சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளி மண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது. குமரிக்கடல் பகுதிகளிலிருந்து தென் தமிழகம் வரை ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று 7 மாவட்டங்களிலும் நாளை 10 மாவட்டங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதன்படி, இன்று (மார்ச் 22) தென் மாவட்டங்களான தேனி, திண்டுக்கல், மதுரை, […]
சென்னை : தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழ்நாட்டில் இன்று (மார்ச்.17) முதல் அடுத்த 6 நாட்களுக்கு ஒரு சில பகுதிகளில், லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு தமிழ்நாட்டில் மாலை 4 மணி வரை நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, நெல்லை, மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் […]
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று சென்னை தலைமைச் செயலகத்தில், தஞ்சாவூர். திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களின் ஆட்சித் தலைவர்களுடன் காணொலிக் காட்சி வாயிலாக ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. டெல்டா மாவட்டங்களில் அடுத்த ஓரிரு தினங்களில் கனமழை எதிர்பார்க்கப்படுவதால் அம்மாவட்ட விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் நெல் சேதமடைமடையாமல் இருக்கத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. டெல்டா மாவட்டங்களில் 2024-25 கொள்முதல் பருவத்தில் […]
சென்னை: வடகிழக்கு பருவமழை 2024 ஆம் ஆண்டில் இயல்பைவிட 33% கூடுதலாக பதிவாகியுள்ளதாக தென்மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் தகவல் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், இந்த ஆண்டு வடகிழக்குப் பருவமழை எந்த மாவட்டத்திலும் இயல்பைவிடக் குறைவாக பெய்யவில்லை. இந்த ஆண்டு கடந்தாண்டைவிட 27 சதவீதம் அதிகமாக மழை பதிவாகியிருக்கிறது. 6 மாவட்டங்களில் மிக அதிகம், 23 மாவட்டங்களில் அதிக மழையும், 11 மாவட்டங்களில் இயல்பை ஒட்டியும் மழை பதிவாகியுள்ளது. தமிழகத்தில் வடகிழக்குப் […]
புதுச்சேரி: தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இது மேலும் வலுப்பெற்று, மேற்கு-வடமேற்கு திசையில், தமிழக கடலோரப்பகுதிகளை நோக்கி அதற்கடுத்த இரு தினங்களில் நகரக்கூடும். இதன் காரணமாக இன்று (டிச,17) முதல் 19ம் தேதி வரை தமிழக மற்றும் புதுச்சேரி கடலோரப்பகுதிகளில் குறாவளிக்காற்று […]
சென்னை: குமரிக்கடலில் நீடித்த தாழ்வு பகுதி லட்சதீவுகள் பகுதி நோக்கி நகர்ந்துள்ளது. இதன் காரணமாக டெல்டா மற்றும் தென் மாவட்டங்களில் இன்றும் மழை தொடரும் என டெல்டா வெதர் மென் தகவல் தெரிவித்துள்ளார். ஏற்கனவே, நேற்று முதல் தென் மாவட்டங்களில் விடிய விடிய மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், கனமழை எதிரொலியாக இன்று 7 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து அந்தந்த மாவட்ட ஆட்சியாளர்கள் உத்தரவிட்டுள்ளனர். தொடர்ந்து மழை பெய்வதாலும், மழைநீர் சூழ்ந்து கிடப்பதாலும் மாணவர்கள் […]
சென்னை: மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக வலுவிழந்தது என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இது அடுத்த 24 மணி நேரத்தில் (டிசம்பர் 14, காலை 9 மணி) மேற்கு வட மேற்கு திசையில் குமரிக்கடல் வழியே மாலத்தீவு மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவு பகுதிகளை நோக்கி நகர்ந்து மேலும் வலுவிழக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, […]
சென்னை : நேற்று தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று (11-12-2024) காலை 830 மணி அளவில் இலங்கை கடலோரப்பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவுகிறது. இது அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு-வடமேற்கு திசையில், இலங்கை தமிழக கடலோரப் பகுதிகளை நோக்கி நகரக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்து இருந்தார். இந்த சூழலில், வடஇலங்கை மற்றும் அதனை ஒட்டிய தென் […]
சென்னை: வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக, டெல்டா மாவட்டங்களில் கனமழை தொடங்கியிருக்கிறது. திருவாரூர், மயிலாடுதுறை, நாகை ஆகிய மாவட்டங்களில் இரவு முதல் மழை பெய்து வருகிறது. இதனால், மயிலாடுதுறை மாவட்ட கல்வி நிலையங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும், ராமேஸ்வரம் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், காற்றழுத்த தாழ்வுப்பகுதி தமிழ்நாடு நோக்கி நகர்வதால் டெல்டா மாவட்டங்களுக்கு இன்று மிக கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு […]
சென்னை : ஃபெஞ்சல் புயல் தற்போது புதுச்சேரிக்கு கிழக்கே 150 கி.மீ. தொலைவிலும், சென்னைக்கு தென்கிழக்கே 140 கி.மீ தொலைவிலும் நிலை கொண்டுள்ளது. இது மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று இரவு 7 மணி அளவில் மாமல்லபுரம் – புதுச்சேரி இடையே கரையை கடக்க உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இந்நிலையில், புயல் முன்னெச்சரிக்கையாக செங்கல்பட்டு மற்றும் விழுப்புரம் மாவட்டங்களுக்கு தலா 30 பேர் கொண்ட குழு விரைந்துள்ள நிலையில், புதுவை, […]
சென்னை : ஃபெஞ்சல்’ புயல் கடந்த 6 மணி நேரமாக மணிக்கு 7 கி.மீ. வேகத்தில் மெதுவாக நகர்ந்து வருவதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. புயல் இன்று பிற்பகல் கரையை கடக்கவுள்ள நிலையில், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் நள்ளிரவு முதல் விட்டுவிட்டு கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், ஃபெஞ்சல் புயல் எச்சரிக்கை எதிரொலியாக தஞ்சாவூர் திருவிடைமருதூர், கும்பகோணம் தாலுகாக்களுக்கு பள்ளிகளுக்கு மட்டும் இன்று (நவ.30) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக சென்னை மற்றும் […]
சென்னை : வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் 6 மணி நேரமாக நகராமல் அதே இடத்தில் நீடிக்கிறது. முன்னதாக புயல் சின்னம் மணிக்கு 3 கி.மீ வேகத்தில் நகர்ந்த நிலையில் தற்போது நகரமல் ஒரே இடத்தில் நீடிக்கிறது. முன்னதாக, அந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்றைய தினம் (நவ.27ஆம் தேதி) புயலாக வலுப்பெறும் என வானிலை மையம் தெரிவித்திருந்தது. ஆனால், முன்னதாக மணிக்கு 10 கிமீ வேகத்தில் நகர்ந்த ஆழ்ந்த காற்றழுத்த […]
சென்னை: வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது நாகைக்கு தென் கிழக்கே 810 கிமீ தொலைவில் மையம் கொண்டுள்ளது. அடுத்த 12 மணி நேரங்களில் இது மேலும் வலுவடைந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. தென்மேற்கு வங்கக் கடலில் மையம் கொண்டுள்ள அந்த காற்றழுத்த தாழ்வு நிலை கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 8 கிமீ வேகத்தில் வடமேற்கு நோக்கி நகர்ந்து வருகிறது. […]
சென்னை : கனமழை எதிரொலியாக தஞ்சை மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே நாகை, மயிலாடுதுறை, திருவாரூர், காரைக்கால் மாவட்ட பள்ளிக் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்த நிலையில் தஞ்சையும் பட்டியலில் சேர்ந்திருக்கிறது. மேலும், மாணவர்களின் பாதுகாப்பிற்காக இன்று நடைபெறவிருந்த திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத் தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது நாகைக்கு தென் கிழக்கே 810 கிமீ தொலைவில் மையம் கொண்டுள்ளது. அடுத்த 12 மணி நேரங்களில் […]
சென்னை : டெல்டா மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள ரெட் அலர்ட் காரணமாக இன்று ஒரு சில மாவட்ட பள்ளிக் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு வங்க கடலில் மையம் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 8 கிமீ வேகத்தில் நகர்ந்து வருகிறது. இது வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, டெல்டா […]
சென்னை : தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இன்று ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, நாளை 23-ஆம் தேதி தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. மேலும், ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவான பிறகு, இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, அதற்கடுத்த இரு தினங்களில் தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும் […]
சென்னை : தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. தென்தமிழகத்தில் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள ராமநாதபுரம் மற்றும் நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால், இன்று பள்ளிகள் விடுமுறை அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ராமநாதபுரத்தில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு இன்று (நவ.21) விடுமுறை அளிப்பது குறித்து, அந்தந்த பள்ளியின் தலைமை ஆசிரியர்களே முடிவெடுத்துக் கொள்ளலாம் என மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அறிவித்துள்ளார். மேலும், மாவட்ட அளவில் பரவலாக கனமழை […]
சென்னை : தென்மேற்கு வங்கக்கடலில் இன்னும் 4 நாட்களில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. அதன்படி, நவம்பர் 21 ஆம் தேதி தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் மேல் காற்று சுழற்சி உருவாக வாய்ப்புள்ளது. அதன் தாக்கத்தால் தென்கிழக்கு வங்கக்கடலில் நவம்பர் 23ஆம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது. அதன்பிறகு, இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, அடுத்த இரண்டு […]
சென்னை : குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் விடியவிடிய மழை பெய்தது. இதில், அதிகபட்சமாக நன்னிலம் 6 செ.மீ., திருத்துறைப்பூண்டி, நீடாமங்கலம் தலா 5 செ.மீ., மழை பதிவாகியுள்ளது. இந்த நிலையில், அடுத்த 2 மணி மணி நேரத்திற்குமழை பெய்யவிருக்கும் மாவட்டங்களின் பட்டியலை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, திருவாரூர், தஞ்சை, நாகை, மயிலாடுதுறை, புதுகை, சிவகங்கை, ராமநாதபுரம், குமரி, […]
சென்னை : வடகிழக்கு பருவ மழை காரணமாக தமிழக கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் என ஒரு சில மாவட்டங்களில் மிதமான மழை முதல் கனமழை வரை பெய்து வருகிறது. நேற்று முன்தினம், நேற்று என இரண்டு நாட்களும் டெல்டா மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கியது. இந்த நிலையில், குமரி கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வலி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக ஒரு சில தென்மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு […]