திருநெல்வேலி: மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று லட்சத்தீவு மாலத்தீவு பகுதிகளில் நிலவுகிறது. இது அடுத்த 24 மணி நேரத்தில், மேற்கு திசையில் நகர்ந்து, படிப்படியாக வலுவிழக்கக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும், நாளை (டிச,13) தெற்கு அந்தமான் கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவக்கூடும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தென்தமிழகத்தில் அநேக இடங்களிலும், […]
சென்னை : தென்மேற்கு வங்கக்கடலில் உருவான புதிய காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மிதமானது முதல் கனமழை வரை பெய்து வருகிறது. இந்த கனமழை அடுத்தடுத்த நாட்களிலும் தொடரும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் தற்போது வெளியிட்ட தகவலின்படி, தென்மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய மாவட்டங்களுக்கு இன்று அதிகனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதே போல, திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் […]
சென்னை: வடதமிழக உள் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று காலை, கடலோர கர்நாடக பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்தியகிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக நிலவுகிறது. இதன் காரணாமாக, தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. 11 மாவட்டங்களில் கனமழை மேலும், நீலகிரி, கோயம்புத்தூர், […]
சென்னை: வடதமிழகம் மற்றும் புதுவை பகுதிகளில் நிலவிய “ஃபெஞ்சல்” புயல், மதியம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுக்குறைந்து. மாலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் இன்று காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாகவும் மேலும் வலுக்குறைந்து, வடதமிழக உள் பகுதிகளில் நிலவுகிறது. இது, நாளை காலை தென்கிழக்கு மற்றும் மத்தியகிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவக்கூடும். வலுவிழந்த ஃபெஞ்சல் புயல், மேற்கு நோக்கி நகர்ந்து தற்போது சேலம் அருகே மையம் கொண்டுள்ளது. இதன் காரணாமாக, தமிழகத்தில் அநேக இடங்களிலும், […]
சென்னை : தமிழகத்திற்கு மிக கனமழையை கொடுத்துவரும் ஃபெஞ்சல் புயல், இன்று காலை மேலும் வலுவிழந்து, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக நிலை கொண்டுள்ளது. நேற்று காலை புயலாக இருந்த ஃபெஞ்சல், படிப்படியாக காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி, தற்போது காற்றழுத்த தாழ்வுப் பகுதியாகியிருக்கிறது. இந்த நிலையில், தமிழகத்தில் இன்று பிற்பகல் 1 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ள மாவட்டங்களின் பட்டியலை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், […]
சென்னை : வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்து விட்டதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை அருகே நள்ளிரவு கரையை கடந்த புயல் இன்று காலை 11.30 மணிக்கு வலுவிழந்தது. இந்நிலையில், தமிழகத்தில் நாளை (டிச.2) 5 மாவட்டங்களுக்கு மிகக்கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சென்னை வானிலை மையம் வெளியிட்ட அறிக்கையில், நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், ஈரோடு மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. […]
சென்னை : ஃபெஞ்சல் புயல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்து விட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் அடுத்த 2 மணி நேரத்திற்கு (மாலை 6 மணி வரை) பல்வேறு மாவட்டங்களுக்கான சென்னை வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் முதல் மிதமான மழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கீழே அதற்கான பட்டியல் கொடுக்கப்பட்டுள்ளது. அதில் உங்கள் பகுதி இருக்கிறதா? என பார்த்து கொள்ளுங்கள்… ரெட் அலர்ட் திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி மற்றும் விழுப்புரம் ஆகிய 3 மாவட்டங்களில் […]
சென்னை : ஃபெஞ்சல் புயல் கரையை கடந்தாலும், தமிழ்நாட்டில் இன்று முதல் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. 21 செ.மீ. மேல் மழை பெய்யும் என்பதால் இன்று ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்திற்கு (மதியம் 1 மணி வரை) மழை பெய்யவிருக்கும் மாவட்டங்களின் பட்டியலை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, […]
சென்னை : வங்கக்கடலில் உருவாகியுள்ள ‘ஃபெஞ்சல்’ புயலானது இன்று (நவ.-30) மாலை 5.30 மணி முதல் தற்போது கரையைக் கடக்க தொடங்கியுள்ளது எனவும் அடுத்த 3 முதல் 4 மணி நேரத்தில் இது முழுவதுமாக கரையைக் கடந்து விடும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால், சென்னை உட்பட ஒரு சில மாவட்டங்களில் கனமழை பெய்யும் என அறிவித்துள்ளனர். மேலும், புயலின் தீவிரத்தால் நாளை 3 மாவட்டங்கள் ரெட் அலெர்ட்டும், 14 மாவட்டத்திற்கு ஆரஞ்சு அலெர்ட்டும் […]
சென்னை : தமிழகத்தில் எந்த ஒரு மாவட்டத்திற்கும் ஞாற்றுக்கிழமை அன்று பெரிதளவு காரணங்களுக்கு இல்லாமல் மின்தடை என்பது ஏற்படாது. ஆனால், வங்கக்கடலில் உருவாகியுள்ள ஃபெஞ்சல் புயலின் தாக்கத்தால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. மேலும், புயலின் முன்புறம் கரையை கடக்க தொடங்கியுள்ளதால் பல இடங்களில் மின்கம்பங்கள், மரங்கள் முறிந்து விழுந்துள்ளது. இதனால், பாதுகாப்பு கருதி ஒரு சில இடங்களில் முன்னதாகவே மின் இணைப்பை துண்டித்துள்ளனர். மேலும், ஒரு சில இடங்களில் கனமழைக்கான […]
சென்னை : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், நாளை புயலாக உருமாறும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதன்படி, புயல் உருமாறினால், அந்த புயலுக்கு ‘ஃபெங்கல்’ (Fengal) என்று பெயரிடப்படவுள்ளது. இதன் காரணமாக, இன்று (நவ்.26) முதல் 29 வரை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும் எனவும், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் 3 நாட்கள் மிக கனமழை பெய்யும் என […]
சென்னை : தெற்கு வங்கக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு மையம் உருவாகி இருக்கிறது. இது இலங்கைக்கு கீழே இருந்து வடக்கு நோக்கி நகரத் தொடங்கியுள்ளது. இதனால், தமிழகத்தில் வரும் 30-ம் தேதி வரை மழைக்கான வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. மேலும், காற்றழுத்த தாழ்வு மையம் வடக்கு நோக்கி நகர்வதால் கடலோர மாவட்டங்களான சென்னை மற்றும் அதனைச் சுற்றிய பகுதிகளில் இன்று முதல் 4-5 நாட்கள் மழை நீடிக்கும் என வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் பதிவிட்டுள்ளார். […]
சென்னை : தெற்கு வங்கக் கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளதைத் தொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை முதல் அதிகனமழை பெய்யக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்நிலையில், இதுவரை மேற்கொள்ளப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தமிழக அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி, இன்று மயிலாடுதுறை நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்களிலும், நாளை கடலூர் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 20 செ.மீட்டருக்கும் கூடுதலாக மழை பெய்யும் என்பதால், அதனை எதிர்கொள்ள […]
சென்னை : கனமழை எதிரொலியாக தஞ்சை மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே நாகை, மயிலாடுதுறை, திருவாரூர், காரைக்கால் மாவட்ட பள்ளிக் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்த நிலையில் தஞ்சையும் பட்டியலில் சேர்ந்திருக்கிறது. மேலும், மாணவர்களின் பாதுகாப்பிற்காக இன்று நடைபெறவிருந்த திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத் தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது நாகைக்கு தென் கிழக்கே 810 கிமீ தொலைவில் மையம் கொண்டுள்ளது. அடுத்த 12 மணி நேரங்களில் […]
சென்னை : டெல்டா மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள ரெட் அலர்ட் காரணமாக இன்று ஒரு சில மாவட்ட பள்ளிக் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு வங்க கடலில் மையம் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 8 கிமீ வேகத்தில் நகர்ந்து வருகிறது. இது வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, டெல்டா […]
சென்னை : வடகிழக்கு பருவமழை இந்த முறை மிகத் தீவிரமாக இருக்கும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. இந்த நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று (14.10.2024) தலைமைச் செயலகத்தில், கனமழை எச்சரிக்கை தொடர்பாக எடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சென்னை மாநகராட்சி உட்பட அனைத்து மாவட்ட நிர்வாக அதிகாரிகள் பங்கேற்னர். இந்த ஆய்வுக்கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கினார். அதில், “ஐடி ஊழியர்கள் வீட்டிலிருந்தே பணிபுரியுங்கள். ஆதரவற்றோர் […]
சென்னை : தமிழகத்தில் நாளை முதல் 17ம் தேதி வரை சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் வட மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்ற சென்னை வானிலை மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்த நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று (14.10.2024) தலைமைச் செயலகத்தில், கனமழை எச்சரிக்கை தொடர்பாக எடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆய்வுக்கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கினார். அதில், கனமழை […]
வானிலை : தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல மாவட்டங்களில் மழைபெய்து வருகிறது. குறிப்பாக நீலகிரி, மயிலாடுதுறை, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று (ஜூலை 18) தமிழ்நாட்டில் இன்று ஆரஞ்சு அலர்ட் கொடுத்துள்ளது. ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி மத்தியமேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஜூலை 19 உருவாக வாய்ப்புள்ளது.இதன் காரணமாக தமிழ்நாட்டில் இன்று 12 – 20 […]
வானிலை : தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்திருக்கும் நிலையில், பல மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. குறிப்பாக, நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக அங்கு வெள்ளம் ஏற்பட்டது. இன்று அங்கு கனமழை பெய்து வரும் நிலையில், இன்று தமிழகத்திற்கு மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. நேற்று முன்தினம் மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று தெற்கு ‘சத்தீஸ்கர்’ மற்றும் அதனை ஒட்டிய […]
நீலகிரி : தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில், நீலகிரி மாவட்டத்தில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இதன் காரணமாக வெள்ளமும் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக நீலகிரி மாவட்டம் கூடலூர் பந்தலூர் பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் மாயாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு முதுமலை தெப்பக்காடு பகுதியில் உள்ள தரை பாலத்திற்கு மேல் வெள்ளம் ஓடிக்கொண்டு இருக்கிறது. அதைப்போல, பலத்த காற்றுடன் கனமழை பெய்து வரும் நிலையில் பல இடங்களில் மரங்கள் விழுந்துள்ளதால் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. தாழ்வான பகுதிகளில் வெள்ள […]