சென்னை: வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்ற நிலையில், சென்னைக்கு கிழக்கு – வடகிழக்கே சுமார் 450 கி.மீ-இல் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலை கொண்டுள்ளது. மேலும், வங்கக் கடலில் கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 7 கி.மீ., வேகத்தில் அந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நகர்ந்துள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இந்த தாழ்வு மண்டலம் மெதுவாக கிழக்கு – வடகிழக்கு நோக்கி நகர்ந்து, அடுத்த […]
சென்னை: மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, லட்சத்தீவு மாலத்தீவு பகுதிகளில் நிலவுகிறது. இது அடுத்த 12 மணி நேரத்தில், மேற்கு திசையில் நகர்ந்து, படிப்படியாக வலுவிழக்கக் கூடும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், தெற்கு அந்தமான் கடலின் மத்திய பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி வருவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இது நாளை குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்று, அடுத்த […]
சென்னை: தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், தென்காசி, விருதுநகர் ஆகிய 11 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் புகுதிகளில் காலை 10 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. தொடர்ந்து மழை பெய்வதாலும், மழைநீர் சூழ்ந்து கிடப்பதாலும் மாணவர்கள் பாதுகாப்பு கருதி இன்று 7 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து அந்தந்த மாவட்ட ஆட்சியாளர்கள் உத்தரவிட்டுள்ளனர். அதன்படி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி […]
சென்னை: வங்கக்கடலில் டிசம்பர் 16ல் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. நாளை தெற்கு அந்தமான் கடல் பகுதியில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி உருவாகி, அடுத்த 48 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பின், அது மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து, தமிழ்நாடு கடற்கரை பகுதிகளை நோக்கி நகரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இதன் காரணமாக, தமிழகத்தில் இன்று […]
சென்னை : வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தென்மாவட்டங்களில் நேற்று முதல் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்கு ஒரு சில இடங்களில் சாலைகளில் நேர் தேங்கும் நிலை ஏற்பட்டுள்ளது இந்நிலையில், கனமழை பாதிப்புகளையும், தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் மீட்புப்பணிகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சென்னை எழிலகத்தில் உள்ள மாநில அவசரகால கட்டுப்பாட்டு அறையில் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வு பணிகள் முடிந்த பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் கூறுகையில், […]
சென்னை: கனமழை எதிரொலியால் தஞ்சை, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, விழுப்புரம், திருச்சி, கரூர், அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், திண்டுக்கல், மதுரை, கடலூர், புதுக்கோட்டை, மயிலாடுதுறை, ராமநாதபுரம், விருதுநகர், சேலம், சிவகங்கை, தேனி, தருமபுரி, நாகை, நாமக்கல், திருப்பூர் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியிலும் கல்வி நிலையங்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர் கனமழை காரணமாக பூண்டி ஏரியில் இருந்து தற்போது விநாடிக்கு 12,760 கன அடி நீர் […]
சென்னை : தென்மேற்கு வங்கக்கடலில் உருவான புதிய காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மிதமானது முதல் கனமழை வரை பெய்து வருகிறது. இந்த கனமழை அடுத்தடுத்த நாட்களிலும் தொடரும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் தற்போது வெளியிட்ட தகவலின்படி, தென்மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய மாவட்டங்களுக்கு இன்று அதிகனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதே போல, திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் […]
சென்னை: கனமழை காரணமாக பூண்டி ஏரி வேகமாக நிரம்பி வரும் நிலையில் இன்று மதியம் 1.30 மணிக்கு திறக்கப்படுகிறது. 35 அடி கொண்ட ஏரியில் தற்போது 34.05 அடி நீர் உள்ளது. இதனால், மதியம் 1.30 மணிக்கு விநாடிக்கு 1,000 கன அடி நீர் திறக்கப்படுகிறது என திருவள்ளூர் ஆட்சியர் அறிவித்துள்ளார். இதனால், கரையோர மக்களுக்கு இன்று முதற்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், திருவண்ணாமலை சாத்தனூர் அணையில் இருந்து விநாடிக்கு 10,000 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது. […]
சென்னை : வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மிதமானது முதல் சில இடங்களில் கனமழை வரை பெய்ய கூடும் என வானிலை ஆய்வு மையம் முன்னதாக தெரிவித்து இருந்தது. ஏற்கனவே இந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக டிசம்பர் 16ஆம் தேதி வரையில் தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்த நிலையில், இன்று பகல் 1 மணி வரையிலான மழை அப்டேட் குறித்து […]
சென்னை: தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய கிழக்கு இந்திய பெருங்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, (10-12-2024) காலை 8.30 மணி அளவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவுகிறது. இது அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு – வடமேற்கு திசையில், தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் இலங்கை – தமிழக கடலோரப்பகுதிகளை நோக்கி நகரக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் […]
சென்னை : வடகிழக்கு பருவமழை டிசம்பர் 11-ஆம் தேதி இரவு முதல் 15-ஆம் தேதி வரை தீவிரமடைகிறது என டெல்டாவெதர்மேன் ஆர் ஹேமச்சந்தர் தெரிவித்திருக்கிறார். அத்துடன், புயல், வெள்ளம் பாதித்த புதுச்சேரி, கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி மாவட்டங்கள் எச்சரிக்கையாக இருக்கவேண்டும் எனவும் எக்ஸ் வலைத்தள பக்கத்தில் தெரிவித்து இருக்கிறார். அவர் கொடுத்த தகவலின் படி, இன்று (06.12.2024) முதல் அடுத்த 5 நாட்களுக்கு (11.12.2024) வரை தமிழகத்தில் வறண்ட வானிலையும், இரவு/அதிகாலை அதிக பனிப்பொழிவும் நிலவும் […]
சென்னை: வடதமிழக உள் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று காலை, கடலோர கர்நாடக பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்தியகிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக நிலவுகிறது. இதன் காரணாமாக, தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. 11 மாவட்டங்களில் கனமழை மேலும், நீலகிரி, கோயம்புத்தூர், […]
சென்னை : தமிழகம், புதுவையில் கோரத் தாண்டவம் ஆடிய ஃபெஞ்சல் புயல், 12 மனித உயிர்களை பலி வாங்கியுள்ளதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இந்தப் புயல் மழையினால் ஏற்பட்ட வெள்ளம் பெரிய அளவில் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளதோடு, பெரும்பாலான பகுதிகளை வெள்ளத்தில் மூழ்கடித்துள்ளதாகவும், பாதிப்புக்குள்ளான பகுதிகளில் வசிக்கும் மக்களை இடம்பெயரச் செய்துள்ளனர். புயல் பாதிப்புகள் குறித்து பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ள அவர் தற்காலிக சீரமைப்பு பணிக்காக 2,475 கோடி கோரியுள்ளார். முதற்கட்ட கணக்கெடுப்பில் 69 லட்சம் குடும்பங்கள், 2,11,139 […]
விழுப்புரம் : ஃபெஞ்சல் புயல் காரணமாக, புதுச்சேரி, கிருஷ்ணகிரி, விழுப்புரம், கடலூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை ஏற்பட்டு வெள்ளம் வந்துள்ளது. எனவே, வெள்ளத்தில் சிக்கி வீட்டிற்கு உள்ளே இருக்கும் மக்களை மீட்கும் பணிகள் ஒரு பக்கம் நடைபெற்று வரும் நிலையில், மற்றோரு பக்கம் விடுமுறை பற்றிய விவரங்கள் வெளியாகி வருகிறது. ஏற்கனவே, கடலூர் மாவட்டத்தில் மீண்டும் கனமழை பெய்து வருவதன் காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை என்கிற அறிவிப்பு வெளியாகி இருந்தது. அதனை தொடர்ந்து தொடர் மழை மற்றும் […]
சென்னை: ஃபெஞ்சல் புயல் நேற்று முன்தினம் கரையை கடந்த பிறகு வலுக்குறைந்தது. அதன் எச்சம் தற்போது வட தமிழகம் மீது நிலை கொண்டுள்ளது. இதன் காரணமாக, நீலகிரி, கோவை ஆகிய 2 மாவட்டங்களில் இன்று (டிச .02) அதி கனமழைக்கு வாய்ப்பு உள்ளதால் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், தமிழகத்தில் அடுத்த 2 மணி நேரத்திற்கு (இரவு 7 மணி வரை) சென்னை உள்பட 19 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை […]
சென்னை : டிசம்பர் 1-ஆம் தேதி காலை வடதமிழகம் மற்றும் புதுவை பகுதிகளில் நிலவிய “ஃபெஞ்சல்” புயல், மதியம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுக்குறைந்து, மாலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் இன்று காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாகவும் மேலும் வலுக்குறைந்து, வடதமிழக உள் பகுதிகளில் நிலவுகிறது. இது, நாளை காலை தென்கிழக்கு மற்றும் மத்தியகிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவக்கூடும். இதன் காரணமாக தமிழகத்தில் நாளை பல மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு […]
சென்னை: வடதமிழகம் மற்றும் புதுவை பகுதிகளில் நிலவிய “ஃபெஞ்சல்” புயல், மதியம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுக்குறைந்து. மாலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் இன்று காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாகவும் மேலும் வலுக்குறைந்து, வடதமிழக உள் பகுதிகளில் நிலவுகிறது. இது, நாளை காலை தென்கிழக்கு மற்றும் மத்தியகிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவக்கூடும். வலுவிழந்த ஃபெஞ்சல் புயல், மேற்கு நோக்கி நகர்ந்து தற்போது சேலம் அருகே மையம் கொண்டுள்ளது. இதன் காரணாமாக, தமிழகத்தில் அநேக இடங்களிலும், […]
சென்னை : வட கடலோர தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் நேற்றைய காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவிழந்து இன்று (2 டிசம்பர்) வட உள் தமிழகம் அதே பகுதியில் நீடித்தது. குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை டிசம்பர் 3 ஆம் தேதி வாக்கில் தென்கிழக்கு மற்றும் அதை ஒட்டிய கிழக்கு-மத்திய அரபிக்கடலில் வடக்கு கேரளா-கர்நாடகா கடற்கரையில் உருவாக வாய்ப்புள்ளது. இதன் காரணமாக மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டு கடற்கரைகளுக்கு 2-ஆம், 3 -ஆம் தேதி காற்றின் வேகம் […]
கோவை : மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் இன்று (டிச.2) மிக கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இதனால், பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில், ஒகேனக்கல், சிறுவாணி ஒட்டிய மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால், சுற்றுலாப் பயணிகள் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்த்தப்பட்டுள்ளது. Weather advisory for […]
சென்னை : தமிழகத்திற்கு மிக கனமழையை கொடுத்துவரும் ஃபெஞ்சல் புயல், இன்று காலை மேலும் வலுவிழந்து, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக நிலை கொண்டுள்ளது. நேற்று காலை புயலாக இருந்த ஃபெஞ்சல், படிப்படியாக காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி, தற்போது காற்றழுத்த தாழ்வுப் பகுதியாகியிருக்கிறது. இந்த நிலையில், தமிழகத்தில் இன்று பிற்பகல் 1 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ள மாவட்டங்களின் பட்டியலை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், […]