அடுத்த 4 முதல் 5 நாட்கள் தமிழகத்தில் நல்ல மழை.. தமிழ்நாடு வெதர்மேன்!

Tamil Nadu Weatherman

TN Rain: தமிழகத்தில் அடுத்த 4 முதல் 5 நாட்களில் நல்ல மழை பெய்யும் என தமிழ்நாடு வெதர்மேன் தகவல். கடந்த சில வாரங்களாகவே தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் வெயில் சுட்டெரித்து வருகிறது. அந்தவகையில், தமிழகத்தில் சில இடங்களில் வெயில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி சுட்டெரித்துள்ளது. திருப்பத்தூர், ஈரோடு, சேலம், மதுரை, தருமபுரி, கரூர், வேலூர், திருச்சி உள்ளிட்ட இடங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டை கடந்துள்ளது. அதுமட்டுமில்லாமல், சில பகுதிகளில் வெப்ப அலை வீசும் எனவும் … Read more

3 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை.!

TN Rain

தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று முதல் 3 நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுவையில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு தகவல் தெரிவித்துள்ளது. அதன்படி, இன்று (01.02.2024) தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். உள்தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது. நாளை (02.02.2024) தமிழகத்தில் ஓரிரு … Read more

நாளை மறுநாள் விலகுகிறது வடகிழக்கு பருவமழை.!

TN Rain

வடகிழக்கு பருவமழை தென் இந்திய பகுதிகளிலிருந்து வருகின்ற ஜனவரி 15-ஆம் தேதி வாக்கில் விலகுவதற்கான வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இலங்கை மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கிழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தென் தமிழ்நாடு மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று லேசான மழைக்கு வாய்ப்பு என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது என்றும், … Read more

எச்சரிக்கை: தூத்துக்குடி, நெல்லை உள்ளிட்ட 4 மாவட்டத்தில் வெளுத்து வாங்கும் மிக கனமழை!

rain update

வடதமிழக கடலோரப்பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது அதைப்போல தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் இன்று  இன்று பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. அதன்படி, திண்டுக்கல்லில் 3 மணிநேரம் கனமழை கொட்டியது. மேலும், கொடைக்கானலில் 4 மணிநேரமாக கனமழை கொட்டுகிறது. இந்த நிலையில், தமிழகத்தில் இன்று குமரி, நெல்லை, ராமநாதபுரம், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் … Read more

தமிழகத்தின் 4 மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை!

heavy rain

வடதமிழக கடலோரப்பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது அதைப்போல தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் பல மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. குறிப்பாக நேற்று மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் அதி கனமழை பெய்துள்ளது. இதில் கடலூர் மாவட்டத்தில்  ஜனவரி மாதத்தில் பெய்த மழை நிலவரப்படி, கடந்த 130 ஆண்டுகளில் இல்லாத அளவாக தற்போது 13.6 செ.மீ. மழை பதிவக்கியுள்ளது. வரலாற்றில் … Read more

கன்னியாகுமரி: நாளை நிவாரண நிதி வழங்கப்படும் – ஆட்சியர் அறிவிப்பு!

Kanyakumari Rains

கன்னியாகுமரி மாவட்டத்தில் இதுவரை வெள்ள நிவாரண நிதி ரூ.1,000 வாங்காத அல்லது விடுபட்ட குடும்ப அட்டைத்தாரர்களுக்கு நாளை நிவாரண நிதி வழங்கப்படும் என அம்மாவட்ட ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர் அறிவித்துள்ளார். இதுதொடர்பான அறிவிப்பில், கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 17 மற்றும் 18 ஆகிய இரண்டு நாட்கள் பெய்த வடகிழக்கு பருவமழையின் காரணமாக பாதிக்கப்பட்ட அனைத்து குடும்ப அட்டைத்தாரர்களுக்கும் தமிழக அரசு நிவாரண தொகையை அறிவித்தது. அதாவது, பருவமழையின் காரணமாக பாதிக்கப்பட்ட அனைத்து குடும்ப அட்டைத்தாரர்களுக்கும் முதலமைச்சர் அவர்கள் வெள்ள … Read more

4 மாவட்ட வெள்ள பாதிப்பால் 31 பேர் உயிரிழப்பு – மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.!

thoothukudi floods Nirmala

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தூத்துக்குடி, தென்காசி, நெல்லை மற்றும் குமரி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் அதிகனமழை பெய்தது. இதனால் நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மற்றும் குமரி உள்ளிட்ட மாவட்டங்கள் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு கடுமையாக பாதிக்கப்பட்டது. இந்நிலையில், வெள்ள பாதிப்புகள் குறித்தும் இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களை சந்தித்தார். நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி வெள்ள பாதிப்பால் இதுவரை 31 பேர் உயிரிழந்துள்ளதாக நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். மேலும், அனைத்து உதவிகளையும் மத்திய அரசு … Read more

அவன் ஊர்ல வெள்ளம் வந்தா அவன் போக கூடாதா? மாரி செல்வராஜுக்கு குரல் கொடுத்த வடிவேலு.!

Vadivelu - Mari Selvaraj

தென் மாவட்டங்களில் பெய்த கனமழையால், நெல்லை, தூத்துக்குடி, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டது. இந்த நிலையில், மழையால் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு அமைச்சர் உதயநிதியுடன் இயக்குநர் மாரி செல்வராஜ் சென்றதற்கு விமர்சனம் எழுந்தது. இந்த விமர்சனத்திற்கு தன்னுடைய பாணியில் பதிலடி கொடுத்துள்ளார் நடிகர் வடிவேலு இது தொடர்பாக அவர் பேசுகையில், “அது அவன் ஊரு. அந்த ஊரில் பள்ளம், மேடு எங்கே இருக்கு என்பது அவனுக்குத்தான் தெரியும்.  அவன் ஊரில் வெள்ளம் வந்தா அவன் போகாமல் வேறு … Read more

இந்த நான்கு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம்.!

rain

வளிமண்டல சுழற்சி காரணமாக தென் மாவட்டங்களில் பெய்த கனமழையால், நெல்லை, தூத்துக்குடி, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டது. இந்த நிலையில், தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு நான்கு மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, தமிழகத்தில் இன்று மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சாவூர் மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் டிசம்பர் 26 வரை  தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை … Read more

தென் மாவட்ட வெள்ள பாதிப்பு: முதலமைச்சரின் பயணத்தில் மாற்றம்.!

mk-stalin-1-2

கடந்த ஞாயிற்று கிழமை முதல் (டிசம்பர் 17 மற்றும் 18) திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய 4 மாவட்டங்களில் பெய்த வரலாறு காணாத கனமழை காரணமாக இதுவரை வெள்ளம் தேங்காத பகுதிகளில் எல்லாம் மழைநீர் தேங்கி உள்ளது. குறிப்பாக திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டம் வெள்ளத்தால் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தூத்துக்குடியில் வெள்ள சேதங்களை ஆய்வு செய்யும் முதலமைச்சரின் பயணத்தில் மீண்டும் மாற்றம் இன்றிரவு மதுரை சென்று அங்கிருந்து நெல்லை செல்ல திட்டமிட்டிருந்த நிலையில், தென் மாவட்ட … Read more