சென்னை :திருவண்ணாமலையின் சிறப்புகளும் திருக்கார்த்திகையின் சிறப்புகளையும் இந்த செய்தி குறிப்பில் காணலாம். திருவண்ணாமலை அண்ணாமலையார் ஆலய சிறப்புகள் ; திருவண்ணாமலை பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக கூறப்படுகிறது. திருவாரூரில் பிறந்தால் முக்தி ,காசியில் இறந்தால் முக்தி ,காஞ்சியில் வாழ்ந்தால் முக்தி, தில்லையை தரிசித்தால் முத்தி என்பார்கள் ஆனால் திருவண்ணாமலை நினைத்தாலே முக்தி என்று கூறுகின்றார்கள். ஈசன் ஜோதியாக நின்ற ஸ்தலம் இதுவே. பிரம்மா மற்றும் திருமாலின் ஆணவம் அழிந்த இடமாகும் , ஈசன் அர்த்தநாரீஸ்வரராக காட்சி கொடுத்த […]
சென்னை –சிக்கல் சிங்கார வேலன் கோவிலின் சிறப்புகளையும் அதிசயங்களையும் இந்த ஆன்மீக செய்தி குறிப்பில் காணலாம். ஆலயம் அமைந்துள்ள இடம் ; நாகப்பட்டினம் மாவட்டத்தில் இருந்து ஐந்து கிலோ மீட்டர் தொலைவில் சிக்கல் என்ற இடத்தில் நவநீதி ஈஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. இங்கு சிவபெருமான் நவநீதிஸ்வரராகவும், அம்பாள் வேல்நெடுங்கண்ணி ஆகவும் காட்சியளிக்கிறார்கள். நவநீதிஸ்வரர் வெண்ணெய் பிரான் என்றும் அழைக்கப்படுகிறது. முருகப்பெருமானுக்கு வேல் கொடுத்த நாயகி என்பதால் வேல் நெடுங்கண்ணி என்று அழைக்கப்படுகிறார் .இங்குள்ள முருகன் சிங்காரவேலன் என்று […]
சென்னை –பேரூர் பட்டீஸ்வரர் ஆலயத்தின் சிறப்புகளையும் அதன் ஐந்து அதிசயங்களையும் இந்த ஆன்மிக செய்தி குறிப்பில் காணலாம். ஆலயம் அமைத்துள்ள இடம் ; பல ஆயிரம் வருடங்கள் கடந்து மிகப் பழமையான ஆலயங்களில் ஒன்றுதான் பேரூர் பட்டீஸ்வரர் ஆலயம். இந்த ஆலயம் 2 ம் நூற்றாண்டில் கரிகால சோழனால் கட்டப்பட்டதாகும் .மேலும் அருணகிரிநாதர் மற்றும் கச்சப்ப முனிவரால் பாடப்பட்ட ஆலயமாகவும் திகழ்கிறது . இந்த ஆலயம் கோயம்புத்தூர் மாவட்டம் பட்டீஸ்வரம் என்ற இடத்தில அமைந்துள்ளது . காந்திபுரம் […]
தூத்துக்குடி –குலசை முத்தாரம்மன் கோவில் சிறப்புகள், அம்மன் எழுந்தருளிய வரலாறு மற்றும் பக்தர்களின் வழிபாடுகள் பற்றி இந்த ஆன்மீக செய்தி குறிப்பில் அறிந்து கொள்ளலாம். ஆலயம் அமைந்துள்ள இடம் ; திருச்செந்தூரில் இருந்து கன்னியாகுமரி சாலையில் சுமார் 20 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது குலசேகரபட்டினம் நகரம். இது முற்காலத்தில் வியாபார தலமாக விளங்கியது என பல வரலாற்று கதைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. இங்கு எழுந்தருளி இருக்கும் அம்மன் தான் முத்தாரம்மன். இங்குள்ள சிவபெருமான் ஞான மூர்த்தீஸ்வரர் என்ற […]
தூத்துக்குடி : புரட்டாசி மாத கடைசி சனிக்கிழமையை முன்னிட்டு தூத்துக்குடியில் உள்ள வைகுண்டபதி பெருமாள் கோயிலில் மூலவரான பெருமாள், வெங்கடாசலபதி அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். ஆயிரக்கணக்கான பக்தர்கள் அதிகாலை முதலே நீண்ட வரிசையில் நின்றபடி சுவாமியை தரிசனம் செய்து வருகின்றனர். புரட்டாசி மாதம் பெருமாளுக்கு உகந்த மாதமாகவும், அதிலும், புரட்டாசி மாதம் வரும் சனிக்கிழமைகளில் வைணவ ஆலயங்களில் சிறப்பு வழிபாடு நடத்தப்படும். இம்மாதம் பெருமாள் பல்வேறு அலங்காரங்களில் பக்தர்களுக்கு காட்சியளிப்பார். புரட்டாசி மாத கடைசி சனிக்கிழமையை முன்னிட்டு […]
சென்னை –மீன்குளத்தி பகவதி அம்மன் கோவிலில் வரலாறு மற்றும் சிறப்புகள் வழிபாட்டு முறைகளை இந்த செய்தி குறிப்பில் அறிந்து கொள்வோம். கோவில் அமைந்துள்ள இடம்; கேரள மாநிலம் பாலக்காடு அருகில் 18 கிலோமீட்டர் தொலைவில் பல்லசனா பகுதியில் மீன்குளத்தி பகவதி அம்மன் ஆலயம் அமைந்துள்ளது . கோயம்புத்தூரில் இருந்து எழுபது கிலோமீட்டர் தொலைவில் உள்ளது .மதுரை மீனாட்சி அம்மனே இங்கு மீன் குளத்தை பகவதி அம்மனாக வீற்றிருக்கிறார் என்று ஸ்தல வரலாறு கூறுகிறது. ஸ்தல வரலாறு; பல […]
பிரத்தியங்கிரா தேவி– பிரத்தியங்கிரா தேவி ஆலயத்தின் சிறப்புகள் மற்றும் அமைந்துள்ள இடம் பெற்று இப்பதிவில் அறியலாம். பிரத்தியங்கிரா தேவி ஆலயம் அமைந்துள்ள இடம்: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகில் 5 கிலோ மீட்டர் தொலைவில் சென்னை நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது.நடை திறக்கும் நேரம் காலை 6.30-1.30 . மாலை 3 – எட்டு மணி வரை. ஆலயத்தின் சிறப்புகள் : இந்த அம்மன் ராஜகோபுரம் அளவிற்கு உயரமாகவும் ,உக்கிரமாகவும், சிங்க வாகனத்தில் காட்சி கொடுக்கிறார். அம்மனின் உருவம் நரசிம்ம […]
வெள்ளியங்கிரி மலை -தென் கைலாயம் எனக் கூறப்படும் வெள்ளியங்கிரி மலைக்கு சிவனை பார்க்கச் செல்வது மிக கடினம் என்றாலும் கடந்து செல்லும் பாதை மிக அழகானது. வெள்ளையங்கிரி மலையில் அப்படி என்னதான் ரகசியம் உள்ளது மலைக்குச் செல்ல எடுத்துக்கொள்ளும் நேரம் மற்றும் மலையில் ஒளிந்திருக்கும் ரகசியம் பற்றி இப்பதிவில் தெரிந்து கொள்வோம். கடினமான மலையேற்றங்களில் வெள்ளியங்கிரி மலையற்றமும் ஒன்று. எத்தனையோ நபர்கள் பாதியிலேயே திரும்பி வந்திருக்கிறார்கள் .அதே நேரத்தில் வயது முதிர்ந்தவர்களும், மாற்று திறனாளிகளும் கூட மலைக்குச் […]
வழக்கறுத்தீஸ்வரர் கோவில் -பொதுவாக ஒருவர் கோர்ட், கேஸ் என்று சிக்கிவிட்டால் அவ்வளவு எளிதாக வெளியே வந்து விட முடியாது. நீதி அவர் பக்கம் இருந்தாலும் கூட மிகக் கடினம் தான் .ஆனால் எப்பேர்பட்ட வழக்காக இருந்தாலும் வழக்கறுத்தீஸ்வரரை வழிபட்டால் தீர்ந்துவிடும். அப்படிப்பட்ட இந்த திருத்தலம் அமைந்துள்ள இடம் மற்றும் சிறப்புகளை பார்ப்போம். திருத்தலம் அமைந்துள்ள இடம்: காஞ்சிபுரத்திலிருந்து ஒன்றரை கிலோ மீட்டர் தொலைவில் காந்தி ரோட்டில் பச்சையப்பன் மேல்நிலைப் பள்ளி அருகில் வழக்கறுத்தீஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. காலை […]
நாச்சியார் கோவில் -பொதுவாக எல்லா பெருமாள் கோவில்களிலும் கருடனின் சிலை மரத்திலோ அல்லது உலோகத்திலோ தான் இருக்கும். ஆனால் இங்கு மட்டும் தான் கல்லால் செய்யப்பட்டுள்ளது. இக்கோவில் அமைந்துள்ள இடம் ,வழிபாட்டு முறைகள் அதன் வரலாறு பற்றி இப்பதிவில் தெரிந்து கொள்வோம். திருத்தலம் அமைந்துள்ள இடம்: கும்பகோணத்தில் இருந்து குடை வாசல் செல்லும் வழியில் 10 கிலோமீட்டர் தொலைவில் நாச்சியார் கோவில் எனும் சீனிவாச பெருமாள் கோவில் அமைந்துள்ளது. நடை திறக்கும் நேரம் காலை 6- 12 […]
Tallest saneeswaran temple-பெரும்பாலும் அனைத்து கோவில்களிலுமே நவகிரகங்கள் மிகச் சிறிய அளவில்தான் இருக்கும் ஆனால் இந்த ஸ்தலத்தில் ஒவ்வொரு நவகிரகங்களுக்கும் மிகப்பிரமாண்டமாக சிலைகள் அமைக்கப்பட்டுள்ளது. இத்திருத்தலம் அமைந்துள்ள இடம் மற்றும் அதன் சிறப்புகள் பற்றி இப்பதிவில் பார்ப்போம். திருத்தலம் அமைந்துள்ள இடம் : விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் தாண்டி பாண்டிச்சேரி செல்லும் வழியில் மொரட்டாண்டி என்ற கிராமத்தில் விஸ்வரூப சனீஸ்வர பகவான் நவகிரக பரிகார ஸ்தலம் அமைந்துள்ளது. ஆலயத்தின் சிறப்புகள் : உலகிலேயே மிக உயரமான சனீஸ்வரர் […]
பிரம்மபூரிஸ்வரர் கோவில் -பொதுவாக நமக்கு நடக்கும் செயல்கள் அனைத்துமே நம் தலைவிதிபடி தான் நடக்கும் என கூறுவார்கள் .அப்படி நம் தலையெழுத்தையும் மாற்றி அமைக்கக்கூடிய பிரம்மா கோவில் அமைந்துள்ள இடம் மற்றும் அதன் சிறப்புகள் ,வழிபடும் முறைகள் பற்றி இப்பதிவில் பார்ப்போம். கோவில் அமைத்துள்ள இடம் : படைக்கும் சக்தி கொண்ட பிரம்மாவிற்கு ஒரு சில இடங்களில் தான் தனி சன்னதி அமைக்கப்பட்டு கோவில் இருக்கும். திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சமயபுரம் அருகில் சிறுகனூர் என்ற ஊரிலிருந்து […]
அரைக்காசு அம்மன்- புதுக்கோட்டை சமஸ்தானத்தின் குலதெய்வமாக வணங்கப்பட்ட அரைக்காசு அம்மனின் பெயர் காரணம் சிறப்புகள், அமைந்துள்ள இடம் மற்றும் அம்மனை வழிபடும் முறை பற்றி இப்பதிவில் தெரிந்து கொள்வோம். ஆலயம் அமைந்துள்ள பகுதி: புதுக்கோட்டை மாவட்டம் திருகோகர்ணம் என்ற ஊரில் திருச்சி நெடுஞ்சாலையில் கோகர்ணேஸ்வரர் பிரகதாம்பாள் ஆலயம் அமைந்துள்ளது. ஆலயத்தின் வரலாறு: புதுக்கோட்டையை ஆட்சி செய்த தொண்டைமான் அரசர்கள் குலதெய்வமாக இந்த அம்பாளை வழிபட்டு வந்தனர். இந்த ஆலயம் கிபி ஏழாம் நூற்றாண்டுக்கு உரியதாகும். இது ஒரு […]
பரிகார ஸ்தலம்- இந்தியாவிலேயே வேறு எங்கும் இல்லாத 12 ராசி சக்கரங்களைக் கொண்ட சிவன் பீடம் அமைந்துள்ள இடம் மற்றும் அதன் சிறப்புகள் ,ஒவ்வொரு நட்சத்திர காரர்களும் வழிபடும் முறைகள் பற்றி இப்பதிவில் தெரிந்து கொள்வோம். ஆலயம் அமைந்துள்ள இடம்: திருச்சி மாவட்டத்திலிருந்து 35 கிலோமீட்டர் தொலைவில் பவளவாடியில் இருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் ஏகாம்பரநாதர், காமாட்சி அம்மன் கோவில் அமைந்துள்ளது.காலை 7-இரவு 7 மணி வரை நடை திறக்கப்பட்டிருக்கும் . ஆலயத்தின் சிறப்பு: இங்கு கோவிலின் […]
பொதுவாக கோவில்கள் என்றாலே கோபுரம் தான் பெரிதாக இருக்கும். ஆனால் இங்குள்ள கால பைரவரின் சிலையே கோபுரமாக காட்சியளிக்கிறது. உலகிலேயே மிக உயரமான இந்த காலபைரவர் ஆலயம் அமைந்துள்ள இடம் மற்றும் அதன் சிறப்புகள், பரிகாரங்கள் பற்றி இப்பதிவில் தெரிந்து கொள்வோம். காலபைரவர் கோவில் அமைந்துள்ள இடம்: ஈரோடு மாவட்டம் காங்கேயம் செல்லும் வழியில் இருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் அவல்பூந்துறை என்ற ஊரில் இருந்து நாலு கிலோ மீட்டர் தொலைவில் ராட்டைசுற்றிபாளையம் என்ற ஊரில் அமைந்துள்ளது.பழனி […]
செல்வங்கள் 16 எனக் கூறப்பட்டாலும், அதில் மிக முக்கியமானது குழந்தை செல்வம் தான். இது ஒரு வரமாகவே கருதப்படுகிறது. இந்த வரம் கிடைத்தாலும் அது பாதுகாப்பாய் நம் கைகளுக்கு வர பல சிக்கல்கள் இருக்கும். அந்தச் சிக்கலை போக்க ஓர் அதிசய ஆலயமாக கர்ப்பரட்சாம்பிகை கோவில் கூறப்படுகிறது. இக்கோவிலின் சிறப்பு மற்றும் பரிகாரங்கள் பற்றி இப்பதிவில் தெரிந்து கொள்வோம். குழந்தை பேருக்காக மருத்துவத்துறை அதிக அளவில் வளர்ச்சி அடைந்தாலும் சில நேரங்களில் மருத்துவ சக்தியே தெய்வ சக்தியின் […]
இறைவனை நாம் வழிபடும் போது உடுத்தும் உடைகளுக்கு பல கட்டுப்பாடுகள் நம் முன்னோர்கள் கூறியுள்ளனர். கோவிலுக்குச் செல்லும்போதும் நம் வீட்டில் பூஜை செய்யும்போதும் கருப்பு உடை ஏன் அணிய கூடாது என்று பலருக்கும் இருக்கும் சந்தேகத்தை போக்கும் வகையில் இப்பதிவு அமைந்திருக்கும். வெள்ளை நிறம் துறவிகளுக்கான நிறமாகவும், காவி நிறம் சன்னியாசிகளுக்கு உரிய நிறமாகவும் மஞ்சள் மற்றும் சிகப்பு நிறம் மங்களகரமான நிறமாகவும் கருதப்படுகிறது. இவ்வாறு ஒவ்வொரு நிறங்களுக்கும் ஒவ்வொரு தன்மைகள் உள்ளது. இதில் கருப்பு நிறம் […]
பொதுவாக நோய் வாய் பட்டால் மருத்துவமனைக்கு தான் செல்ல வேண்டும் ஆனால் மருத்துவமனைக்கு எல்லாம் மருத்துவமனை இறைவனின் சன்னிதானம்தான் தான். மருத்துவத்தில் குணப்படுத்த முடியாத வியாதிகளுக்கு கூட இறைவனின் மகத்துவத்தால் குணப்படுத்த முடியும் என்பது அசைக்க முடியாத நம்பிக்கை . அந்த வகையில் இன்று நாம் திருக்கொடுங்குன்றநாதர் ஆலயத்தின் சிறப்பையும் பல ஆச்சரியமூட்டும் தகவல்களையும் தெரிந்து கொள்வோம். திருத்தலம் அமைந்துள்ள இடம் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் இருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள சிங்கம் புணரி அருகில் […]
ஆந்திர மாநிலம் திருப்பதியில் இருந்து 40 கிலோமீட்டர் தொலைவில் இருக்கக்கூடிய இந்தக் காள ஹஸ்தி என்ற ஊரில் உள்ள காளஹஸ்தீஸ்வரர் கோவிலின் சிறப்பு, மற்றும் பரிகாரங்கள் பற்றி இந்த பதிவில் பார்ப்போம். ஸ்தல வரலாறு ஸ்ரீ என்பது சிலந்தியும் காள என்பது பாம்பும் ஹஸ்தி என்பது யானையும் குறிக்கும். சிவபெருமானை வணங்கி சாப விமோசனம் பெற்று முக்தி பெற்றதால் ஸ்ரீ காள ஹஸ்தி என அழைக்கப்படுகிறது. கோவில் பஞ்ச பூத ஸ்தலங்களில் காற்று ஸ்தலம் என அழைக்கப்படுகிறது. […]
சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜைக்காக நவம்பர் 16ஆம் தேதி நடை திறக்கப்பட்டு பக்த்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். கடந்த டிசம்பர் 27ஆம் தேதி மண்டல பூஜை நடைபெற்று, அன்று இரவு நடை சாத்தப்பட்டது. அதன் பின்னர், டிசம்பர் 30ஆம் தேதி மீண்டும் மகர ஜோதி தரிசனத்திற்காக சபரிமலை சன்னிதானம் திறக்கப்பட்டது. டிசம்பர் 31ஆம் தேதி முதல் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். இன்று மகர ஜோதி தரிசனம் என்பதால் சன்னிதானத்தில் கூட்டத்தை தவிர்க்க 40 ஆயிரம் […]