சென்னை : அமெரிக்க தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று நிறைவடைந்து வாக்கு எண்ணிக்கையும் தொடங்கி தற்போது விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், வாக்கு எண்ணிக்கை தொடங்கியதும் குடியரசு கட்சி வேட்பளரான டொனால்ட் டிரம்ப் தொடர் முன்னிலை வகுத்து வந்த நிலையில், டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றதாக அமெரிக்காவின் பிரபல செய்தி தொலைக்காட்சியான ஃபாக்ஸ் நியூஸ் அறிவித்துள்ளது. சுமார் 51% வாக்குகளை பெற்றுள்ள நிலையில், அவரது வெற்றி உறுதியானதாக ஆதரவாளர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். வெற்றி பெற தேவையான 270 […]
சென்னை : தீபாவளி பண்டிகையை ஒட்டி வந்த தொடர் விடுமுறை முடிந்ததால், தென் மாவட்டங்களில் இருந்து வாகனங்கள் சென்னை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. உளுந்தூர்பேட்டை டோல்கேட் பகுதியில் ஆயிரக் கணக்கான வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன. அதேபோல், தாம்பரம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் ஊர்ந்து செல்லுகின்ற நிலைமை ஏற்பட்டுள்ளது. மேலும், ராணிப்பேட்டையில் 2 கி.மீ. தூரத்திற்கு அணிவகுத்து வாகனங்கள் நிற்கிறது.
Vignesh Shivan: இயக்குனர் விக்னேஷ் சிவன், தனது குழந்தைகளையும் மனைவி நயன்தாராவையும் அரவணைக்க காத்திருக்க முடியாது இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார். அன்புக்குரிய தம்பதிகளான நயன்-விக்கி ஆகியோர் தனது வேலைகளில் பிஸியாக இருந்தாலும், குழந்தை பிறந்த நாளில் இருந்து தங்கள் இரட்டை மகன்களுடன் கடக்கும் அழகான தருணங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர். விக்னேஷ் சிவன் தற்பொழுது பிரதீப் ரங்கநாதன் முக்கிய வேடத்தில் நடிக்கும் ‘லவ் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன்’ படத்தில் பிஸியாக இருக்கிறார். இப்படத்தில் கிருத்தி ஷெட்டி, எஸ்.ஜே.சூர்யா மற்றும் […]
214-ஆவது நாளாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் இல்லை. சர்வதேச சந்தையில் கட்சா எண்ணெய் விலையை பொறுத்து பெட்ரோல், டீசல் விலை நிர்ணயிக்கப்படுகிறது. இந்த நிலையில் தற்பொழுது கடந்த 200 நாட்களைக் கடந்தும் எந்தவித மாற்றமும் இல்லாமல் பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில் 214-ஆவது நாளாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் இல்லாமல், இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.102.63 க்கும் , டீசல் விலை லிட்டருக்கு ரூ.94.24 க்கும் விற்பனையாகி […]
இயக்குனராக இருந்து நடிகராக வந்து எஸ்.ஜே.சூர்யா சிவகார்த்திகேயன் நடித்த ‘டான்’ படத்தில் கடைசியாகப் நடித்தார். தற்போது, தனது அடுத்த படத்தின் வெளியீட்டுக்குத் தயாராகிவிட்டார். எஸ் ஜெ சூர்யாவுடன் நடிகை யாஷிகா ஆனந்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள ‘கடமையைச் செய்’ திரைப்படம் மே மாதம் வெளியாகும் என முன்னதாக அறிவிக்கப்பட்டது. இப்பொதுன், சில காரணங்களால் தேதி மாற்றி படம் ஜூன் 24ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. Happy to announce that our movie ‘KADAMAIYAI SEI’ […]
தமிழ் சினிமாவின் பிரபல நடிகர் டி ராஜேந்தர் சமீபத்தில் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது அவரது வயிற்றுப் பகுதியில் லேசான ரத்தக்கசிவு இருப்பது தெரியவந்ததையடுத்து, மேல் சிகிச்சைக்காக அவருக்கு மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இந்நிலையில், டி ராஜேந்தர் மருத்துவ மேல் சிகிச்சைக்காக வெளிநாடு செல்ல அனுமதி பெற்றுள்ளார். அதாவது, அரசாங்கத்தால் தனது விசாவை பெற்றுள்ளதால் இன்னும் ஓரிரு நாட்களில் சிங்கப்பூர் செல்வார் என்று கூறப்படுகிறது. அந்த வகையில், டி.ராஜேந்தரின் மூத்த மகன் சிம்பு இந்த இக்கட்டான சூழ்நிலையில் […]
தொடர்ந்து பிளாக்பஸ்டர் படங்களை வழங்கி வரும் நடிகர் சிவகார்த்திகேயன் அடுத்ததாக தெலுங்கு இயக்குனர் அனுதீப் இயக்கும் தமிழ்-தெலுங்கு இரு மொழிக படமான ‘எஸ்கே20’ படத்தில் நடித்து வருகிறார். தற்போது, இந்த படத்தில் இன்னும் 1 அல்லது 2 பாடல்கள் மட்டுமே எடுக்கபடவுள்ள நிலையில், இப்படத்தின் 90% படப்பிடிப்பு முடிந்துவிட்டது என்று கூறப்படுகிறது.இந்த படத்திற்காக மரியா ரியாபோஷாப்கா என்ற உக்ரேனிய நடிகை சிவகார்த்திகேயனுக்கு கதாநாயகியாக நடிக்கிறார். தற்போது, படக்குழு விரைவான அட்டவணைக்காக பாண்டிச்சேரியில் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த […]
நடிகர் ஃபகத் பாசில் தனது நடிப்பால் மாலிவுட் மட்டுமின்றி பிற மொழிகளிலும் பிரபலமாகி வருகிறார். தற்போது,இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகும் ‘மாமன்னன்’ படப்பிடிப்பில் இன்று இணைந்துள்ளார். இப்படத்தில் உதயநிதி ஸ்டாலின், கீர்த்தி, ஃபஹத், வடிவேலு ஆகியோர் நடித்துள்ளனர். மார்ச் முதல் வாரத்தில் படத்தின் படப்பிடிப்பை ஆரம்பித்து முதல் ஷெட்யூலை முடித்த நிலையில், படத்தின் அடுத்த ஷெட்யூல் சென்னையில் நடந்து வருகிறது. இந்நிலையில், தனது மனைவி நஸ்ரியாவுடன் விடுமுறைக்காக வெளியூர் சென்ற ஃபகத் தற்போது தனது பகுதிகளை […]
ஜன.5ஆம் தேதி ஆண்டின் முதல் கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் கலைவாணர் அரங்கில் தொடங்குகிறது. ஜன.5ஆம் தேதி ஆண்டின் முதல் கூட்டத்தொடர் புனித ஜார்ஜ் கோட்டை சட்டப்பேரவை வளாகத்தில் நடைபெறும் என முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், கொரோனா மற்றும் ஓமைக்ரான் தொற்று கட்டுப்பாடுகள் காரணமாக கலைவாணர் அரங்கிலேயே கூட்டத்தொடர் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஜன.5ஆம் தேதி ஆண்டின் முதல் கூட்டத்தொடர் ஆளுநர் என்ஆர் ரவி உரையுடன் கலைவாணர் அரங்கத்தில் காலை 10 மணிக்கு நடைபெறும் என்று சட்டப்பேரவை […]
தமிழ்நாட்டை அமைதிப் பூங்காவாக நிலை நிறுத்தி கொண்டு இருப்பவர் டிஜிபி என அமைச்சர் சேகர்பாபு பாராட்டு. சட்டம் ஒழுங்கை பராமரிப்பதில் இந்திய துணைக் கண்டத்திற்கு முன்மாதிரியாக திகழ்ந்து, தமிழ்நாட்டை அமைதிப் பூங்காவாக நிலை நிறுத்தி கொண்டு இருப்பவர் டிஜிபி சைலேந்திரபாபு என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு பாராட்டு தெரிவித்தார். இன்று செய்தியாளர் சந்திப்பில் பேசிய அமைச்சர், தீவிரவாத மதவாதத்திற்கு இடம் தராமல் செயலாற்றக்கூடிய காவல்துறை தலைவரை முதல்வர் தமிழகத்திற்கு அளித்துள்ளார் என்றும் குறிப்பிட்டார். மேலும், […]
கனமழை காரணமாக சென்னைக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் வருகிற 9 ஆம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாகவும், இது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுவடைந்து தமிழ்நாடு கடற்கரையை நோக்கி நகரக் கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், நேற்று சென்னை பெருநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் விடிய விடிய பெய்த கனமழை காரணமாக சென்னை மற்றும் […]
நவம்பர் 1-ஆம் தேதி முதல் ஒன்று முதல் 8ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பது தொடர்பாக தமிழக அரசு வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு. தமிழகத்தில் நவம்பர் 1-ஆம் தேதி முதல் ஒன்று முதல் 8ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. பள்ளிகள் திறப்பதமானால் தமிழக அரசு பல்வேறு முன்னேற்பாடுகளை செய்து வருகிறது. மீண்டும் பள்ளிக்கு வரும் குழந்தைகளை அன்புடன் வரவேற்போம் என்றும் மாணவர்களுக்கு நம்பிக்கையூட்டுவதன் மூலமாக எதிர்கால மனித ஆற்றலை உருவாக்குவோம் எனவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருந்தார். […]
ஒரு வருடத்திற்குள் சமையல் எரிவாயு விலை ரூ.305க்கு மேல் உயர்ந்துள்ளது என டெல்லி ஆம் ஆத்மி கட்சி குற்றசாட்டு. சர்வதேச சந்தையில்,கச்சா எண்ணெயின் விலை அடிப்படையில், பெட்ரோல், டீசல் மற்றும் சாமானிய மக்கள் பயன்படுத்தும் சமையல் எரிவாயு விலை நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. அதன்படி, நாள்தோறும் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் செய்யப்படும். இதுபோன்று மாதத்தில் ஒரு முறை அல்லது இருமுறை சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை மாற்றம் செய்யப்படுகின்றன. இந்த வருடத்தில் சமையல் எரிவாயு விலை […]
சென்னை தலைமை செயலகத்தில் உள்துறை செயலாளர் பிரபாகர் தலைமையில் காவல்துறை பாதுகாப்பு குழு ஆலோசனை. சென்னை தலைமை செயலகத்தில் உள்துறை செயலாளர் பிரபாகர் தலைமையில் காவல்துறை பாதுகாப்பு குழு ஆலோசனை நடைபெற்று வருகிறது. தமிழகம் முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்துவது, எல்லைப்பகுதிகளில் உள்ள பிரச்சனைகள், மிக முக்கிய நபர்களுக்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்படாமல் பாதுகாப்பு பணி குறித்து ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்.
போதைப்பொருள் விவகாரம் தொடர்பாக கைதாகி உள்ள நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் நீதிமன்றத்தில் ஆஜர். மும்பையிலிருந்து கோவா சென்ற எம்பிரஸ் சொகுசுக் கப்பலில் நடைபெற்ற பார்ட்டியில் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்களை பயன்படுத்திய விவகாரம் தொடர்பாக ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் உள்ளிட்ட 8 பேரை பிடித்து போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். இதனைத்தொடர்ந்து, சுமார் 20 மணி நேரம் 8 பேரிடமும் விசாரணை மேற்கொண்ட அதிகாரிகள், ஆர்யன் கான் உள்ளிட்ட 3 […]
மக்களை தேடி மருத்துவம் திட்டம் தான் தமிழக அரசுக்கு மிகப்பெரிய பெயரை தந்து கொண்டியிருக்கிறது என முதல்வர் பெருமை. சென்னை மருத்துவ கல்லூரியில் மக்களை தேடி மருத்துவம் திட்டத்திற்கு தனி மையம் தொடங்கி வைத்த பின் பேசிய முதலமைச்சர் மு.க ஸ்டாலின், தமிழகத்தில் ஒடுக்கப்பட்ட, விளிம்புநிலையில் இருக்கும் மக்களை கை தூக்கிவிட கூடிய அரசுதான் திமுக அரசு. மக்களுக்கான திட்டங்களை திமுக அரசு செயல்படுத்தி வருகிறது. மக்களை தேடி மருத்துவம் திட்டம் தான் தமிழக அரசுக்கு மிகப்பெரிய […]
‘Made in India’ என்பது போல, ‘Made in TamilNadu’ என்ற குரல் உலகம் முழுவதும் ஒலிக்க வேண்டும்’ என தமிழ்நாடு ஏற்றுமதி மாநாட்டில் முதல்வர் உரை. சென்னை வாலாஜா சாலையில் உள்ள கலைவாணர் அரங்கத்தில் இன்று காலை நடைபெற்ற ஏற்றுமதியில் ஏற்றம் – முன்னணியில் தமிழ்நாடு என்ற மாநாட்டில் ரூ.2,120.54 கோடி மதிப்பீட்டில் 41,695 நபர்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கிடும் வகையில் 24 தொழில் முதலீடுகளுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் முதலமைச்சர் முக ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தானது. […]
நாகூர் தர்காவிற்கு 45 கிலோ சந்தனக்கட்டைகளை வழங்க உத்தரவிட்டு தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து சுற்றுசூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை வெளியிட்டுள்ள அரசாணையில், நாகூர் தர்கா இடைக்கால நிருவாக குழுவினரிடமிருந்து பெறப்பட்ட கடிதத்தில், 11-07-2021-ல் நடைபெறவிருக்கும், சின்ன ஆண்டவர் கந்தூரி மற்றும் ஜனவரி 2022-இல் நடைபெறவுள்ள பெரிய ஆண்டவர் கந்தூரி திருவிழாவிற்கு கடந்த ஆண்டுகளில் இலவசமாக சந்தனக்கட்டைகள் வழங்கப்பட்டது. அதனைப்போன்று சிறப்பினமாக கருதி 45 கிலோ சந்தனக்கட்டைகளை நாகூர் தர்காவிற்கு விலையின்றி (இலவசமாக) வழங்கும்படி […]
கொரோனா வைரஸின் தாக்கம் அதிகம் ஏற்பட்டதால் கோழி மற்றும் கோழி முட்டையில் இந்த வைரஸின் தாக்கம் உள்ளது என்று வதந்திகள் பரவியது. இதனால் விற்கப்படாமல் பல கோடிக்கணக்கான முட்டைகள்இருந்தன. இதன் காரணமாக நாமக்கல்லில் மிகவும் விலை குறைந்து 2 ரூபாய் வரைக்கும் முட்டை விலை நிர்ணயம் ஆனது. இந்நிலையில், தற்பொழுது இந்த வதந்திகள் குறைந்து மக்கள் சாதாரணமாக அவற்றை உண்ண தொடங்கியுள்ளனர். இதனால் தற்பொழுது நாமக்கல்லில் முட்டையின் விலை 50 காசு உயர்ந்து தற்போது 2.75 ஆக […]
தமிழ் சினிமாவின் பிரபலமான காமெடி நடிகராக வலம் வரும் யோகி பாபு அண்மையில் திடீரென யாருக்கும் அறிவிக்காமல் தனது உறவுக்காரப் பெண் மஞ்சு பார்கவி அவர்களை திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில், ரசிகர்கள் அவரிடம் கேள்வி கேட்டதற்கு நிச்சயமாக என்னுடைய திருமண வரவேற்புக்கு நான் அனைவருக்கும் சொல்லுவேன் என கூறியிருந்தார். அதன்படி தற்பொழுது வருகின்ற ஏப்ரல் மாதம் ஐந்தாம் தேதி திருமண வரவேற்பு விழா நடைபெற உள்ளது. இதற்கு முதலமைச்சர் பழனிசாமி மற்றும் பன்னீர்செல்வம் ஆகியோருக்கு யோகி […]