டெல்லி : ஆம் ஆத்மி கட்சியில் இருந்து நேற்று விலகிய டெல்லி முன்னாள் அமைச்சர் கைலாஷ் கெலாட் பாஜகவில் தன்னை இணைத்து கொண்டார் . ஆம் ஆத்மி கட்சியின் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்த அவர், நேற்று கட்சி, அமைச்சர் பதவியில் இருந்து விலகினார். இந்நிலையில், பதவி விலகிய 24 மணி நேரத்தில் (ஒரே நாளில்) இன்று டெல்லி பாஜக அலுவலகத்தில் அக்கட்சியில் இணைந்தார். இதனால், கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சிக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதாவது, டெல்லியின் போக்குவரத்து […]
பீகார் : ஹாக்கியில் மகளிருக்கான 8-வது ஆசிய கோப்பைத் தொடரானது தற்போது பீகாரில் உள்ள ராஜ்கிரில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இந்தியா, ஜப்பான், தென் கொரியா, சீனா, தாய்லாந்து மற்றும் மலேசியா என மொத்தம் 6 அணிகள் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில், இந்த லீக் சுற்றில் ஒவ்வொரு அணியும் இதர அணிகளுடன் ஒரு முறை மோத வேண்டும் இறுதியில் முதல் 4 இடத்தில் இருக்கும் அணி அரை இறுதிக்கு முன்னேறும். அதன்படி, இந்திய மகளிர் […]
சென்னை :இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 14ஆம் தேதி குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது .இன்றைய குழந்தைகள் நாளைய இந்தியாவை உருவாக்குவார்கள் என்கிறார் ஜவஹர்லால் நேரு.. தேசத்தின் வளர்ச்சிக்கு குழந்தைகள் விதையாக நடப்படுகின்றனர். ஏனென்றால் பிற்காலத்தில் அவர்கள் தான் நாட்டின் தலைவர்களாக உருவெடுக்கின்றனர். குழந்தைகள் தினம்; 1856 ஆம் ஆண்டு ஜூன் மாதம் சார்லஸ் லியோனட் என்ற பாதிரியாரால் குழந்தைகள் தினம் தொடங்கப்பட்டது .இந்த நாள் பூக்கள் ஞாயிறு என்று கூறப்பட்டு வந்தது .பின்பு குழந்தைகள் நாள் என […]
டெல்லி : வரும் 2036-ம் ஆண்டு நடைபெற உள்ள ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் போட்டிகளை இந்தியாவில் நடத்த சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியிடம் இந்திய ஒலிம்பிக் சங்கம் விண்ணப்பத்தை சமர்ப்பித்தது. இந்தியாவில் ஒலிம்பிக் போட்டி நடத்த விருப்பம் தெரிவித்து அக்.1ல் கடிதம் எழுதியதாக விளையாட்டுத்துறை அமைச்சக வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றனர். ஏற்கனவே, ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவதற்கு மத்திய அரசு முனைப்புடன் செயல்பட்டு வருவதாக பிரதமர் நரேந்திர மோடி கடந்த காலங்களில் பலமுறை கூறியிருந்தார். அந்த வகையில், மும்பையில் நடைபெற்ற […]
கனடா : பிராம்டன் பகுதியில் அமைந்துள்ள இந்து சபா கோயிலில் இந்துக்கள் சாமி தரிசனம் செய்த போது, காலிஸ்தான் ஆதரவாளர்கள் இந்து பக்தர்கள் மீது, கம்புகளை வீசி சரமாரியாகத் தாக்குதல் நடத்தி இருக்கிறார்கள். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி கடும் கண்டனங்களைப் பெற்று வருகிறது. அந்நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ உள்ளிட்ட பல அரசியல் தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளனர். இந்த நிலையில், கனடாவில் ஹிந்துக்கள் மீது நடந்த தாக்குதலுக்கு இந்தியா அதிருப்தியை […]
மும்பை : இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்று வந்த மூன்று போட்டிகள் அடங்கிய டெஸ்ட் தொடரை நியூசிலாந்து அணி ஏற்கனவே கைப்பற்றியது. இந்த நிலையில், 3 வது டெஸ்ட் போட்டியானது நேற்று முன்தினம் அதாவது நவம்பர் 1ஆம் தேதி தொடங்கப்பட்டது. இந்த போட்டியில் தொடக்கத்தில் நியூசிலாந்தின் பேட்டிங் தேர்வு செய்து விளையாடியது. அதன்படி, நியூசிலாந்து அணி தங்களது முதல் இன்னிங்ஸ்க்கு 235 ரன்கள் சேர்த்தது. அதன்பின், இந்திய அணி தங்களது முதல் இன்னிங்ஸில் வெறும் […]
லடாக் : கடந்த 4 ஆண்டுகளாக எல்லையில் இந்தியா-சீனா இடையே நிலவி வந்த பதற்றம் தற்போது மெல்ல மெல்ல முடிவுக்கு வருகிறது. அதாவது, கிழக்கு லடாக் பகுதியில் உள்ள டெம்சோக் மற்றும் டெப்சாங் சமவெளிகளில் இந்தியா மற்றும் சீனா இராணுவத்தினர் படைகளை விலக்கி வருகின்றனர். இருப்பினும், இரு நாட்டு படைகளும் எல்லை பகுதியில் தீவிர கண்காணிப்பு பணியை மேற்கொண்டு வருவதாக பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். #WATCH | Leh, Ladakh | On the agreements […]
தென்னாப்பிரிக்கா : உலகக்கோப்பை போட்டி என்றாலே தென் ஆப்பிரிக்கா அணிக்கு ராசியே இல்லாமல் ஆகிவிடுவதாகத் தெரிகிறது. ஏனென்றால், 5 மாதங்களில் 2 முறை டி 20 உலகக்கோப்பையை வெல்லும் வாய்ப்பை தவறவிட்டுள்ளது. அதாவது, 2024 மகளிர் டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டி நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில், வெற்றி பெற்று தங்களுடைய முதல் டி20 கோப்பையை வாங்கலாம் என விளையாடிய நிலையில், நியூசிலாந்து அணி தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி கோப்பையை வென்றது. இதைப்போல, கடந்த 5 […]
துபாய் : 2024 ஆண்டுக்கான மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் நியூசிலாந்து அணியும், தென்னாப்பிரிக்கா அணியும் மோதியது. இந்த போட்டியில், நியூசிலாந்து 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறையாக மகளிர் டி20 உலகக்கோப்பைத் தொடரை வென்று வரலாற்றில் தங்களது பெயரையும் இடம்பெறச் செய்துள்ளது. வெற்றிபெற்ற குஷியுடன் போட்டி முடிந்த பிறகு நியூசிலாந்து அணியின் கேப்டன் சோஃபி டிவைன் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் வெற்றிபெற்றது தான் இறுதிப்போட்டிக்கு வந்து கோப்பையை வெல்ல […]
டெல்லி : கனடாவில் வாழ்ந்து வந்த காலிஸ்தான் பிரிவினைவாதியான ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்டதில், இந்தியாவுக்கு பங்கு உண்டு என கனடா பிரதமர் ட்ரூடோ முன்னதாக குற்றஞ்சாட்டி இருந்தார். இதனால், இந்த விவகாரம் அடுத்தகட்டமாக முற்றியது. இதன் விளைவாக கனடாவில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளை திரும்ப வரவழைத்த இந்தியா, இங்குள்ள கனடா தூதரக அதிகாரிகளை வெளியேற்ற உள்ளது. அதன்படி, 6 கனடா தூதரகள் அனைவரும் வருகிற அக்டோபர் 19-ம் தேதி இரவு 11.59 மணிக்குள் இந்தியாவை […]
சென்னை : ஐசிசி நடத்தும் மிகப்பெரிய கோப்பைக்கான தொடர் என்றாலே ரசிகர்களிடையே வரவேற்பும், எதிர்பார்ப்பும் அதிகமாகவே இருக்கும். அதிலும், 7 வருடங்களுக்கு பிறகு மினி உலகக்கோப்பை எனப்படும் 9-வது சாம்பியன்ஸ் டிராபி தொடரானது அடுத்த ஆண்டு பாகிஸ்தானில் நடைபெற இருக்கிறது. கடந்த 2017-ம் ஆண்டு நடைபெற்ற கடைசி சாம்பியன்ஸ் ட்ராபி தொடரில் இந்திய அணியை வீழ்த்தி பாகிஸ்தான் அணி கோப்பையை வென்றிருப்பார்கள். இந்த சாம்பியன்ஸ் ட்ராபி கோப்பையை இந்தியா, ஆஸ்திரேலியா போன்ற பல அணிகள் வெற்றி பெற்றிருக்கிறது. […]
ஹவாய் செப்பல் : பொதுவாகவே நாம் கழிவறைக்கு செல்லும்போதும், அல்லது வெளியே எங்கயாவது செல்லும்போதும் மேலே வெள்ளை நிறம், கீழே ப்ளூ நிறம் கொண்ட ஹவாய் செப்பல் எனப்படும் செப்பலை பயன்படுத்துவோம். இந்த செருப்பு இந்தியாவில் மிகவும் குறைந்த விலையில் கிடைக்கும் என்பது பலருக்கும் தெரிந்த ஒன்று தான். ஆனால், சவூதி அரேபியாவில் ஹவாய் செருப்புகள் ரூ. 1 லட்சத்துக்கு அதிகமான விலையில் விற்கப்படும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது . உங்கள் குளியலறையில் […]
ஸ்விக்கி : இந்தியாவின் உணவுச் சேவைச் சந்தை, உணவருந்துதல் மற்றும் ஆர்டர் செய்வதை உள்ளடக்கமாகக்கொண்டு, ஆண்டுதோறும் 10-12% வரை அதன் வளர்ச்சி அதிகரிக்கும் எனவும், 2030 ஆம் ஆண்டுக்குள் ரூ. 9-10 டிரில்லியனை இந்திய மதிப்பின் படி (9-10 லட்சம் கோடியை) எட்டும் எனவும் பெயின் & கம்பெனி மற்றும் ஸ்விக்கி கணக்கெடுப்பு தெரிவிக்கிறது. ஆன்லைன் உணவு விநியோகம் 18% CAGR (கூட்டு வருடாந்திர வளர்ச்சி விகிதம்) இல் வேகமாக வளர்ந்து, உணவு சேவைச் சந்தைக்கு 20% […]
டிராவிஸ் ஹெட்: இந்திய அணி தற்போது டி20 உலகக்கோப்பை தொடரின் அரையிறுதி போட்டிக்கு தேர்வாகியுள்ளது மேலும் நாளை மறுநாள் இங்கிலாந்து அணியுடன் விளையாடவும் இருக்கிறது. இந்த தொடரில் இந்திய அணிக்காக விளையாடி வரும் மிஸ்டர் 360 என அழைக்கப்படும் சூரியகுமார் யாதவ் இந்த 20 ஓவர் உலகக்கோப்பை தொடரில் 5 போட்டிகளில் விளையாடி 139.25 என்ற ஸ்டிரைக் ரேட்டில், 149 ரன்கள் எடுத்துள்ளார். டி20 கிரிக்கெட் போட்டியில் அதிரடிக்கு பெயர்போன சூர்யகுமார் யாதவ் இந்தத் தொடர் முழுவதும் […]
கே.எல்.ராகுல் : டி 20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகள் தொடங்கி விறு விறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இந்திய கிரிக்கெட் வீரர் கே.எல்.ராகுல் இந்திய அணியை பற்றி தனியார் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டி ஒன்றில் பேசியுள்ளார். இது குறித்து பேசிய கே.எல்.ராகுல் ” இந்த ஆண்டு உலகக்கோப்பையில் இந்திய அணி சிறப்பாக விளையாடி கொண்டு வருகிறது. நான் இதனை ஒரு கிரிக்கெட் வீரராக இல்லாமல் இப்போது ஒரு பார்வையாளராகவும், இந்திய கிரிக்கெட்டை நேசிக்கும் ஒருவராகவும், இதைச் […]
சென்னை : நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் தனிப்பெரும்பான்மை வெற்றியை பெற முடியவில்லை. அதனால், கூட்டணி ஆதரவுடன் மீண்டும் பாஜக ஆட்சியமைக்க உள்ளது. இந்த நிலையில், கருத்துகணிப்பு மக்களை முட்டாளாக்கியது என காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் விமர்சனம் செய்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த பேசிய ப.சிதம்பரம், “தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் அனைத்தும் தவறானது. கருத்துக் கணிப்பு அனைத்தையும் ஒரே இடத்தில் தயாரித்து ஊடகங்களுக்கு விநியோகிக்கப்பட்டது. கிட்டத்தட்ட அனைத்து ஊடகங்களும் பாஜக 350 இடங்கள் பெறும் […]
மக்களவை தேர்தல் : விறுவிறுப்பாக நடைபெற்று வாக்கு எண்ணிக்கையில், கேரளாவின் வயநாடு மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளரான ராகுல் காந்தி 47,438 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்று வருகிறார். அவருக்கு அடுத்த படியாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளரான ஆனி ராசா 16,393 வாக்குகளும், 3-ம் இடத்தில் பாஜக வேட்பாளரான சுரேந்திரன் 8629 வாக்குகள் பெற்று பின்னடைவில் உள்ளனர்.
மக்களவை தேர்தல் : மக்களவை தேர்தல் நடைபெற்று முடிந்த நிலையில் அதற்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெறும் என்ற அறிவித்திருந்தனர் . அதனை தொடர்ந்து இன்று காலை 8 மணி அளவில் வாக்கு எண்ணிக்கையானது தொடங்கப்பட்டது. அதன்படி காலை 8.05 நிலவரப்படி தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளில், திமுக கூட்டணி 7 இடங்களில் முன்னிலை பெற்று வருகிறது.
மக்களவை தேர்தல் : நாடுளுமன்ற தேர்தலானது கடந்த ஏப்ரல் மாதம் தொடங்கி 7 கட்டங்களாக கடந்த சனிக்கிழமை அன்று நிறைவு பெற்றுள்ளது. தற்போது அதற்கான முடிவுகளுக்காக காத்திருக்கும் நிலையில் நாளை வாக்கு எண்ணிக்கையானது நடைபெற உள்ளது. மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை நாளை (ஜூன்-4) நடைபெற இருக்கும் நிலையில், தற்போது தேர்தல் முடிவுகள் நாளை வரும் நேரதத்தில் இந்தியா கூட்டணி தலைவர்கள் டெல்லியில் இருக்க வேண்டும் என்று காங்கிரஸ் அழைப்பு விடுத்துள்ளது.
சென்னை : டி20 உலகக்கோப்பைக்கான வாரம் அப் போட்டிகளுக்கான அட்டவணையை வெளியிட்டுள்ளது ஐசிசி. இந்த ஆண்டில் கிரிக்கெட் ரசிகர்களால் மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்து வருவது தான் டி20 உலகக்கோப்பை. இந்த தொடரில் மொத்தம் 20 அணிகள் விளையாட உள்ளது. பிரமாண்டமாக நடைபெறவுள்ள இந்த தொடரானது இந்த முறை அமெரிக்கா மற்றும் அண்டைய நாடான வெஸ்ட் இண்டீஸ்ஸில் நடைபெறவுள்ளது. மேலும், இந்த தொடருக்கான ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடைபெற்றும் வருகிறது. இந்நிலையில், ஐசிசி தொடருக்கு முன் எப்போதுமே ஒரு வார்ம் […]