சென்னை : வருகின்ற டிசம்பர் 6-ஆம் தேதி அண்ணல் அம்பேத்கர் நினைவு நாளை முன்னிட்டு அன்றைய தினம் அம்பேத்கர் பெயரில் ஒரு புத்தகம் ஒன்றை வெளியிட விகடன் பதிப்பகம் மற்றும் ஆதவ் அர்ஜுனாவின் (விசிக துணை பொதுச்செயலாளர்) நிறுவனமும் இணைந்து நிகழ்ச்சி ஒன்றை நடத்துகிறது. இந்த நிகழ்ச்சியில், தவெக தலைவர் விஜய் வருகை தந்து விசிக தலைவர் திருமாவளவன் கையால் அம்பேத்கர் புத்தகத்தை பெற்றுக்கொள்ளவுள்ளதாகவும் கூறப்பட்டது. ஒரே மேடையில் இருவரும் பங்கேற்கும் தகவல் அரசியல் வட்டாரத்தில் பெரும் அளவில் […]
சென்னை : 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் தவெக கூட்டணி என பரவி வந்த செய்தியை அக்கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் திட்டவட்டமாக மறுத்துள்ளார். 2026 சட்டமன்ற தேர்தலில் தவெ.க கட்சியுடன் எந்த காட்சிகள் கூட்டணி வைக்கப்போகிறது என்ற எதிர்பார்ப்பும் அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது. சமீப நாட்களாக, கூட்டணி கட்சி தொடர்பான தகவல் பரவி வந்தது. அந்த தகவலின்படி, அதிமுகவுக்கு 154, தவெகவுக்கு 80 என தொகுதி பங்கீடு செய்து, 2026 தேர்தலை கூட்டாக சந்திக்க […]
தருமபுரி : தவெக தலைவர் விஜய், 2026 தேர்தலில் தாம் போட்டியிட இருக்கும் தொகுதி குறித்து தீவிரமாக ஆலோசித்து வருகிறார். சமீபத்தில், நாகப்பட்டினம் அல்லது தூத்துக்குடி தொகுதியில் விஜய் போட்டியடுவார் என தகவல் வெளியானது. பின்னர், விக்கிரவாண்டி அல்லது நாகை மாவட்டத்தில் உள்ள ஏதேனும் ஒரு தொகுதியில் போட்டியிடலாம் எனத் தகவல் வெளியானது. இப்படி அவ்வப்போது, விஜய் போட்டியிட போகும் தொகுதி தொடர்பான தகவல்கள் வெளியாகி வந்த வண்ணம் உள்ளது. இந்நிலையில், தருமபுரி மாவட்டத்தில் ஒரு தொகுதியில் […]
சென்னை : தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் அரசியல் வருகை குறித்தும் மாநாட்டில் அவர் பேசிய விஷயங்கள் குறித்தும் அரசியல் தலைவர்களிடம் கருத்துக்கள் கேட்கப்பட்டு வருகிறது. அப்படி தான் தற்போது நடிகரும், பாஜக பிரமுகருமான சரத்குமார் தனது கருத்தைத் தெரிவித்துள்ளார். சென்னையில் சரத்குமார் தலைமையில் சமத்துவ விருந்து நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. சமத்துவ விருந்தில் 300 -க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர். விருந்து வழங்கிய முடித்தவுடன் செய்தியாளர்களைச் சந்தித்த அவரிடம் பல கேள்விகள் கேட்கப்பட்டுள்ளது. […]
சென்னை : கிண்டி அரசு மருத்துவமனையில் மருத்துவரை கத்தியால் தாக்கிய விக்னேஷை 15 நாள் நீதிமன்றக் காவலில் வைக்க சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தனது தாயாருக்கு முறையாக சிகிச்சை அளிக்காத ஆத்திரத்தில், மருத்துவர் பாலாஜியை கத்தியால் குத்தியதாக விக்னேஷ் வாக்குமூலம் அளித்திருந்தார். இந்த சம்பவத்தை கண்டித்து மருத்துவ சங்கங்கள் ஸ்டிரைக் அறிவித்திருந்தன. அதன்படி, நேற்று மாலை 6 மணி முதல் நாளை மாலை 6 மணி வரை ஸ்டிரைக் அறிவிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து, மருத்துவ சங்கப் பிரதிநிதிகளுடன் அமைச்சர் […]
சென்னை : கிண்டி அரசு மருத்துவமனையில் விக்னேஷ் என்ற இளைஞர் புற்றுநோய் மருத்துவரான பாலாஜியை கத்தியால் குத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் படுகாயம் அடைந்த மருத்துவர் பாலாஜி தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பட்ட பகலில், இப்படியான சம்பவம் நடந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், அரசியல் கட்சியை சேர்ந்த தலைவர்கள் இந்த சம்பவத்திற்கு தங்களுடைய கண்டனங்களை தெரிவித்து இனிமேல் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் […]
கோவை : தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய் தன்னுடைய கட்சியின் முதல் மாநாட்டை விக்ரவாண்டியில் கடந்த மாதம் நடத்தியபோது அதில் முக்கிய அறிவிப்பாக ஆட்சிக்கு வந்தால் கூட்டணிக் கட்சிக்கு அதிகாரத்தில் பங்கு உண்டு என அறிவித்தார். எனவே, 2026 சட்டமன்ற தேர்தலில் தவெ.க கட்சியுடன் எந்த காட்சிகள் கூட்டணி வைக்கப்போகிறது என்ற எதிர்பார்ப்பும் அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது. விஜய் இப்படி அறிவித்துள்ள காரணத்தால் மற்ற கட்சித் தலைவர்களிடமும் விஜய் கட்சியுடன் கூட்டணி உண்டா என்ற கேள்விகள் கேட்கப்பட்டு […]
சென்னை : தவெக தலைவர் விஜய் மற்றும் நாதக ஒருங்கிணைப்பாளர் சீமானும் கசப்பை மறந்து மீண்டும் நட்பு பாராட்ட தொடங்கியுள்ளனர். தவெக மாநாட்டில் தமிழ் தேசியமும், திராவிடமும் இரு கண்கள் எனக் கூறியதால், திராவிட கொள்கையை தூக்கி பிடிப்பது யாராக இருந்தாலும் தனக்கு எதிரி என விஜய்யை சீமான் கடுமையாக விமர்சித்திருந்தார். இவ்வாறு, விஜய்யை சீமான் தொடர்ந்து எதிர்மறை கருத்துக்களை பதிவு செய்தார். எனினும் சீமானை இகழ்ந்து பேசக்கூடாது என நிர்வாகிகளுக்கு விஜய் உத்தரவிட்டதாக கூறப்படுகிறது. இதனால், […]
சென்னை : தமிழ்நாடு முழுவதும் 2,153 போலீசாருக்கு பணியிட மாறுதல் வழங்கி டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிடுள்ளார். முதல் நிலை காவலர்கள் முதல் உதவி ஆய்வாளர்கள் வரை பணியிட மாறுதல் கோரி மனு அளித்தனர். அந்த மனுவின் அடிப்படையில் 2,153 காவலர்களை பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ராயப்பேட்டையில் 5 கிராம் மெத்தபெட்டமைன் போதைப்பொருளுடன் சீரியல் நடிகை எஸ்தர் என்பவரை போலீசார் கைது செய்தனர். கைதான சின்னத்திரை நடிகை எஸ்தர், திரைத்துறையினருக்கு போதைப் பொருள் சப்ளை செய்தாரா என […]
சென்னை : நடிகர் விஜய், 2026-ல் நடைபெற போகும் சட்டமன்றத் தேர்தலுக்கு தன்னையும் தனது தவெக கட்சியும் தயார் படுத்தி வருகிறார். இதனால், அரசியல் ஈடுபாடுகளில் மிகுந்த பிஸியாக இருக்கும் அவர் தனது கடைசித் திரைப்படமாக எச்.வினோத் இயக்கத்தில் ‘தளபதி-69’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னை ஆஃபீஸர் அகாடமியில் நடந்து வருகிறது. ராணுவ வீரர் ஆவதற்கு சில இராணுவம் சார்ந்த அதிகாரிகள் பயிற்சி கொடுத்து பல ராணுவ வீரர்களை உருவாக்கி வரும் […]
சென்னை : கடந்த மாதம் 27-ல் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் தவெக கட்சியின் முதல் மாநாடு நடைபெற்றது. தவெக வெற்றிக் கொள்கை மாநாட்டிற்கு திடல் மற்றும் பார்க்கிங்காக நிலம் தந்த விவசாயிகளை அழைத்து நன்றி கூறும் வகையில் விருந்தும் வழங்கிட தவெக தலைவர் விஜய் ஏற்பாடு செய்திருக்கிறார். சென்னை பனையூரில் உள்ள தவெக அலுவலகத்தில் அடுத்த வாரம் இந்த நிகழ்ச்சி நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது. அட ஆமாங்க.. தவெக மாநாட்டுக்காக பார்க்கிங் மற்றும் மாநாட்டு திடலுக்காக […]
சென்னை: தமிழக வெற்றிக்கழகத்தின் மாநாட்டில் அக்கட்சித் தலைவர் விஜய் ஆட்சிக்கு வந்தால் கூட்டணி கட்சிகளுக்கு அதிகாரத்தில் பங்கு உண்டு என அறிவித்திருந்ததற்கு ஒரு பக்கம் விமர்சனங்கள் எழுந்து வரும் நிலையில், ஒரு பக்கம் ஆதரவும் எழுந்து வருகிறது. குறிப்பாக, காங்கிரஸ் கட்சி இதற்கு ஆதரவு தெரிவித்து இருந்தது. அதனைத்தொடர்ந்து தற்போது பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் மறைமுகமாக ஆதரவு தெரிவிக்கும் விதமாகப் பேசியிருக்கிறார். இன்று சோளிங்கரில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் “தமிழ்நாட்டில் 2026-ல் கூட்டணி ஆட்சி கண்டிப்பாக […]
சென்னை : இயக்குநர் லோகேஷ் கனகராஜின், LCU-விற்கெனவே தனியாக ஒரு ரசிகர் கூட்டம் இருந்து வருகிறது. கூலி படத்திற்கு அடுத்தபடியாக, LCU-தொடர்பாக இவர் அடுத்து இயக்கவிருக்கும் படம் ‘கைதி-2’ தான் எனச் சமீபத்தில் ஒரு பேட்டியில் இவர் கூறியிருந்தார். மேற்கொண்டு, ரோலெக்ஸ், விக்ரம்-2 என அடுத்தடுத்த LCU திரைப்படங்கள் வரிசையிலிருந்து வருகிறது. இருப்பினும், LCU-வில் அனைவரும் எதிர்பார்க்கும் ஒரு படம் என்றால் அது லியோ-2 தான். லியோ படத்திற்குக் கிடைத்த வரவேற்பு, லியோ-2 திரைப்படத்திற்கும் இருக்கும் என்பதில் […]
சென்னை : தவெக மாநாடுக்கு முன்பு விஜய்யை ஆதரித்து வந்த சீமான், மாநாட்டுக்கு பின் அவரை கடுமையாக விமர்சித்து வருகிறார். இருந்தாலும், யார் விமர்சனம் செய்தாலும் கடந்து செல்லுங்கள் என நிர்வாகிகளை விஜய் அறிவுறுத்தியுள்ளார். இப்படி இருக்கையில், நடிகர் விஜய்யை சீமான் கூமுட்டை என விமர்சித்ததற்கு விஜயலட்சுமி கடும் கண்டனம் தெரிவித்து யார் கூமுட்டை.? விஜய்க்கு என்ன பண்ணனும்னு தெரியும்.. உங்கள மக்கள் செருப்பால அடிப்பாங்க.. தவெக தலைவர் விஜய்க்கு ஆதரவாக களமிறங்கிய நடிகை விஜயலட்சுமி சீமானுக்கு […]
சென்னை : தவெக தலைவர் விஜய் தலைமையில் இன்று பனையூரில் நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில் 26 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதில், திமுக மற்றும் பாஜகவை நேரடியாக விமர்சித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளன. ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற பொய் வாக்குறுதிகளை அளித்து தமிழக மக்களை திமுக அரசு ஏமாற்றி வருவதாக தவெக செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மாநில தன்னாட்சி உரிமை , நீட் தேர்வுக்கு எதிர்ப்பு, மாதந்தோறும் மின் கணக்கீடு முறை, மும்மொழி கொள்கைக்கு எதிர்ப்பு, மதுக்கடை மூடல், […]
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தலைமையில், பொதுச் செயலாளர் ஆனந்த் முன்னிலையில், தவெக செயற்குழு மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் சென்னை பனையூரில் உள்ள கழகத் தலைமை நிலையச் செயலகத்தில் இன்று நடைபெற்றது. இதில், தலைமைக் கழக நிர்வாகிகள் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொண்டனர். இதில் கழகத்தின் கட்டமைப்பை வலுப்படுத்தும் பணிகள் மற்றும் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகள் உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. இந்த நிலையில், இக்கூட்டத்தில் ஏகமனதாக 26 […]
சென்னை : பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் தலைவர் விஜய் தலைமையில் கட்சி நிர்வாகிகள் கூட்டம் இன்று நடைபெறவுள்ளது. முன்னதாக, கட்சியின் பொதுச் செயலாளர் என்.ஆனந்த் தலைமையில் இந்த ஆலோசனை கூட்டம் நடைபெறவிருந்த நிலையில், இறுதியில் கட்சியின் தலைவர் விஜய் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கட்சியின் முதல் மாநில மாநாடு அண்மையில் நடந்து முடிந்த நிலையில், அடுத்தகட்ட நடவடிக்கைகள், நிர்வாகிகள் நியமனம் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. காலை 10 மணிக்கு […]
சென்னை : தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் மாநாடு வெற்றிகரமாகக் கடந்த வாரம் நடந்து முடிந்த நிலையில், மாநாட்டில் விஜய் பேசிய விஷயங்கள் அரசியல் வட்டாரத்தில் இன்னும் பேசுபொருளாகவுள்ளது. ஏற்கனவே, பல அரசியல் கட்சித் தலைவர்களும் மாநாடு நடந்த அடுத்த நாளில் பேசிக்கொண்டு இருந்த நிலையில், இப்போது நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசி வரும் காரணத்தால் விஜய் பேசிய விஷயங்கள் ஹாட் டாப்பிக்காக இருந்து வருகிறது. இந்த சூழலில், நாளை தவெக நிர்வாகிகளின் அவசர கூட்டம் […]
சென்னை : இன்று நவம்பர் 1-ஆம் தேதி தமிழ்நாடு தினம் கொண்டாடப்படுகிறது.இதனையடுத்து, இன்று தமிழ்நாடு தினம் கொண்டாடப்படுவதை முன்னிட்டு அரசியல் தலைவர்கள் பலரும் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். குறிப்பாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் ” தெற்கிலும் வடக்கிலும் பல இடங்களில் போராடி தமிழ்நாட்டின் எல்லையைக் காத்த மாவீரர்களின் தியாகத்தைப் போற்றும் நாள், நவம்பர் 1! தமிழர் வாழும், தமிழ் பேசப்படும் பகுதிகளைத் தமிழ்நாட்டுடன் இணைப்பதற்காகப் போராடிய அனைவரையும் எல்லைப் போராட்டத் தியாகிகள் […]
சென்னை : கடந்த அக்டோபர் 27-ம் தேதியன்று தவெகவின் முதல் மாநில மாநாட்டை நடத்தினார் அக்கட்சி தலைவர் விஜய். அப்போது, கூட்டணி ஆட்சி, ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு என்ற விசிகாவின் கோரிக்கையை ஆதரிக்கும் வகையில் கருத்து தெரிவித்து இருந்தார். இந்த கருத்துக்கு முதலில் விசிக துணை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா ஆதரவு தெரிவித்து இருந்தாலும், அடுத்தடுத்து விசிக தலைவர் திருமாவளவன், மற்ற விசிக தலைவர்கள் இதனை கடுமையாக விமர்சித்தனர். ஆஃபர் கூறுவது போல இருக்கிறது. முதலில் […]