பிரேசில் : தெற்கு பிரேசிலின் கிராமடோ நகரத்தில் ஞாயிற்றுக்கிழமை சிறிய ரக விமானம் விபத்தானத்தில் குறைந்தது 10 பேர் உயிரிழந்த நிலையில், 15க்கும் மேற்பட்டோர் காயமடடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். விபத்து ஏற்பட்டு விமானம் பல கட்டிடங்களில் மோதியதன் காரணமாக, அந்த பகுதியில் இருந்த பல இடங்கள் சேதமும் அடைந்தது. மோதலின் போது ஏற்பட்ட தீயினால் புகையை உள்ளிழுத்து பலர் அவதிப்பட்டனர். அதுமட்டுமின்றி, பலத்த தீக்காயங்களால் பாதிக்கப்பட்ட இருவர் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.உள்ளூர் விமான நிலையத்திலிருந்து […]
டெல்லி: யூடியூப் உலகின் பல்வேறு மக்களுக்கு பணம் சம்பாதிப்பதற்கு மட்டும் இல்லாமல், மக்களுக்கு தேவையான வீடியோக்களை பார்ப்பதற்கும் ஒரு சமூக வலைத்தளமாக விளங்குகிறது. இவ்வாறு அனைத்து வசதிகளும் நிறைந்த யூடியூப் மில்லியனுக்கு மேலான பயனர்களை கொண்டுள்ளது. வீட்டில் இருந்து கொண்டே பயனர்கள் தங்களது வீடியோக்களை அப்லோடு செய்து அதன் மூலம் வருமானம் ஈட்டி வருகின்றனர். அரசியல், சுகாதாரம், கலாச்சாரம், சமையல் , விளையாட்டு, பொழுதுபோக்கு மற்றும் ஆபாசம் உள்ளிட்ட அனைத்திற்குகும் இந்த யூடியூப் தளத்தை மக்கள் பயன்படுத்தி […]
ரஷ்யா: ரஷ்யா – உக்ரைன் இடையே ட்ரோன் தாக்குதல்கள் தினசரி நிகழ்வு என்றாலும், உக்ரைனில் இருந்து 1000 கிமீ தொலைவில் உள்ள நகரத்தின் பெரிய பில்டிங் மீது வெடிகுண்டு நிரப்பிய ட்ரோன் மோதி வெடித்து சிதறியது. இதனால் நகரின் விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டது. இது ரஷ்ய மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்யாவின் கசான் நகரத்தில் உக்ரைன் நடத்திய, இந்த ஆளில்லா ட்ரோன் தாக்குதல் 9/11 பாணியில் இருப்பதாக பலரும் குறிப்பிடுகின்றனர். இந்த கசான் நகரம் மாஸ்கோவிலிருந்து […]
ஜெர்மனி : கிருஸ்துமஸ் பண்டிகை நெருங்கியுள்ள நிலையில், வெள்ளிக்கிழமை மாலை ஜெர்மனியின் மாக்டேபர்க் கிறிஸ்துமஸ் சந்தையில் மக்கள் பலரும் சந்தோசமாக தங்களுக்கு பிடித்த பொருட்களை வாங்கி கொண்டு இருந்தனர். அந்த சமயம், திடீரென ஒரு கார் ஒன்று சந்தையில் நுழைந்து வேண்டுமென்றே அங்கிருந்தவர்களை தாக்க தொடங்கியது. இந்த கொடூரமான தாக்குதலில் ஒரு குழந்தை உட்பட குறைந்தது 2 பேர் கொல்லப்பட்டனர். மேலும், 68 பேர் காயமடைந்தனர். உடனடியாக அங்கு பாதுகாப்பில் இருந்த காவல்துறையினர் இந்த மோசமான சம்பவத்தில் ஈடுபட்ட […]
ஸ்பெயின் : தற்போதைய நவீன உலகத்தில், ஒருவர் தான் செய்யும் இந்த குற்ற செயல் யாருக்கும் தெரியாது என நினைத்து என்ன செய்தாலும், அது தொழில்நுட்பத்தின் கண்ணில் சட்டெனெ பட்டுவிடுகிறது. சற்று தாமதமானாலும், குற்றவாளி தப்ப முடியாது. அப்படி ஒரு சம்பவம் தான் ஸ்பெயின் நாட்டில் நடைபெற்றுள்ளது. வடக்கு ஸ்பெயின் நாட்டில் ஆண்டலூஸ் எனும் கிராமத்தில் ஜார்ஜ் லூயிஸ் பெரெஸ் எனும் நடுத்தர வயது நபர் ஒருவர் கடந்த வருடம் அக்டோபரில் காணாமல் போயுள்ளார். அவரை தேடும் […]
ஆப்பிரிக்கா : இந்திய பெருங்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக கடந்த சில நாட்களுக்கு முன்பு வலுப்பெற்றது. இதனையடுத்து, இந்த வானிலை ஆய்வு மையம் இந்த புயலுக்கு ‘சிடோ’ என பெயர் வைப்பதாகவும் அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த புயல் காரணமாக மலாவி நாட்டில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. கடந்த டிசம்பர் 14-ஆம் தேதி சனிக்கிழமையன்று ஏற்பட்ட சிடோ சூறாவளி புயல் ஆப்பிரிக்காவை ஒரு வழி செய்தது என்றே சொல்லலாம். இந்த புயலின் காரணமாக குடிசை நகரங்கள் […]
வனுவாட்டு: ஆஸ்திரேலியா அருகேயிருக்கும் ‘வனாட்டு’ நாட்டில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் நேற்று ரிக்டர் அளவுகோலில் 7.4 ஆக பதிவாகியுள்ளது. பூமிக்கு அடியில் 10 கிமீ ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் அங்கிருக்கும் அமெரிக்க தூதரகத்தில் சேதம் ஏற்பட்டது. மேலும், சில கட்டடங்கள் இடிந்து விழுந்தன. இதனைத் தொடர்ந்து, நியூசிலாந்து உள்ளிட்ட நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இந்த நிலையில், போர்ட் விலாவில் உள்ள மீட்புப் படையினர் இடிந்து விழுந்த கட்டிடங்களுக்கு அடியில் சிக்கியவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று […]
பசிபிக் பெருங்கடல் : உள்ள வனுவாடூ தீவில் இன்று காலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் கொடுத்த தகவலின் படி, இந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.3 ஆக பதிவாகியிருப்பதாக தெரிவித்துள்ளது. போர்ட் விலா பகுதியில் இருந்து மேற்கு திசையில் 30 கி.மீ. தொலைவில் நிலத்துக்கடியில் சுமார் 43 கி.மீ. ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, அதனை சுற்றியுள்ள தீவுகள் மற்றும் நியூசிலாந்திற்கு நிலநடுக்கத்தைத் தொடர்ந்து […]
ஜார்ஜியா : நாட்டில் உள்ள மலை விடுதியான குடாரியில் உள்ள உணவகத்தில் 11 இந்தியர்கள் விஷவாய்ப்பு தாக்கி உயிரிழந்துள்ளனர். அவர்கள் இறந்தது இந்திய தூதரகத்தால் உறுதிப்படுத்தப்பட்டது. இதனையடுத்து, இவர்கள் உண்மையில் விஷய வாய்ப்பு தாக்கி உயிரிழந்தார்களா? அல்லது வேறு எதுவும் பிரச்சினையா என்பது பற்றி ஜார்ஜியாவின் உள் விவகார அமைச்சகம் பரிசோதனை நடத்த தொடங்கியது. அப்போது உயிரிழந்தவர்களின் உடலில் காயங்கள் அல்லது வன்முறை எதுவும் நடந்த அறிகுறிகள் எதுவும் இல்லை. இதனை தொடர்ந்து உள்ளூர் ஊடகங்கள், போலீஸ் […]
பாரிஸ் : பிரான்ஸ் நாட்டின் எல்லையில் அமைந்துள்ள மயோட் (Mayotte) தீவானது அண்மையில் வீசிய புயலால் பெரும் பொருட்சேதத்தையும், உயிர்சேதத்தையும் எதிர்கொண்டுள்ளது. இதுவரை ஏற்பட்ட உயிரிழப்புகள் ஆயிரத்தை கடந்துள்ளது. இன்னும் மீட்புப்பணிகள் தொடர்வதால் உயிர்சேத எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என தகவல் வெளியாகியுள்ளது. பிரான்ஸ் நாட்டிற்கு சொந்தமான, மயோட் தீவானது, இந்திய பெருங்கடலில், ஆப்பிரிக்க தென்கிழக்கு கடற்கரையில் அமைந்துள்ளது. இது அந்நாட்டு தலைநகர் பாரிசில் இருந்து 5000 மைல்களுக்கு அப்பால் உள்ளது. இது ஏழ்மையான பகுதியாக பார்க்கப்படுகிறது. சுமார் […]
சான் பிரான்சிஸ்கோ : செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப இயங்குதளமான OpenAI -ன் ChatGPTயை உருவாக்கியதில் தொழில்நுட்ப வல்லுனராக பணியாற்றிய சுசிர் பாலாஜி என்பவர் கடந்த நவம்பர் 26ஆம் தேதி அமெரிக்கா, சான் பிரான்சிஸ்கோவில் உள்ள அவரது வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். ChatGPT மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்த சில நாட்களில் பாலாஜியின் மரணம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனால் இந்த மரணம் பற்றி பல்வேறு சர்ச்சைகள் எழுந்த நிலையில் இந்த மரணம் தற்கொலை என […]
சீனா : இலங்கையில் உள்ள பள்ளிகளுக்கு 2025 ஆம் ஆண்டிற்கான பாடசாலை சீருடைகளை (100%) சீன மக்கள் குடியரசால் அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளதாக முன்னதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து, நேற்று (10) கொழும்பு துறைமுகத்தின் சர்வதேச கொள்கலன் முனையத்தில் வைத்து சீனா தூதர் இலங்கை பிரதமரிடம் சீருடைகளை வழங்கினார். சீனா வழங்கியுள்ள அந்த சீருடை துணிகள் மூன்று தொகுதிகளாக இலங்கையை வந்தடையவுள்ளது. ஏற்கனவே, முதலாவது மற்றும் இரண்டாவது தொகுதிகள் இலங்கையை வந்தடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. வரும் டிசம்பர் 25-ஆம் தேதி மூன்றாவது தொகுதியாகவும் […]
வாஷிங்டன் : அமெரிக்காவில் குடியேறி தொழில் ரீதியான குடியுரிமை (விசா), படிப்பதற்கான குடியுரிமை (விசா) போன்ற தற்காலிக குடியுரிமைகளை பெற்று வசிப்பவர்களை தவிர்த்து அங்கு நிரந்தர அமெரிக்க குடிமகன்களாக இருக்க அயல்நாட்டினர் நீண்ட வருடங்கள் அமெரிக்காவில் வாழ்ந்து கிரீன் கார்டு பெற வேண்டும். இல்லையென்றால், அமெரிக்காவில் பிறந்து இருந்தால் எளிதாக குடியுரிமை (விசா) கிடைத்துவிடும். இந்த பிறப்பால் குடியுரிமை பெற்ற அயல்நாட்டினர் அங்கு கணிசமான அளவில் வசித்து வருகின்றனர். அமெரிக்காவில் குடியுரிமை பெற்று வசிப்பதில் இந்தியர்கள் மட்டும் […]
சியோல் : அடுத்த ஆண்டு தாக்கல் செய்யப்பட உள்ள நிதிநிலை அறிக்கை சட்ட மூலம் குறித்து ஆளும் மக்கள் சக்தி கட்சிக்கும், எதிர்க்கட்சிக்கும் இடையே மோதல் ஏற்பட்டு வருகிறது. எனவே, தேச விரோத சக்திகளை ஒழிக்க அவசரநிலை இராணுவ சட்டம் கொண்டுவரப்படுகிறது என்று அதிபர் யூன் சூக் இயோல் அறிவித்தார். எதிர்க்கட்சிகள் வட கொரியாவிற்கு ஆதரவாக செயல்படுகிறது மற்றும் அரசை அதன் கடமையை செய்யவிடாமல் தடுக்கிறது அதன்காரணமாக இப்படியான அவசரநிலை சட்டம் கொண்டு வரப்பட்டதாகவும் அவர் அறிவித்தது […]
டமாஸ்கஸ் : உலகமே உற்றுநோக்கும் தலைப்பு செய்தியாக தற்போது மாறி இருக்கிறது சிரியா நாட்டின் உள்நாட்டு போரும், அந்நாட்டு அதிபர் தப்பியோடிய தகவலும் தான். உள்நாட்டில் பல்வேறு நாடுகளின் ஆதரவு பெற்ற கிளர்ச்சியாளர்கள் ஒவ்வொரு பகுதியாக ஆக்கிரமித்து வந்த நிலையில், ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம் என்ற கிளர்ச்சியாளர் குழு சிரியா நாட்டின் தலைநகரை கைப்பற்றியுள்ளது. இதனால், சிரியா நாட்டு அதிபர் பஷர் அல் அசாத் தனி விமானம் மூலம் வெளிநாட்டிற்கு தப்பியோடிவிட்டார். அவர் தற்போது ரஷ்யா மாஸ்கோவில் […]
டமாஸ்கஸி : சிரியா நாட்டில் உள்நாட்டு அரசுக்கு எதிரான கிளர்ச்சியாளர்கள் நாட்டை கைப்பற்றி விட்டனர். அவர்கள் தலைநகர் டமாஸ்கஸை முழுதாக கைப்பற்றுவதற்கு முன்பாக அந்நாட்டு அதிபர் பஷார் அல்-அசாத் தலைநகரை விட்டு தனிவிமானம் மூலம் தப்பி சென்றுள்ளார். இதனால் தப்பி சென்ற சிரியா நாட்டு அதிபரை அந்நாட்டு கிளர்ச்சியாளர்கள் தீவிரமாக தேடி வருகின்றனர். ராணுவம் மற்றும் உளவுத்துறை மூலம் தீவிர தேடுதல் வேட்டையில் அந்நாட்டு கிளர்ச்சியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இப்படியான சூழலில் அந்நாட்டு செய்தி நிறுவனங்களின் தகவலின்படி […]
கலிபோர்னியா : அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா மாகாணத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து அங்குஅந்நாட்டு வானிலை ஆய்வு மையத்தால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டு பின்னர் அது பின்வாங்கப்பட்டது. கலிபோர்னியா மாகாணத்தில் மேற்கு கடற்கரையோர பகுதியில் ரிகான் எல்லைக்கு அருகிலுள்ள ஹம்போல்ட் கவுண்டியின் கடலோர நகரமான ஃபெர்ண்டேலுக்கு மேற்கே வியாழன் அன்று உள்ளூர் நேரடி காலை 10.44 மணிக்கு இந்த நிலநடுக்கம் உணரப்பட்டதாக அந்நாட்டு ஐக்கிய அமெரிக்க நில அளவாய்வுத் துறை (USGS) தெரிவித்துள்ளது. கலிபோர்னியா மகானா […]
வாஷிங்டன் : கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் இருந்தே இஸ்ரேல் -ஹமாஸ் போர் நடந்து வருவது இன்னும் முடிவுக்கு வராமல் பரபரப்பான ஒரு சூழலில் தான் இருக்கிறது. இந்த போர் நடைபெற்ற போது ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு கொடூரமான தாக்குதல் நடத்தியது மட்டுமின்றி, யாரெல்லாம் கண்ணில் படுகிறார்களோ அவர்களும் தாக்கி நூற்றுக்கணக்கானோர் பணய கைதிகளாக பிடித்து சென்றார்கள். இதனால் இன்னுமே கடும் கோபமடைந்த இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு எங்கள் மீதே தாக்குதல் நடத்துகிறீர்களா? உங்களை அழிக்கும் வரை […]
கினியா : மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான கினியா நாட்டில் கடந்த 2021இல் இருந்து ஜனநாயக ஆட்சி கவிழ்க்கப்பட்டு ராணுவ ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு ராணுவ தளபதி மமதி டூம்பூயா அதிபராக தான்னை அறிவித்து ஆட்சி செய்து வருகிறார். அடுத்த வருடம் இங்கு மீண்டும் தேர்தல் நடைபெறும் என கூறப்படுகிறது. இப்படியான சூழலில், ராணுவ தளபதி மமதி டூம்பூயா பெயரில், கினியாவின் மிக பெரிய நகரங்களில் ஒன்றான N’Zerekore எனும் ஊரில் கடந்த ஞாயிறன்று உள்ளூர் […]
வாஷிங்டன் : அமெரிக்காவில் தற்போது அதிபர் பதவியில் இருக்கும் ஜோ பைடனின் மகன் ஹண்டர் பைடன் சட்டவிரோதமாக துப்பாக்கி வாங்கி வைத்திருந்தது, 1.4 மில்லியன் டாலர்கள் வரி ஏய்ப்பு ஆகிய வழக்குகளில் சிக்கிய காரணத்தால் அமெரிக்க நீதிமன்றம் அவரை குற்றவாளியாக அறிவித்தது. இதனையடுத்து, ஜோ பைடன் தனது மகன் ஹண்டர் பைடனுக்கு பொதுமன்னிப்பு வழங்கி குற்றவாளியில் இருந்து அவரை விடுதலை செய்தார். பொதுவாகவே, அமெரிக்காவின் சட்டத்தைப் பொறுத்தவரையில் ஜனாதிபதியாக இருக்கும் நபர் பொதுமன்னிப்பு வழங்கினால், எதாவது குற்ற […]