Tag: heavy rain

புதுவை மீனவர்களுக்கு எச்சரிக்கை: ஆழ்கடல் மீன்பிடிக்க செல்ல வேண்டாம்.!

புதுச்சேரி: தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இது மேலும் வலுப்பெற்று, மேற்கு-வடமேற்கு திசையில், தமிழக கடலோரப்பகுதிகளை நோக்கி அதற்கடுத்த இரு தினங்களில் நகரக்கூடும். இதன் காரணமாக இன்று (டிச,17) முதல் 19ம் தேதி வரை தமிழக மற்றும் புதுச்சேரி கடலோரப்பகுதிகளில் குறாவளிக்காற்று […]

#Fisherman 3 Min Read
PUDUCHERRY FISHERMAN

வங்கக் கடலில் நாளை உருவாகிறது குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி!

சென்னை: மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, லட்சத்தீவு மாலத்தீவு பகுதிகளில் நிலவுகிறது. இது அடுத்த 12 மணி நேரத்தில், மேற்கு திசையில் நகர்ந்து, படிப்படியாக வலுவிழக்கக் கூடும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், தெற்கு அந்தமான் கடலின் மத்திய பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி வருவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இது நாளை குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்று, அடுத்த […]

#BayofBengal 3 Min Read
Weather Update - TNRains

Live: எங்கெல்லாம் மழை… இந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.!

சென்னை: தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், தென்காசி, விருதுநகர் ஆகிய 11 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் புகுதிகளில் காலை 10 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. தொடர்ந்து மழை பெய்வதாலும், மழைநீர் சூழ்ந்து கிடப்பதாலும் மாணவர்கள் பாதுகாப்பு கருதி இன்று 7 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து அந்தந்த மாவட்ட ஆட்சியாளர்கள் உத்தரவிட்டுள்ளனர். அதன்படி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி […]

#Chennai 2 Min Read
live tamil news

வெளுத்து வாங்கும் கனமழை… விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்டங்களின் லிஸ்ட்.!

சென்னை: குமரிக்கடலில் நீடித்த தாழ்வு பகுதி லட்சதீவுகள் பகுதி நோக்கி நகர்ந்துள்ளது. இதன் காரணமாக டெல்டா மற்றும்  தென் மாவட்டங்களில் இன்றும் மழை தொடரும் என டெல்டா வெதர் மென் தகவல் தெரிவித்துள்ளார். ஏற்கனவே, நேற்று முதல் தென் மாவட்டங்களில் விடிய விடிய மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், கனமழை எதிரொலியாக இன்று 7 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து அந்தந்த மாவட்ட ஆட்சியாளர்கள் உத்தரவிட்டுள்ளனர். தொடர்ந்து மழை பெய்வதாலும், மழைநீர் சூழ்ந்து கிடப்பதாலும் மாணவர்கள் […]

#Holiday 2 Min Read
school leave tn

வலுவிழந்தது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி.. 13 மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை!

சென்னை: மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக வலுவிழந்தது என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இது அடுத்த 24 மணி நேரத்தில் (டிசம்பர் 14, காலை 9 மணி) மேற்கு வட மேற்கு திசையில் குமரிக்கடல் வழியே மாலத்தீவு மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவு பகுதிகளை நோக்கி நகர்ந்து மேலும் வலுவிழக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, […]

#Rain 3 Min Read
low depression - tn rain

தென்காசியில் விடாமல் கொட்டும் கனமழை.. அருவிகளில் பெருக்கெடுத்து ஓடும் காட்டாற்று வெள்ளம்!

தென்காசி: தென்காசி மாவட்ட மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக ராமநதி, கடனாநதி பகுதிகள் மற்றும் காட்டாறுகள், கால்வாய்கள் மூலம் அதிக அளவில் தாமிரபரணி ஆற்றுக்கு நீர் வந்து கொண்டிருக்கிறது. நேற்று பெய்ய தொடங்கிய மழை, இன்றும் விடாமல் பெய்து வருகிறது. இன்று காலை 7 மணி நிலவரப்படி, அதிகபட்சமாக ஆய்க்குடி பகுதியில் 31 செ.மீ மழை, செங்கோட்டையில் 24 செ.மீ, தென்காசி நகரப் பகுதியில் 23 செ.மீ. மழை கொட்டித் […]

#Courtallam 5 Min Read
Courtallam

Live: விடாத கனமழை முதல் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை வரை.!

சென்னை: கனமழை எதிரொலியால் தஞ்சை, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, விழுப்புரம், திருச்சி, கரூர், அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், திண்டுக்கல், மதுரை, கடலூர், புதுக்கோட்டை, மயிலாடுதுறை, ராமநாதபுரம், விருதுநகர், சேலம், சிவகங்கை, தேனி, தருமபுரி, நாகை, நாமக்கல், திருப்பூர் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியிலும் கல்வி நிலையங்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர் கனமழை காரணமாக பூண்டி ஏரியில் இருந்து தற்போது விநாடிக்கு 12,760 கன அடி நீர் […]

#Chennai 2 Min Read
TAMIL LIVE NEWS

கனமழை எதிரொலி: எங்கெங்கு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.! அரையாண்டு தேர்வு ஒத்திவைப்பு!

சென்னை:  இலங்கை கடலோரப்பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, தற்போது மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவுகிறது. இது அடுத்த 12 மணி நேரத்தில், மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, படிப்படியாக வலுகுறைந்து தென்தமிழக பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக நிலவக்கூடும். இதன் காரணமாக, இன்று (டிச,13) மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பின்னர், 16ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழையும், 17ஆம் தேதி 3 மாவட்டங்களில் […]

#Holiday 5 Min Read
Schools - Leave

Live: வெளுத்து வாங்கி வரும் கனமழை முதல் வெள்ள அபாய எச்சரிக்கை வரை.!

சென்னை: கனமழை காரணமாக பூண்டி ஏரி வேகமாக நிரம்பி வரும் நிலையில் இன்று மதியம் 1.30 மணிக்கு திறக்கப்படுகிறது. 35 அடி கொண்ட ஏரியில் தற்போது 34.05 அடி நீர் உள்ளது. இதனால், மதியம் 1.30 மணிக்கு விநாடிக்கு 1,000 கன அடி நீர் திறக்கப்படுகிறது என திருவள்ளூர் ஆட்சியர் அறிவித்துள்ளார். இதனால்,  கரையோர மக்களுக்கு இன்று முதற்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், திருவண்ணாமலை சாத்தனூர் அணையில் இருந்து விநாடிக்கு 10,000 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது. […]

#Chennai 2 Min Read
tamil live rain news

ஃபெஞ்சல் புயல் நிவாரண நிதி : ‘இரு நாட்களில் செலுத்தப்படும்’ புதுச்சேரி அரசு அறிவிப்பு!

புதுச்சேரி : ஃபெஞ்சல் புயல் ஒரு தாக்கம் காட்டிவிட்டு தான் சென்றிருக்கிறது என்றே சொல்லவேண்டும். குறிப்பாக, இந்த புயல் புதுச்சேரிக்கு பக்கத்தில் கரையை கடந்த காரணத்தால் அங்கு கனமழை பெய்து வெள்ளம் ஏற்ப்பட்டது. பல பகுதிகளில் நீர் தேங்கி பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டது என்று கூட சொல்லலாம். இதனையடுத்து, புதுச்சேரியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரேஷன் கார்டுகள் மூலம் ரூ.5,000 நிவாரண நிதியாக வழங்கப்படும் என ஏற்கனவே புதுச்சேரி அரசு அறிவித்திருந்தது. இந்நிலையில், நிவாரணம் வழங்குவதற்காக […]

#Puducherry 4 Min Read
puducherry bengal cyclone

சென்னையில் கனமழை இருக்கும்… அடுத்த மூன்று நாட்களுக்கு இங்கெல்லாம் செல்ல வேண்டாம் – பிரதீப் ஜான் மழை அப்டேட்.!

சென்னை: வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி மெல்ல மெல்ல கரையை நோக்கி நகர்ந்து வருகிறது. இதனால், ஏற்கெனவே டெல்டா, சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதன் தாக்கம் தமிழகத்தில் அடுத்த 3 நாள்களுக்கு மிக கனமழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. மழை தொடர்பான கூடுதல் விவரத்தை அளிக்கும் வகையில் தனியார் வானிலை ஆர்வலர் பிரதீப் ஜான், தனது எக்ஸ் பக்கத்தில், “டெல்டாவில் 1ம் தேதி […]

Coonoor 4 Min Read
TN Rains -Pradeep John

டெல்டா மாவட்டங்களுக்கு இன்று மிக கனமழை எச்சரிக்கை!

சென்னை: வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக, டெல்டா மாவட்டங்களில் கனமழை தொடங்கியிருக்கிறது. திருவாரூர், மயிலாடுதுறை, நாகை ஆகிய மாவட்டங்களில் இரவு முதல் மழை பெய்து வருகிறது. இதனால், மயிலாடுதுறை மாவட்ட கல்வி நிலையங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும், ராமேஸ்வரம் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், காற்றழுத்த தாழ்வுப்பகுதி தமிழ்நாடு நோக்கி நகர்வதால் டெல்டா மாவட்டங்களுக்கு இன்று மிக கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு […]

#Cyclone 6 Min Read
delta rain fall

வலுப்பெற்றது காற்றழுத்த தாழ்வுப் பகுதி… இனிமேல் மழை ஆட்டம் ஆரம்பம்.!

சென்னை:  வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியானது வலுப்பெற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறியிருக்கிறது. அடுத்த 24 மணி நேரத்திற்கு இது மேற்கு-வட மேற்காக நகர்ந்து இலங்கை தமிழக எல்லையை கடக்கக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இதன் தாக்கத்தினால் தமிழகத்தின் பல பகுதிகளில் நாளை அதி கனமழை பெய்வதற்கான வாய்ப்புகள் உள்ளதென சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், டெல்டா மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. அதன்படி, இன்றைய […]

#Chennai 3 Min Read
RainFall

வலுப்பெறும் தாழ்வு பகுதி.. இன்று கனமழை.. நாளை மிக கனமழை.! எங்கெல்லாம்??

சென்னை: வங்கக்கடலில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி தொடர்ந்து அதே இடத்தில் நீடிப்பதால் மேற்கு- வடமேற்கு நோக்கி நகர்ந்து அடுத்த 12 மணி நேரத்தில் வலுவடைய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இதன் காரணமாக, தமிழகத்துக்கு இன்று முதல் நான்கு நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, இன்று (டிச.10) நாகை, திருவாரூர், தஞ்சாவூர், மயிலாடுதுறை, கடலூர் மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. நாளை (டிச.11) […]

#Chennai 3 Min Read
MeteorologicalDepartment

தமிழகத்திற்கு ஆரஞ்சு அலர்ட்.. நாளை 5 மாவட்டங்களில் கனமழை!

சென்னை: தென் கிழக்கு வங்க கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி இன்று (டிச.09) வலுப்பெறும் என கூறப்பட்டிருந்த நிலையில், காற்றழுத்த தாழ்வுப் பகுதி 24 மணி நேரத்திற்குள் வலுப்பெறும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும், மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, 11-ஆம் தேதி வாக்கில், தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் இலங்கை தமிழக கடலோரப் பகுதிகளை ஒட்டி நிலவக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, தமிழகத்திற்கு வரும் 11 மற்றும் 12 ஆகிய […]

#Chennai 4 Min Read
Weather - Tamilnadu

தமிழகத்தில் டிசம்பர் 12-ல் கனமழை! இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்!

சென்னை : கடந்த வாரம் வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஃபெஞ்சல் புயலாக மாறி வடதமிழக மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி ஆகிய பகுதிகளில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. கனமழை மீட்பு பணிகள் தற்போது வரை தொடர்ந்து வருகிறது. இப்படியான சூழலில் வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது . இப்படியான சூழலில்  இந்திய வானிலை ஆய்வு மையம் அண்மையில் வெளியிட்ட தகவலின்படி, வங்கக்கடலை ஒட்டிய […]

#Chennai 3 Min Read
Heavy rain fall in Tamilnadu

“தீவிரமடைகிறது பருவமழை..இந்த மாவட்டங்கள் எச்சரிக்கையா இருங்க”! அலர்ட் கொடுத்த டெல்டாவெதர்மேன்!

சென்னை : வடகிழக்கு பருவமழை டிசம்பர் 11-ஆம் தேதி இரவு முதல் 15-ஆம் தேதி வரை தீவிரமடைகிறது என டெல்டாவெதர்மேன் ஆர் ஹேமச்சந்தர் தெரிவித்திருக்கிறார். அத்துடன், புயல், வெள்ளம் பாதித்த புதுச்சேரி, கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி மாவட்டங்கள் எச்சரிக்கையாக இருக்கவேண்டும் எனவும் எக்ஸ் வலைத்தள பக்கத்தில் தெரிவித்து இருக்கிறார். அவர் கொடுத்த தகவலின் படி, இன்று (06.12.2024) முதல் அடுத்த 5 நாட்களுக்கு (11.12.2024) வரை தமிழகத்தில் வறண்ட வானிலையும், இரவு/அதிகாலை அதிக பனிப்பொழிவும் நிலவும் […]

Delta Weatherman 7 Min Read
Weatherman Hemachander R

ஃபெஞ்சல் புயல் பாதிப்பு: ராகுல் காந்தி வேதனை பதிவு.!

சென்னை : தமிழகம், புதுவையில் கோரத் தாண்டவம் ஆடிய ஃபெஞ்சல் புயல், 12 மனித உயிர்களை பலி வாங்கியுள்ளதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இந்தப் புயல் மழையினால் ஏற்பட்ட வெள்ளம் பெரிய அளவில் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளதோடு, பெரும்பாலான பகுதிகளை வெள்ளத்தில் மூழ்கடித்துள்ளதாகவும், பாதிப்புக்குள்ளான பகுதிகளில் வசிக்கும் மக்களை இடம்பெயரச் செய்துள்ளனர். புயல் பாதிப்புகள் குறித்து பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ள அவர் தற்காலிக சீரமைப்பு பணிக்காக 2,475 கோடி கோரியுள்ளார். முதற்கட்ட கணக்கெடுப்பில் 69 லட்சம் குடும்பங்கள், 2,11,139 […]

Bay of Bengal 3 Min Read
FengalCyclone RahulGandhi

விழுப்புரம் மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

விழுப்புரம் : ஃபெஞ்சல் புயல் காரணமாக,  புதுச்சேரி, கிருஷ்ணகிரி, விழுப்புரம், கடலூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை ஏற்பட்டு வெள்ளம் வந்துள்ளது. எனவே, வெள்ளத்தில் சிக்கி வீட்டிற்கு உள்ளே இருக்கும் மக்களை மீட்கும் பணிகள் ஒரு பக்கம் நடைபெற்று வரும் நிலையில், மற்றோரு பக்கம் விடுமுறை பற்றிய விவரங்கள் வெளியாகி வருகிறது. ஏற்கனவே, கடலூர் மாவட்டத்தில் மீண்டும் கனமழை பெய்து வருவதன் காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை என்கிற அறிவிப்பு வெளியாகி இருந்தது. அதனை தொடர்ந்து தொடர் மழை மற்றும் […]

Bay of Bengal 3 Min Read
rain tn school leave

கனமழை எதிரொலி: கடலூரில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

கடலூர்: கனமழை எதிரொலியால் முதல் மாவட்டமாக கடலூர் மாவட்டத்திற்கு நாளை (டிச.3) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஃபென்ஜல் புயல் எதிரொலியால், கடலூர் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் குடியிருப்பு பகுதிகளுக்குள் மழைநீர் தேங்கியதால், பல்வேறு பள்ளி கல்லூரிகள் முகாம்களாக மாற்றப்பட்டு பொதுமக்கள் அங்கு தங்க வைக்கப்பட்டுள்னர். மேலும், தொடர் மழையால் பல்வேறு கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியிருக்கும் நிலையில், மாணவர்கள் பாதுகாப்பு நலன் கருதி நாளை (டிச.03) விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். மேலும், மழையால் […]

#Holiday 2 Min Read
Schools - Colleges Holiday