தூத்துக்குடி : தமிழகத்தில், கடந்த சில நாட்களாகவே டெல்டா, தென்மாவட்டங்களில் இருக்கும் இடங்களில் கனமழை விட்டுவிட்டு பெய்து வருகிறது. அதில், தென்மாவட்டங்களிலும் ஒரு சில இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக தென்மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் நேற்று இரவு முதல் கனமழை கொட்டி தீர்த்தது. இடைவிடாது பெய்து வரும் கனமழையின் தீவிரத்தால் தூத்துக்குடியில் உள்ள பள்ளிகளுக்கு இன்று ஒருநாள் (நவ-20, புதன்) மட்டும் விடுமுறை அறிவித்துள்ளனர். நேற்று முதல் மழை விட்டுவிட்டு பெய்த […]
திருநெல்வேலி : தமிழகத்தில் டெல்டா மாவட்டங்களில் ஒரு சில இடமும் மற்றும் தென்மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதன் விளைவாக தென்மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் நேற்று இரவு முதல் கனமழை கொட்டி தீர்த்தது. இதனால், திருநெல்வேலியில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்துள்ளனர். நேற்று முதல் மழை விட்டுவிட்டு பெய்த நிலையில், இரவு முழுவதும் கனமழை கொட்டித் தீர்த்துள்ளது. இதன் காரணமாக மாணவர்களின் பாதுகாப்பு கருதி திருநெல்வேலி […]
சென்னை : தென்மேற்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாவதில் மீண்டும் தாமதம் ஏற்பட்டுள்ளது. ஆம், தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் நிலவிய ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி, நேற்று (10-11-2024) காலை 8.30 மணி அளவில் அதே பகுதிகளில் நிலவியது. இதன் காரணமாக, அடுத்த 36 மணி நேரத்தில் நேரத்தில் உருவாகுக் கூடும். இது அதற்கடுத்த இருதினக்களில் மேற்கு திசையில், தமிழக இலங்கை கடலோரப்பகுதிகளை நோக்கி மெதுவாக நகரக்கூடும். இதனால், தமிழ்நாட்டில் சில இடங்களில் 7 நாட்கள் […]
சென்னை : தமிழகத்தில் இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை இயல்பை விட அதிகமாக இருக்கும் எனப் பருவமழை தொடங்கிய சமயத்திலேயே வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்து இருந்தது. அதனைத்தொடர்ந்து கடந்த மாதம், நவம்பர் 2-வது வாரத்தில் அதிகமான மழைப்பொழிவுக்கு வாய்ப்புகள் உள்ளதாகவும் , தமிழ்நாடு, புதுச்சேரி காரைக்கால், கடலோர ஆந்திரப் பிரதேசம் & யானம், ராயலசீமா, கேரளா & மாஹே ஆகியவற்றில் மழைப்பொழிவு இயல்பை விட அதிகமாக இருக்கும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையமும் […]
சென்னை : தமிழ்நாடு முழுவதும் 2,153 போலீசாருக்கு பணியிட மாறுதல் வழங்கி டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிடுள்ளார். முதல் நிலை காவலர்கள் முதல் உதவி ஆய்வாளர்கள் வரை பணியிட மாறுதல் கோரி மனு அளித்தனர். அந்த மனுவின் அடிப்படையில் 2,153 காவலர்களை பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ராயப்பேட்டையில் 5 கிராம் மெத்தபெட்டமைன் போதைப்பொருளுடன் சீரியல் நடிகை எஸ்தர் என்பவரை போலீசார் கைது செய்தனர். கைதான சின்னத்திரை நடிகை எஸ்தர், திரைத்துறையினருக்கு போதைப் பொருள் சப்ளை செய்தாரா என […]
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த மாதமே தொடங்கிய நிலையில், பல மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. ஏற்கனவே, இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை இயல்பை விட அதிகமாகப் பெய்யும் எனக் கணிக்கப்பட்டிருப்பதாகவும் முன்னதாகவே தகவல் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்த சூழலில், தமிழ்நாட்டில் நவம்பர் மாதத்தில் வடகிழக்கு பருவமழை இயல்பை விட அதிகமாக இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவலைத் தெரிவித்துள்ளது. இது தொடர்பாகக் கொடுத்த தகவலின் படி, நவம்பர் 2024 […]
சென்னை : வடக்கு அந்தமான் கடல் பகுதிகளில் நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, நேற்று காலை (21-10-2024) 5.30 மணி அளவில் மத்தியகிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய வடக்கு அந்தமான் கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இதைத்தொடர்ந்து, அந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, தாழ்வு மண்டலமாக இன்று காலை வலுப்பெற்றது. மேலும், இது மேற்கு – வட மேற்கு திசையில் நகர்ந்து நாளை டானா புயலாக வலுப்பெறக்கூடும். […]
வானிலை : மத்தியமேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று (19.07.2024) காலை 5.30 மணியளவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாகவும், காலை 8.30 மணியளவில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் வழுபெற்று வடமேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரிசா மற்றும் வட ஆந்திர கடலோர பகுதிகளை ஒட்டி நிலவியது. வங்காள விரிகுடாவில் உள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி ஜூலை 20 (இன்று) ஆம் தேதி இல் […]
சென்னை: அடுத்த மூன்று நேரத்திற்கு எங்கெல்லாம் மழை பெய்யும் என்கிற மாட்ட வாரியான பட்டியலை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, நாளை (22-ஆம் தேதி வாக்கில்) ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இது ஒரு பக்கம் இருக்க, தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் தற்போது இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்து […]
சென்னை: அடுத்த 3 மணி நேரத்திற்கு தமிழகத்தில் 25 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது. தென்தமிழக கடலோர பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் அடுத்த அடுத்த 3 மணி நேரத்திற்கு (மாலை 4 மணி வரை) மழை பெய்யவிருக்கும் பல்வேறு மாவட்டங்களில் பட்டியலை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை, […]
சென்னை : தமிழகத்தில் 4 மணி வரை 22 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தகவலை தெரிவித்துள்ளது. தமிழகத்தில், இந்த கோடை காலத்திலும் பல மாவட்டங்களில் கடந்த சில நாட்களாகவே கனமழை வெளுத்து வாங்கிக்கொண்டு வருகிறது. அந்த வகையில், இன்று ( மே 20) மாலை 4 மணி வரை 22 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தகவலை தெரிவித்துள்ளது. அதன்படி, அரியலூர், கோயம்புத்தூர், திண்டுக்கல், ஈரோடு, […]
சென்னை: வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளதால் மீனவர்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. நாளை மறுநாள் (22 ஆம் தேதி) தென்மேற்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அப்படி உருவாகினால், அது வடகிழக்கு திசையில் நகர்ந்து மே 24ம் தேதி காலை வங்காள விரிகுடாவின் மத்திய பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற […]
சென்னை: ஒரு பக்கம் தென் மாநிலங்களில் மழை வெளுத்து வாங்கி வரும் நிலையில், வட மாநிலங்களில் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. தென்தமிழக உள் மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் கேரள மாநிலம் உட்பட தென் தீபகற்பத்தின் சில பகுதிகளிலும் மிக கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. குறிப்பாக தமிழகம், கேரளாவுக்கு இன்று முதல் […]
சென்னை: தமிழகத்தில் 55 கி.மீ. வேகத்தில் சூறாவளி காற்று வீசும் என்பதால், மீனவர்களுக்கு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழக கடலோர பகுதிகளில் இன்று முதல் 21ஆம் தேதி வரை 55 கி.மீ. வேகத்தில் சூறாவளி வீசும் என்பதால், மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. அதன்படி, இன்று (17.05.2024) குமரிக்கடல் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய தென்தமிழக கடலோரப்பகுதிகள், தெற்கு கேரள கடலோரப்பகுதிகள், இலங்கை கடலோரப்பகுதிகளை ஒட்டிய […]
சென்னை: அடுத்த மூன்று மணி நேரத்திற்கு 32 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது. தென்தமிழக கடலோரப் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சிநிலவுகிறது. இதன் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில், அடுத்த மூன்று மணி நேரத்திற்கு (இரவு 7 மணி வரை) தமிழகத்தில் எந்தெந்த மாவட்டங்களில் மழை பெய்யும் என்கிற பட்டியலை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, தமிழகத்தின் சென்னை, செங்கல்பட்டு, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் […]
சென்னை : இன்று 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தகவலை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், 3 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவலை தெரிவித்துள்ளது. அதன்படி, கன்னியாகுமரி, திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யும். நீலகிரி, திண்டுக்கல், தேனி, கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், திருப்பூர், விருதுநகர், மதுரை, சிவகங்கை, […]
சென்னை : தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 9 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை மையம் தகவலை தெரிவித்துள்ளது. கடந்த சில நாட்களாக தமிழகத்தில் பல மாவட்டங்களில் கனமழை வெளுத்தி வாங்கி கொண்டு இருக்கும் நிலையில், வரும் 20 -ஆம் தேதி கனமழைக்கு வாய்ப்புள்ள காரணத்தால் ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டு இருக்கிறது. இந்த சூழலில் 10 மணி முதல் அடுத்த 3 மணி நேரத்திற்கு 9 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக […]
சென்னை: சென்னையில் இன்று வெயிலுடன் நாள் தொடங்கினாலும், மழை பெய்யும் என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் கூறியுள்ளார். தமிழ்நாட்டில் அடுத்த 5 நாட்களுக்கு மழை தொடரும் என தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று வெயிலுடன் நாள் தொடங்கினாலும், மழை பெய்யும் என்றும் கணித்துள்ளார். இது தொடர்பாக தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தனது எக்ஸ் தள பக்கத்தில், “தற்போது நாம் பார்ப்பது வெறும் ட்ரெய்லர் மட்டும் தான், அடுத்த […]
சென்னை: தமிழகத்தின் 14 மாவட்டங்களில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய பெய்ய வாய்ப்பு உள்ளது. தமிழகத்தில் ஏற்கனவே, இன்று முதல் மே 20ம் தேதி வரை கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு (இரவு 7 மணி வரை) மழை பெய்யவிருக்கும் மாவட்டங்களின் பட்டியலை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, […]
சென்னை: திருநெல்வேலி மாவட்ட மீனவர்கள் கடலுக்கு செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று முதல் மே 20ம் தேதி வரை கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இந்த நிலையில், கடலில் அதிகபட்சமாக காற்று வீசக்கூடும் என்பதால், நெல்லை மாவட்ட மீனவர்கள் இன்று முதல் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்குச் செல்ல வேண்டாம் என மீனவர் நலத்துறை அறிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியான அறிக்கையில், “இந்திய வானிலை […]