அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் கைது!

RB Udayakumar

RB Udhayakumar: மதுரையில் போராட்டத்தில் ஈடுபட்ட அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் உள்ளிட்டோர் கைது. மதுரை மாவட்டம் கள்ளிக்குடி அருகே உரம் தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் கழிவுநீரால் அப்பகுதியில் சுற்றியுள்ள கிராமங்களில் நிலத்தடி நீர் மற்றும் காற்று மாசுபடுவதாக அப்பகுதி கிராம மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். கழிவு நீரால் உடல்நலம் பாதிக்கப்படுவதாகவும் கூறியுள்ளனர். இதனால் நடந்து முடிந்த மக்களவை தேர்தலை புறக்கணிப்பதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்திருந்தனர். இதுதொடர்பாக … Read more

மதுரையில் 11 வயது சிறுமி கொலையில் திருப்பம்! வன்கொடுமை செய்யப்பட்டது கண்டுபிடிப்பு

Madurai: மதுரையில் 11 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் அதிர்ச்சி திருப்பமாக அவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டது பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரியவந்துள்ளது. சிறுமியின் மரணத்தை சந்தேக மரணம் என போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த போது இந்த பகீர் தகவல் வெளியாகியுள்ளது. Read More – திருச்சி என்றாலே திருப்புமுனை! பாஜகவை வீழ்த்தி… தேர்தல் பொதுக்கூட்டத்தில் முதல்வர் பேச்சு கூடல் புதூர் பகுதியை சேர்ந்த 11 வயது சிறுமி தான் … Read more

திமுக கூட்டணி – மதுரை, திண்டுக்கல்லில் சிபிஎம் போட்டி!

cpm

CPM : திமுக கூட்டணியில் சிபிஎம் கட்சிக்கு மதுரை, திண்டுக்கல் ஆகிய தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.  நாடாளுமன்ற மக்களவை தேர்தலை முன்னிட்டு திமுக கூட்டணியில் பல்வேறு கட்டங்களாக நடைபெற்று வந்த தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை நிறைவு பெற்றது. Read More – 15 தொகுதிகளுக்கான விருப்ப பட்டியல்… பாஜகவிடம் கொடுத்த ஓபிஎஸ்! திமுக கூட்டணியில் காங்கிரஸுக்கு 10, விசிக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தலா 2 , மதிமுகவுக்கு 1, கொமதே … Read more

பிரதமர் மோடியை சந்தித்தது ஏன்? அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் விளக்கம்

PTR: தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் உத்தரவிட்டதையடுத்தே மதுரை வந்த பிரதமர் நரேந்திர மோடியை, அரசு சார்பில் சந்தித்து வரவேற்றதாக தகவல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் விளக்கமளித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடியின் தமிழக வருகையின் போது மதுரை மாவட்டத்திற்கு வந்த அவரை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நேரில் சென்று வரவேற்றார். இது குறித்து சமூகவலைதளங்களில் பலரும் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் இன்று அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் செய்தியாளர்களை சந்தித்தப் … Read more

விஜய் பிறந்தநாளில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு?

VIJAY POLITICS

விஜய்யின்  பிறந்தநாளை முன்னிட்டு, தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டை நடத்த இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் விஜய் ‘தமிழக வெற்றிக் கழகம்’ என்ற கட்சியை கடந்த பிப்ரவரி 2-ம் தேதி தொடங்கினார். தேர்தல் ஆணையம் அங்கீகாரம் வழங்கிய பின் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் கொடி மற்றும் சின்னம் அறிவிக்கப்படும் என தெரிவித்திருக்கிறார். அது மட்டும் இல்லாமல், வரும் 2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில், போட்டியிடுவதாகவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. … Read more

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி விடுதலை – மதுரை நீதிமன்றம் தீர்ப்பு

mk alagiri

வட்டாட்சியரை தாக்கியதாக தொடரப்பட்ட வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி உள்ளிட்டோரை விடுதலை செய்து மதுரை மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. கடந்த 2011 சட்டமன்ற தேர்தலின் போது தாசில்தாரை தாக்கியதாக முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி உள்ளிட்டோர் மீது வழக்கு தொடரப்பட்டது. அதாவது, 2011ம் ஆண்டு மதுரை வேலூர் அருகே சட்டமன்ற தேர்தலுக்கான பிரச்சாரம் மேற்கொண்டபோது மு.க.அழகிரி, வாக்காளர்களுக்கு பண பட்டுவாடா செய்ததாக அதிமுக தெரிவித்தனர். இந்த புகாரை தொடர்ந்து, மேலூர் தேர்தல் அதிகாரியும், தாசில்தாருமான … Read more

’காக்கா முட்டை’ திரைப்பட இயக்குநர் மணிகண்டன் வீட்டில் பணம், நகைகள் கொள்ளை

’காக்கா முட்டை’ திரைப்பட இயக்குநர் மணிகண்டன் வீட்டில் நடந்த கொள்ளை சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காக்கா முட்டை, குற்றமே தண்டனை, ஆண்டவன் கட்டளை, கடைசி விவசாயி போன்ற திரைப்படங்களை இயக்கியுள்ளவர் மணிகண்டன். இவர் மதுரை மாவட்டம் உசுலம்பட்டியை சேர்ந்தவர் ஆவார். அங்குள்ள எழில் நகரில் மணிகண்டனின் வீடு அமைந்துள்ளது. இந்த நிலையில் அவரின் பூட்டி இருந்த வீட்டில், பூட்டை உடைத்து உள்ளே சென்ற அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் பீரோவை உடைத்து கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர். அதன்படி பீரோவில் … Read more

அரசு பள்ளிக்கு மேலும் ரூ.3.5 கோடி மதிப்புள்ள நிலத்தை நன்கொடையாக கொடுத்த பூரணம் அம்மாள்

அரசு பள்ளிக்கு மேலும் ரூ. 3.5 கோடி மதிப்புள்ள நிலத்தை பூரணம் அம்மாள் நன்கொடையாக வழங்கியுள்ளார். மதுரை சர்வேயர் காலனியைச் சேர்ந்தவர் 52 வயதான ஆயி பூரணம் அம்மாள். இவரது கணவர், தனியார் வங்கியில் அலுவலக உதவியாளராக பணியாற்றிய நிலையில் கடந்த 1991ஆம் ஆண்டு காலமானார். இதையடுத்து, அதே வங்கியில் வாரிசு அடிப்படையில் கிளார்க் பணியை செய்து வருகிறார். 31 ஆண்டுகளுக்கு முன்பு கணவர் இறந்து விட்டாலும், தனி ஆளாக நின்று தனது மகளை பட்டப்படிப்பு வரை … Read more

எங்கே பார்த்தாலும் கொலை, கொள்ளை..! வியாபாரிகள் அச்சம்: எடப்பாடி பழனிச்சாமி குற்றச்சாட்டு

மதுரை மாவட்டம் நாகமலை புதுக்கோட்டையில் நடைபெற்ற நாடார் மகாஜன சங்க 72வது மாநில மாநாட்டில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி உரையாற்றினார். முன்னதாக மதுரை நாடார் மகாஜன சங்கம் எஸ் வெள்ளைச்சாமி நாடார் கல்லூரி வளாகத்தில் உள்ள பெருந்தலைவர் காமராஜர் திருவுருவ சிலைக்கு எடப்பாடி பழனிச்சாமி மாலை அணிவித்தார். மாநாட்டில் அவர் பேசுகையில், “இன்றைய தினம் தமிழ்நாடே மதுரையை உற்று நோக்கியிருக்கிறது. நாடார் என்பவர்கள் உழைப்புக்கு பெயர் பெற்றவர்கள். சிறுகடையில் ஆரம்பித்து பெரிய நிறுவனம் தொடங்குவார்கள்.. … Read more

பொங்கல் பண்டிகை: பூக்களின் விலை கிடுகிடுவென்று உயர்வு.!

flowers market

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, பூக்களின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. அதன்படி, ஒரு கிலோ மல்லிகை இன்று ரூ.3000க்கு விற்பனையாகிறது. முல்லை 2000, கனகாம்பரம் ரூ.1000, அரளி ரூ.450க்கும் என விற்பனை செய்யப்படுகிறது. இன்று மதுரை மல்லிகைப்பூ கிலோ 3,000 ரூபாய்க்கும், மெட்ராஸ் மல்லி கிலோ 2000 ரூபாய்க்கும் விற்பனை ஆகிறது. குறிப்பாக, நேற்று 1,000 ரூபாய்க்கு விற்பனையான மல்லிகைப்பூ இன்று கிலோ 3,000 ரூபாயாக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. அதேபோல், சம்பங்கி, வாடாமல்லி, கனகாம்பரம், ஜாதிமல்லி, ரோஜா உள்ளிட்ட … Read more