சென்னை: வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்ற நிலையில், சென்னைக்கு கிழக்கு – வடகிழக்கே சுமார் 450 கி.மீ-இல் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலை கொண்டுள்ளது. மேலும், வங்கக் கடலில் கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 7 கி.மீ., வேகத்தில் அந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நகர்ந்துள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இந்த தாழ்வு மண்டலம் மெதுவாக கிழக்கு – வடகிழக்கு நோக்கி நகர்ந்து, அடுத்த […]
ஆப்பிரிக்கா : இந்திய பெருங்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக கடந்த சில நாட்களுக்கு முன்பு வலுப்பெற்றது. இதனையடுத்து, இந்த வானிலை ஆய்வு மையம் இந்த புயலுக்கு ‘சிடோ’ என பெயர் வைப்பதாகவும் அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த புயல் காரணமாக மலாவி நாட்டில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. கடந்த டிசம்பர் 14-ஆம் தேதி சனிக்கிழமையன்று ஏற்பட்ட சிடோ சூறாவளி புயல் ஆப்பிரிக்காவை ஒரு வழி செய்தது என்றே சொல்லலாம். இந்த புயலின் காரணமாக குடிசை நகரங்கள் […]
சென்னை : இன்று (18-12-2024) வடகடலோர தமிழகத்தில் அநேக இடங்களிலும், இதர தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை வாய்ப்பு இருப்பதால் ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மற்றும் புதுவையில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது. ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா […]
சென்னை: வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் வளிமண்டல சுழற்சி காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. முன்னதாக, இன்று இது வலுப்பெற்று, தமிழகம் நோக்கி நகரும் என்று கணிக்கப்பட்டிருந்த நிலையில், உருவாக தாமதம் ஏற்படும் என்று வானிலை ஆய்வு மையம் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, காலை 5.30 மணி நிலவரப்படி அடுத்த 24 மணி நேரத்தில் தான் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இதன் காரணமாக, […]
திருநெல்வேலி: மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று லட்சத்தீவு மாலத்தீவு பகுதிகளில் நிலவுகிறது. இது அடுத்த 24 மணி நேரத்தில், மேற்கு திசையில் நகர்ந்து, படிப்படியாக வலுவிழக்கக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும், நாளை (டிச,13) தெற்கு அந்தமான் கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவக்கூடும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தென்தமிழகத்தில் அநேக இடங்களிலும், […]
சென்னை: மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக வலுவிழந்தது என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இது அடுத்த 24 மணி நேரத்தில் (டிசம்பர் 14, காலை 9 மணி) மேற்கு வட மேற்கு திசையில் குமரிக்கடல் வழியே மாலத்தீவு மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவு பகுதிகளை நோக்கி நகர்ந்து மேலும் வலுவிழக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, […]
சென்னை: தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் விடிய விடிய கனமழை பெய்து வருகிறது. மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் மழை பெய்தது. தற்பொழுது, திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், தி.மலை, வேலூர், கடலூர், நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களிலும் விடாது மழை பெய்து வருகிறது. இந்நிலையில், தமிழகத்தில் 22 மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, சேலம், தூத்துக்குடி, திருப்பத்தூர், கரூர், வேலூர், திருவள்ளூர், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு, அரியலூர், சென்னை, விழுப்புரம், […]
சென்னை: வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக, தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் விடிய விடிய கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் 20க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, தூத்துக்குடி, திருப்பத்தூர், கரூர், வேலூர், திருவள்ளூர், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு, அரியலூர், சென்னை, விழுப்புரம், தஞ்சை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, கடலூர், ராமநாதபுரம், திண்டுக்கல், காஞ்சிபுரம், திருவாரூரில் பள்ளிகளுக்கு விடுமுறை ஆகும். மேலும், நெல்லையில் 1-5ம் வகுப்பு வரை மட்டும் விடுமுறை, […]
தூத்துக்குடி: வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக, தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் விடிய விடிய கனமழை பெய்து வருகிறது. அந்த வகையில், தூத்துக்குடி மாவட்டத்திலும் மழை பெய்து வருகிறது. இதனால், இன்று (டிசம்பர் 12) பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் இளம் பகவத் உத்தரவிட்டுள்ளார். ஏற்கனவே, கனமழை காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.
திருநெல்வேலி: தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் விடிய விடிய கனமழை பெய்து வருகிறது. அந்த வகையில், நெல்லை மாவட்டத்தில் மிதமான மழை மதியத்திற்கு பிறகு அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இதனை கருத்தில் கொண்டு ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் இன்று ஒருநாள் (12.12.2024) பள்ளிகள் விடுமுறை விடப்படுகிறது என அம்மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் அறிவித்துள்ளார். ஏற்கனவே, 17 மாவட்டங்களில் இன்று அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, திருவள்ளூர், ராணிப்பேட்டை, தி.மலை, செங்கல்பட்டு, அரியலூர், சென்னை, […]
சென்னை: வைக்கம் போராட்டத்தின் 100-ம் ஆண்டு நிறைவு விழாவை ஒட்டி கேரள மாநிலத்தில் புனரமைக்கப்பட்ட பெரியார் நினைவகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார். இந்த நிகழ்வில் கேரள முதலமைச்சர் பினராயி விஜயனும் பங்கேற்க உள்ளார். தமிழ்நாடு அரசு சார்பில் சுமார் ரூ.8.14 கோடியில் நினைவகம் புதுப்பிக்கப்பட்டது. கனமழை காரணமாக சாத்தனூர் அணையில் இருந்து 10,000 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. நீர் திறப்பு 5,000 கன அடியில் இருந்து 10,000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டது. 119 அடி […]
சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி நிலவிவருவதால் தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்திருந்தது. அதன்படி, திருவாரூர், சென்னை, நாகை உள்ளிட்ட மாவட்டங்களில் விடிய விடிய இடைவிடாது மழை தொடர்ச்சியாக பெய்து வருகிறது. இந்நிலையில், கனமழை காரணமாக, 12 மாவட்டங்களில் அனைத்து பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, காஞ்சி, திருவாரூர், ராமநாதபுரம், திண்டுக்கல், கடலூர், புதுக்கோட்டை, தஞ்சை, மயிலாடுதுறை, சென்னை, அரியலூர், […]
புதுச்சேரி : இன்று புதுச்சேரியில் பரவலாக பல இடங்களில் மழை பெய்து வருகிறது. நாளை புதுச்சேரி மற்றும் காரைக்கால் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்த நிலையில், புதுச்சேரி, காரைக்காலில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை (டிச.12) விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, ஃபெஞ்சல் புயல் கரையை கடைக்கும் போது பல இடங்களில் கனமழை பெய்து புதுச்சேரி வெள்ளக்காடாக காட்சியளித்தது. எனவே, மீண்டும் கனமழை எச்சரிக்கை விடப்பட்ட காரணத்தால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விடுமுறை […]
சென்னை: வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக, டெல்டா மாவட்டங்களில் கனமழை தொடங்கியிருக்கிறது. திருவாரூர், மயிலாடுதுறை, நாகை ஆகிய மாவட்டங்களில் இரவு முதல் மழை பெய்து வருகிறது. இதனால், மயிலாடுதுறை மாவட்ட கல்வி நிலையங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும், ராமேஸ்வரம் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், காற்றழுத்த தாழ்வுப்பகுதி தமிழ்நாடு நோக்கி நகர்வதால் டெல்டா மாவட்டங்களுக்கு இன்று மிக கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு […]
சென்னை: வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக, இன்று கடலூர், நாகை, மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, திருவாரூர், மயிலாடுதுறை, நாகை ஆகிய மாவட்டங்களில் இரவு முதல் மழை பெய்து வருகிறது. இதனால் மயிலாடுதுறைக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக மயிலாடுதுறை மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று ஒருநாள் (11.12.2024) விடுமுறை அளித்து அம்மாவட்ட ஆட்சியர் மகாபாரதி உத்தரவிட்டுள்ளார். கனமழை: ஆழ்ந்த […]
விழுப்புரம் : ஃபெஞ்சல் புயல், மழை வெள்ள மீட்புப் பணிகள் தொடருவதால் விழுப்புரம் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (டிச.06) விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் பழனி உத்தரவிட்டுள்ளார். மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் தண்ணீர் இன்னும் வடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், மீட்பு பணிகள் நடைபெற்று வருவதாலும், பள்ளிகள் ஃபெஞ்சல் புயல், மழையால் பாதிக்கப்பட்டோருக்கு முகாம்களாக செயல்படுவதாலும் நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நாளை மற்றும் நாளை மறுநாள் சனி, ஞாயிறும் விடுமுறை என்பதால் அடுத்து வரும் […]
கோவை : மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் இன்று (டிச.2) மிக கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இதனால், பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில், ஒகேனக்கல், சிறுவாணி ஒட்டிய மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால், சுற்றுலாப் பயணிகள் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்த்தப்பட்டுள்ளது. Weather advisory for […]
விழுப்புரம்: நேற்றிரவு புதுச்சேரி அருகே கரையை கடந்த ஃபெஞ்சல் ஃபெஞ்சல் புயல் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் கனமழை பெய்து ஊரே வெள்ளக்காடாக மாறியது. அதிலும் குறிப்பாக, விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் பல ஏக்கர் விவசாயப் பயிர்கள் சேதமடைந்துள்ளன. மேலும் இதில், விழுப்புரம் மாவட்டத்தில் அதிகனமழை கொட்டித்தீர்த்தது. நேற்று பிற்பகல் முதல் பலத்த காற்று வீசியதால் பல இடங்களில் மரங்கள் சாய்ந்ததுடன், மழைநீர் தேங்கி வெள்ளக்காடாகவும் காட்சியளிக்கின்றன. இந்நிலையில், விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பள்ளி, […]
புதுச்சேரி: ஃபெஞ்சல் புயல் புதுச்சேரியில் கோரத் தாண்டவம் ஆடியுள்ளது. புயலால் ஒரே நாளில் பெய்த 47 செ.மீ மழை பெய்துள்ளது. இதனால், பல இடங்களில் சாலையோரங்களில் இருந்த மரங்கள், மின் கம்பங்கள் சாய்ந்துள்ளன. மீட்புப் பணிகளில் அரசு ஊழியர்கள், தன்னார்வலர்கள் களமிறங்கியுள்ளனர். இந்த நிலையில், அங்குள்ள பள்ளி, கல்லூரிகள், வீடுகளை சுற்றிலும் மழைநீர் தேங்கியுள்ளது. இதையடுத்து மாணவர்கள் பாதுகாப்பை கருத்தில் கொண்டு நாளை (டிச.2) பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளித்து கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் உத்தரவிட்டுள்ளார். […]
சென்னை : ஃபெஞ்சல் புயல் எப்போது கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இன்று மாலை 5.30 மணி அளவில் காரைக்கால் – மகாபலிபுரம் இடையே கரையைக் கடக்கத் தொடங்கியது என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவலை தெரிவித்திருந்தது. இன்று ரெட் அலர்ட் மாவட்டங்கள் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்கள் புதுவையில் ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதி கன மழையும் பெய்யும் என ஏற்கனவே […]