ஹுலுன்பியுர் : ஆசிய சாம்பியன் டிராபி ஹாக்கி தொடரின் இறுதி போட்டி இன்று சீனாவில் உள்ள ஹுலுன்பியுரில் நடைபெற்றது. இந்த தொடரின் தொடக்கம் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய ஹாக்கி அணி நேற்று தென் கொரியாவை வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறி இருந்தது. இன்று நடைபெற்ற இறுதி போட்டியில் இந்தியா ஹாக்கி அணி , சீனாவை எதிர்கொண்டது. இதில் இரு அணிகளும் சம பலத்துடன் மோதிக்கொண்டிருக்க இந்திய அணி வீரர் ஹர்மன்பிரீத் சிங் அடித்த ஒரு […]
ஹுலுன்பியுர்: சீனாவில் உள்ள ஹுலுன்பியுரில் இந்த ஆண்டுக்கான ஆசிய கோப்பை நடைபெற்று வருகிறது. இதில் சிறப்பாக விளையாடி வரும் இந்திய அணி தோல்வியை சந்திக்காமல் தற்போது அரை இறுதி வரை தகுதி பெற்றது. இதில், இன்று நடைபெற்ற அரை இறுதி போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று இறுதி போட்டிக்கும் தகுதி பெற்றுள்ளது. ஆசிய கோப்பை தொடரின் அரை இறுதி போட்டியில் இன்று இந்திய அணி தென்கொரியா அணியை எதிர்த்து விளையாடியது. விறுவிறுப்பாக தொடங்கிய இந்த போட்டியில் […]
FIH ப்ரோ லீக் 2024 (FIH Pro League 2024) ஹாக்கி தொடரானது தற்போது நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் வெற்றி பெரும் அணிகள் ஹாக்கி உலகக்கோப்பை மற்றும் ஒலிம்பிக் ஹாக்கி போட்டியிலும் கலந்து கொள்வர், அதனால் அதற்கான நுழைவு தொடராகவும் இந்த போட்டிகள் நடத்தப்படுகிறது. Read More : – #INDvsENG : கில்-ஜுரேல் நிதானத்தால் இந்திய அணி வெற்றி ..! டெஸ்ட் தொடரையும் கைப்பற்றி அசத்தல் ..! இந்த தொடரில் நேற்று இரவு 7.30 […]
கடந்த 7-ம் தேதி நடைபெற்ற போட்டியில் இந்திய மகளிர் ஹாக்கி அணி 0-3 என்ற கோல் கணக்கில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வியடைந்தது. இந்நிலையில், புவனேஸ்வரில் உள்ள கலிங்கா ஸ்டேடியத்தில் நேற்று நடைபெற்ற புரோ லீக் ஆட்டத்தில் இந்திய மகளிர் ஹாக்கி அணி 3-1 என்ற கோல் கணக்கில் அமெரிக்காவை வீழ்த்தியது. இந்திய அணி சார்பில் வந்தனா கட்டாரியா 9வது நிமிடத்திலும், தீபிகா 26வது நிமிடத்திலும், சமிலா டெட்டே 56வது நிமிடத்திலும் கோல் அடித்தனர். இந்த போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி […]
எஃப்ஐஎச் புரோ லீக்(FIH Pro League) மகளிர் ஹாக்கி தற்போது புவனேஸ்வரில் உள்ள கலிங்கா மைதானத்தில் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற போட்டியில் இந்திய மகளிர் ஹாக்கி அணி 0-3 என்ற கோல் கணக்கில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வியடைந்தது. ஆஸ்திரேலியா சார்பில் கேப்டன் கிரேஸ் ஸ்டீவர்ட் (19வது நிமிடம்), டாட்டம் ஸ்டீவர்ட் (23வது நிமிடம்), கெய்ட்லின் நோப்ஸ் (55வது நிமிடம்) ஆகியோர் கோல் அடித்தனர். ஆட்டத்தை ஆக்ரோஷமாக தொடங்கிய இந்தியா, ஆட்டம் தொடங்கிய இரண்டாவது நிமிடத்திலேயே பெனால்டி கார்னர் வாய்ப்பை […]