சென்னை : தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு தயாராகி வரும் நிலையில், அவர் தனது கட்சியை வலுப்படுத்துவதற்காக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது அவர், தனது கடைசி திரைப்படமான ஜனநாயகன் படத்தில் நடித்து வருகிறார். இது அவரது ரசிகர்கள் மற்றும் அரசியல் பார்வையாளர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படத்தை முடித்துவிட்டு, முழு நேர அரசியலில் தீவிரமாக ஈடுபடுவதற்கான திட்டங்களை அவர் வகுத்துள்ளதாக சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜனநாயகன் […]
சென்னை : விஜயின் தமிழக வெற்றிக் கழக கட்சியின் பொதுக்குழு கூட்டமானது வரும் மார்ச் 28ஆம் தேதியன்று (அடுத்த வார வெள்ளிக்கிழமை) நடைபெற உள்ளது. இந்த பொதுக்குழு கூட்டம் சென்னை திருவான்மியூரில் உள்ள ராமச்சந்திரா கன்வென்ஷன் ஹாலில் வைத்து நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த பொதுக்குழு கூட்டத்தில் சுமார் 2,500 முதல் 3000 வரையில் கட்சி நிர்வாகிகள் கலந்து கொள்ள உள்ளனர் என்றும், மாவட்ட பொறுப்பாளர்கள், மற்ற நிர்வாகிகள் என […]
சென்னை : டாஸ்மாக் டெண்டர் விவகாரத்தில் சுமார் ஆயிரம் கோடி ரூபாய் வரையில் முறைகேடு நடைபெற்று இருக்கலாம் எனக் அமலாக்கத்துறை கூறிய நிலையில் இந்த விவகாரம்ஹாட் டாப்பிக்காக வெடித்துள்ளது. இந்த விவகாரம் குறித்து த.வெ.க தலைவர் விஜய் திமுக குறித்து விமர்சனம் செய்து பெரிய அறிக்கை ஒன்றை வெளியீட்டு இருந்தார். அதைப்போல, தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலையும் முற்றுகை போராட்டம் நடத்தி திமுகவுக்கு கண்டனங்களை தெரிவித்தார். போராட்டம் நடத்தியபோது கைது செய்யபட்ட அண்ணாமலை “ரூ. 1,000 கோடிக்கு […]
சென்னை : டாஸ்மாக் டெண்டர் விவகாரத்தில் சுமார் ஆயிரம் கோடி ரூபாய் வரையில் முறைகேடு நடைபெற்று இருக்கலாம் எனக் அமலாக்கத்துறை கூறிய நிலையில் அரசியல் தலைவர்கள் பலரும் இந்த விவகாரம் குறித்து பேச தொடங்கியிருக்கிறார்கள். அந்த வகையில், இந்த விவகாரம் குறித்து த.வெ.க தலைவர் விஜய் பெரிய அறிக்கை ஒன்றை வெளியீட்டு இருந்தார். அந்த அறிக்கையில், இந்த மோசடியில் சம்பந்தப்பட்டவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை முறையான. நியாயமான விசாரணைக்கு உட்படுத்தி, உண்மைகளை வெளிச்சத்திற்குக் கொண்டு வர வேண்டும். ஆனால், […]
சென்னை : டாஸ்மாக் முறைகேடு விவகாரம் தமிழ்நாடு அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமலாக்கத் துறை மார்ச் 6, 2025ல் நடத்திய சோதனைகளில் பல்வேறு முறைகேடுகள் கண்டறியப்பட்டுள்ளன. இந்த சோதனைகள் மார்ச் 6, 2025 அன்று தொடங்கி, சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட பல மாவட்டங்களில் உள்ள டாஸ்மாக் அலுவலகங்கள், மது உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் தொடர்புடைய நபர்களின் இடங்களில் நடைபெற்றன. ED விசாரணையில் டெண்டர்களில் ரூ.1,000 கோடி முறைகேடுகள், நிதி முரண்பாடுகள் கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் […]
சென்னை : தமிழக வெற்றி கழகத்தில் பெரும் கனவுடன் அரசியல் வாழ்க்கையை தொடங்கிய சஜி, மாரடைப்பால் மறைந்தது அக்கட்சியினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. முதலில் விஜய் மக்கள் இயக்கத்தில் தென் மாவட்டங்களில் சிறப்பாக செயல்பட்டு வந்த அவரை அங்கீகரிக்கும் வகையில், திருநெல்வேலி வடக்கு மாவட்ட செயலாளர் பதவி வழங்கப்பட்டது. சென்னையில், வரும் 28ம் தேதி பொதுக்குழு கூட்டம் நடைபெறுவதால் அது தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க சென்னை சென்றபோது உயிர் பிரிந்தது. அதாவது, சென்னையில் நேற்று நள்ளிரவு திடீரென […]
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் இன்று தமிழ்நாடு அரசு நிதிநிலை அறிக்கை 2025 – 2026 (பட்ஜெட் 2025)-ஐ நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் பெண்களுக்கான சிறப்பு திட்டங்கள், மாணவர்கள் நலன் சார்ந்த திட்டங்கள் மட்டுமின்றி தமிழர் பண்பாடு மொழி சார்ந்த முக்கிய அறிவிப்புகளும் இதில் இடம் பெற்று இருந்தன. இருப்பினும், பட்ஜெட்டில் பெட்ரோல், டீசல் விலை குறைப்பு குறித்து எந்த அறிவிப்பும் இடம்பெறவில்லை என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி […]
சென்னை : பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் கட்ட அமர்வு டெல்லி நாடாளுமன்றத்தில் நேற்று முன்தினம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தொடரில் கேள்வி நேரத்தின் போது திமுக எம்பிக்களை பார்த்து ‘அநாகரீகமானவர்கள்’ என மத்திய கல்வியமைச்சர் தர்மேந்திர பிரதான் விமர்சித்தார். இதற்கு கண்டனங்கள் வலுத்த நிலையில் அந்த விமர்சனத்திற்கு வருத்தம் தெரிவித்துவிட்டு அதனை பின் வாங்கினார். திமுக எம்பிகளுக்கும், மத்திய பாஜக அமைச்சர்களுக்கும் இடையே கடும் வார்த்தை போர் நிலவி வரும் சூழலில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா […]
சென்னை : தமிழக வெற்றிக் கழக கட்சித் தலைவர் விஜய்க்கு மத்திய உள்துறை அமைச்சகம் Y பிரிவு பாதுகாப்பை வழங்குவதாக கடந்த மாதம் அறிவித்து இருந்தது. குறிப்பிட்ட மாத (3 மாதம்) இடைவெளியில் மத்திய உள்துறை அமைச்சகம் ஆய்வு கூட்டம் நடத்தும். அப்போது அரசியல் தலைவர்கள், உயர் பொறுப்பில் இருப்பவர்கள், சினிமா பிரபலங்கள் என பலருக்கும் அளிக்கப்பட்டு வரும் பாதுகாப்பு குறித்தும், புதியதாக பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டியவர்கள் குறித்தும் ஆலோசிக்கப்படும். அதன்படி, மத்திய உள்துறை அமைச்சகம் தவெக […]
சென்னை : மதுரை மாவட்டத்தில் நடைபெற்ற மதநல்லிணக்க நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் முதலமைச்சர் ஆட்சியில் இருந்தும் மத நல்லிணக்க மாநாட்டுக்கு காவல்துறை அனுமதி மறுத்தது வருத்தமளிப்பதாக தெரிவித்திருந்தார். இந்த நிலையில், இது தொடர்பாக தவெக கொள்கை பரப்புச் செயலாளர் ராஜ்மோகன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், “அறவழிப் போராட்டம் என்பது அரசியல் அடையாளங்களில் ஒன்று. அதுவும் மதநல்லிணக்கம் பேண வலியுறுத்தும் பேரணியை எந்தக் […]
கோவை : கடந்த மார்ச் 7ஆம் தேதியன்று இஸ்லாமியர்கள் விழாவான ரமலான் நோன்பு திறக்கும் நிகழ்வு நடைபெற்றது. இதில் சென்னை ராயப்பேட்டை பகுதியில் நடைபெற்ற நோன்பு திறக்கும் நிகழ்வில் தமிழக வெற்றிக் கழக கட்சித் தலைவர் விஜய் கலந்துகொண்டார். அன்று மாலை 6 மணியளவில் வெள்ளை சட்டை, வெள்ளை லுங்கியுடன் இந்நிகழ்வில் கலந்து கொண்டு தொழுகையில் ஈடுபட்டு பின் நோன்பு கஞ்சி குடித்து நோன்பு துறந்தார். இந்த நிகழ்வில் பேசிய விஜய், ” அன்பையும் சமாதானத்தையும் போதித்த […]
சென்னை : தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் தவெக சார்பில் மகளிர் தினத்தை முன்னிட்டு பெண்களுக்கு விழிப்புணர்வு பேரணி மற்றும் தமிழக அரசை கண்டித்து போராட்டம் நடைபெற்றது. இந்த நிலையில், அனுமதி பெறவில்லை எனக் கூறி தவெகவினர் கைது செய்யப்பட்டனர். இதையடுத்து, கண்டித்து தவெக தலைவர் விஜய் கண்டன அறிக்கை ஒன்றை வெளியிட்டார். பாலியல் குற்றங்களை தடுக்கவும், பெண்களுக்கு பாதுகாப்பு வழங்கக்கோரியும் போராட்டத்தில் ஈடுபட்ட தவெகவினர் கைதுக்கு விஜய் கண்டனம் தெரிவித்துள்ளார். தங்களுக்கான உரிமையை கேட்டுப் பெற வேண்டிய […]
சென்னை : பெண்களுக்கு முழுமையான பாதுகாப்பை ஏற்படுத்தித் தர வேண்டும் எனத் தமிழ்நாடு அரசை வலியுறுத்தி, தவெக சார்பில் தமிழ்நாடு முழுவதும் போராட்டம் நடைபெற்றது. இந்த நிலையில், அனுமதி பெறவில்லை எனக் கூறி தவெகவினர் கைது செய்யப்பட்டதை கண்டித்து தவெக தலைவர் விஜய் கண்டன அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். இன்று காலை மகளிர் தினத்தை முன்னிட்டு, 2026 தேர்தலில் திமுக அரசை மாற்ற உறுதியேற்போம் என்று விஜய் வலியுறுத்தினார். இது தொடர்பாக தனது சமூக வலைத்தளத்தில் அவர் […]
நாகை : நாகை மாவட்டம் கீழையூர் அருகே கருங்கண்ணி ஊராட்சியைச் சோ்ந்த 26 பேருக்கு முதல்வர் நிகழ்ச்சியின் போது வழங்கப்படுவதாக அறிவித்த வீட்டுமனை பட்டாவை உடனடியாக வழங்க வேண்டும் என கடந்த 5ம் தேதி தவெக சாா்பில், மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்திருந்தனர். ஆனால், தவெக சாா்பில் அளிக்கப்பட்ட மனுவை கண்டித்து திமுகவினர் தகராறு செய்துள்ளனர். அதாவது, ஆட்சியரிடம் மனு அளித்துவிட்டு வெளியே வந்ததும், திமுகவினரை செர்ந்த சிலர் தகராறு செய்ததோடு அவர்களை தாக்கியுள்ளனர். இந்த தாக்குதலில் […]
சென்னை : இன்று உலகம் முழுவதும் மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், அரசியல் தலைவர்கள் பலரும் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில், த.வெ.க தலைவர் விஜய் தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் பேசி வாழ்த்து தெரிவித்து பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்கிற குற்றச்சாட்டையும் முன் வைத்து பேசியுள்ளார். வீடியோவில் பேசிய விஜய் ” எல்லோருக்கும் வணக்கம் இன்று மகளிர் தினம். இந்த தினத்தில் வாழ்த்து சொல்லாமல் இருக்க முடியாது. தமிழ்நாடு முழுவதும் இருக்கும் […]
சென்னை : ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் தவெக சார்பில் நேற்று இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் அக்கட்சியின் தலைவர் விஜய் கலந்து கொண்டு சரியாக 6.24 மணிக்கு நோன்பு திறந்தார். நோன்பு திறக்கும் நிகழ்ச்சிக்கு அக்கட்சியின் தலைவர் விஜய் இஸ்லாமியர்களின் குல்லா, வெள்ளை சட்டை, வெள்ளை வேட்டி அணிந்து வந்திருந்தார். இது வெறும் நிகழ்ச்சியாக மட்டுமல்லாமல், உண்மையிலேயே இன்றைக்கு ஒரு விஜய் நோன்பு இருந்திருக்கிறார். காலை முதல் உணவருந்தாமல் இருந்த அவர், நோன்புக் கஞ்சி, பேரீச்சம்பழம், சமோசா […]
சென்னை : தவெக சார்பில் சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடத்தப்பட்ட இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் அக்கட்சியின் தலைவர் விஜய் கலந்து கொண்டு சரியாக 6.24 மணிக்கு நோன்பு திறந்தார். நோன்பு திறக்கும் நிகழ்ச்சிக்கு அக்கட்சியின் தலைவர் விஜய் இஸ்லாமியர்களின் குல்லா, வெள்ளை சட்டை, வெள்ளை வேட்டி அணிந்து வந்திருந்தார். இது வெறும் நிகழ்ச்சியாக மட்டுமல்லாமல், உண்மையிலேயே இன்றைக்கு ஒரு விஜய் நோன்பு இருந்திருக்கிறார். விஜய்யுடன் நோன்பு திறக்க, நூற்றுக்கணக்கான இஸ்லாமியர்களும் குவிந்தனர். ஆம், காலை […]
சென்னை : சென்னை ராயப்பேட்டை YMCA அரங்கில் தவெக சார்பில் இன்று மாலை நடைபெறவுள்ள இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் அக்கட்சியின் தலைவர் விஜய் பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க ராயப்பேட்டையை சுற்றியுள்ள 15 பகுதிகளை சேர்ந்த 2,000க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் வருகை தந்துள்ளனர். அவர்களுக்கு மட்டன் பிரியாணி, சிக்கன் 65, சமோசா மற்றும் நோன்பு கஞ்சி ஆகியவை பேக்கிங் செய்யப்பட்டு தயார் நிலையில் உள்ளது. இந்த நோன்பு திறப்பு நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி […]
சென்னை : மக்களவை தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக கடந்த மார்ச் 5ஆம் தேதி சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்றது. இதில், திமுக, அதிமுக, விசிக, மதிமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள், பாமக, தவெக என பல்வேறு கட்சி பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். பாஜக, நாதக, தமாகா உள்ளிட்ட கட்சியினர் இதில் பங்கேற்கவில்லை. இந்த அனைத்துக்கட்சி ஆலோசனை கூட்டம் குறித்தும், தவெக தலைவர் விஜய் தொகுதி மறுசீரமைப்பு பற்றி’ தென் மாநிலங்களின் பிரிதிநிதித்துவம் குறையும்’ […]
சென்னை : இன்று சென்னை தலைமை செயலகத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்றது. மக்கள் தொகை அடிப்படையில் மக்களவை தொகுதிகள் மறுசீரமைக்கப்பட உள்ளதாகவும் , அப்போது தென் மாநிலங்கள் குறிப்பாக தமிழ்நாட்டின் மக்களவை தொகுதி எண்ணிக்கை குறைக்கப்படுவது குறித்து இந்த ஆலோசனை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. இக்கூட்டத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் துரைமுருகன், தங்கம் தென்னரசு, ஜெயக்குமார் (அதிமுக), செல்வப்பெருந்தகை (காங்கிரஸ்), அன்புமணி ராமதாஸ் (பாமக), ஜி.கே.மணி (பாமக), திருமாவளவன் (விசிக), […]