லெனோவா கே350டி(Lenovo K350T) புதிய மாடல் அறிமுகம்..!!

லெனோவா கே350டி(Lenovo K350T) ஸ்மார்ட்போன் பற்றிய பல்வேறு தகவல்கள் சீன இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது, அதன்அடிப்படையில் புதிய 'கே350டி" ஸ்மார்ட்போன் மாடல்

லெனோவா கே350டி(Lenovo K350T) ஸ்மார்ட்போன் பற்றிய பல்வேறு தகவல்கள் சீன இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது, அதன்அடிப்படையில் புதிய ‘கே350டி” ஸ்மார்ட்போன் மாடல் 5.7-இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்புடன் வெளிவரும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

லெனோவா கே350டி ஸ்மார்ட்போன் பொறுத்தவரை கருப்பு, வெள்ளை, நீலம் மற்றும் வெள்ளி போன்ற நிறங்களில் வெளிவரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 1440 x 720 பிக்சல் தீர்மானம் மற்றும் 18:9 என்ற திரைவிகிம் அடிப்படையில் வெளிவரும் இந்த ஸ்மார்ட்போன் மாடல். இந்த ஸ்மார்ட்போன் 8எம்பி டூயல் ரியர் கேமரா அமைப்பு மற்றும் 8எம்பி செல்பீ கேமரா மற்றும் எல்இடி பிளாஷ் ஆதரவுடன் வெளிவரும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்திய மொபைல் சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

டூயல்-சிம் மற்றும் ஆண்ட்ராய்டு 7.0 நௌக்கட் இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும், அதன்பின்பு 1.5ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் செயலி இவற்றுள் அடக்கம். வைபை, ப்ளூடூத், 4ஜி வோல்ட், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற  இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.