சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று பள்ளிக் கல்வித்துறை சார்பில், மாணவர் நலனுக்கான “நலம் நாடி” செயலியை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிமுகம் செய்தார். அதேபோல், அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கான இணையதளத்தையும் தொடங்கி வைத்தார். மேலும் கஸ்தூரிபா காந்தி பாலிகா வித்யாலயா மற்றும் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் உண்டு உறைவிடப் பள்ளி மாணவ மாணவியர்களுக்கான மாதாந்திர ஊக்கத் தொகை நேரடி பயனாளர் பணப் பரிவர்த்தனை மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கான இணையவழி குறைதீர் புலம் […]
கல்வியை மீண்டும் மாநில பட்டியலுக்கு மாற்ற ஆவண செய்யும்படி மத்திய அரசுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை வைத்துள்ளார். இன்று திண்டுக்கல்லில் நடைபெற்ற காந்திகிராம பல்கலைக்கழக பட்டளிப்பு விழாவில் பிரதமர் மோடி, தமிழக முதல்வர் ஸ்டாலின், தமிழக ஆளுநர் ஆர் என் ரவி உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில் உரையாற்றிய தமிழக முதல்வர் ஸ்டாலின் ” கல்வி மட்டுமே யாராலும், எப்போதும் பறித்துக் கொள்ள முடியாத சொத்து என்றும் தரமான கல்வியை வழங்குவது மாநில அரசின் கடமை, […]
மாணவியை மருமகளாக்க நினைத்த ஆசிரியையை பணியிடமாற்றம் செய்து அதிகாரிகள் உத்தரவு. திருப்பூர் மாவட்டம் காரதொழுவு அரசு மேல்நிலைப் பள்ளியில் கணித ஆசிரியராக பணியாற்றி வந்தவர் சாந்தி. இவர் அந்த பள்ளியில் பயின்ற 12-ஆம் வகுப்பு மாணவி ஒருவரை, தனது மகனிடம் பேசுமாறு வற்புறுத்தி உள்ளார். மேலும் அந்த மாணவியை மருமகள் என உறவுமுறை கூறி அழைத்துள்ளார். அதனை தொடர்ந்து, தனது மகனிடம் பேசவில்லை என்றால், மதிப்பெண்ணில் கைவைப்பேன் என்றும் மிரட்டல் விடுத்துள்ளார். இதனையயடுத்து, இது தொடர்பாக மாணவி […]
கல்வி அனைவருக்கும் இலவசமாக வழங்கப்பட வேண்டும் என உயர் நீதிமன்றம் மதுரை கிளை நீதிபதிகள் கருத்து. மாணவர்களுக்கு கல்வி அரசால் இலவசமாக வழங்கப்பட வேண்டும் என்று உயர் நீதிமன்றம் மதுரை கிளை தெரிவித்துள்ளது. அமெரிக்கா போன்று வளர்ந்த நாடுகளில் திறமை அடிப்படையில் முழு கல்வி செலவையும் அரசே ஏற்கிறது என நீதிபதி மகாதேவன் கருத்து கூறியுள்ளார். கல்வி பயிலும் மாணவர்கள் பேருந்து நிலையத்தில் காத்து கிடக்கும் சூழ்நிலை நிலவுகிறது. கல்வி நிலையம் வைத்து நடத்தும் முதலாளிகள் பிஎம்டபிள்யூ […]
2-ஆம் ஆண்டு மாணவர்களும் கல்வி பயில்வதற்கு கட்டணமில்லை என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு. சென்னை கொளத்தூரில் உள்ள தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு முழுவதும் சுற்றிச் சுழன்று வந்தாலும் சொந்த தொகுதியான கொளத்தூருக்கு வரும்போது நான் அடையும் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 10 கல்லூரிகள் தொடங்கப்படும் என்ற அறிவிப்பை கடந்த ஆண்டு அமைச்சர் அறிவித்தார். கோரிக்கை வைக்காமலேயே […]
10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நாளை வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், தேர்வு முடிவு வெளியீடு 20ம் தேதிக்கு ஒத்திவைப்பு. தமிழகத்தில் 10 -ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் திட்டமிட்டப்படி நாளை (ஜூன் 17 ஆம் தேதி) வெளியிடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வரும் ஜூன் 23-ஆம் தேதி வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி மாற்றம் செய்து அரசுத் […]
வரும் திங்கட்கிழமை முதல் பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், அன்றைய தினமே மாணவர்களுக்கு விலையில்லா பாடப்புத்தகங்கள் வழங்க ஏற்பாடு. தமிழகத்தில் 1 முதல் 10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கோடை விடுமுறை முடிந்து, வரும் 13-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படவுள்ளது. 13-ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், திருவள்ளூர் மாவட்டம் புழல் ஒன்றியம் அழிஞ்சிவாக்கம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டு, எண்ணும் எழுத்தும் திட்டத்தையும் துவக்கி வைக்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், […]
பள்ளிகள் திறந்ததும் முதல் 5 நாட்கள் மாணவ மாணவிகளுக்கு நல்லொழுக்க வகுப்புகள் நடத்தப்படும் என அமைச்சர் தகவல். தமிழகத்தில் 1 முதல் 10-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வரும் ஜூன் 13-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஏற்கனவே தெரிவித்திருந்தார். இதனிடையே, தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் சற்று அதிகரித்து வருவதால் பள்ளிகள் திறப்பு தள்ளிப் போகுமா என பெற்றோர்கள், மாணவர்கள் மத்தியில் கேள்வி எழுந்த நிலையில், திட்டமிட்டபடி […]
கல்வி அமைச்சர்கள் மாநாட்டை தமிழக அமைச்சர்கள் பொன்முடி, அன்பில் மகேஷ் புறக்கணிப்பு. குஜராத்தில் நடைபெறும் அனைத்து மாநில கல்வி அமைச்சர்கள் மாநாட்டை தமிழ்நாடு அரசு புறக்கணித்துள்ளது. NEP தொடர்பாக குஜராத்தில் இன்றும், நாளையும் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தலைமையில் நடைபெறும் மாநாட்டில் தமிழக அமைச்சர்கள் பங்கேற்கவில்லை. இன்றும், நாளையும் குஜராத்தில் புதிய கல்வி கொள்கை குறித்து விவாதிக்க மாநாடு நடைபெறுகிறது. கல்வி அமைச்சர்கள் மாநாட்டை தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் […]
ஹர்பஜன் சிங் தனது ராஜ்யசபா சம்பளத்தை கல்வி, விவசாயிகளின் மகள்களின் நலனுக்காக வழங்குவதாக அறிவித்துள்ளார். பஞ்சாப் மாநிலத்தில் சமீபத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் மொத்தமுள்ள 117 இடங்களில் 92 இடங்களில் ஆம் ஆத்மி கட்சி அமோக வெற்றி பெற்று ஆட்சியை அமைத்தது. இதன்பின், பஞ்சாபில் 5 மாநிலங்களவை இடங்களுக்கு கடந்த மார்ச் 31-ம் தேதி தேர்தல் நடைபெற்றது. இதில் ஆம் ஆத்மி வேட்பாளராக முன்னாள் இந்தியா கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்கும் போட்டியிட்ட நிலையில், ஹர்பஜன் […]
வரும் கல்வியாண்டில் ( 2022-23 ) இருந்து முழுவதும் நீக்கப்படுகிறது M.Phil., படிப்பு என யுஜிசி அறிவிப்பு. வரும் கல்வியாண்டில் இருந்து M.Phil படிப்பு முழுமையாக நீக்கப்படுகிறது என பல்கலைக்கழக மானியக்குழு அறிவித்துள்ளது. ஆனால், ஏற்கெனவே வழங்கப்பட்டு வந்த M.Phil பட்டங்கள் செல்லும் என்றும் யுஜிசி (UGC) தெரிவித்துள்ளது. கற்பித்தல் பணிக்கு M.Phil., தகுதியானது இல்லை என்பதால், M.Phil., படித்திருந்தாலும் அதை ஒரு தகுதியாக குறிப்பிட முடியாது என குறிப்பிட்டுள்ளது. சென்னை பல்கலைக் கழகத்தின் கீழ்வரும் கல்லூரிகளிலும் […]
புதுச்சேரியில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வந்ததையடுத்து பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டது. இந்நிலையில் சமீப நாட்களாக கொரோனா தொற்று குறையத் தொடங்கியதால், அனைத்து பள்ளி கல்லூரிகளும் பிப்ரவரி மாதம் 4-ஆம் தேதி முதல் மீண்டும் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. ஆனால் மழலையர் பள்ளிகள் மட்டும் திறக்க அனுமதி அளிக்காமல் இருந்த நிலையில், வரும் மார்ச் 14-ஆம் தேதி முதல் மழலையர் பள்ளிகள் திறக்கப்படும் என்று புதுச்சேரி பள்ளிக்கல்வித்துறை இன்று அறிவித்துள்ளது.
இந்திய பல்கலைக்கழகங்கள் கூட்டமைப்பின் சார்பில் தென்மண்டல துணைவேந்தர்கள் கருத்தரங்கு இன்று சென்னையில் நடைபெற்றது. இந்த கருத்தரங்கை தமிழக ஆளுநர் தொடங்கி வைத்த நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டார். இந்த நிகழ்வில் பேசிய, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், கல்வியைப் பொதுப் பட்டியலில் இருந்து மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும். மத்திய அரசு தனது அதிகாரத்தை பயன்படுத்தி பிறப்போக்குதனமான கருத்துக்களை கல்வியில் புகுத்தி வருகிறது . கல்வியைப் பொதுப் பட்டியலில் இருந்து […]
சென்னை:தமிழகத்தில் இன்று ( 22-ம் தேதி ) ஒரு நாள் மட்டும் ஆசிரியர்களுக்கு விடுமுறை வழங்குவதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரிப்பின் காரணமாக 1 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை அனைத்து வகையான பள்ளிகளுக்கும் நேரடி வகுப்புகள் ரத்து செய்யப்பட்ட நிலையில்,ஆன்லைன் வகுப்புகள் நடத்துவது குறித்து ஆசிரியர்களுக்கான பயிற்சி நடைபெற்று வருகிறது.இந்நிலையில்,இன்று (22.01.2022) ஒரு நாள் மட்டும் ஆசிரியர்களுக்கு விடுமுறை வழங்குவதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. இது தொடர்பாக,பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் […]
ஜனவரி முதல் அனைத்து மாவட்டங்களிலும் இல்லம் தேடி கல்வி திட்டம் தொடங்கப்படும் என பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். கொரோனா காலத்தில் மாணவர்களின் கல்வித் திறன் பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்பதற்காக தமிழக அரசு சார்பில் இல்லம் தேடி கல்வி திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. அதாவது மாணவர்கள் பள்ளி சென்று வீடு திரும்பிய பின் இல்லம் தேடி கல்வி மையங்களில் மாணவர்களுக்கு பாடம் கற்பிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, மாலை 5 மணி முதல் […]
முதுகலை கல்வியியல் பட்டப்படிப்பு முதலாம் ஆண்டில் சேர நாளை முதல் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். தமிழகத்தில் முதுகலை கல்வியியல் பட்டப்படிப்பு முதலாம் ஆண்டில் சேர நாளை முதல் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று கல்லூரிக்கல்வி இயக்குனரகம் அறிவித்துள்ளது. அதன்படி, M.Ed படிப்பிற்கு ஆர்வமுள்ள மாணவர்கள் www.tngasaedu.in மற்றும் www.tngasaedu.edu ஆகிய இணையதளங்களில் பதிவு செய்து கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. முதுகலை கல்வியியல் பட்டப்படிப்பில் முதலாம் ஆண்டு சேர விரும்பும் மாணவர்கள் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்தி நாளை முதல் […]
7.5% உள் ஒதுக்கீட்டில் பொறியியல் படிப்பை தேர்வு செய்த அரசு பள்ளி மாணவர்களுக்கு சேர்க்கை ஆணை வழங்கினார் முதல்வர். மாணவர்களின் பொறியியல் கனவு நிறைவேறும் நாள் இன்று என பி.இ மாணவர் சேர்க்கை ஆணை வழங்கும் விழாவில் பேசிய முதலமைச்சர் முக ஸ்டாலின், அரசுப் பள்ளிகளில் படித்து 7.5% இட ஒதுக்கீட்டின் கீழ் சேரும் மாணவர்களின் கல்விக் கட்டணம், விடுதிக் கட்டணம், கலந்தாய்வு கட்டணம் ஆகிய அனைத்தையும் தமிழ்நாடு அரசே ஏற்றுக்கொள்ளும் என்று அறிவித்துள்ளார். அரசு பள்ளி […]
CAT 2021 தேர்விற்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள் என்பதால் கீழ் காணும் முறைகளை பின்பற்றி விண்ணப்பியுங்கள். CAT 2021 பொது நுழைவுத் தேர்வுக்கான ஆன்லைன் பதிவு செயல்முறை இன்றுடன்(செப்டம்பர் 15) முடிவடைகிறது. CAT 2021 க்கான விண்ணப்பப்படிவத்தை பூர்த்தி செய்யாத அனைத்து விண்ணப்பதாரர்களும் iimcat.ac.in. இந்த அதிகாரப்பூர்வ வலைதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். அகமதாபாத்தின் இந்திய மேலாண்மை நிறுவனம் (ஐஐஎம்) நவம்பர் 28 ஆம் தேதி கேட் 2021 தேர்வை நடத்தும். இந்த தேர்வு 158 நகரங்களில் […]
தமிழ்நாட்டில் வசிக்கும் ஈழத்தமிழ் அகதிகள் குடும்பங்களுக்கு 3510 வீடுகள் கட்டித்தரப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், ஏற்கனவே இலங்கை தமிழர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்திருந்தார். இந்நிலையில், தமிழக சட்டப்பேரவையில், தமிழகத்தில் அகதிகள் முகாமில் உள்ள இலங்கை தமிழர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்திக்கொள்ள, திறன் மேம்பாட்டு பயிற்சியளிக்க 5,000 முகாம் வாழ் பயிற்சியளிக்க ரூ.10 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். முகாம் வாழ் இலங்கை தமிழர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்திடவும், சிறு, குறு […]
தேசிய கல்வி கொள்கை அறிமுகப்படுத்தப்பட்டு ஓராண்டு நிறைவு பெறுவதை முன்னிட்டு, மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுடன் பிரதமர் மோடி இன்று காணொலி வாயிலாக உரையாற்றுகிறார். தேசிய கல்வி கொள்கை கடந்த 2020ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டு ஓராண்டு நிறைவு பெறும் நிலையில், மாணவர்களுடன் இந்த புதிய கல்வி கொள்கை குறித்து பிரதமர் மோடி காணொலி வாயிலாக இன்று மாலை 4.30 மணியளவில் உரையாட உள்ளார். இந்த உரையாடலில் மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், பல்வேறு மாநிலங்களை சேர்ந்த […]