நெல்லை:ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 5 வயதுடைய எல்கேஜி மாணவன் பலியையான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மாவட்டம் வசவப்புரம்-செய்துங்க நல்லூர் சாலையில்,பள்ளிக்கு மாணவர்களை ஏற்றிச் சென்ற ஆட்டோ கட்டுப்பாட்டை இழந்ததாக கூறப்படும் நிலையில்,ஆட்டோவுக்கு அடியில் சிக்கிய நவீன் என்ற 5 வயது எல்கேஜி மாணவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.மேலும், ஆட்டோவில் பயணித்த மற்ற 5 மாணவர்களும் காயமடைந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து,காயமடைந்த மாணவர்களுக்கு தனியார் மருத்துமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.இந்த தகவலறிந்து சம்பவ இடத்திற்கு […]
தமிழகத்தில் ஆட்டோ மீட்டர் கட்டணத்தை மறுநிர்ணயம் செய்வது தொடர்பாக இன்று பிற்பகல் 3.30 மணிக்கு போக்குவரத்து துறை ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது. அதன்படி,சென்னை கே.கே.நகர் வட்டார போக்குவரத்து துறை அலுவலகத்தில் இணை ஆணையர் தலைமையில் நடைபெறும் இன்று கூட்டத்தில் தொழிற்சங்க பிரதிநிதிகளுடனும்,நாளை நுகர்வோர் அமைப்புகளுடனும் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.பயணிகளிடம் அதிக கட்டணம் வசூலிப்பதாக புகார் எழுந்து வரும் நிலையில் ஆட்டோவில் மீட்டர் பொருத்தி இயக்குவது தொடர்பாகவும்,கட்டணம் குறித்தும் பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளதாக கூறப்படுகிறது.
கேரளாவில் இன்று முதல் பேருந்து, ஆட்டோ ,டாக்சி கட்டணம் உயர்த்தப்படுகிறது. நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை உயர்வை அடுத்து,பேருந்து, ஆட்டோ, டாக்சி கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்று கேரளாவைச் சேர்ந்த தொழிற்சங்கங்கள் கோரிக்கை விடுத்திருந்த நிலையில், கட்டணம் உயர்த்தப்படும் எனவும் சமீபத்தில் கேரள அரசு அறிவித்திருந்தது. இந்நிலையில்,பேருந்து, ஆட்டோ டாக்சி கட்டணம் உயர்வு இன்று முதல் அமலுக்கு வருவதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.இதுகுறித்து கேரள மாநில போக்குவரத்து துறை நடத்திய ஆலோசனையில், அரசு பேருந்தில் குறைந்த […]
கேரளாவில் நாளை முதல் பேருந்து, ஆட்டோ டாக்சி கட்டணம் உயர்த்தப்படுகிறது. நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை உயர்வை அடுத்து, பேருந்து, ஆட்டோ, டாக்சி கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்று கேரளாவைச் சேர்ந்த தொழிற்சங்கங்கள் கோரிக்கை விடுத்திருந்த நிலையில், இதற்கான கட்டணம் உயர்த்தப்படும் என்று சமீபத்தில் கேரள அரசு அறிவித்திருந்தது. அதன்படி, பேருந்து, ஆட்டோ டாக்சி கட்டணம் உயர்வு நாளை முதல் அமலுக்கு வருவதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து கேரள மாநில போக்குவரத்து துறை நடத்திய […]
ஆகஸ்ட் மாதத்திற்குள் திமுக அரசு ஒரு லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை பெற்றுத்தரும் என்று அமைச்சர் அறிவிப்பு. தமிழ்நாடு சட்டப்பேரவையில் எரிசக்தித் துறை, தொழிலாளர் நலத்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இதில் துறை சார்ந்த அமைச்சர்கள் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றனர். அந்தவகையில், பேரவையில் பேசிய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன், 500 பெண் ஓட்டுநர்களுக்கு புதிதாக ஆட்டோ ரிக்ஷா வாங்க தலா ரூ.1 லட்சம் மானியம் […]
பள்ளி மாணவர்களை ஆட்டோ,வேன் போன்றவற்றில் அளவுக்கு மீறி ஏற்றி செல்ல வேண்டாம் என்று போக்குவரத்து காவல்துறை எச்சரித்துள்ளது. பள்ளி மாணவர்களை ஆட்டோ,வேன் போன்றவற்றில் அளவுக்கு மீறி ஏற்றி செல்ல வேண்டாம் என்று போக்குவரத்து காவல்துறை எச்சரித்துள்ளது.குறிப்பாக,ஓட்டுநர் இருக்கையை பள்ளிக் குழந்தைகளுடன் பகிர்ந்து கொள்ளக்கூடாது என்றும்,வாகனம் ஓட்ட சிறார்களை அனுமதிக்க கூடாது எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும்,இன்று முதல் இந்த விதிகள் தீவிரமாக கண்காணிக்கப்படும் என்றும்,மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும்,சென்னையில் தேர்ந்தெடுத்த 335 பள்ளிகளில் போக்குவரத்து […]
மக்களிடம் அதிக கட்டணம் வசூலிக்கக்கூடாது என்று ஆட்டோ, ஷேர் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு காவல்துறை எச்சரிக்கை. தமிழகத்தில் வேலை நிறுத்த போராட்டத்தை பயன்படுத்தி மக்களிடம் அதிக கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆட்டோ, ஷேர் ஆட்டோகளுக்கு காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்களில் உள்ள ஆட்டோ ஓட்டுநர்களை நேரில் சந்தித்து சென்னை காவல்துறை அறிவுறுத்தியுள்ளது. வேலை நிறுத்தத்தை பயன்படுத்தி அதிக கட்டணம் வசூல் தொடர்பாக மக்கள் கொடுத்த புகாரின்பேரில் ஆட்டோ ஓட்டுநர்கள் மீது வழக்குப்பதிவு […]
வேலூர்:ஆட்டோக்களில் ஓட்டுநர் மற்றும் உரிமையாளரின் பெயர் விவரங்கள் கட்டாயம் இருக்க வேண்டும் என வேலூர் மாவட்ட ஏடிஎஸ்பி உத்தரவிட்டுள்ளார். வேலூரில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஆட்டோவில் சென்ற பெண் மருத்துவர் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் தமிழகத்தை உலுக்கியுள்ளது.இதனையடுத்து,பாதிக்கப்பட்ட அப்பெண் மருத்துவர் அளித்த புகாரின் அடிப்படையில் ஒரு சிறார் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆலோசனைக் கூட்டம்: இதனைத் தொடர்ந்து,வேலூர் டவுன் ஏடிஎஸ்பி சுந்தர மூர்த்தி அவர்கள் தலைமையில் இன்று ஆட்டோ ஓட்டுநர்களுடன் […]
மத்திய பிரதேசத்தில் வெள்ளத்தில் சிக்கிய கர்ப்பிணி சென்று கொண்டிருந்த ஆட்டோவிலேயே பிரசவம் பார்க்க இரண்டு பெண் காவலர்கள் உதவியுள்ளனர். மத்திய பிரதேச மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. அம்மாநிலத்தில் உள்ள போபாலை சேர்ந்த கர்ப்பிணி பெண்ணிற்கு பிரசவ வலி எடுத்த காரணத்தால் ஆட்டோ மூலமாக மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அப்போது ஆட்டோ வெள்ளத்தில் சிக்கியதால் அதன் பின்னர் நகரமுடியாமல் தத்தளித்து கொண்டிருந்துள்ளது. அப்பகுதியில் இந்த சம்பவத்தை பார்த்து கொண்டிருந்த இரண்டு பெண் காவலர்கள் ஆட்டோவை […]
தமிழகத்தில் மாவட்டங்களுக்கும் மற்றும் மற்ற மாவட்டங்களுக்கு இடையேயான அரசு, தனியார் பேருந்துகள், வாடகை ஆட்டோ, டாக்சிகள் உள்ளிட்டவற்றிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸின் 2-வது அலை தீவிரமாக பரவி வரும் நிலையில், இந்த வைரஸை கட்டுப்படுத்த, புதியதாக பொறுப்பேற்றுள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாப்களின் அவர்கள் பல புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி, தமிழகம் முழுவதும் மே 10ம் தேதி முதல் 24-ம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், […]
தெலுங்கானா மாநிலம், நலகொண்டா மாவட்டம் அருகே ஆட்டோ மீது லாரி மோதிய விபத்தில் ஆட்டோவில் பயணம் செய்த 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தெலுங்கானா மாநிலம், நலகொண்டா மாவட்டத்தில் உள்ள டேவரகொண்டா மண்டல் பகுதிக்கு அருகே உள்ள கிராமத்தில் கூலி வேலையை முடித்துவிட்டு, ஆட்டோவில் 20-க்கும் மேற்பட்டோர் வீடு திரும்பிக்கொண்டிருந்தார்கள். அப்போது எதிர்பாராதவிதமாக அந்த ஆட்டோ மீது லாரி மோதியது. இதில் ஆட்டோ அப்பளம் போல நொறுங்கியது. இந்த விபத்தில் ஆட்டோவில் பயணம் செய்த 7 […]
டெல்லியில் போராடிவரும் விவசாயிகளுக்கு ஆதரவாக இன்று புதுச்சேரி முழுவதும் முழு அடைப்புப் போராட்டம் நடைப்பெற்று வருகிறது. மத்திய அரசு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றிய 3 வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி டெல்லி எல்லையில் விவசாய அமைப்பினர் 13வது நாளாக போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், இதற்கு பலர் ஆதரவு தெரிவித்த நிலையில், இன்று நாடு முழுவதும் வேளாண் சட்டங்களை எதிர்த்து பாரத் பந்த் என்ற பெயரில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. விவசாயிகளின் முழு அடைப்பு போராட்டத்திற்கு […]
தமிழ் சினிமாவில் கார்த்தியின் சகுனி படத்தின் மூலம் அறிமுகமானவர் பிரனிதா. இந்த படத்தை சங்கர் தயாள் இயக்கியிருந்தார். மேலும் சூர்யாவுடன் இணைந்து மாஸ்என்கிற மாசிலாமணி என்ற படத்திலும் நடித்துள்ளார். மேலும் பல தெலுங்கு மற்றும் கன்னட படங்களிலும் நடித்துள்ளார். இந்தாண்டு ஒரு பாலிவுட் படத்தின் மூலம் பாலிவுட்டிலும் காலெடுத்து வைக்கிறார். இந்த நிலையில் இவர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட பல்வேறு உதவிகளை செய்து வரும் நிலையில் தற்போது ஆட்டோ டிரைவர்களுக்கு சானிடைசர் வழங்கி உதவியுள்ளார். ஆம் ஆந்திர மாநிலத்தில் […]
இன்று முதல் தமிழகம் முழுவதும் காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை ஆட்டோக்கள் இயங்கலாம் என அரசு அறிவித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்று தாக்கத்தை கட்டுப்படுத்த அரசு பல நடவடிக்கை எடுத்துள்ளது. இந்நிலையில், பொது மக்கள் வாழ்வாதாரத்தை கருத்தில் தமிழக அரசு சில தளர்வுகளை அறிவித்து வருகிறது. இதையடுத்து, இன்று முதல் தமிழகத்தில் ஆட்டோக்களை இயக்க நிபந்தனைகளுடன் அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. சென்னை தவிர மற்ற இடங்களில் ஆட்டோக்கள் இயக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சி […]
மஹாராஷ்டிரா மாநிலம், மும்பையில் வசித்து வருபவர் சத்தியவான் கீதே. இவர் அந்த பகுதியில் ஆட்டோ ஓட்டி வருகிறார். இவரின் ஆட்டோவில் பயணிக்க அங்குள்ள மக்கள் மிகவும் விரும்புவார்கள். ஏனெனில், அவர் தனது ஆட்டோவில் பல வசதிகளை செய்துள்ளார். அதில், மொபைல் போன் சார்ஜ் செய்வதற்கான ஹோல்டர், டெஸ்க்டாப் கணினி வசதி, குடிப்பதற்கு குடிநீர், முகம் மற்றும் கை கழுவுவதற்கான வாஷ் பேசின் மற்றும் கூலர் உள்ளிட்ட வசதிகளை அமைத்துள்ளார். மேலும், இதற்க்கு அவர் எந்த விதமான கட்டணமும் […]
ராஜஸ்தானின்உள்ள பிகானேர் மாவட்டத்தின் தேஷ்னோக் நகரில் நேற்று முன்தினம் காலை லாரி மீது ஆட்டோ மோதியதில் 7 பேர் சம்பவ இடத்திலே உயிரிழந்தனர். மேலும் இந்த விபத்தில் 5 பேர் காயமடைந்தனர். காயமடைந்த அனைவரும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவத்தில் இறந்தவர்கள் இன்னும் அடையாளம் கண்டுபிடிக்கவில்லை. இதேபோன்ற சம்பவம் கடந்த மாத தொடக்கத்தில் நடந்தது. பிகானேர் மாவட்டத்தில் ஒரு கோயிலில் இருந்து திரும்பிய மூன்று பேர் சம்பவ இடத்திலே உயிரிழந்தனர் மற்றவர்கள் […]
மும்மையில் உள்ள லோக்கல் ரயிலில் கடந்த 4-ம் தேதி கர்ப்பிணி பெண் ஒருவர் பயணம் செய்தார். கடந்த சில வாரங்களாக மும்பையில் கன மழை பெய்து வருகிறது. கடந்த 4-ம் தேதி மும்பையில் பல இடங்களில் பலத்த மழை பெய்தது. கன மழையால் தண்டவாளங்களில் வெள்ளம் சென்றதால் அப்பெண் பயணம் செய்த லோக்கல் ரயில் விரார் ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டது. அப்போது அப்பெண்ணிற்கு பிரசவ வலி ஏற்பட்டது.இதை தொடர்ந்து அவரது கணவர் மருத்து வமனைக்கு செல்ல […]
பெட்ரோல் டீசல் விலை உயர்வின் தொடர்ச்சியாக சென்னை மக்களுடன் பிரிக்கமுடியாத அங்கமாகிவிட்ட ஷேர் ஆட்டோக்களின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. சென்னை மாநகர மக்கள் போக்குவரத்துக்காக அரசு மாநகரப் பேருந்துகள், மின்சார ரயில்கள், பறக்கும் ரயில்கள் மற்றும் மெட்ரோ ரயிலை பெரும்பாலும் நம்பியுள்ளனர். இதுதவிர அரசு சார்பில் பல இடங்களில் சிற்றந்துகளும் இயக்கப்படுகின்றன. அதேநேரத்தில், மக்களின் தேவையை மாநகரம் முழுவதும் இயக்கப்படும் சுமார் 10 ஆயிரம் ஷேர் ஆட்டோக்களும் நிறைவு செய்து வருகின்றன. பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத […]
சாய் பல்லவி இவர் தமிழ்நாட்டை சேர்ந்தவராக இருந்தாலும் மலையாள படம் முலமே சினிமாவிற்கு அறிமுகமாகினர்.பின்னர் அவர் தமிழில் அறிமுகமான தியா படத்திற்கு மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. அதனை தொடர்ந்து அவர் தனுஷின் மாரி 2 படத்தில் நடித்து வருகிறார். பாலாஜி மோகன் இயக்கி வரும் இந்த படத்தில் சாய் பல்லவியின் வேடம் என்ன என்பது பற்றி புதிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது. சாய் பல்லவி மாரி 2 படத்தில் ஆட்டோ ஓட்டுனராக நடிக்கிறார் என்று கூறப்படுகிறது. […]
எஸ்டபிள்யூஎம்(SWM motorcycle) மோட்டார்சைக்கிள் நிறுவனம் விரைவில் தனது சூப்பர்டியூவல் டி600 அட்வென்ச்சர்(Superfast D600 Adventure) ரக பைக்கை இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வர இருக்கிறது. கைனெட்டிக் குழுமத்தின் மோட்டோராயல் பிரிவு இந்த பைக்குகளை இந்தியாவில் விற்பனை செய்யும் பொறுப்பை ஏற்றுள்ளது. இந்த நிலையில், புனே நகரில் நடந்த கிரேட் ட்ரெயில் அட்வென்ச்சர் நிகழ்வில், புதிய எஸ்டபிள்யூஎம் சூப்பர்டியூவல் டி600 பைக் காட்சிப்படுத்தப்பட்டு இருந்தது. புதிய எஸ்டபிள்யூஎம் சூப்பர்டியூவல் டி600 பைக்கில் கிராஷ் கார்டு, லக்கேஜ் டிராக்,பேனியர்ஸ் […]