சோனிபத் : ஹரியானாவின் சோனிபத்தில் உள்ள ஓபி ஜிண்டால் குளோபல் என்கிற பல்கலைக்கழகத்தில் ஒரு பெண்ணை ஆண்கள் விடுதிக்குள் சூட்கேஸில் அடைத்து வைத்து கொண்டு செல்ல முயன்ற நபர் வசமாக சிக்கிக்கொண்டார். இந்த சம்பவத்தின் காணொளி தற்போது சமூக ஊடகங்களில் பரவலாகப் பரவி வருகிறது. இந்த சம்பவத்திற்கு பதிலளித்த பல்கலைக்கழக மக்கள் தொடர்பு அதிகாரி (PRO), ‘மாணவர்கள் “குறும்புத்தனமாக நடந்து கொண்டனர்” என்றும் அது பெரிய விஷயமல்ல. யார் அந்த பெண்> என்று விசாரிக்கையில் அந்த மாணவரின் […]
சென்னை : இரண்டு நாள் பயணமாக சென்னை வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, நேற்றைய தினம் அதிமுக – பாஜக கூட்டணியை உறுதிப்படுத்தினார். இதை தொடர்ந்து, அதிமுக – பாஜக கூட்டணியை திமுக, விசிக, தவெக என பல்வேறு கட்சிகளும் கடுமையாக விமர்சித்து வருகின்றன. இந்த நிலையில், தே.மு.தி.க. தலைமை அலுவலகத்தில் அதன் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, பாஜக கூட்டணிகட்ட ஆலோசிக்கப்பட்டதா என்ற கேள்விக்கு, எங்களிடம் யாரும் ஆலே ஆலோசிக்கவில்லை, நாங்களும் […]
சென்னை : இரண்டு நாள் பயணமாக தமிழ்நாடு வந்துள்ள மத்திய அமைச்சர் அமித்ஷா, நேற்று கட்சி நிர்வாகிகளுடன் பலகட்ட ஆலோசனையை அடுத்து, பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அமித்ஷா, 2026 சட்டமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுக – பாஜக கூட்டணியாக தேர்தலை சந்திக்கும் என்று தெரிவித்தார். இதனை திமுக கடுமையாக விமர்சனம் செய்திருந்த நிலையில், இப்போது தவெக தலைவர் விஜய் விமர்சனம் செய்திருக்கிறார். அதன்படி, 2026 தேர்தல் களம் தவெகவிற்கும் திமுகவிற்கும் இடையே […]
சென்னை : அதிமுக – பாஜக கூட்டணி என்பது தோல்விக் கூட்டணி. தொடர் தோல்வியை அந்த அணிக்குக் கொடுத்தவர்கள் தமிழ்நாட்டு மக்கள். இதே தோல்விக் கூட்டணியை மீண்டும் உருவாக்கி இருக்கிறார் உள்துறை அமைச்சர் அமித்ஷா என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார். மேலும், நேற்றைய தினம் பாஜக தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் ‘தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்குலைவு’ என்று அமித்ஷா பேசியிருந்தார். இதற்கு’ இது மணிப்பூர் அல்ல, தமிழ்நாடு என்பதை அவருக்கு நினைவூட்டுகிறேன்’ ஒன்றரை ஆண்டுகளாக […]
சென்னை : அதிமுக – பாஜக கூட்டணியே ஊழல் தான் என்று முதல்வர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார். அதிகார வெறியோடு அமைக்கப்பட்டுள்ள இந்த கூட்டணி மாநில உரிமைக்கு எதிரானது. 2 ரெய்டுக்கு பயந்து அதிமுகவை அடமானம் வைத்தவர்கள், தமிழகத்தையும் அடகு வைக்க துடிக்கிறார்கள் என அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”அ.தி.மு.க. – பா.ஜ.க. கூட்டணி என்பது தோல்விக் கூட்டணி. தொடர் தோல்வியை அந்த அணிக்குக் கொடுத்தவர்கள் தமிழ்நாட்டு மக்கள். இதே தோல்விக் கூட்டணியை […]
லக்னோ : நடப்பு ஐபிஎல் போட்டிகள் மிகவும் சுவாரஸ்யமாக சென்றுகொண்டிருக்கையில், இன்று ஐபிஎல் ரசிகர்களுக்கு செம விருந்து காத்திருக்கிறது. முதல் போட்டி மதியம் 3.30மணிக்கு லக்னோ மற்றும் குஜராத் அணிகளுக்கு இடையே நடைபெறுகிறது. இரண்டாவது போட்டி இரவு 7.30 மணிக்கு ஹைதராபாத் மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு இடையே நடைபெறுகிறது. இன்றைய தினம் எந்த 2 அணிகள் ஜெயிக்க போகுது என்று பொறுத்திருந்து பார்க்கலாம். LSG vs GT முதல் போட்டி லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் குஜராத் […]
சென்னை : இன்று ஐபிஎல் ரசிகர்களுக்கு செம விருந்து காத்திருக்கிறது. முதல் போட்டி மதியம் 3:30மணிக்கு லக்னோ மற்றும் குஜராத் அணிகளுக்கு இடையே நடைபெறுகிறது. இரண்டாவது போட்டி இரவு 7:30 மணிக்கு ஹைதராபாத் மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு இடையே நடைபெறுகிறது. இன்றைய தினம் எந்த 2 அணிகள் ஜெயிக்க போகுது என்று பொறுத்திருந்து பார்க்கலாம். கோவையில் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்ட 7 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டனர். ஐ.பி.எல். போட்டியை வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட விவகாரத்தில் போலீஸார் […]
சென்னை : ஒரு காலத்தில் ஐபிஎல் தொடரில் ஒரு பலமான அணியாக பார்க்கப்பட்ட சென்னை அணி, இந்த சீசனில் பரிதாபமாக பார்க்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. நடப்பு ஐபிஎல் தொடரில் சென்னை அணியின் தொடர் தோல்வியால் ரசிகர்கள் மிக ஏமாற்றமடைந்துள்ளனர். தொடர்ச்சியாக 5 தோல்விகளை சந்தித்த சென்னை அணி, பிளே ஆஃப் செல்ல இப்போதும் வாய்ப்புள்ளது. இதுவரை 6 போட்டிகளில் விளையாடி 1 மட்டுமே வென்றுள்ள சென்னை அணி புள்ளிப்பட்டியலில் 9-வது இடத்தில் உள்ளது. இருப்பினும், சென்னை […]
சென்னை : கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னை அணி படுதோல்வியை சந்தித்துள்ளது. முதலில் பேட்டிங் செய்த சிஎஸ்கே அணி, 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 103 ரன்களை எடுத்தது. அடுத்து களமிறங்கிய கொல்கத்தா அணி, ஆரம்பம் முதலே அதிரடி காட்டியது. இதன் காரணமாக 10.1 ஓவர்களிலேயே 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 107 ரன்களை எடுத்து அபார வெற்றி பெற்றது. இது மூலம் சிஎஸ்கே அணி, இதுவரை இல்லாத அளவிற்கு […]
சென்னை : ஐபிஎல் தொடரின் நேற்றைய ஆட்டத்தில் தொடர்ந்து 5வது முறையாக தோல்வியை தழுவியது சென்னை சூப்பர் கிங்ஸ். 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி வெற்றி பெற்றது. முதல் பேட்டிங் செய்த சென்னை அணி, மொத்தமாகவே வெறும் ஒரு சிக்ஸர் மட்டுமே அடித்திருந்தது. தொடர் விக்கெட்கள் காரணமாக 20 ஓவர்கள் முடிவில் சென்னை அணி 9 விக்கெட் இழப்பிற்கு 103 ரன்கள் மட்டுமே எடுத்தது. அடுத்ததாக 204 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய […]
சென்னை : இரண்டு நாள் பயணமாக தமிழ்நாடு வந்துள்ள மத்திய அமைச்சர் அமித்ஷா, நேற்று கட்சி நிர்வாகிகளுடன் பலகட்ட ஆலோசனையை அடுத்து, தற்போது பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அமித்ஷா, 2026 சட்டமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுக – பாஜக கூட்டணியாக தேர்தலை சந்திக்கும் என்று தெரிவித்தார். 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் பாஜக கூட்டணி அமையும் என கூறப்பட்டு வந்த நிலையில், இப்பொது அந்த கூட்டணி உறுதியாகியுள்ளது. இந்நிலையில், பிரதமர் […]
சென்னை : அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ திரைப்படம் வெளியானதைத் தொடர்ந்து, படத்தில் கதாநாயகியாக நடிக்கும் நடிகை த்ரிஷா, இப்படம் குறித்த சமூக ஊடக விமர்சனங்கள் குறித்து தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு காட்டமான பதிவை வெளியிட்டுள்ளார். அஜித்துடன் த்ரிஷா நடிக்கும் ஆறாவது படமாக குட் பேட் அக்லி உள்ளது. இருவரும் முன்பு ஜி, கிரீடம், மங்காத்தா, என்னை அறிந்தால், மற்றும் விடாமுயர்ச்சி போன்ற படங்களில் இணைந்து நடித்துள்ளனர். தற்பொழுது, குட் பேட் அக்லி படத்தில் […]
சென்னை : இரண்டு நாள் பயணமாக தமிழ்நாடு வந்திருந்திருக்கும் உள்துறை அமைச்சர் அமித்ஷா, தமிழிசை சௌந்தரராஜன் வீட்டிற்கு நேரில் சென்று அவரது தந்தை குமரி அனந்தன் போட்டோவிற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். குமரி அனந்தன், வயது மூப்பு மற்றும் உடல்நலக் குறைவால் கடந்த ஏப்ரல் 8ம் தேதி அன்று சென்னையில் காலமானார். தமிழிசை பாஜகவின் முக்கிய தலைவர்களில் ஒருவர், மேலும் அவரது தந்தையின் மறைவுக்கு பல அரசியல் தலைவர்கள் அஞ்சலி செலுத்தி இருந்தனர். இந்த நிலையில், […]
சென்னை : இரண்டு நாள் பயணமாக உள்துறை அமைச்சர் அமித் ஷா சென்னை வந்தடைந்தார். டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் சென்னை வந்த அவருக்கு பாஜக நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர். தமிழக பாஜக தலைவரை இறுதி செய்வது, தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தை உள்ளிட்டவற்றை அமித் ஷா மேற்கொள்ள உள்ளார். மேலும், பங்குனி உத்திர திருவிழா, தமிழ்நாட்டில் மிகவும் முக்கியமான மற்றும் பக்தி பரவசத்துடன் கொண்டாடப்படும் ஒரு திருவிழாவாகும். இது தமிழ் மாதமான பங்குனியில் (மார்ச்-ஏப்ரல்) […]
திருப்பூர் : திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே ஏற்பட்ட ஒரு துயரமான சாலை விபத்தில், சாலையோரம் நின்று கொண்டிருந்த லாரி மீது தனியார் ஆம்புலன்ஸ் மோதியதில் இருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்து திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே, கரணம்பேட்டை பகுதியில் உள்ள திருப்பூர்-பொள்ளாச்சி தேசிய நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை நிகழ்ந்ததாக தெரிகிறது. ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்ட நோயாளி முருகன் – கல்யாணி என்ற தம்பதியினர் சம்பவ இடத்திலையே உயிரிழந்தனர். மேலும், ஆம்புலன்ஸ் […]
பெங்களூர் : விராட் கோலி தனது கிரிக்கெட் வாழ்க்கையில் பல சாதனைகளைப் படைத்துள்ளார். இப்போது விராட் ஐபிஎல்லில் தனது பெயரில் மற்றொரு சாதனையைப் படைத்துள்ளார். டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் இச்சாதனையை அவர் படைத்தார். அதாவது, ஐபிஎல் கிரிக்கெட்டில் 1,000 பவுண்டரிகள் விளாசிய முதல் வீரர் என்ற சாதனையை ஆர்சிபி வீரர் விராட் கோலி புரிந்துள்ளார். நேற்றைய தினம், முதலில் களமிறங்கிய பெங்களூர் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 163 […]
சென்னை : ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் இன்று (ஏப்.11) மோதுகின்றன. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று இரவு 7:30 மணிக்கு போட்டி தொடங்குகிறது. லேசான எலும்பு முறிவு காரணமாக நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து ருதுராஜ் விலகிய நிலையில், தோனி அணியை வழிநடத்த உள்ளார். நடப்பு ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணி மிகமோசமாக விளையாடி வருகிறது. இதுவரை 5 போட்டிகளில் விளையாடியுள்ள சிஎஸ்கே 4 போட்டிகளில் […]
சென்னை : 2 நாள் பயணமாக மத்திய உள்துறை அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான அமித் ஷா நேற்றிரவு 11:30 மணியளவில் சென்னை வந்தார். டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம், நேற்றிரவு சென்னை வந்த அவருக்கு பாஜக நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர். சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர விடுதியில் தங்கியுள்ள அவர், இன்று காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை தமிழ்நாடு பாஜக நிர்வாகிகள் மற்றும் கூட்டணிக் கட்சித் தலைவர்களுடன் […]
சென்னை : 2026 சட்டப்பேரவை தேர்தலை கவனத்தில் கொண்டு தமிழக வெற்றிக் கழகம் கட்சித் தலைவர் விஜய் செயல்பட்டு வருகிறார். தமிழக அரசியலில் அடுத்த பெரிய போட்டியாக உருவாக வேண்டும் என்ற நோக்கத்துடன், கட்சி தனது அமைப்பு மற்றும் கொள்கைகளை வலுப்படுத்தி வருகிறது. கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் நியமனம் முடிவடைந்த நிலையில், மேல்நிலை பொறுப்பாளர்கள் உள்ளிட்ட பதவிகள் என பல்வேறு நடவடிக்கைகள் மூலம் கட்சியின் கட்டமைப்பும் வலுப்படுத்தப்பட்டு வருகிறது. பேரவை தேர்தலில் முக்கிய பங்காற்றும் பூத் கமிட்டியின் […]
சென்னை : நேற்றைய தினம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தலைமை செயலலகத்தில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற உள்ளது. இந்த ஆலோசனை கூட்டத்தில் நீட் விலக்கு குறித்து அடுத்தகட்ட சட்ட நடவடிக்கைகள் ஈடுப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதில், அதிமுக புறக்கணித்த நிலையில், பாஜகவும் இந்த அனைத்துக்கட்சி கூட்டத்தை புறக்கணித்தது. இந்த நிலையில், பாஜகவினர் கூட்டத்தில் பங்கேற்கவில்லை என்றதும் பிரதான எதிர்க் கட்சியான அதிமுகவும் நீட்டுக்கு எதிரான கூட்டத்தை புறக்கணித்து, தங்கள் எஜமான விசுவாசத்தை காட்டியுள்ளனர் என்று அதிமுக நிலைப்பாடு […]