சென்னை : பகுஜன் சமாஜ் கட்சியின் (பிஎஸ்பி) தமிழ்நாடு மாநில ஒருங்கிணைப்பாளர் பதவியில் இருந்து ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடி நீக்கப்பட்டுள்ளார். ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட பிறகு பொற்கொடி கட்சியில் முக்கியப் பொறுப்புகளை ஏற்று பணியாற்றி வந்தார். உதாரணமாக பொற்கொடி, சென்னை வடக்கு மாவட்ட மாநிலச் செயலாளராகவும், மாநில ஒருங்கிணைப்பாளராகவும் பணியாற்றி வந்தார். இந்த சூழலில், பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநில ஒருங்கிணைப்பாளர் பதவியில் இருந்து ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடி நீக்கப்பட்டுள்ளார். இனி அவர் கட்சி பதவிகளில் ஈடுபட […]
சென்னை : 2 நாள் பயணமாக மத்திய உள்துறை அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான அமித் ஷா நேற்றிரவு 11:30 மணியளவில் சென்னை வந்தார். டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம், நேற்றிரவு சென்னை வந்த அவருக்கு பாஜக நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர். சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர விடுதியில் தங்கியுள்ள அவர், இன்று காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை தமிழ்நாடு பாஜக நிர்வாகிகள் மற்றும் கூட்டணிக் கட்சித் தலைவர்களுடன் […]
சென்னை : மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளிலிருந்து தென்தமிழகம் வரை ஒரு வளி மண்டல சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழ்நாட்டில் இன்று பரவலாக கனமழையும், நாளை முதல் 15ஆம் தேதி வரை மிதமான மழையும் பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. குறிப்பாக, கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள், நீலகிரி, தேனி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. மற்ற பகுதிகளில் மிதமான மழையும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசான மழையும் […]
சென்னை : காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், தமிழ்நாட்டின் அரசியல் மற்றும் இலக்கியத்தில் முக்கிய பங்கு வகித்தவருமான குமரி அனந்தன், நேற்றிரவு சென்னையில் காலமானார். அவருக்கு வயது 93. உடல்நலக் குறைவு காரணமாக சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், நள்ளிரவு 12:15 மணியளவில் உயிரிழந்தார். அவரது மறைவு தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குமரி அனந்தன், தெலங்கானா ஆளுநரும், முன்னாள் தமிழக பாஜக தலைவருமான தமிழிசை சௌந்தரராஜனின் […]
சென்னை : தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் நிலவி வந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, வடமேற்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக, வடக்கு-வடமேற்கு திசையில் மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நகர்ந்து, அதற்கடுத்த 24 மணி நேரத்தில் வடக்கு-வடகிழக்கு திசையில் திரும்பி மத்திய வங்கக்கடல் பகுதிகளில் படிப்படியாக […]
சென்னை : தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தெற்கு வங்கக்கடலில் அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. மேலும், தென்தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று முதல் 12ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் […]
சென்னை : தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, அடுத்த 48 மணி நேரத்தில் தென் வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. மேலும், தென்தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.இதன் காரணமாக, தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது […]
ராமேஸ்வரம் : புதிய பாம்பன் ரயில் பாலத்தை பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார். பாம்பன் ரயில் பாலத்தின் கட்டுமானப் பணிகள் கடந்த டிசம்பர் மாதம் நிறைவடைந்தது. இந்நிலையில், நண்பகல் 12 மணியளவில் இந்தியாவின் முதல் செங்குத்து தூக்கு கடல் பாலமான புதிய பாம்பன் பாலத்தை பிரதமர் திறந்து வைக்கிறார். இந்த பாலம், நூற்றாண்டு கால பழமையான பாம்பன் ரயில்வே பாலத்திற்கு மாற்றாகவும், நவீன தொழில்நுட்பத்துடன் மேம்படுத்தப்பட்ட வடிவமைப்புடனும் கட்டப்பட்டுள்ளது. மேலும், ரயில், கப்பல் போக்குவரத்தையும் கொடியசைத்து […]
சென்னை : தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று தமிழகத்தின் பல மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவலை தெரிவித்துள்ளது. 05-04-2025: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், […]
தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் தெற்கு கேரள பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக நேற்று நீலகிரி, கோயம்புத்தூர், இருப்பூர், ஈரோடு, தேனி, திண்டுக்கல், மதுரை, உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்தது. அதனை தொடர்ந்து இன்று மற்றும் நாளை வானிலை குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. இன்று தமிழகத்தில் 17 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், நாளை 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவலை தெரிவித்துள்ளது. அதன்படி, […]
சென்னை : இந்த கோடை மிகவும் வெப்பமாக இருக்கும், இயல்பை விட அதிகமான வெப்ப அலை நாட்கள் இருக்கும், இது கடுமையான தாக்கங்களை ஏற்படுத்தும் என வானிலை ஆய்வு மையம் தெரிவிதிருந்தது. இதனிடையே, சென்னை, செங்கல்பட்டு, மதுரை, விழுப்புரம், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று அதிகாலை முதலே கனமழை வெளுத்து வாங்குகியது. வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தென்னிந்திய பகுதிகளின் மேல், வளி மண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு […]
சென்னை : குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் சில மாவட்டங்களில் நேற்று இரவும் இன்று காலையும் கனமழை பெய்தது. உதாரணமாக நேற்று இரவு தூத்துக்குடி மாவட்டத்தில் கனமழை பெய்தது. இன்று காலை விழுப்புரம், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களிலும் மழை பெய்தது. இந்த சூழலில் இன்று இன்று (ஏப்ரல் 3) 12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவலை தெரிவித்துள்ளது. […]
சென்னை : தமிழ்நாட்டில் வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில், அடுத்த சில நாட்களில் கனமழை சில மாவட்டங்களில் பெய்ய வாய்ப்பு உள்ளது என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதன்படி, தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் வடதமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும், தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், […]
சென்னை : தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) ஒவ்வொரு ஆண்டும் குரூப் 1 தேர்வை நடத்தி, தமிழ்நாடு அரசின் உயர்நிலைப் பதவிகளுக்கு தகுதியானவர்களை தேர்வு செய்கிறது. அந்த வகையில், 2025 ஆம் ஆண்டிற்கான குரூப் 1 தேர்வுக்கான அறிவிப்பாணை இன்று (ஏப்ரல் 1) வெளியிடப்பட்டுள்ளது. இதன் மூலம் துணை ஆட்சியர் (Deputy Collector), துணை காவல் கண்காணிப்பாளர் (Deputy Superintendent of Police), உதவி ஆணையர் (Assistant Commissioner) போன்ற உயர் பதவிகளுக்கு ஆட்கள் தேர்வு […]
சென்னை : அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான மார்ச் மாத ஊதியம்ஏப்ரல் 2 ஆம் தேதி ஊதியம் வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இது மார்ச் மாதத்திற்கான சம்பளமாகும், இது பொதுவாக மாத இறுதியில் அல்லது அடுத்த மாத தொடக்கத்தில் வழங்கப்படுவது வழக்கம். இவர்களில் அரசு ஊழியர்கள் மட்டுமின்றி ஓய்வூதியதாரர்களும் அடங்குவர். பொதுவாக, ஏப்ரல் மாத தொடக்கத்தில் நிதியாண்டு மாற்றம் இருப்பதால், அரசு ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதில் சிறு மாற்றங்கள் ஏற்படுவது உண்டு. ஆதாவது, ஆண்டுதோரும், ஏப்.,1ம் […]
சென்னை : மக்கள் தொகை அடிப்படையிலான நாடாளுமன்ற தொகுதிகள் மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் இன்று கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டம் நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் சென்னை கிண்டியில் உள்ள ஐடிசி சோழா நட்சத்திர விடுதியில் காலை 10 மணிக்கு தொடங்க உள்ளது. மத்திய அரசு 2026-ல் மக்களவைத் தொகுதிகளை மக்கள்தொகை அடிப்படையில் மறுவரையறை செய்ய திட்டமிட்டுள்ளது. இதனால், மக்கள்தொகை கட்டுப்பாட்டை சிறப்பாக செயல்படுத்திய தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களில் […]
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளி மண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது. குமரிக்கடல் பகுதிகளிலிருந்து தென் தமிழகம் வரை ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று 7 மாவட்டங்களிலும் நாளை 10 மாவட்டங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதன்படி, இன்று (மார்ச் 22) தென் மாவட்டங்களான தேனி, திண்டுக்கல், மதுரை, […]
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை (மார்ச் 22) தொகுதி மறுசீரமைப்புக்கு எதிரான கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டம் சென்னையில் நடைபெற உள்ளது. 2026ஆம் ஆண்டிற்குப் பிறகு நடைபெறவுள்ள மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில், தொகுதி மறுவரையறை செய்யப்பட்டால், மக்கள் தொகையைக் கட்டுப்படுத்திய தென் மாநிலங்களுக்கு நாடாளுமன்றத்தில் பிரதிநிதித்துவம் குறைய வாய்ப்புள்ளது. அதற்கு மாறாக, மக்கள் தொகை அதிகமாக உள்ள வட மாநிலங்களுக்கு அதிக இடங்கள் கிடைக்கும் என கூறப்படுகிறது. இதனால் தமிழ்நாடு, கேரளா, […]
சென்னை : தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழ்நாட்டில் இன்று (மார்ச்.17) முதல் அடுத்த 6 நாட்களுக்கு ஒரு சில பகுதிகளில், லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு தமிழ்நாட்டில் மாலை 4 மணி வரை நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, நெல்லை, மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் […]
சென்னை : தமிழ்நாடு அரசின் பொது நிதிநிலை அறிக்கை கடந்த 14-ஆம் தேதியும், வேளாண்மைக்கான நிதிநிலை அறிக்கையை 15-ஆம் தேதியும் தாக்கல் செய்யப்பட்டன. இதனை தொடர்ந்து, பட்ஜெட்டுக்கு முன்னதாக ₹ குறியீட்டிற்கு பதிலாக தமிழ் எழுத்தான ரூ என்பதை ரூபாயின் அடையாள இலச்சினையை தமிழக அரசு மாற்றியது. இதனை குறிப்பிட்டு, தமிழ்நாடு சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட 2025-26 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டுக்கு கிடைத்த வரவேற்பு பற்றியும் ‘உங்களில் ஒருவன்’ என்கிற காணொளியில் முதலமைச்சர் ஸ்டாலின் பேசிருக்கிறார். இதனை எதிர்க்கட்சி […]