செப். 25ம் தேதி வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு!

செப் 25ஆம் தேதி வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு என இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

WeatherUpdate - ChennaiRains

சென்னை :வங்காள விரிகுடாவில் செப்டம்பர் 25 ஆம் தேதி புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. அதன்படி, அந்த தாழ்வு பகுதி மியான்மர்-வங்காளதேச கடற்கரையை நோக்கி நகரும் முன் கிழக்கு-மத்திய மற்றும் அருகிலுள்ள வடகிழக்கு வங்காள விரிகுடாவில் உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதாவது, செப்டம்பர் 24 ஆம் தேதி வாக்கில் வங்காள விரிகுடாவில் ஒரு சூறாவளி சுழற்சி உருவாகி , செப்டம்பர் 25 ஆம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக தீவிரமடைய வாய்ப்புள்ளது. இது செப்டம்பர் 26 ஆம் தேதி வாக்கில் மேலும் தீவிரமடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும்.

இந்த அமைப்பு செப்டம்பர் 24 முதல் 26 வரை ஒடிசாவின் பல பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதே நேரம், தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால், செப்டம்பர் 24 ஆம் தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம்  கூறியுள்ளது.

செப். 25ம் தேதி வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு!