மதுரை :தவெகவின் இரண்டாவது மாநில மாநாட்டில் தன்னை சிங்கத்துடன் ஒப்பிட்டு அக்கட்சியின் தலைவர் விஜய் பேச்சைத் தொடங்கினார். சிங்கம் வேட்டைக்கு மட்டுமே வெளியில் வரும், அப்படி வந்து இரையை குறிவைத்தால் விடாது என மதுரை மாநாட்டில் விஜய் 2026 தேர்தலை குறிப்பிட்டு பேசினார்.
தொடர்ந்து பேசிய விஜய், ”சிங்கம் எப்பவும், வேட்டைக்கு மட்டும்தான் வெளிய வரும். வேடிக்கை பார்க்க வராது. அப்படியே வரும்போதும், உயிரோடு இருக்க தன்னைவிட பெரிய மிருகத்தைதான் வேட்டையாடும்.
சிங்கம் வேட்டைக்கு மட்டுமே வெளியில் வரும், வேடிக்கை பார்க்க வெளியே வராது. சிங்கம் கர்ஜித்தால் 8 கி.மீ. தூரத்துக்கு அதிரும். சிங்கத்திற்கு தனியாக இருக்கவும் தெரியும். கூட்டமாகவும் இருக்கத் தெரியும். தனியா வந்து தண்ணி காட்டவும் தெரியும்.
அப்பவும் எவ்வளவு பசி இருந்தாலும், உயிரில்லாத, கெட்டுப்போனதை தொட்டுக்கூட பாக்காது சிங்கத்துக்கு கூட்டத்தோட இருக்கவும் தெரியும், தனியா தனித்தன்மையோட இருக்கவும் தெரியும். A LION IS ALWAYS A LION. EVEN IF IT IS SINGLE, IT IS KING OF THE JUNGLE” என்றார்.
