Heat wave: இந்தியாவிலேயே அதிகப்பட்ச வெப்பநிலை பதிவான மாவட்டங்களில் தமிழ்நாட்டின் ஈரோடு மாவட்டம் 3ஆவது இடத்தை பிடித்துள்ளது. இந்தியாவில் அதிகபட்சமாக ஆந்திர மாநிலம் அனந்த்பூரில் 110.3 டிகிரி பாரன்ஹீட் வெயில் பதிவாகியுள்ளது. அதேபோல், தமிழகத்தில் 15 இடங்களில் வெயில் சதம் அடித்தது. அதில், அதிகபட்சமாக ஈரோடு மற்றும் சேலத்தில் 108.14° பாரன்ஹீட் வெப்பம் பதிவாகி உள்ளது. ஒடிசாவின் புவனேஸ்வர், ஆந்திராவின் கடப்பாவில் அதிகபட்ச வெப்பம் பதிவானது. அதற்கு அடுத்தப்படியாக ஈரோடு மற்றும் சேலத்தில் வெப்ப அலை வீசியதாகவும், […]
தமிழகத்தின் வடமாவட்டங்களில் அடுத்த இரண்டு நாட்களுக்கு இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் 5 மாவட்டங்களில் மழை பெய்யவுள்ளது. இதனால், 24 மணி நேரத்தில் ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, தர்மபுரி மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும், 48 மணி நேரத்தில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. […]
தமிழகத்தில் 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேற்கு இந்திய வங்கக் கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதால் அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு வடமேற்கு திசையில் ஆந்திராவை நோக்கி நகரக்கூடிய காற்றழுத்த தாழ்வுப்பகுதியால் வட மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அந்த வகையில், தமிழகத்தில் சேலம், வேலூர், திருவண்ணாமலை, நீலகிரி ஆகிய 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது என […]
நீலகிரி மாவட்டத்தில் கனமழை தொடரும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஒரு வரமாக கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் நிலச்சரிவு ஏற்பட்டது. இந்நிலையில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கனமழை நீடிக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னை புறநகர் பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. இதற்கிடையில் நீலகிரி மாவட்டம் தேவாலா மற்றும் பந்தலூர் பகுதியில் கனமழை பெய்ததால் புளியம்பாறையில் கோழிக்கொல்லி கிராமத்திற்கு செல்லும் தரைப்பாலம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது […]
தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு. தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 2 மணி நேரத்தில் கோவை, ஈரோடு, சேலம், தருமபுரி,திருப்பூர், தேனி, திண்டுக்கல் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பு இருக்கிறது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, அரியலூர், திருச்சி தஞ்சாவூர், புதுக்கோட்டை, பெரம்பலூர், ராமநாதபுரம், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது எனவும் சென்னையை […]