தமிழக வானிலை அப்டேட்: ஜூலை 13 முதல் 19 வரை மழை எப்படி இருக்கும்?

மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்களில் வரும் வாரம் முழுவதும் லேசானது முதல் மிதமான மழை நீடிக்கும். ஜூலை 17-க்குப் பிறகு மழையின் தீவிரம் சற்று அதிகரிக்க வாய்ப்புள்ளது.

Hero Image

சென்னை : வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலின்படி, ஜூலை 13 முதல் ஜூலை 19 வரையிலான தமிழகத்தின் வானிலை முன்னறிவிப்பு விவரங்கள் பற்றி பார்ப்போம்.

அதன்படி, ஜூலை 13 முதல் 15 வரை: மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தமிழகத்தின் ஏனைய மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலையே நிலவும். எனினும், அவ்வப்போது ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

ஜூலை 16: மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் வழக்கம்போல லேசானது முதல் மிதமான மழை தொடரும். தமிழகத்தின் பிற பகுதிகள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஆங்காங்கே லேசான மழை பெய்யக்கூடும்.

ஜூலை 17 முதல் 19 வரை: மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் மழையின் அளவு சற்று அதிகரித்து, மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. தமிழகத்தின் ஏனைய பகுதிகளிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்யக்கூடும்.

தமிழக வானிலை அப்டேட்: ஜூலை 13 முதல் 19 வரை மழை எப்படி இருக்கும்?