சென்னை : தென்மேற்கு வங்கக்கடலில் இன்னும் 4 நாட்களில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. அதன்படி, நவம்பர் 21 ஆம் தேதி தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் மேல் காற்று சுழற்சி உருவாக வாய்ப்புள்ளது. அதன் தாக்கத்தால் தென்கிழக்கு வங்கக்கடலில் நவம்பர் 23ஆம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது. அதன்பிறகு, இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, அடுத்த இரண்டு […]
சென்னை : வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தில் சில மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக ஏற்கனவே, வானிலை ஆய்வு மையம் எச்சரித்து இருந்த நிலையில், சென்னையில் பல பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. எனவே, கனமழை வாய்ப்பு எத்தனை நாட்கள் சென்னைக்கு இருக்கிறது என மக்கள் அச்சத்துடன் வானிலை அறிவிப்பை பார்த்து வருகிறார்கள். இந்நிலையில், சென்னை மக்கள் கனமழை தொடர்பாக அச்சப்பட தேவையில்லை என சென்னை வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டல தலைவர் […]
சென்னை: கடந்த 24 மணி நேரத்தில் சென்னை பெருங்குடியில் 8 சென்டி மீட்டர் மழை பெய்துள்ளது. தென்மேற்கு வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி மத்திய மேற்கு வங்கக்கடல், வட தமிழகத்தை நோக்கி நகர்ந்தது. இப்பொது, வட தமிழகம், தெற்கு ஆந்திர கடற்பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் இன்று சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய 3 மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் கணித்துள்ளது. மேலும், ராணிப்பேட்டை, […]
சென்னை : தென்மேற்கு வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி மத்திய மேற்கு வங்கக்கடல், வட தமிழகத்தை நோக்கி நகர்ந்து வருகிறது. சென்னையில் விடிய விடிய மழை பெய்து வரும் நிலையில், மழையின் தீவிரம் வேகமெடுத்து இருப்பதாக வானிலை ஆர்வலர் கூறியுள்ளார். இது குறித்து தனியார் வானிலை ஆர்வலர் பிரதீப் ஜான் தனது எக்ஸ் பக்கத்தில், “சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் நேற்று இரவு முழுவதும் நல்ல மழை பெய்துள்ளது, குறிப்பாக தென் சென்னையில் […]
சென்னை : தென்மேற்கு வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, மேற்கு நோக்கி நகர்ந்து வருகிறது. அடுத்த 2 நாட்களில் தமிழகம் மற்றும் இலங்கை கடற்கரையை நோக்கி மேற்கு நோக்கி மெதுவாக நகரக்கூடும். மேலும், கனமழை முதல் மிக கனமழை வரை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, இன்று முதல் வரும் 17ஆம் தேதி வரை சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்ததை தொடர்ந்து […]
டெல்லி : வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள டானா புயலின் காரணமாக மேற்கு வங்கம் மற்றும் ஒடிசா கடற்கரை பகுதிகளில் தற்போது பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. இதனா தாழ்வான பகுதிகளில் உள்ள மக்கள் மீட்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டு வருகின்றனர். இந்த புயல் எப்போது கரையை கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவலை தெரிவித்துள்ளது. அதில், ” வடமேற்கு வங்கக் கடலில் “டானா” என்ற கடுமையான சூறாவளி புயல் நிலை கொண்டுள்ளது. இதனால் ஒடிசா […]
ஒடிசா : மத்திய வடமேற்கு வங்கக் கடலில் மையம் கொண்டிருந்த “டானா” புயல், தீவிர புயலாக வலுப்பெற்றது. அந்தப் புயல் தற்போது ஒடிசாவின் பாரதீப்பில் இருந்து 280 கி.மீ., மேற்கு வங்கத்தின் சாகர் தீவில் இருந்து 370 கி.மீ. தூரத்தில் நிலை கொண்டுள்ளது என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று நள்ளிரவு முதல் நாளை (அக்.25) காலை வரையிலான நேரத்தில் ஒடிசா, மேற்குவங்கம் இடையே ஒடிசா – மேற்குவங்கம் (பூரி […]
சென்னை : வங்கக்கடலில் உருவாகி இருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், புயலாக உருவாகியுள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. டானா எனப்பெயரிடப்பட்டுள்ள இந்த புயல் வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை காலை தீவிர புயலாக வலுப்பெறக்கூடும். நாளை இரவு அல்லது நாளை மறுநாள் (அக். 25ம் தேதி) அதிகாலை ஒடிசாவின் பூரி – சாகர் தீவுகளுக்கு இடையே தீவிர புயலாக கரையை கடக்க கூடும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இது நடப்பாண்டின் […]
சென்னை : அரபிக்கடல் மற்றும் வங்கக்கடலில் அடுத்தடுத்து 2 புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதிகள் உருவாகவுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்றைய நாள் தெரிவித்திருந்தது. இதனால் தமிழகத்தின் பல பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இன்று தமிழகம் மற்றும் புதுச்சேரி என 21 மாவட்டங்களுக்கு இன்று காலை 10 மணி வரையில் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், விருதுநகர், மதுரை, […]
சென்னை : வங்க கடலில் இதற்கு முன்னர் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று அதிகாலை கரையைக் கடந்தது. இதன் காரணமாக, இன்றும் (18/10/2024) சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு,திருப்பத்தூர், விழுப்புரம், கடலூர், ராணிப்பேட்டை, வேலூர் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு இருக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. இதனைத் தொடர்ந்து, வங்கக்கடலில் மீண்டும் காற்றழுத்த தாழ்வு பகுதி ஒன்று உருவாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் கடலோர மாவட்டங்களில் மழைக்கு […]
சென்னை : கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் கனமழை பெய்து வந்த நிலையில் தற்போது அடுத்ததாக வரும் அக்-20 ம் தேதி புதிதாக ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளதாக ஒரு தகவல் வெளியாகியிருந்தது. உருவாகவுள்ள அந்த காற்றழுத்த தாழ்வு பலவீனமாக இருக்கும் எனவும் தமிழகத்திற்கு இதனால் பாதிப்பு இல்லை எனவும் தனியார் வானிலை ஆய்வாளரான தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். இது குறித்து விளக்கமளித்து பதிவு ஒன்றையும் அவரது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். […]
சென்னை : வங்க கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று கரையைக் கடந்தது. இதனால், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் குறிப்பாக வட தமிழகத்தில் ஒரு சில இடங்களில் லேசான மழை முதல் கனமழை வரை இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அதே போல ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்து வந்தது, இருப்பினும் சென்னையில் நேற்று ஒரு துளி மழைக் கூட பெய்யவில்லை. இந்த நிலையில், தற்போது வட தமிழக […]
சென்னை : கடந்த சில நாட்களாகவே பெய்த கனமழை காரணமாகப் பல இடங்களில் தண்ணீர் தேங்கி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. ஆனால், பெரிய அளவில் தாக்கம் ஏற்படாமல் தற்போது மழை மெல்ல மெல்லக் குறைந்துள்ளது. இதன் காரணமாகப் பழைய படி சென்னை இயல்பு நிலைக்குத் திரும்பிக் கொண்டு இருக்கிறது. சென்னையில் கனமழை பெய்த போது தேங்கி இருக்கும் மழை நீரை அகற்றுவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு அதற்கான பணிகளும் மேற்கொள்ளப்பட்டது. இதன் காரணமாக விரைவாகப் பல இடங்களில் […]
சென்னை : தென்மேற்கு வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம், மேற்கு வடமேற்கு திசையில் புதுச்சேரி மற்றும் நெல்லூருக்கு இடையே சென்னைக்கு வடக்கே இன்று அதிகாலை 4.30 மணியளவில் கரையைக் கடந்ததாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில், தமிழகத்தில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு (மாலை 4 மணி வரை) மழை பெய்யவிருக்கும் 3 மாவட்டங்களின் பட்டியலை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, கடலூர், பெரம்பலூர் மற்றும் திருச்சிராப்பள்ளி […]
சென்னை : காற்றழுத்த தாழ்வு மண்டலம் தொடர்ந்து வலுவாக இருப்பதால், சென்னை உள்ளிட்ட சில மாவட்டங்களுக்கு, அதி கனமழைக்கான, ‘ரெட் ன அலர்ட்’ வாபஸ் பெறப் படவில்லை என வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் எஸ்.பாலச்சந்திரன் தெரிவித்தார். அதன்படி, இந்தாண்டு வட கிழக்கு பருவமழை துவங்கி, சென்னையில் மழை பெய்து வருகிறது. வரும், டிசம்பர் வரை மழை பொழிவு இருப்பதால், மாநகராட்சி முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த நிலையில், நேற்று முன் தினம் பெய்த […]
சென்னை : வடகிழக்கு பருவமழை , சென்னையை நோக்கி வந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களுக்கு நேற்று ரெட் அலர்ட் விடுக்கப்பட்டது. நேற்று முன்தினமே சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டிதீர்த்தது. அதனால், நேற்று பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டது. ஆனால், நேற்று , ரெட் அலர்ட் விடுக்கப்பட்ட நிலையில் மழையின் அளவு வெகுவாக குறைந்து இருந்தது. இருந்தாலும், கனமழையால் மக்கள் […]
சென்னை : மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாகப் பல பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டது. இதன் பல பகுதிகளில் காரணமாக, தெருக்களிலும், வீடுகளிலும் தண்ணீர் தேங்கிச் சமைத்துச் சாப்பிட முடியாத அளவுக்கு மக்களின் இயல்பு வாழ்கை முற்றிலும் பாதிக்கப்பட்டது. உடனடியாக, தமிழக அரசு தேங்கி இருக்கும் தண்ணீரை அகற்றும் நடவடிக்கைகளை மேற்கொண்டு பல இடங்களில் தேங்கி இருந்த நீரை அகற்றவும் செய்தது. மற்றொரு பக்கம் அரசியல் தலைவர்கள் பலரும் களத்தில் இறங்கி தண்ணீர் அதிகமாகத் தேங்கி இருக்கும் இடங்களைப் […]
சென்னை : வடகிழக்கு பருவமழை , வங்கக்கடலில் உருவான புதிய காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று முதல் கனமழை கொட்டித்தீர்த்தது. இன்றும் கனமழை பெய்யும் என்று எதிர்பார்த்த நிலையில், இன்று மழையின் அளவு வெகுவாக குறைந்தது. கனமழை பெய்தவுடன் சென்னை புறநகர் பகுதியில் மழைநீர் தேங்கியது. இதனால் பெரும்பாலான இடங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. புறநகர் பகுதிகளில் மழைநீர் சூழ்ந்ததால் அங்குள்ள மக்கள் மீட்கப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். அவர்களுக்கு […]
சென்னை : வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் மணிக்கு 15 கி.மீ வேகத்தில் நகர்ந்து செல்கிறது. முன்னதாக 12 கி.மீ வேகத்தில் நகர்ந்த நிலையில், தற்போது 15 கி.மீ ஆக அதிகரித்துள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இது தொடர்ந்து மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து புதுச்சேரி- நெல்லூர் இடையே நாளை (அக். 17) அதிகாலை சென்னை அருகே கரையை கடக்கும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது, வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு […]
சென்னை : வடகிழக்கு பருவமழை தொடங்கி விட்டதாகவும், சென்னை உள்பட 4 மாவட்டங்களுக்கு இன்று (புதன்கிழமை) அதி கனமழைக்கான வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது. சென்னையில் நேற்று பெய்த இடைவிடாத மழை காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில், கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ட்ரோன் மூலம் உணவு, தண்ணீர் பாட்டில்களை விநியோகம் செய்ய மாநகராட்சி அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். இதற்கான ஒத்திகை சென்னை ரிப்பன் மாளிகையில் மேயர் பிரியா முன்னிலையில் […]