TRB, TN: ஆசிரியர் ஆட்சேர்ப்பு வாரியம் (TRB), . 2023-2024ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு இடைநிலை கிரேடு ஆசிரியர் காலியிடங்களை நிரப்ப நேரடி நியமனத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான அறிவிப்பு (09-02-2024) அன்று வெளியிடப்பட்டது. இந்த பணிக்கான விண்ணப்பிக்கும் தேதி 14-02-2024 அன்று தொடங்கியது. விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி 15-03-2024 அன்று முடிவடைகிறது. READ MORE – நீலகிரி ஒன் ஸ்டாப் சென்டரில் வேலை…சம்பளம் எவ்வளவு தெரியுமா.? இந்த பணிக்கான தேர்வு 23-06-2024 அன்று நடைபெற உள்ளதால், இதற்கு […]
Ranji Trophy : இந்தியாவில் கிரிக்கெட் போட்டிகளில் மதிப்பு மிக்க போட்டியாக பார்க்கபடுவது ரஞ்சி கோப்பையாகும். இது 89-வது ரஞ்சி கோப்பையாக நடைபெற்று வருகிறது. இதில் தமிழ்நாடு அணி இரண்டு முறை ரஞ்சி கோப்பையை வென்றுள்ளது ரன்பது குறிப்பிடத்தக்கது. இந்த தொடரில் சிறப்பாக விளையாடி அரை இறுதி வரை தமிழ்நாடு அணி வந்தது. அரை இறுதியில் போட்டியில், 41 முறை ரஞ்சி கோப்பையை வென்ற வலுவான மும்பை அணியை எதிர்கொண்டது. இந்த அரை இறுதி போட்டியில் டாஸ் […]
வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் மிகத்தீவிரமாக உள்ளது. தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. பூமத்தியரேகையை ஒட்டிய இந்தியப்பெருங்கடலின் கிழக்கு பகுதிகளில், இலங்கைக்கு தெற்கே, ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்து வருகிறது. அதன்படி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக […]
கடந்த சில மாதங்களாக குறைவான எண்ணிக்கையில் பதிவாகிவந்த கொரோனா பாதிப்பு தற்போது மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. கொரோனாவின் மற்றொரு திரிபான ஓமிக்கிரான் வைரஸ் ஜேஎன்-1 வகை வைரஸ் தொற்றானது தற்போது இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் இன்று ஒரே நாளில் (ஞாயிற்றுக்கிழமை) 656 கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனால், சிகிச்சை பெரும் எண்ணிக்கை 3742 ஆக அதிகரித்துள்ளது. அதில், தமிழ்நாட்டில் மட்டும் நேற்று ஒரே நாளில் 21 பேருக்கு கொரோனா தொற்று […]
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்து வருகிறது. இந்தியப் பெருங்கடல் மற்றும் அதை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று தென்தமிழகத்தில் அநேக இடங்களிலும், வடதமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு […]
தமிழகம் முழுவதும் 5 முதல் 12ம் வகுப்பு வரை படிக்கும் பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு நடைபெற்று வந்தது. சமீபத்திய கனமழையால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களை தவிர, மற்ற அனைத்து மாவட்டங்களிலும் நநடைபெற்று வந்த அரையாண்டுத் தேர்வு இன்றுடன் நிறைவு பெறுவதால், நாளை முதல் ஜனவரி 1 வரை விடுமுறை விடப்படுகிறது. அதன்படி, அரையாண்டு தேர்வுகள் இன்றுடன் முடிவடைவதை தொடர்ந்து, நாளை முதல் ஜனவரி 1ம் தேதி வரை தமிழகம் முழுவதும் பள்ளிகளுக்கு அரையாண்டு விடுமுறை அறிவித்தும், ஜனவரி […]
தென் மாவட்டங்களில் பெய்த கனமழையால், நெல்லை, தூத்துக்குடி, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டது. இந்த நிலையில், தென் கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால், தமிழகத்தில் இன்று முதல் டிசம்பர் 27-ஆம் தேதி வரை மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. தற்போது, மதுரை மற்றும் திருவாரூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது என்றும், அடுத்த 3 மணி நேரத்திற்கு மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, சிவகங்கை […]
‘மிக்ஜாம்’ புயல் சென்னையில் இருந்து 120 கிலோமீட்டர் தொலைவில் வடக்கு திசை நோக்கி நகர்கிறது. ஆந்திராவின் நெல்லூரில் இருந்து 80 கிலோமீட்டர் தென்கிழக்கில் ‘மிக்ஜாம்’புயல் மையம் கொண்டுள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து வடக்கு திசையில் புயல் நகர்ந்து நாளை முற்பகல் ஆந்திர கடலோர பகுதியில் கரையை கடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழ்நாட்டை விட்டு புயல் விலகி சென்ற நிலையிலும் சென்னையில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. சென்னையில் நள்ளிரவு வரை மழை நீடிக்கும் […]
தென்மேற்கு வங்ககடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று தற்போது புயலாக வலுவடைந்தது. இந்த புயலுக்கு ‘மிக்ஜாம்’ என பெயர் சூட்டப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து 100 கி.மீ தொலைவில் வடகிழக்கில் ‘மிக்ஜாம்’ புயல் மையம் கொண்டுள்ளது. ‘மிக்ஜாம்’ புயல் மணிக்கு 8 கி.மீ வேகத்தில் நகர்ந்து வந்த நிலையில் தற்போது 10 கி.மீ வேகத்தில் நகர்ந்து வருகிறது. இதனால், ஆந்திராவில் நாளை முற்பகல் பாப்டலா என்ற இடத்தில் புயல் கரையை […]
அதிக நாய்கடிகளை வாங்கிய மாநிலத்தின் லிஸ்ட்டில் முதலிடத்தில் மகாராஷ்டிராவும், இரண்டாம் இடத்தில் தமிழகமும் உள்ளது. தெருநாய்களின் தொல்லை இந்தியாவில் பெரும்பாலான இடங்களில் அதிகமாக இருக்கிறது. இரவில் தனியாக செல்வோருக்கு பல சமயம் தொந்தரவாகவும், பயமுறுத்தும் வண்ணமும் இருக்கிறது. இப்படி இந்த 2022ஆம் ஆண்டு அதிக நாய்கடிகளை வாங்கிய மாநிலத்தின் லிஸ்ட் வெளியாகியுள்ளது. அதில், முதலிடத்தில் மகாராஷ்டிரா உள்ளது. அங்கு 3,46,318 மருத்துவ வழக்குகள் பதிவாகியுள்ளன. இரண்டாம் இடத்தில் 3,30,264 மருத்துவ வழக்குகளுடன் தமிழகம் உள்ளது. அடுத்தடுத்த இடங்களில் […]
கனமழை எச்சரிக்கை காரணமாக தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட நிர்வாகங்களுக்கும் தமிழக அரசு சார்பாக சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. தென்கிழக்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது.அடுத்து வரும் நாட்களில் காற்றழுத்த தாழ்வு நிலையானது, வலுவடைந்து தமிழக மற்றும் புதுச்சேரியை நோக்கி நகரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்து வரும் 3 நாட்களுக்கு கனமழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதையடுத்து, கனமழையை எதிர்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அனைத்து மாவட்ட நிர்வாகங்களுக்கும், சென்னை […]
தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் மீண்டும் ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகலாம் என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல். ஏற்கனவே தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலை கொண்டிருந்த வளிமண்டல சுழற்சி வலுப்பெற்று குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாகி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் தமிழகத்தின் பல மாவட்டங்களில் கல்வி நிலையங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக சீர்காழியில் ஒரேநாளில் 44செ.மீ மழை பதிவாகியிருக்கிறது. மேலும் இந்த […]
கனமழை எச்சரிக்கை காரணமாக மேலும் சில மாவட்டங்களில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், வேலூர், கடலூர், மயிலாடுதுறை, நீலகிரி, திருச்சி, திருவாரூர், அரியலூர் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் மேலும் தஞ்சை, கரூர், புதுக்கோட்டை, சேலம், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், தருமபுரி, திருவண்ணாமலை,கோவை, திண்டுக்கல்,தேனி, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, மதுரை, சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளி […]
நாளை மறுநாள் திண்டுக்கல் காந்திகிராம பல்கலைக்கழக பட்டளிப்பு விழாவில் பங்கேற்க பிரதமர் மோடி தமிழகத்தின் வருகை தருகிறார். திண்டுக்கல்லில் உள்ள காந்திகிராம பல்கலைக்கழகத்தின் 36 வது பட்டமளிப்பு விழா மற்றும் காந்திகிராம நிறுவனத்தின் பவள விழாவை ஒட்டி நடைபெறும் விழாவில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி தமிழகம் வருகிறார்.விழாவில் பங்கேற்று மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி சிறப்புரை ஆற்ற உள்ளார். தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி,தமிழக முதலமைச்சர் ஸ்டாலின், மத்திய அமைச்சர் எல் முருகன் உள்ளிட்டோர் விழாவில் பங்கேற்க உள்ளனர். […]
திருத்தப்பட்ட மோட்டார் வாகன சட்டம் அமல்படுத்தபட்ட 10 நாட்களில், சென்னையில் ₹.1.41 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. பல்வேறு திருத்தங்களுடன் மோட்டார் வாகன சட்டம் சமீபத்தில் அமலுக்கு வந்தது. இது குறித்து சமூகத்தின் பல்வேறு தரப்பினரும் தங்களது ஆதரவையும், எதிர்ப்பையும் தெரிவித்து வந்தனர். திருத்தப்பட்ட மோட்டார் வாகன சட்டம் அக்டோபர் 26 தேதி அமல்படுத்தபட்டது. சென்னையில், இச்சட்டம் நடைமுறைக்கு வந்த 10 நாட்களில், 17,453 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், இதுவரை 1.41 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு, அதில் […]
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசு சார்பாக அளிக்கப்படும் நீட் பயிற்சிக்கு பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் வரவேற்பு தெரிவித்துள்ளார். அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவிகள் நீட் உள்ளிட்ட பல்வேறு போட்டி தேர்வுகளை எதிர்கொள்ள தமிழக அரசு பயிற்சி வகுப்புகளை நடத்திவருகிறது.இந்த வருடத்திற்கான வகுப்புகள் நவம்பர் மூன்றாவது வாரத்தில் தொடங்கும் என பள்ளிக்கல்வித்துறை […]
ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அடுத்துள்ள பசும்பொன் கிராமத்தில் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவரின் 115 ஆம் ஆண்டு ஜெயந்தி இன்று நடைபெறுகிறது. பசும்பொன்னில் நடக்கும் இன்றைய விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் கலந்துகொள்ளவில்லை. ட்விட்டரில் அவர் வெளியிட்டுள்ள செய்தியில் ” கொடுங்கோல் சட்டத்துக்கு எதிராக மக்களை அணிதிரட்டியவர் ! ஆங்கிலேய ஆட்சிக்கு எதிரான போராட்டத்தில் நேதாஜியின் கரத்தை வலுப்படுத்தியவர்! “தென்னகத்து போஸ்” ஐயா பசும்பொன் திருமகனார் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் தீரத்தையும், தியாகத்தையும், நற்பணிகளையும் நன்றியோடு நினைவுகூர்கிறேன்!” என்று தெரிவித்துள்ளார். கொடுங்கோல் […]
தமிழகத்தில் நான் மூக்கையும் நுழைப்பேன், வாயையும் நுழைப்பேன். வாலையும் நுழைப்பேன். காலையும் வைப்பேன். என்னை யாரும் கேள்வி கேட்க முடியாது என தமிழிசை சவுந்தராஜன் பேசினார். தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசை சௌந்தரராஜன் தற்போது தெலுங்கானா ஆளுநராகவும், புதுசேரி துணை நிலை ஆளுநராகவும் பதவி வகித்துவ வருகிறார். இதில், தெலுங்கானா ஆளுநராக அவர் பதவியேற்று இன்றோடு மூன்றாண்டுகள் ஆகிறது. அதனை குறிப்பிடும் வகையில், புத்தக கண்காட்சி நடைபெற்றது. அதில் பேசிய தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் […]
சங்கரலிங்கனாரை நேரில் சந்தித்து உறுதி அளித்தபடி தமிழ்நாடு என்று பெயர் சூட்டினார் பேரறிஞர் அண்ணா என முதல்வர் ட்வீட். தியாகி சங்கரலிங்கனாரின் நினைவுநாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனையடுத்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இதுகுறித்து ட்வீட் செய்துள்ளார். அந்த ட்விட்டர் பதிவில், ‘தாய்த் தமிழ்நாட்டுக்கு தமிழ்நாடு என்று பெயர் சூட்ட வலியுறுத்தி உண்ணாநிலை இருந்து உயிர் ஈந்த தியாகி சங்கரலிங்கனாரின் நினைவுநாள்! அவரது தியாகத்தைப் போற்றுவோம்! சங்கரலிங்கனாரை நேரில் சந்தித்து உறுதி அளித்தபடி தமிழ்நாடு என்று பெயர் சூட்டினார் […]
இன்று காலை திருமணம் நடக்கவிருந்த நிலையில் காதலி தன் திருமணத்தை நிறுத்தி, தன்னை அழைத்துச் செல்லும்படி காதலனுக்கு குறுஞ்செய்தி அனுப்பியதாகவும் கூறப்படுகிறது. காலையில் திருமண மண்டபத்தை அடைந்த 24 வயது காதலன், மேடையில் நுழைந்து, மாப்பிள்ளையிடம் இருந்து தாலியை பறித்து, மணப்பெண்ணின் கழுத்தில் கட்ட முயன்றார். ஆனால் அங்கிருந்தவர்கள் இளைஞனை தடுத்து நிறுத்தி தாக்கினர். இச்சம்பவம் சென்னையில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடந்தது, சம்பவத்திற்குப் பிறகு, போலீசார் வரவழைக்கப்பட்டனர். விசாரணையில் அந்த இளைஞனும் மணப்பெண்ணும் ஒன்றாக […]