை தாண்டி மீன் பிடிப்பதாகக் கூறி இலங்கை கடற்படையால் கைது செய்யப்படுவது தொடர்கதையாகி வருகிறது. இந்த கைது நடவடிக்கை அண்மை காலமாக தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. கைது செய்யப்பட்ட மீனவர்களுக்கு அதிகபட்ச அபராதம் , மீனவர்களுக்கு நீதிமன்ற காவல், படகுகள் அரசுடைமையாக்கப்படுவது என தொடர்ந்து இலங்கை அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இப்படியான சூழலில், நேற்று 23 மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட நிலையில், இன்றும் நெடுந்தீவு அருகே மீன்பிடித்து வந்த […]
சென்னை : நடிகர் சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் ‘அமரன்’ திரைப்படத்தில் இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக சித்தரிப்பதாக குற்றச்சாட்டை முன்வைத்து எஸ்டிபிஐ கட்சியினர், கோவை, நெல்லையில் திரையரங்கை முற்றுகையிட்டு எஸ்டிபிஐ போராட்டம் நடத்தி வருகின்றனர். அதன்படி, கோவை ரயில் நிலையம் அருகே உள்ள திரையரங்கையும், நெல்லையில் அலங்கார் திரையரங்கையும் முற்றுகையிட்டனர் எஸ்டிபிஐ கட்சியினர். இதில், கோவை சாந்தி திரையரங்கம் முன்பு போராட்டம் நடத்திய எஸ்டிபிஐ கட்சியினரை போலீசார் குண்டுக்கட்டாக கைது செய்தனர். இந்த நிலையில், அமரன்’ படக்குழுவிற்கு வரும் அச்சுறுத்தல்களை தமிழ்நாடு […]
சென்னை : எழும்பூர் பகுதியில் நேற்று நடைபெற்ற போராட்டத்தில் ஈடுபட்ட பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட அக்கட்சியினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் மின் கட்டண விலை உயர்த்தப்பட்ட நிலையில், மின்கட்டண உயர்வைத் திரும்பப் பெற வலியுறுத்தி சென்னை எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகே பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் போராட்டம் நடத்தப்பட்டது. இந்த போராட்டத்தில் கவுரவ தலைவர் ஜி.கே.மணி மற்றும் பா.ம.க. ஆதரவாளர்கள் பலரும் கலந்துகொண்டார்கள். மின்கட்டண உயர்வைத் திரும்பப் பெற கூறி […]
தேசிய தேர்வு முகமை: நீட் தேர்வு வினாத்தாள் கசிவு தொடர்பான விசாரணையை ஒரு புறம் சிபிஐ நடத்தி வரும் நிலையில், மறுபுறம் இந்த நீட் தேர்வு வினாத்தாள் கசிவு தொடர்பாக டெல்லியில் மாணவர்கள் போராட்டத்தை நடத்தி வந்தனர். இந்நிலையில், நீட் தேர்வு முறைகேட்டை கண்டித்து டெல்லியில் பல்வேறு கல்லூரி, பல்கலைக்கழகங்களின் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இன்று காலையில் முதல் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு எதிராக கடுமையான போராட்டத்தில் ஈடுபட்ட வந்த மாணவர்கள் தற்போது தேசிய தேர்வு முகமையின் […]
Puducherry: புதுச்சேரி சிறுமி கொலை வழக்கில் போராட்டக் களமாக மாறியுள்ளது புதுச்சேரி மாநிலம். புதுச்சேரியில் சோலை நகரில் காணாமல் போன 9 வயது சிறுமி கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில், சாக்கடையில் இருந்து சடலமாக கண்டெடுக்கப்பட்டார். இந்த நிலையில், பாலியல் வன்கொடுமை முயற்சியால் தான் கொல்லப்பட்டது என அம்பலமாகியுள்ளது. READ MORE – தண்ணீருக்கு அடியில் மெட்ரோ ரயில்… பிரதமர் மோடி முதல் பயணம்.! இச்சம்பவம் தொடர்பாக, கருணாஸ் (19), விவேகானந்தன் (59) ஆகிய 2 பேரை […]