ஹைதராபாத் : நேற்று சட்டமேதை அண்ணல் அம்பேத்கரின் 135வது பிறந்தநாள் நாடுமுழுவதும் அம்பேத்கர் ஜெயந்தியாக கொண்டாடப்பட்டது. நேற்றைய தினத்தில் தெலங்கானாவில் மாநில அரசு ஒரு முக்கிய உள் இடஒதுக்கீடு சட்டத்தை அமல்படுத்தியது. பட்டியலின (எஸ்.சி) பிரிவினருக்கு உள்இடஒதுக்கீடு குறித்த அரசாணையின் முதல் பிரதியை தெலுங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி பெற்றுக்கொண்டார். இதன் மூலம், தெலங்கானா மாநிலமானது பட்டியல் சாதிகளுக்கு உள் இடஒதுக்கீடு திட்டத்தை சட்டப்பூர்வமாக அமல்படுத்திய இந்தியாவின் முதல் மாநிலம் என்ற பெருமையை பெற்றது. இந்த சட்டம் […]
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தலில் கூட்டணி ஆட்சி தான். ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு போன்ற கோரிக்கைகள் தமிழக அரசியல் வட்டாரத்தில் தற்போது அதிகரிக்க ஆரம்பித்துள்ளன. ஏற்கனவே விசிக, காங்கிரஸ், பாமக, பாஜக ஆகிய கட்சிகள் இந்த முழக்கத்தை முன்வைத்து வருகின்றனர். இதில் ஒருபடி மேலே சென்று, காங்கிரஸ் மாநிலச் செயலாளர் ஷெரிப், காங்கிரஸ் மாநிலத் தலைவர் செல்வப்பேருந்தைக்கு ஒட்டிய பிறந்தநாள் வாழ்த்து போஸ்டரில் ‘ 2026 துணை முதலமைச்சர்’ என பதிவிட்டு பதற்றத்தை கிளப்பியுள்ளார். […]
சென்னை : காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற உறுப்பினருமான குமரி அனந்தன், இன்று அதிகாலை உயிரிழந்தார். வயது மூப்பு மற்றும் சிறுநீரக பிரச்சனை காரணமாக சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். தற்போது குமரி அனந்தன் உடல் சென்னை சாலிகிராமத்தில் உள்ள தமிழிசை சவுந்தரராஜன் வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அவரது உடலுக்கு பல்வேறு அரசியல் தலைவர்களும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், விசிக தலைவர் திருமாவளவன் […]
சென்னை : நீட் தேர்வு தொடர்பாக அனைத்து சட்டப்பேரவை கட்சித் தலைவர்கள் கூட்டம் இன்று மாலை தலைமைச் செயலகத்தில் நடக்கிறது. நீட் தேர்வு விவகாரத்தில் அடுத்தக் கட்ட சட்டப்பூர்வ நடவடிக்கைகள் எடுப்பது குறித்து சட்ட வல்லுநர்களுடன் முதலமைச்சர் ஸ்டாலின் கலந்து ஆலோசிக்கவுள்ளார். அனைத்துக் கட்சி கூட்டத்திற்கும் அவர் அழைப்பு விடுத்த நிலையில், அதிமுக பங்கேற்காது என இபிஎஸ் தெரிவித்துள்ளார். மேலும், உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன் காலமானார். 93 வயதான […]
சென்னை : தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவரும், தமிழிசை சவுந்தரராஜனின் தந்தையுமான குமரி அனந்தன் காலமானார். வயது மூப்பு காரணமாக சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் நள்ளிரவு உயிர் பிரிந்தது. குமரி அனந்தன் தமிழ் இலக்கியத்திலும் தனி முத்திரை பதித்தவர். பாராளுமன்றத்தில் தமிழில் பேசும் உரிமையை பெற்றுத் தந்தவர் என்ற பெருமை இவரைச் சேரும். தற்போது, குமரி அனந்தனின் மறைவு குறித்து காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளனர். அந்த வகையில், […]
சென்னை : காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், தமிழ்நாட்டின் அரசியல் மற்றும் இலக்கியத்தில் முக்கிய பங்கு வகித்தவருமான குமரி அனந்தன், நேற்றிரவு சென்னையில் காலமானார். அவருக்கு வயது 93. உடல்நலக் குறைவு காரணமாக சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், நள்ளிரவு 12:15 மணியளவில் உயிரிழந்தார். அவரது மறைவு தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குமரி அனந்தன், தெலங்கானா ஆளுநரும், முன்னாள் தமிழக பாஜக தலைவருமான தமிழிசை சௌந்தரராஜனின் […]
பிஹார் : மாநிலத்தின் பெகுசராய் நகரில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் “பலாயன் ரோகோ, நவுக்ரி தோ” (இடம்பெயர்வை நிறுத்து, வேலைவாய்ப்பு கொடு) என்ற பெயரில் நடைபெற்ற பேரணியில், கட்சியின் மூத்த தலைவரும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி கலந்து கொண்டு உரையாற்றினார். பேரணியில் கலந்துகொண்டு அவர் பேசுகையில் ” பிஹார் இளைஞர்கள் வேலை தேடி மற்ற மாநிலங்களுக்கு இடம்பெயர வேண்டிய நிலையை மாற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தினார். இளைஞர்கள் தங்கள் திறமையாலும் உழைப்பாலும் எதையும் சாதிக்கக் கூடியவர்கள். […]
டெல்லி : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நேற்று அமெரிக்காவில் இறக்குமதியாகும் அயல்நாட்டு பொருட்கள் மீது அதிகப்படியான புதிய பரஸ்பர வரி (இறக்குமதி வரி) விதிமுறையை விதித்துள்ளார். இந்த வரி விதிப்பில் சுமார் 10%-ல் இருந்து 49% வரையில் அமெரிக்கவுடன் வர்த்தகம் வைத்துள்ள ஒவ்வொரு நாடுகளுக்கும் ஒவ்வொரு விதமாக வரி விதிமுறையை அமல்படுத்தியுள்ளார். இதில் இந்தியாவுக்கு 26 சதவீதம் இறக்குமதி வரி விதிக்கப்பட்டு உள்ளது. இந்த இறக்குமதி வரி வரும் ஏப்ரல் 9ஆம் தேதி முதல் அமலுக்கு […]
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 72வது பிறந்தநாள் விழாவானது நேற்று சென்னை தரமணியில் உள்ள YMCA மைதானத்தில் நடைபெற்றது. இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், திமுக அமைச்சர்கள், திமுக கூட்டணி கட்சி தலைவர்கள் என பலர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வில் பேசிய திமுக கூட்டணி கட்சி தலைவர்கள் சிலர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை வாழ்த்தி பேசியதோடு மட்டுமல்லாமல் திமுகவை விமர்சனம் செய்யும் மற்ற கட்சியினரை விமர்சனம் செய்தனர். குறிப்பாக பெரும்பாலானோர் பாஜகவை […]
சென்னை : மக்கள் தொகை அடிப்படையில் மக்களவை தொகுதி மறுசீரமைப்பு என்பது இறுதியாக 1971-ல் நடைபெற்றது. அதற்கு பிறகு 2026-ல் மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பு நடைபெறும் என கூறப்படுகிறது. இதற்கு திமுக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. அதாவது, மக்கள் தொகை கட்டுப்பாட்டில் தீவிரமாக ஈடுபட்ட தென் மாநிலங்களில் மக்கள் தொகை கட்டுப்படுத்தப்பட்டது. இதனால் தற்போது மறுசீரமைப்பு செய்தால் தொகுதிகள் குறையும் வாய்ப்பு இருக்கிறது என்றும், தமிழ்நாட்டில் 39 தொகுதிகள் 31 தொகுதிகளாக […]
டெல்லி : இந்தியாவின் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி 1984 ஆம் ஆண்டு, அக்டோபர் 31 அன்று தனது சீக்கிய பாதுகாவலர்களால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது. இந்த சம்பவம் நடந்ததை தொடர்ந்து அந்த சமயம், அதாவது நவம்பர் 1 முதல் 4 வரை இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் சீக்கியர்களுக்கு எதிராக வன்முறை சம்பவங்கள் வெடித்தன. உதாரணமாக, டெல்லி நகரத்தில் மட்டும் ஆயிரக்கணக்கான சீக்கியர்கள் உயிரிழந்ததாகவும் அந்த சமயம் செய்திகள் வெளிவந்தது. அப்போது, பல அரசியல் […]
சென்னை : காங்கிரஸ் கட்சி என்றாலே அதில் உட்கட்சி பிரச்சனை அதிகம் இருக்கும் என்பது தொடர்கதையாகி வருகிறது. அதனை வெளிக்காட்டும் விதமாகவே உட்கட்சி பூசல்கள் அவ்வப்போது வெளிப்படவும் செய்கின்றன. தற்போது டிரெண்டில் இருக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் இரு தரப்பு என்பது தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, விருதுநகர் காங்கிரஸ் எம்பிமாணிக்கம் தாகூர் தரப்பு ஆகும் . ஏற்கனவே மாநில தலைவர் செல்வப்பெருந்தகை மாவட்ட தலைவர்களை கலந்து ஆலோசிப்பதில்லை, தன்னிச்சையாக முடிவு எடுக்கிறார் என அதிருப்தி மாவட்ட செயலாளர்கள் […]
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், “உங்களில் ஒருவன்” நிகழ்வில் பொதுமக்களின் பல்வேறு கேள்விகளுக்கு தனது கருத்துக்களை தெரிவித்துள்ளார். இந்த பதில் தொகுப்பு வீடியோவாக அவரது சமூக வலைதள பக்கத்தில் வெளியாகியுள்ளது. அதில், மத்திய பட்ஜெட், கூட்டணி கட்சிகள், எடப்பாடி பழனிச்சாமி விமர்சனம், மக்கள் நல திட்டங்கள், பாலியல் குற்றங்கள் என பல்வேறு விவகாரங்கள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதில், கூட்டணிக் கட்சிகளின் கருத்துகளை எவ்வாறு பார்க்கிறீர்கள்? அதில் முரண்கள் இருக்கிறதா? என்று கேள்வி […]
கொல்கத்தா : தமிழகம் போலவே மேற்கு வங்கத்திலும் அடுத்த ஆண்டு (2026) இடையில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் வேலைகளில் பிரதான ஆளும் கட்சியான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவரும் அம்மாநில முதலமைச்சருமான மம்தா பானர்ஜி மிகத் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். கடந்த 2011 மே மாதம் முதல் , 2016, 2021 என மூன்று சட்டமன்ற தேர்தலிலும் பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்துள்ளது திரிணாமுல் காங்கிரஸ். 3வது முறையாக முதலமைச்சர் பதவியில் தொடரும் மம்தா […]
மதுரை : கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி டெல்லி மாநில சட்டப்பேரவை தேர்தல், ஈரோடு கிழக்கு மற்றும் உ.பியில் மில்கிபூர் ஆகிய தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் ஆகியவை நடைபெற்றன. அதற்கான முடிவுகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு முன்னிலை நிலவரங்கள் வெளியாகி வருகின்றன. இதில் டெல்லி சட்டமன்ற தேர்தலில் ஆளும் ஆம் ஆத்மி தொடர்ந்து பின்னடைவை சந்தித்து வருகிறது. காங்கிரஸ் ஒரே ஒரு தொகுதியில் முன்னிலை பெற்றிருந்தது. தற்போது அந்த தொகுதியிலும் பின்னடைவையே சந்தித்து வருகிறது. பாஜக 25 […]
டெல்லி : 70 சட்டப்பேரவைகள் கொண்ட டெல்லி மாநிலத்திற்க்கு கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த தேர்தலில் ஆளும் ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் என மும்முனை போட்டி நிலவியது. கடந்த 2 சட்டமன்ற தேர்தலில் தொடர்ந்து வெற்றி பெற்று ஆட்சியை பிடித்த ஆம் ஆத்மி தற்போது தொடர்ச்சியாக 3வது முறையாக ஆட்சியை பிடிக்கும் என அக்கட்சி எதிர்நோக்கியது. ஆனால், தற்போது வரையில் வெளியாகி வரும் தேர்தல் முடிவுகள் சுமார் […]
டெல்லி : மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. மொத்தமுள்ள 70 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாகத் தேர்தல் இன்று நடைபெற்றது. இந்த தேர்தலில், ஆளும் ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் ஆகியவற்றுக்கு இடையே மும்முனை போட்டி நிலவுகிறது. தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு விறுவிறுப்பாக தொடங்கியிருந்த நிலையில், மக்கள் வேகமாக சென்று தங்களுடைய வாக்குகளை பதிவு செய்து வந்தனர். இதில் மாலை 5 மணி வரை டெல்லி சட்டமன்றத்தில் […]
டெல்லி : டெல்லி சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது. மேலும், இன்று ஈரோடு கிழக்கு (தமிழ்நாடு), மில்கிபூர் (உ.பி.) தொகுதிகளிலும் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. டெல்லி சட்டமன்றத்தின் 70 இடங்களுக்கு இன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. பிப்ரவரி 8 ஆம் தேதி வாக்குப்பதிவு எண்ணப்பட்டு தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும். அங்கு மூன்றாவது முறையாக ஆட்சியை தக்க வைக்க ஆம் ஆத்மியும், ஆட்சியை கைப்பற்ற பாஜக மற்றும் காங்கிரஸ் இடையே மும்முனை போட்டி நிலவுகிறது. […]
டெல்லி : நாளை மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், பட்ஜெட்டுக்கான கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. பட்ஜெட் கூட்டத்தொடரில், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, இந்தியாவின் வளர்ச்சி குறித்து சில விஷயங்களை பேசினார். குறிப்பாக, இந்தியாவின் IT மற்றும் Digital India திட்டங்கள் உலகளவில் அதிக வளர்ச்சி அடைந்துள்ளன எனவும்,உலகின் வளர்ந்த நாடுகளை இந்தியாவின் UPI பரிவர்த்தனை ஈர்த்துள்ளது எனவும் தெரிவித்தார். இது குறித்து பேசிய அவர் ” மத்திய அரசு, Make in India மற்றும் (Atmanirbhar […]
டெல்லி : 2025-26ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் நாளை தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், இன்று நாடாளுமன்றத்தின்பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்குகிறது. குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பட்ஜெட் கூட்டத்தொடரை தொடங்கி வைக்கவிருக்கிறார். அதனைத் தொடர்ந்து, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பொருளாதார ஆய்வறிக்கையை தாக்கல் செய்வார். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கவுள்ள நிலையில், நாடாளுமன்ற வளாகத்தில் நின்று பிரதமர் மோடி சில விஷயங்களை பேசியுள்ளார். அவர் என்ன பேசினார் என்பது பற்றி பார்ப்போம். அதில் பேசிய பிரதமர் மோடி ” […]