தெலங்காணா: ‘புஷ்பா 2′ திரைப்படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க ரசிகை ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில், நடிகர் அல்லு அர்ஜுன் மீது, வழக்கு பதிவு செய்யப்பட்டு, கைதும் செய்யப்பட்டார். ஆனால், ஒரு நாள் இரவு முழுவதும் சிறையில் இருந்து மறுநாள் காலையிலேயே விடுதலை அடைந்து வீட்டிற்கு சென்றார். இந்த நிலையில், ‘புஷ்பா 2’ படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க வந்த பெண் உயிரிழந்த விவகாரம் குறித்து, நேற்றைய தினம் தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி சட்டப்பேரவையில் காட்டமாக பேசினார். […]
ஹைதராபாத்: ‘புஷ்பா 2’ சிறப்புக் காட்சியின் போது கூட்ட நெரிசல் ஏற்பட்டு, பெண் உயிரிழந்ததற்கு, ‘போலீஸ் சொன்னதை மதிக்காமல், அல்லு அர்ஜுன் தியேட்டருக்கு சென்றதே காரணம்’ என்று தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி குற்றம்சாட்டியுள்ளார். திரை பிரபலங்கள் மனிதாபிமானம் அற்றவர்களாக இருக்கக் கூடாது என கேட்டுக் கொள்வதாகவும், தான் முதல்வராக இருக்கும் வரை, இனி மாநிலத்தில் சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி இல்லை எனவும் அறிவித்துள்ளார். இந்த நிலையில், தெலங்கானா முதல்வரின் கருத்துக்கள் தன்னை காயப்படுத்தியதாக அல்லு அர்ஜுன் வருந்தியுள்ளார். […]
சென்னை: நடிகர்கள் விஜய் சேதுபதி, சூரி நடிப்பில் நேற்றைய தினம் வெளிவந்த “விடுதலை 2” திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. வெற்றிமாறனின் இயக்கம், திரைக்கதை நேர்த்தியாக இருப்பதாகவும், விஜய் சேதுபதியின் நடிப்பு மிரட்டலாக இருப்பதாகவும் பாராட்டுகிறார்கள். குறிப்பாக, இளையராஜாவின் பின்னணி இசை திரைக்கதைக்கு மிகவும் வலுசேர்ப்பதாக குறிப்பிடுகிறார்கள். முதல் பாகத்தில் சூரியைச் சுற்றி கதை நகர்ந்த நிலையில், இதன் 2-ம் பாகமானது ‘பெருமாள் வாத்தியார்’ என்ற விஜய் சேதுபதி கதாபாத்திரத்தை சுற்றி இருக்கும் எனத் தெரிகிறது. […]
திருச்சி: இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர்கள் விஜய் சேதுபதி, சூரி நடிப்பில் வெளிவந்துள்ள “விடுதலை 2” இன்று திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. வெற்றிமாறனின் இயக்கம், திரைக்கதை நேர்த்தியாக இருப்பதாகவும், விஜய் சேதுபதியின் நடிப்பு மிரட்டலாக இருப்பதாகவும் பாராட்டுகிறார்கள். இந்த நிலையில், திருச்சி மாவட்டம் சோனா மீனா திரையரங்கிற்கு ‘விடுதலை-2’ திரைப்படம் பார்க்க வந்த நடிகர் சூரியை, ரசிகர்கள் ஆரவாரத்துடன் வரவேற்றனர். படம் பார்த்துவிட்டு செய்தியாளர்களிடம் பேட்டியளித்த நடிகர் சூரி, “கமர்ஷியல் தாண்டி மக்கள் தெரிந்து கொள்ள […]
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக கூறப்பட்டது. ஏற்கனவே, சிறுவனின் தாய் ரேவதி (35) உயிரிழந்த நிலையில், சிறுவன் தேஜூக்கு (9) தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது தேஜ் மூளைச்சாவு அடைந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த 4ம் தேதி நடந்த இச்சம்பவத்தில் தாய் ரேவதி உயிரிழந்த நிலையில், கூட்ட நெரிசலுக்கு காரணம் என கூறி, அல்லு அர்ஜுன் மீது […]
சென்னை: இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடிக்கும் ‘விடாமுயற்சி’ திரைப்படம் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் ஒன்றாகும். சஸ்பென்ஸ் த்ரில்லர் நிறைந்த இப்படம் 2025ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாக உள்ளது. படம் வெளிவர இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில், கடைசி ஷெட்யூலுக்காக படக்குழு நேற்றைய தினம் பாங்காக் சென்றது. படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடந்து வந்த நிலையில், தனது பகுதிகளுக்கான டப்பிங் பணிகளை அஜீத் குமார் முழுவதுமாக முடித்துள்ளார் என கூறப்படுகிறது. […]
புதுடெல்லி: இந்தியாவைச் சேர்ந்த பிரபல தபேலா இசைக் கலைஞர் ஜாகிர் ஹுசைன் (73) காலமானார். அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில் குடும்பத்துடன் வசித்து வந்த அவர், உயர் ரத்த அழுத்தம் மற்றும் இதய நோய் பிரச்னை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். நேற்றிரவு ஐசியு-வில் இருந்த அவர் காலமானதாக தகவல் வெளியான நிலையில், அவரது குடும்பத்தினர் முதலில் மறுத்திருந்தனர். அதன்பிறகு உண்மையில் அவர் உயிரிழந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. புகழ்பெற்ற இவருடைய மறைவு திரைத்துறையில் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், ரசிகர்கள் தங்களுடைய இரங்கலை […]
சென்னை: இயக்குநர் விக்னேஷ் தற்போது ‘லவ் இன்சூரன்ஸ்’ நிறுவனம் என்ற படத்தை இயக்கி வருகிறார். இதில் இயக்குநர் பிரதீப் ரங்கநாதன், கிருத்தி ஷெட்டி ஜோடியாக நடிக்கின்றனர். இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், விக்னேஷ் சிவன் அரசு ஹோட்டலை விலைக்கு கேட்டதாக சர்ச்சை எழுந்தது. மேலும் இது தொடர்பாக நெட்டிசன்கள் மீம்ஸ் போடு கலாய்த்து வந்தனர். தற்பொழுது அதற்கு விளக்கம் அளித்துள்ளார். அதாவது, புதுச்சேரியில் சொத்து வாங்கப் போவதாக சமூக […]
ஹைதராபாத்: கடந்த டிசம்பர் 5ஆம் தேதி ‘புஷ்பா 2’ திரைப்படம் வெளியான அன்று அப்படத்தின் சிறப்பு காட்சி ஆந்திரா , தெலுங்கானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் திரையிடப்பட்டது. முதல் காட்சியைக் காண சந்தியா திரையரங்கம் சென்ற நடிகர் அல்லு அர்ஜுன் மற்றும் ரஷ்மிகா உள்ளிட்ட படக்குழுவினரை பார்ப்பதற்காக கூடிய கூட்டத்தில் சிக்கி ரசிகை ஒருவர் உயிரிழந்தார். இதை தொடர்ந்து இச்சம்பவம் தொடர்பாக அல்லு அர்ஜுன் மீதும் திரையரங்கு உரிமையாளர், மேலாளர், பாதுகாவலர் மீதும் சிக்கட்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு […]
சென்னை: நயன்தாராவின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட ‘பியோண்ட் தி ஃபேரி டேல்’ என்கிற பெயரில் பிரபல ஓடிடி தளமான நெட்ப்ளிக்ஸ்-இல் வெளியானது. இந்த ஆவணப்படத்தில் ‘நானும் ரவுடிதான்’ படத்தின் காட்சிகள் தன் அனுமதியைப் பெறாமல் பயன்படுத்தப்பட்டதாக படத் தயாரிப்பாளரும், நடிகருமான தனுஷ் சார்பில், ரூ.10 கோடி கேட்டு வக்கீல் நோட்டீஸ் அனுப்பட்டது. அது மட்டும் இல்லாமல், நயன்தாராவுக்கு எதிராக தனுஷின் படத் தயாரிப்பு நிறுவனம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கலும் செய்யப்பட்டது. இந்த மனு இன்று […]
சென்னை: யூடியூப் சேனல்களில் தன்னை குறித்து அவதூறாக பேசியதற்காக நடிகர் வடிவேலு, 5 கோடி ரூபாய் மானநஷ்ட ஈடு கேட்டு தாக்கல் செய்த வழக்கானது கடந்த 6-தேதி விசாரணைக்கு வந்த நிலையில், வடிவேலு குறித்து எந்தவிதமான அவதூறு கருத்தும் தெரிவிக்கமாட்டேன் என உத்தரவாதம் அளிக்கும்படி சிங்கமுத்துவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இது தொடர்பாக, பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன், இந்த வழக்கை இன்று (டிசம்பர் 11 ஆம் தேதி) ஒத்தி வைத்தார். அதன்படி, […]
சென்னை: திரைப்பட விமர்சனங்கள் என்கிற பெயரில் தனிமனித தாக்குதல் மற்றும் வன்மத்தை விதைக்கும் ஊடகங்களை கண்டிப்பதாக தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் கூறியது. நடப்பாண்டில் வெளியான இந்தியன் 2, வேட்டையன், கங்குவா படங்கள், பொதுமக்கள் விமர்சனங்களால் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளன என தயாரிப்பாளர் சங்கம் கவலை தெரிவித்தது. இதனால், திரையரங்கு வளாகம் மட்டுமில்ல, அதற்கு அருகிலும், எந்த YouTube Channel-களும் பார்வையாளர்கள், ரசிகர்களிடம் இனிமேல் புதிய திரைப்படங்களை பற்றி பேட்டி எடுக்க தமிழ் நாட்டில் உள்ள அனைத்து திரையரங்க […]
டெல்லி: ப்ரேக்அப் செய்ததால் ஆண் நண்பர் உள்ளிட்ட 2 பேரை கொலை செய்ததாக ஹிந்தி நடிகை நர்கீஸ் பக்ரியின் சகோதரி ஆலியாவை நியூயார்க் போலீசார் கைது செய்துள்ளனர். நடிகை நர்கிஸ் ஃபக்ரியின் தங்கை ஆலியா ஃபக்ரி ஆவார். நர்கிஸ் மற்றும் ஆலியா இளமையாக இருந்தபோது, அவர்களின் பெற்றோர் விவாகரத்து செய்தனர். இந்நிலையில், நர்கிஸ் ஃபக்ரியின் சகோதரி அலியா, நியூயார்க்கில் உள்ள குயின்ஸில் நகரில் வசித்து வந்துள்ளார். அண்மையில், ஆலியாவுடனான உறவை ஆண் நண்பர் ஜேக்கப் பிரேக் ஆப் […]
சென்னை : சுகுமார் இயக்கத்தில், அல்லு அர்ஜூன் நடிப்பில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ‘புஷ்பா-2’ திரைப்படம் டிசம்பர் 5 ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. ரிலீசுக்கு முன்பே, ரூ.1,000 கோடி வியாபாரம் செய்திருக்கும் புஷ்பா-2 படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சி சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில், அல்லு அர்ஜூன், ரஷ்மிகா, ஸ்ரீலீலா, தேவி ஸ்ரீ பிரசாத் ஆகியோர் கலந்துகொண்டனர். அப்போது, அத்திரைப்படத்தில் இடம்பெற்றிருக்கும் ‘கிஸிக்’ பாடல் வெளியிடப்பட்டது. இதனை ரசிகர்கள் நடனமாடி கொண்டாடினர். குறிப்பாக, இந்த நிகழ்ச்சியில் இயக்குனர் […]
சென்னை : ஒரே நேரத்தில் 2 படங்களில் நடித்து வருவதுடன், கார் ரேஸிலும் பங்கேற்று வருகிறார் அஜித் குமார். மகிழ் திருமேனி இயக்கத்தில் ‘விடா முயற்சி’ படமும், ஆதிக் ரவிச்சந்தி இயக்கத்தில் ‘குட் பேட் அக்லி’ படத்திலும் நடித்து வருகிறார். இதில் எந்தப் படம் முதலில் திரைக்கு வருகிறது என்று தெரியாமல் ரசிகர்கள் குழம்பியுள்ளனர். இந்நிலையில், வரும் பொங்க லுக்கு குட் பேட் அக்லி’ படம் கிரைக்கு வரும் என்று தயாரிப்பு நிறுவனம் உறுதி செய்துள்ளது. தங்களது […]
சென்னை : ஏ.ஆர்.ரஹ்மானும், சாய்ரா பானுவும் 29 வருட 29 வருட திருமண வாழ்க்கைக்குப் பிறகு விவாகரத்து செய்வதாக நவம்பர் 19ம் தேதி அறிவித்துள்ளனர். தங்கள் உறவில் ஏற்பட்ட மன உளைச்சல் தான் பிரிந்ததற்கான காரணம் என அவர்கள் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து, ரஹ்மான் விவாகரத்து செய்தியை அறிவித்த அடுத்த சில மணி நேரங்களில் அவருடைய இசை குழுவை சேர்ந்த மோகினி தே என்பவரும் தன்னுடைய கணவரை விவாகரத்து செய்யவுள்ளதாக அறிவித்தார். இதன் காரணமாக, இவருடன் தொடர்பு […]
சென்னை : நடிகர் தனுஷும், ஐஸ்வர்யாவும் ஒருவரையொருவர் பிரிவதாக 2022 இல் அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். இந்த ஜோடி அவர்களின் 18 ஆண்டுகால திருமண வாழ்க்கையை முறித்துக் கொண்டதாக அறிவித்த நிலையில், சட்டப்பூர்வமாக பிரிந்து செல்ல குடும்ப நல நீதிமன்றத்தை அணுகி விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்தனர். அவர்களது மனு ஏற்கப்பட்டு நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கும் பதிவு செய்யப்பட்டது. இருந்தாலும், இந்த வழக்கில் இருவரும் கடந்த மூன்று முறை விசாரணைக்கு ஆஜராகவில்லை. இதனால், இருவரும் மீண்டும் சந்திப்பார்கள் […]
சென்னை : லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா இன்று தனது 40-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். கேரளாவில் மரியம் டயானாவாக பிறந்து, தனது தனித்துவமான அழகால் கோலிவுட்டை கிறங்கடித்த அவர், பல தடைகளையும், விமர்சனங்களையும் தாண்டி லேடி சூப்பர் ஸ்டார் என்ற உச்சத்தை தொட்டார். தமிழில் நயன்தாராவாக ‘ஐயா’ திரைப்படத்தில் அறிமுகமானார். தற்பொழுது, பல பஞ்சாயத்துக்கு மத்தியில், நயன்தாரா – விக்னேஷ் சிவன் தம்பதியின் திருமண ‘Nayanthara: Beyond the Fairy Tale’ ஆவணப்படம் நள்ளிரவு 12 மணிக்கு […]
சென்னை : இளம் தமிழ் இயக்குனர் சுரேஷ் சங்கையா காலமானார். உடல் நலம் பிரச்சனையால் அவதிப்பட்டு வந்த அவர், நேற்று (வெள்ளிக்கிழமை) இரவு 11 மணியளவில் காலமானார். இவருக்கு மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனர். தற்பொழுது, இயக்குனர் சுரேஷின் மறைவுக்கு திரையுலக பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். சமீபத்தில், ப்ரொடக்ஷன் நம்பர் #17 யோகி பாபு வைத்து திரைப்படத்தை இயக்கிய, இன்னும் இரண்டு படங்கள் இரண்டு பெரிய நிறுவனங்களுக்கு எடுக்க இருந்த நிலையில், அவரது திடீர் […]
சென்னை : இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவான “கங்குவா” படத்தில் சூர்யாவை தவிர நடிகை திஷா பதானி, ஜகபதி பாபு, யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்தராஜ், ஜி மாரிமுத்து, ரவி ராகவேந்திரா, கேஎஸ் ரவிக்குமார், ரவி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். நடிகர் சூர்யா நடிபப்பில் உருவான இப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் நவ.14ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது. இந்நிலையில், இப்படம் திரையரங்குகளில் வெளியாக நாளை ஒரு மட்டுமே உள்ள நிலையில், […]