சென்னை: மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, லட்சத்தீவு மாலத்தீவு பகுதிகளில் நிலவுகிறது. இது அடுத்த 12 மணி நேரத்தில், மேற்கு திசையில் நகர்ந்து, படிப்படியாக வலுவிழக்கக் கூடும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், தெற்கு அந்தமான் கடலின் மத்திய பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி வருவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இது நாளை குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்று, அடுத்த […]
சென்னை : தமிழக வானிலை நிலவரம் மற்றும் அடுத்தடுத்த நாட்களில் பெய்யும் கனமழை அளவு குறித்து தென்மண்டல வானிலை ஆய்வு மைய தலைவர் பாலச்சந்திரன் செய்தியாளர்களுக்கு பல்வேறு தகவல்களை அளித்தார். அதில், தற்போதைய மழை அளவு மற்றும் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி குறித்தும் கூறினார். அதில், தமிழக நாளை தெற்கு அந்தமான் கடல்பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகும். அதனை தொடர்ந்து அது காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாகி மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து தமிழக […]
புதுச்சேரி : ஃபெஞ்சல் புயல் ஒரு தாக்கம் காட்டிவிட்டு தான் சென்றிருக்கிறது என்றே சொல்லவேண்டும். குறிப்பாக, இந்த புயல் புதுச்சேரிக்கு பக்கத்தில் கரையை கடந்த காரணத்தால் அங்கு கனமழை பெய்து வெள்ளம் ஏற்ப்பட்டது. பல பகுதிகளில் நீர் தேங்கி பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டது என்று கூட சொல்லலாம். இதனையடுத்து, புதுச்சேரியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரேஷன் கார்டுகள் மூலம் ரூ.5,000 நிவாரண நிதியாக வழங்கப்படும் என ஏற்கனவே புதுச்சேரி அரசு அறிவித்திருந்தது. இந்நிலையில், நிவாரணம் வழங்குவதற்காக […]
சென்னை: வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியானது வலுப்பெற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறியிருக்கிறது. அடுத்த 24 மணி நேரத்திற்கு இது மேற்கு-வட மேற்காக நகர்ந்து இலங்கை தமிழக எல்லையை கடக்கக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இதன் தாக்கத்தினால் தமிழகத்தின் பல பகுதிகளில் நாளை அதி கனமழை பெய்வதற்கான வாய்ப்புகள் உள்ளதென சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், டெல்டா மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. அதன்படி, இன்றைய […]
சென்னை: வங்கக்கடலில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி தொடர்ந்து அதே இடத்தில் நீடிப்பதால் மேற்கு- வடமேற்கு நோக்கி நகர்ந்து அடுத்த 12 மணி நேரத்தில் வலுவடைய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இதன் காரணமாக, தமிழகத்துக்கு இன்று முதல் நான்கு நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, இன்று (டிச.10) நாகை, திருவாரூர், தஞ்சாவூர், மயிலாடுதுறை, கடலூர் மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. நாளை (டிச.11) […]
சென்னை: தென் கிழக்கு வங்க கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி இன்று (டிச.09) வலுப்பெறும் என கூறப்பட்டிருந்த நிலையில், காற்றழுத்த தாழ்வுப் பகுதி 24 மணி நேரத்திற்குள் வலுப்பெறும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும், மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, 11-ஆம் தேதி வாக்கில், தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் இலங்கை தமிழக கடலோரப் பகுதிகளை ஒட்டி நிலவக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, தமிழகத்திற்கு வரும் 11 மற்றும் 12 ஆகிய […]
சென்னை : கடந்த வாரம் வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஃபெஞ்சல் புயலாக மாறி வடதமிழக மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி ஆகிய பகுதிகளில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. கனமழை மீட்பு பணிகள் தற்போது வரை தொடர்ந்து வருகிறது. இப்படியான சூழலில் வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது . இப்படியான சூழலில் இந்திய வானிலை ஆய்வு மையம் அண்மையில் வெளியிட்ட தகவலின்படி, வங்கக்கடலை ஒட்டிய […]
சென்னை : வங்கக் கடலில் உருவான “ஃபெஞ்சல் புயல்” காரணமாக பெய்த கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தருமபுரி ஆகிய மாவட்டங்களில் தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் சீரமைப்பு மற்றும் நிவாரண பணிகளை மேற்கொண்டு வருகிறது. இந்தச் சேதங்கள் குறித்து, தற்காலிக சீரமைப்பு பணிகளுக்கு ரூ.2,475 கோடி தேவைப்படுகிறது எனவும், இந்த இயற்கைப் பேரிடரின் விளைவுகளை சமாளிக்க மாநிலத்திற்கு அவசர நிதி உதவி தேவைப்படுவதாகவும், பாதிப்புகளின் அளவு மற்றும் மறுசீரமைப்பின் அவசரத் தேவையைக் கருத்தில் […]
சென்னை : தமிழ்நாட்டில் ஃபெஞ்சல் புயலினால் ஏற்பட்டுள்ள கடுமையான மற்றும் வரலாறு காணாத சேதங்களைக் கருத்தில்கொண்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். புயலின் தாக்கம் ஃபெஞ்சல் புயலின் தாக்கம் தமிழகத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது என்று தான் சொல்லவேண்டும். ஏனென்றால், இந்த புயலின் காரணமாக, திருவண்ணாமலை, புதுச்சேரி, கடலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்து வெள்ளம் ஏற்பட்டது. குறிப்பாக, திருவண்ணாமலை மாவட்டத்தில் பெய்த கனமழையால் வெள்ளம் ஏற்பட்டதோடு நிலச்சரிவு ஏற்பட்டு பரிதாபமாக 7 பேர் […]
சென்னை : தமிழகம், புதுவையில் கோரத் தாண்டவம் ஆடிய ஃபெஞ்சல் புயல், 12 மனித உயிர்களை பலி வாங்கியுள்ளதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இந்தப் புயல் மழையினால் ஏற்பட்ட வெள்ளம் பெரிய அளவில் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளதோடு, பெரும்பாலான பகுதிகளை வெள்ளத்தில் மூழ்கடித்துள்ளதாகவும், பாதிப்புக்குள்ளான பகுதிகளில் வசிக்கும் மக்களை இடம்பெயரச் செய்துள்ளனர். புயல் பாதிப்புகள் குறித்து பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ள அவர் தற்காலிக சீரமைப்பு பணிக்காக 2,475 கோடி கோரியுள்ளார். முதற்கட்ட கணக்கெடுப்பில் 69 லட்சம் குடும்பங்கள், 2,11,139 […]
விழுப்புரம் : ஃபெஞ்சல் புயல் காரணமாக, புதுச்சேரி, கிருஷ்ணகிரி, விழுப்புரம், கடலூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை ஏற்பட்டு வெள்ளம் வந்துள்ளது. எனவே, வெள்ளத்தில் சிக்கி வீட்டிற்கு உள்ளே இருக்கும் மக்களை மீட்கும் பணிகள் ஒரு பக்கம் நடைபெற்று வரும் நிலையில், மற்றோரு பக்கம் விடுமுறை பற்றிய விவரங்கள் வெளியாகி வருகிறது. ஏற்கனவே, கடலூர் மாவட்டத்தில் மீண்டும் கனமழை பெய்து வருவதன் காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை என்கிற அறிவிப்பு வெளியாகி இருந்தது. அதனை தொடர்ந்து தொடர் மழை மற்றும் […]
சென்னை : டிசம்பர் 1-ஆம் தேதி காலை வடதமிழகம் மற்றும் புதுவை பகுதிகளில் நிலவிய “ஃபெஞ்சல்” புயல், மதியம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுக்குறைந்து, மாலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் இன்று காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாகவும் மேலும் வலுக்குறைந்து, வடதமிழக உள் பகுதிகளில் நிலவுகிறது. இது, நாளை காலை தென்கிழக்கு மற்றும் மத்தியகிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவக்கூடும். இதன் காரணமாக தமிழகத்தில் நாளை பல மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு […]
புதுச்சேரி : ஃபெஞ்சல் புயல் தாக்கம் புதுச்சேரியில் அதிக அளவு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. அதற்கு முக்கிய காரணமே நேற்று புயல் புதுச்சேரியில் பகுதியில் கரையை கடந்தது தான். இதன் காரணமாக புதுச்சேரியில் பல இடங்களில் கனமழை கொட்டி தீர்த்தி பல இடங்களில் நீர் தேங்கியது. இதனால் வெள்ளப்பெருகும் ஏற்பட்டு புதுச்சேரி குளம் போல் காட்சியளிக்கிறது. 20 ஆண்டுகளில் இல்லாத அளவு பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இயல்பு வாழ்க்கை முற்றலும் பாதிக்கப்பட்டு அவர்கள் தண்ணீரில் […]
சென்னை : வட கடலோர தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் நேற்றைய காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவிழந்து இன்று (2 டிசம்பர்) வட உள் தமிழகம் அதே பகுதியில் நீடித்தது. குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை டிசம்பர் 3 ஆம் தேதி வாக்கில் தென்கிழக்கு மற்றும் அதை ஒட்டிய கிழக்கு-மத்திய அரபிக்கடலில் வடக்கு கேரளா-கர்நாடகா கடற்கரையில் உருவாக வாய்ப்புள்ளது. இதன் காரணமாக மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டு கடற்கரைகளுக்கு 2-ஆம், 3 -ஆம் தேதி காற்றின் வேகம் […]
திருவண்ணாமலை : ஃபெஞ்சல் புயல் காரணமாக தமிழக்தின் பல மாவட்டங்களில் கனமழை பெய்து வெள்ளம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, திருவண்ணாமலை மாவட்டத்தில் பெய்த தொடர் மழை காரணமாக திருவண்ணாமலையில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த மண் சரிவில் வ.உ.சி நகர் 9-வது தெரு மேட்டில் உள்ள வீடுகள் மண்ணில் புதைந்தது. மண்ணில் புதைந்த அந்த வீடுகளில் மொத்தமாக 7 ஏழு பேர் சிக்கிக் கொண்டுள்ளதாக வெளிவந்த தகவலின் படி, தற்போது அந்த பகுதியில், தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் மற்றும் […]
கடலூர் : ஃபெஞ்சல் புயல் ஏற்படுத்திய தாக்கம் பெரிய அளவில் மக்களின் இயல்பு வாழ்க்கையை பாதித்துள்ளது என்றே கூறலாம். ஏனென்றால், இந்த புயலின் காரணமாக புதுச்சேரி, விழுப்புரம், தர்மபுரி, கடலூர், கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களின் பல பகுதிகளில் கனமழை பெய்து சில பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. குறிப்பாக, கிருஷ்ணகிரி மாவட்டத்தின் ஊத்தங்கரை பகுதியில் இதுவரை இல்லாத அளவுக்கு 50.3 செ.மீ. மழை பெய்த காரணத்தால் அங்கு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அதைப்போல, புயல் மழையின் கோரத் தாண்டவத்தால் விழுப்புரம் மற்றும் […]
கிருஷ்ணகிரி : ஃபெஞ்சல் புயல் நேற்று கரையை கடந்த நிலையில், அது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக மேலும் வலுவிழந்து வட உள் தமிழ்நாட்டில் நிலவி வருவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவலை தெரிவித்துள்ளது. இந்நிலையில், இந்த புயலின் காரணமாக புதுச்சேரி, விழுப்புரம், தர்மபுரி, கடலூர், கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களின் பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதில் குறிப்பாக கிருஷ்ணகிரி மாவட்டத்தின் ஊத்தங்கரை பகுதியில் பெய்த கனமழை மக்களின் இயல்பு வாழ்க்கையை முற்றுலும் பாதித்துள்ளது. ஏனென்றால், […]
சென்னை : ஃபெஞ்சல் புயல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்து விட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை அருகே நள்ளிரவு கரையை கடந்த இந்த புயல் இன்று காலை 11.30 மணிக்கு வலுவிழந்ததாக வானிலை மையம் கூறியுள்ளது. கடந்த 12 மணி நேரமாக நகராமல் புதுச்சேரிக்கு அருகே மையம் கொண்டுள்ளது. அடுத்த 12 மணி நேரத்தில் மேற்கு திசையில் மெதுவாக நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மேலும் வலுவிழக்கும் என இந்திய வானிலை ஆய்வு கணித்துள்ளது. தற்பொழுது, கடலூரில் […]
சென்னை : ஃபெஞ்சல் புயல் நேற்று மாலை 5.30 மணிக்கு கரையை கடக்கத் தொடங்கி இரவு 11.30 மணியளவில் கடந்து முடித்ததாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருந்தது. ஆனால், இன்று காலை வரை புயல் கடலிலேயே இருப்பதாகவும் அது கரையை கடக்கவே இல்லை என்றும் தனியார் வானிலை ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இதனிடையே, புயல் புதுச்சேரி அருகே கரையை கடந்ததாக சொல்லப்பட்ட நிலையில், கடலூர் துறைமுகத்தில் ஏற்றப்பட்ட 7ம் புயல் கூண்டு உட்பட 9 துறைமுகங்களிலும் ஏற்றப்பட்ட […]
புதுச்சேரி : ஃபெஞ்சல் புயல் புதுச்சேரியில் கோரத் தாண்டவம் ஆடியுள்ளது. ஒரே நாளில் பெய்த 47 செ.மீ மழையால் கருவடிக்குப்பம், காட்டுக்குப்பம் உள்ளிட்ட இடங்களில் உள்ள குடியிருப்புகளை வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. குறிப்பாக சித்தன்குடி, வெங்கட்டா நகரில் நிறுத்தப்பட்டிருந்த கார்கள் 100-க்கும் மேற்பட்ட கார்கள், பைக்குகள் வெள்ளத்தில் மூழ்கி சேதமடைந்துள்ளன. பல இடங்களில் சாலையோரங்களில் இருந்த மரங்கள், மின் கம்பங்கள் சாய்ந்துள்ளன. மீட்புப் பணிகளில் அரசு ஊழியர்கள், தன்னார்வலர்கள் களமிறங்கியுள்ளனர். குறிப்பாக, வீடுகளை சுற்றி தேங்கி நிற்கும் மழைநீரால் […]