சென்னை : தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு தயாராகி வரும் நிலையில், அவர் தனது கட்சியை வலுப்படுத்துவதற்காக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது அவர், தனது கடைசி திரைப்படமான ஜனநாயகன் படத்தில் நடித்து வருகிறார். இது அவரது ரசிகர்கள் மற்றும் அரசியல் பார்வையாளர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படத்தை முடித்துவிட்டு, முழு நேர அரசியலில் தீவிரமாக ஈடுபடுவதற்கான திட்டங்களை அவர் வகுத்துள்ளதாக சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜனநாயகன் […]
சென்னை : பெண்களுக்கு முழுமையான பாதுகாப்பை ஏற்படுத்தித் தர வேண்டும் எனத் தமிழ்நாடு அரசை வலியுறுத்தி, தவெக சார்பில் தமிழ்நாடு முழுவதும் போராட்டம் நடைபெற்றது. இந்த நிலையில், அனுமதி பெறவில்லை எனக் கூறி தவெகவினர் கைது செய்யப்பட்டதை கண்டித்து தவெக தலைவர் விஜய் கண்டன அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். இன்று காலை மகளிர் தினத்தை முன்னிட்டு, 2026 தேர்தலில் திமுக அரசை மாற்ற உறுதியேற்போம் என்று விஜய் வலியுறுத்தினார். இது தொடர்பாக தனது சமூக வலைத்தளத்தில் அவர் […]
நாகை : நாகை மாவட்டம் கீழையூர் அருகே கருங்கண்ணி ஊராட்சியைச் சோ்ந்த 26 பேருக்கு முதல்வர் நிகழ்ச்சியின் போது வழங்கப்படுவதாக அறிவித்த வீட்டுமனை பட்டாவை உடனடியாக வழங்க வேண்டும் என கடந்த 5ம் தேதி தவெக சாா்பில், மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்திருந்தனர். ஆனால், தவெக சாா்பில் அளிக்கப்பட்ட மனுவை கண்டித்து திமுகவினர் தகராறு செய்துள்ளனர். அதாவது, ஆட்சியரிடம் மனு அளித்துவிட்டு வெளியே வந்ததும், திமுகவினரை செர்ந்த சிலர் தகராறு செய்ததோடு அவர்களை தாக்கியுள்ளனர். இந்த தாக்குதலில் […]
சென்னை : மும்மொழிக் கொள்கை மற்றும் திராவிடம் மீதான பாஜகவின் எதிர்ப்பின் காரணமாக கட்சியில் இருந்து விலகுவதாக நேற்றைய தினம் பாஜக மாநில நிர்வாகி ரஞ்சனா நாச்சியார் அறிவித்திருந்தார். இந்த நிலையில், நேற்று பாஜகவிலிருந்து விலகிய நடிகையும், மாநில கலை, பண்பாட்டுப் பிரிவு செயலாளருமான ரஞ்சனா நாச்சியார் தவெகவில் இணைவதாக அறிவித்துள்ளார். பாஜக மாநில பொறுப்பில் இருந்து விலகிய ரஞ்சனா நாச்சியார் தவெகவில் இணைவதாக தகவல் வெளியாகிய நிலையில், இப்போது மாமல்லபுரத்தில் நடைபெற்று வரும் தவெகவின் 2ஆம் […]
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் எனும் அரசியல் கட்சியை ஆரம்பித்துள்ள விஜய், அதில் ஓராண்டை கடந்துவிட்ட நிலையில், இதுவரை மாநாடு, புத்தக வெளியீட்டு விழா உள்ளிட்ட நிகழ்வுகளில் கலந்து கொண்ட விஜய் முன்னதாக பரந்தூர் பகுதியில் நேரடியாக மக்களை சந்திக்கவும் செய்தார். சமீபத்தில், தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் மத்திய உள்துறை அமைச்சகம் ‘Y’ பிரிவு பாதுகாப்பு வழங்கப்படுவதாக அறிவித்தது. விஜய்க்கு மத்திய அரசு பாதுகாப்பு வழங்கியதையடுத்து தமிழ்நாடு அரசியல் ரீதியாக கடும் விமர்சனங்கள் […]
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் எனும் அரசியல் கட்சியை ஆரம்பித்துள்ள விஜய், அதில் ஓராண்டை கடந்துவிட்டார். இதுவரை மாநாடு, புத்தக வெளியீட்டு விழா உள்ளிட்ட நிகழ்வுகளில் கலந்து கொண்ட விஜய் முன்னதாக பரந்தூர் பகுதியில் நேரடியாக மக்களை சந்திக்கவும் செய்தார். தற்போது மாவட்டம் மற்றும் வட்டம் உள்ளிட்ட உட்கட்சி நிர்வாகிகளை நியமித்து 2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள தயாராகி வருகிறார். இதனிடையே, இந்திய தேர்தல் ஆணையத்தின் விதிகளின்படி, ஒரு அரசியல் கட்சி சார்பாக ஆண்டுக்கு […]
சென்னை : தவெக தலைவர் விஜய்யை தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் சென்னையில் இன்று இரண்டாவது நாளாக சந்தித்து ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியானது. இதனிடையே, அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தலை சந்திக்கவுள்ள நிலையில், விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 28 அணிகளை இன்று அறிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுவரை வேறு எந்தக் கட்சியிலும் இல்லாத புதுப்புது அணிகள் தவெகவில் உருவாக்கப்பட்டிருக்கின்றன. அந்த 28 அணிகள் குறித்த பட்டியல் குறித்து அறிக்கை ஒன்று சமூக வலைத்தளங்களில் […]
சென்னை : தவெக தலைவர் விஜய்யை தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் சென்னையில் இன்று இரண்டாவது நாளாக சந்தித்து ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. நேற்று மதியம் சுமார் 2.30 மணி நேரம் அவர்களது சந்திப்பு நடைபெற்ற நிலையில், இன்று ஒரு மணி நேரத்திற்கு அதிகமாக சந்திப்பு நடந்துள்ளது. இது சந்திப்பின் போது, தவெக தற்போது இருக்கும் வாக்கு சதவீதம் 2026 தேர்தலுக்கு செய்ய வேண்டிய பணிகள் குறித்து பேசியதாக கூறப்படுகிறது. மேலும் இதில், தவெகவின் […]
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தலை இலக்காக கொண்டு விஜய்யின் தமிழக வெற்றிக் கழக அரசியல் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. கட்சி வளர்ச்சி மற்றும் கட்டமைப்பை பலப்படுத்து வதற்காக கட்சி தலைவர் விஜய் அறிவுறுத்தலின்படி, பொதுச் செயலாளர் புஸ்சி ஆனந்த் 234 தொகுதியில் உள்ள நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். எதிர் வரும் சட்டமன்ற தேர்தலை வருவதையொட்டி, தமிழகமெங்கும் பூத் கமிட்டி அமைக்கப் பட்டு நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டு வருகின்றனர். சொல்லப்போனால், தேர்தலுக்கு வெறும் 14 […]
சென்னை: தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், கட்சி வளர்ச்சி மற்றும் கட்சியின் அடுத்தக்கட்ட நடவடிக்கையில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். வருகிற 2026 சட்டமன் தேர்தலை இலக்காக கொண்டு தமிழக வெற்றிக் கழகத்தின் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்த நிலையில், தவெக நிர்வாகிகளுடன் விஜய் நாளை முக்கிய ஆலோசனை நடத்தவுள்ளார். சென்னையை அடுத்த பனையூரில் உள்ள தவெக அலுவலகத்தில் நாளை அவர் ஆலோசனை நடக்க இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. தவெக கட்சியை ஆரம்பித்த விஜய், மாவட்ட […]
விக்கிரவாண்டி : தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு கடந்த அக்டோபர் மாதம் 27-ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் வி.சாலையில் பிரமாண்டமாக நடைபெற்றது. இந்த மாநாட்டின் போது மாநாட்டில், 100 அடிக்கு வைக்கப்படும் கொடிக் கம்பத்தில் கட்சியின் கொடியை அக்கட்சியின் தலைவர் விஜய் ஏற்றி வைத்திருந்தார். இந்த கொடிக் கம்பத்தை, அடுத்த 5 ஆண்டுகளுக்கு அப்புறப்படுத்தப்படாது. இதற்காக தவெக கட்சி சார்பில், மாநாட்டுத் திடலின் சொந்தக்காரரான விவசாயி மணி என்ற என்பவரிடம் ஐந்து ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதாக […]
சென்னை : கடந்த மாதம் 27-ல் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் தவெக கட்சியின் முதல் மாநாடு நடைபெற்றது. தவெக வெற்றிக் கொள்கை மாநாட்டிற்கு திடல் மற்றும் பார்க்கிங்காக நிலம் தந்த விவசாயிகளை அழைத்து நன்றி கூறும் வகையில் விருந்தும் வழங்கிட தவெக தலைவர் விஜய் ஏற்பாடு செய்திருக்கிறார். சென்னை பனையூரில் உள்ள தவெக அலுவலகத்தில் அடுத்த வாரம் இந்த நிகழ்ச்சி நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது. அட ஆமாங்க.. தவெக மாநாட்டுக்காக பார்க்கிங் மற்றும் மாநாட்டு திடலுக்காக […]
விழுப்புரம் : தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் மாநாடானது தற்போது பிரமாண்டமாக நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டிற்கு வருகை தந்த கட்சி தலைவர் விஜய் கொடியேற்றி மாநாட்டைத் தொடங்கினார். அதன்பிறகு, கட்சியின் இரண்டாவது பாடலும் மாநாட்டில் வைத்து வெளியிடப்பட்டது. இந்த பாடல் தொண்டர்கள் வேண்டுகோளுக்கு இணங்க 2 முறை மாநாட்டில் ஒலிக்கப்பட்டது. பாடலில் இடம்பெற்ற வரிகள் அனைத்தும் தொண்டர்களுக்கு உணர்வுப்பூர்வமாக இருந்தது என்றே சொல்லலாம். ஏற்கனவே, மாநாடு நடைபெறுவதை முன்னிட்டு காமராஜர், அம்பேத்கார், பெரியார், வேலுநாச்சியார், அஞ்சலையம்மாள் ஆகியோருடைய […]
விழுப்புரம் : தவெக பாடல் பிண்ணனியில் ஒலிக்க 100 அடி உயர கம்பத்தில் கட்சிக்கொடியை ஏற்றினார் கட்சித்தலைவர் விஜய். இதனை தொடர்ந்து, தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கைப் பாடல் மாநாட்டு மேடையில் வெளியிடப்பட்டது. பிறப்பொக்கும் எல்லாம் உயிர்க்கும் என்று தொடங்கிய கொள்கை பாடலில் துப்பார்க்கு துப்பாய என்ற திருக்குறள் மேற்கோள் காட்டப்பட்டுள்ளது. மதச்சார்பற்ற நாடு என்ற கொள்கையை வலியுறுத்தி தவெக செயல்படும் என்றும் திருவள்ளுவர், பெரியார், அம்பேத்கர், காமராஜர், வேலு நாச்சியார், அஞ்சலை அம்மாள் வழியில் நான் பயணிப்பேன் […]
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநில மாநாடு வரும் 27-ம் தேதியன்று விக்கிரவாண்டியில் நடைபெற உள்ளது. இந்நிலையில், நாளை மறுநாள் தமிழக வெற்றிக் கழக மாநாட்டிற்கான பூஜை காலை 8 மணிக்கு நடைபெறும் என புஸ்ஸி ஆனந்த் தகவல் தெரிவித்துள்ளார். இதை முன்னிட்டு, மாநாட்டுக்கான ஏற்பாடுகளில் தீவிரம் காட்டி வருகிறார் புஸ்ஸி ஆனந்த். அதன்படி, அவரது தலைமையில், பூஜை நடைபெற உள்ளதால், அனைத்து நிர்வாகிகளும் பங்கேற்பார்கள் எனத் தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே, அரசியல் […]
சென்னை : த.வெ.க கட்சிக் கொடியில் இடம்பெற்றுள்ள யானை சின்னம் தங்களுடைய தேர்தல் சின்னம் எனவே அதனை பயன்படுத்த கூடாது. இதற்கு தடை விதிக்க வேண்டும் என்று பகுஜன் சமாஜ் கட்சி தேர்தல் ஆணையத்தில் முறையிட்டது. தற்போது, நடிகர் விஜய்யின் தவெக கட்சி கொடியில் யானை சின்னம் இடம்பெற்ற விவகாரத்தில் தலையிட முடியாது என பகுஜன் சமாஜ் கட்சியின் புகாருக்கு இந்திய தேர்தல் ஆணையம் பதில் அளித்துள்ளது. இந்திய தேர்தல் ஆணையம் பதில் கடிதத்தில், ” கட்சிக் […]
சென்னை : விஜய்-யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சி மாநாட்டை அக்.27 ஆம் தேதி நடத்த காவல் துறை அனுமதி வழங்கியுள்ளது. தவெக முதல் மாநில மாநாடு விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே வி.சாலையில் நடைபெறுகிறது. ஏற்கெனவே வழங்கப்பட்ட 33 நிபந்தனைகளை மீண்டும் சுட்டிக்காட்டி காவல்துறை அனுமதி வழங்கி உள்ளது. மேலும், அவற்றில் 17 நிபந்தனைகளை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என விக்கிரவாண்டி காவல் துணை கண்காணிப்பாளர் நந்தகுமார் உத்தரவிட்டுள்ளார். இதனிடையே, தவெக கட்சியின் மாநாடு குறித்த ஆலோசனைக் […]
சென்னை : விழுப்புரம் விக்கிரவாண்டியில் அக்.27ல் தவெக மாநாடு நடைபெற உள்ளதாக அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார். இது தொடர்பாக வெளியான அறிக்கையில், “தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி அறிமுகப்படுத்திய நாள் முதல், நம் கழகத் தோழர்களின் எண்ணங்களுக்கு ஏற்பவும் தமிழ்நாட்டு மக்களின் பேரன்புடனும் பேராதரவுடனும் நமது அரசியல் வெற்றிக்கான களம் விரிவடைந்துகொண்டே வருகிறது. கழகக் கொடியேற்று விழாவின்போது. நமது முதல் மாநில மாநாட்டுத் தேதியை அறிவிப்பதாகக் கூறியிருந்தோம். நமது மக்களின் பெரும் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில், […]
சென்னை : எழும்பூர் அருகே வேப்பேரி பகுதியில் உள்ள பெரியார் திடல் சென்று தன்னை ஒரு முழு அரசியல்வாதி என நிரூபித்துள்ளார் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய். ஆம், கட்சி அறிவிப்புக்கு பின் முதல்முறையாக பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தியுள்ளார். பெரியார் சிலைக்கு மரியாதை செலுத்திவிட்டு விஜய் தனது காரில் ஏறி செல்வதற்கு முன், திமுக ஆதரவாளர், பொதுமக்கள் செல்ஃபி எடுத்துக்கொண்டனர். பொதுவெளியில் தலைவர் ஒருவரின் சிலைக்கு விஜய் மரியாதை […]
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் அரசியல் மாநாடு விக்கிரவாண்டியில் அக்.15ஆம் தேதி நடைபெறலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. மாநாட்டிற்கான அதிகாரப்பூர்வ தேதியை தவெக தலைவர் விஜய் இதுவரை அறிவிக்கவில்லை. ஆனால், அக்.15இல் மாநாடு நடைபெறும் என்று பல்வேறு இடங்களில் சுவர் விளம்பரங்களில் எழுதப்பட்டுள்ளது. ஏற்பாடுகள் முழுமை அடையாததால், செப்.23 நடபபதாக இருந்த மாநாடு அக்டோபருக்கு தள்ளிப் போகிறது என தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில், விக்கிரவாண்டி அருகேயுள்ள கப்பியாம்புலியூர் கிராமத்தில் தவெக தொண்டர்களால் அக்.15 என […]